Showing posts with label அதிசயம். Show all posts
Showing posts with label அதிசயம். Show all posts

Wednesday, October 9, 2013

மூக்கில் மூளையுடன் அதிசய குழந்தை

(Im)இந்தக் குழந்தையின் இக்குறைபாட்டை தாயின் கருவறையில் 5 மாத கருவாக இருக்கும் போதுதான் இதனை அவதானிக்க முடிந்தது. 

மூக்கின் ஊடாக வெளியே இருக்கும் மூளையை பொஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் குழந்தையின் மண்டயோட்டிற்குள் உரிய இடத்தில் சத்திரசிகிச்சையின் மூலம் வைத்துள்ளனர்.






Friday, May 10, 2013

மருத்துவ உலகை அதிர வைத்த பிரசவம்!

(IN) ஒட்டிய நிலையில் உள்ள இரட்டைக் குழந்தைகளை எவ்வித சத்திரசிகிச்சையுமின்றி இயற்கையான முறையில் பிரசவித்து இந்திய பெண்மணியொருவர் மருத்துவ உலகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இந்திய மாஹாராஷ்டிரா மாநிலத்தின் , ரயிகாட் மாவட்டத்தில் உள்ள பன்வெல் என்ற இடத்தைச் சேர்ந்த சாலு பவார் என்ற பெண்ணே இக் குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

இக்குழந்தைகள் இரண்டும் வயிறு ஒட்டிய நிலையில் பிறந்துள்ளன.

சாலு பவாரின் கணவர் சாரதி என்பதால் அவரது குறைந்த வருமானத்தைக் கொண்டு அவர்களால் பிரசவத்துக்கென வைத்தியசாலைக்குச் செல்ல முடியவில்லை. எனவே வீட்டிலேயே சாகுவுக்கு பிரசவம் நடந்துள்ளது.தற்போது தாயும், குழந்தைகளும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுவாக ஒட்டிய நிலையில் உள்ள இரட்டைக் குழந்தைகள் சிசேரியன் மூலமே பிறக்கின்றன.

எனினும் சாலுவின் விடயத்தில் அது பொய்யாகியுள்ளது. எவ்வித மருத்துவ உதவியுமின்றி இரட்டைக் குழந்தைகளை பெற்றுள்ளார் சாலு.

Monday, April 22, 2013

ஆறு கால்களுடன் பிறந்த அதிசயக்குழந்தை!

மனிதர்களுக்கு இரண்டு கால்கள் என்பதே வழமை எனினும் சில சந்தர்ப்பங்களில் வேறுபட்ட எண்ணிக்கையான கால்களைக் கொண்ட குழந்தைகள் பிறந்த ஆச்சரியத்தில் ஆழ்த்துவதுண்டு.

இவ்வாறு அண்டையில் ஆறு கால்களுடன் குழந்தை ஒன்று பிறந்து உலகத்தையே அதிசயத்தில் ஆழ்த்தியுள்ளது. பாகிஸ்தானின் காராச்சி நகரிலேயே இம்ரான் ஷேய்க் என்ற இக்குழந்தை பிறந்துள்ளது. எனினும் குழந்தை எவ்விதாமன பிரச்சினையும் இன்றி ஆரோக்கியமாக உளள்ளது.


Friday, January 27, 2012

அதிசயம் ! கருவுற்ற மூன்று வயதுக்குழந்தை

 சமீபகாலமாக உலகில் நடக்கும் பல்வேறு விசித்திரமான நிகழ்வுகளின் தகவல்கள் அதிகமாக வெளிவருகின்றன. பெரு நாட்டில் 3 வயது சிறுவனின் வயிற்றுக்குள் குழந்தையின் கரு இருப்பதாக தகவல் வந்துள்ளதை அந்நாட்டில் உள்ள சிலாவோ நகரை சேர்ந்த மருத்துவர் கார்லோஸ் தெரிவித்தார்.
இதுகுறித்து கார்லோஸ் கருத்து தெரிவிக்கையில், இந்த அசாதாரண விளைவு 5 லட்சம் பேரில் ஒருவருக்கு ஏற்படலாம் எனறும், சிறுவனின் வயிற்றில் இருக்கும் கருவில் மூளை, இருதயம், நுரையீரல், குடல் போன்ற உறுப்புகள் எதுவும் உருவாகவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
 மேலும் இதன் அடிப்படையில் ஆய்வுசெய்தால், இரட்டை குழந்தை கருக்குள் தாயின் வயிற்றில் உருவாகி அதில் ஒன்று சரியாக வளர்ச்சி பெற்று குழந்தையாக மாறியதும், மற்றொரு கரு அதனுள் ஊடுருவி வளர்ச்சி பெறாமல் போனதால் இவ்வாறு நிகழ்ந்து இருக்கலாம் என்றும் விரைவில் சிறுவனின் வயிற்றில் இருக்கும் கருவை அகற்ற இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
 
 நன்றி, மனிதன்

Thursday, January 26, 2012

மூன்று கைகளுடன் பிறந்த குழந்தை

இந்தியாவில் திருப்பூர் மாவட்டத்தில் காணப்படும் அரசு மருத்துவமனையில் மூன்று கைகளுடன் பிறந்த அதிசய குழந்தையை 24 மணி நேரமும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை சேர்ந்த சுப்ரமணி மனைவி தெய்வாள். திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டு பெண் குழந்தை பிறந்தது.
பிறந்த பெண் குழந்தையின் பின்புறம் முதுகு பகுதியில் சதைப்பற்றுடன் மூன்றாவது கை போல் வளர்த்திருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவக் குழுவினர் குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கேசவன் கருத்து தெரிவிக்கையில், மூன்று கிலோ எடையுடன் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது. குழந்தையின் உடல்நிலை படிப்படியாக முன்னேறி வருகிறது.
மேலும் நல்ல உடல் ஆரோக்கியம் வந்ததும் பெற்றோர் அனுமதியுடன் பின்பகுதியில் வளர்ந்துள்ள கை போன்ற சதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு தண்டுவடம் சரிசெய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 நன்றி, மனிதன் 

Monday, August 1, 2011

கடலடியில் வாழும் விசித்திர உயிரினங்கள்.

நமது பூமியின் மேற்பரப்பைவிட கடலுக்கு அடியில் பல கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
இவற்றில் பல உயிரினங்கள் நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத வடிவத்தில் உள்ளன.
ரஷ்ய ஆர்க்டிக் கடற் பகுதியில் வாழும் சில விசித்திர உயிரினங்களின் படங்களே இவை:





நன்றி. வீரகேசரி.

Tuesday, July 26, 2011

80 கிலோ இராட்சத கட்டியுடன் வாழும் மனிதன்.

வியட்னாம் நாட்டைச் சேர்ந்த 31 வயதுடைய  nguyen duy hai என்பவரது வலது காலில் கடந்த 30 வருடங்களாக கட்டி வளர்ந்து இன்று 80 கிலோ எடையுடன் அது காணப்படுவது ஆச்சரியமான ஒன்றாகும்.
இவரது காலில் ஏற்பட்ட வேறு நோய் ஒன்றுக்காக 14 வருடங்களுக்கு முன்னர் வலது கால் வெட்டப்பட்டது. ஆனால் அறியாமை, வறுமை, அசிரத்தை காரணமாக இவரது குடும்பத்தினர் கட்டியை கவனிக்க தவறி விட்டனர்.
அளவுக்கு மீறி வளர்ந்துள்ள இக்கட்டியினால் இவரால் தற்போது உட்காரவும், படுக்கவும் மாத்திரம் தான் முடிகின்றது. எழுந்து நடக்க  முடியாத நிலையில் உள்ள இவரை 61 வயது நிரம்பிய தாயே கவனித்து வருகிறார்.
இவருக்கு ஏற்பட்டுள்ள இந்நோயானது  புற்று நோய் அல்ல. மரபணு குழப்பத்தால் ஏற்பட்டதாக இருக்கக் கூடுமென கருதுகின்றனர்.
எப்போது பார்த்தாலும் முறுவல் பூத்த முகத்துடன் காணப்படும் இவர் தனது நோய்க்கு  சத்திர சிகிச்சை மேற்கொள்ள  மனிதாபிமானிகள், தொண்டர் அமைப்புக்கள் ஆகியவற்றின் நிதி அன்பளிப்புக்களை கோரி உள்ளார்.


 நன்றி-மனிதன்.

Wednesday, July 13, 2011

பார்வையற்ற பத்திரிகையாளர் - ஷானியா ஷைதீ

"கண் பார்வை இல்லேன்னா என்ன?'' பார்வைத் திறன் இழந்த மாற்றுத் திறனாளி. இன்று முன்னணிப் பத்திரிகையாளர் சானியா ஷைதீ. 
பாகிஸ்தானில் உள்ள முல்தான் நகரம் தான் என் சொந்த ஊர். எனக்கு ஒரு தங்கை, தம்பி. சிறு வயதில், எனக்குப் பார்வை பறிபோனபோது. என்னை சுற்றத்தார் ஏளனம் செய்தனர். என் பெற்றோர் தான், என்னை எல்லா விதத்திலும் உற்சாகப்படுத்தி வளர்த்தனர். பள்ளிப் பாடங்களை ஒரு கேசட்டில், பதிவு செய்து என்னை படிக்க வைத்தார் என் அம்மா.
நான் பள்ளியில் படிக்கும் போது, எனக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகம் இருந்தது. யாரும் எடுக்கத் தயங்கும் உடற்கல்வியை பாடமாக எடுத்துப் படித்தேன். தட்டு எறிதல் பிரிவில், நான் பள்ளியில் பல பரிசுகள் பெற்றிருக்கிறேன்.
கல்லூரி படிப்பை முடித்த பின், , தற்போது ஒரு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறேன். மாஸ் கம்யூனிக்கேஷன் மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறேன். கடந்த எட்டு ஆண்டுகளாக, பகுதி நேரப் பத்திரிகையாளராக, செய்தித்தாள், வாரப் பத்திரிகை, என்று ஊடகங்களுக்கு "பிரீலான்ஸ்'' செய்தியாளராக பணியாற்றுகிறேன்.கடந்த 2004ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யாவை பேட்டி கண்டது தான் என் வாழ்வில் மிகப் பெரிய திருப்பு முனை.அந்தப் பேட்டியின் மூலம், என்னை ஏளனம் செய்தவர்கள் முன், பெரிய சாதனையை நிகழ்த்தியதாக உணர்ந்தேன். நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் போது, ஒவ்வொரு போட்டிக்கும் நேரில் சென்று செய்திகள் சேகரித்த அனுபவம், என் வாழ்வில் மறக்க முடியாதது. என தன் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

Monday, July 4, 2011

அதிசய முட்டை

இலங்கையின் அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருதுக் கிராமத்தைச் சேர்ந்த எம்.எச்.எம். நஜிமா மிர்சா என்பவரின் இல்லத்தில் மிகவும் அதிசயமான முட்டை ஒன்றை கோழி ஒன்று இட்டு உள்ளது.
முட்டையில் வால், சொண்டு ஆகியன காணப்படுகின்றன. இந்த அதிசயத்தை காண்பதற்காக  மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளார்கள்.







Thanks To Tamil CNN

Tuesday, June 21, 2011

தாய்ப்பால் தரும் பசு.

ப்யூனஸ் அயர்ஸ்:உலகில் முதன் முறையாக மனித மரபணுக்களை இணைத்து, குளோனிங் மூலம் புதிய பசு ஒன்றை அர்ஜென்டினா நாட்டு நிறுவனம் உருவாக்கியுள்ளது. இப்பசு தரும் பால், தாய்ப்பாலைப் போன்றே இருக்கும் என்பது தான் இதன் சிறப்பம்சம்.அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த வேளாண் தொழில்நுட்ப தேசிய நிறுவனம், புதிய பசு ஒன்றை குளோனிங் முறையில் உருவாக்கியுள்ளது.இப்பசுவின் மரபணுக்களில், இரண்டு மனித மரபணுக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவை, தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்கு பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பு சக்தியை அளிக்கக் கூடியவை. இந்த மரபணுக்கள், பசுவின் மரபணுக்களுடன் சேர்க்கப்பட்டதால் இப்பசு, மனிதர்களின் தாய்ப்பாலைப் போல, விட்டமின்கள் கொண்ட, பாலைத் தரும்.கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி, பிறந்த இந்தப் பசுவுக்கு ரோசிட்டா ஐ.எஸ்.ஏ., எனப் பெயரிடப்பட்டுள்ளது. பிறக்கும் போதே 45 கிலோவுக்கும் அதிகமாக இருந்ததால், அறுவை சிகிச்சை மூலம் வெளியில் எடுக்கப்பட்டது.இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "உலகில் முதன் முறையாக மனித மரபணுக்கள் சேர்க்கப்பட்டு குளோனிங் மூலம் ரோசிட்டா ஐ.எஸ்.ஏ., உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பால், தாய்ப்பாலில் உள்ள விட்டமின்களைக் கொண்டிருக்கும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் பசு உருவாக்கத்திற்கான முயற்சியை இந்நிறுவனமும், சான்மார்ட்டின் பல்கலைக்கழகமும் இணைந்து மேற்கொண்டன.

Thursday, April 7, 2011

மாமிச மலை

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் மியாமி  நகரத்தில் வசிக்கும் 40வயதுடையதை டொமினிக் லனோயிஸ் (Dominique Lanoise) என்ற பெண்மணி தனது அளவுக்கதிகமான உடல் எடையினால் அசையக்கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இவரின் தற்போதைய நிறை 400 கிலோ வாக காணப்படுகிறது. 
இது பற்றி அவர் கருத்து தெரிவிக்கையில்.. எனக்கு தற்போது 6 பிள்ளைகள் இருக்கின்றனர். எனது முதல் குழந்தை பிறந்த பின்னர்தான் எனது உடலில் மாற்றம் ஏற்படத்தொடங்கியது.
அதன் பின்னரே உடல் எடை கணிசமான முறையில் அதிகரிக்க தொடங்கியது. இருப்பினும்,  இன்று எனது எல்லா வேலைகளையும் அவர்களே செய்வதோடு என்னையும் அவர்களே பராமரித்து வருகின்றார்கள்.
எனவே எனக்கு எந்த வைத்திய சிகிச்சையும் தேவையில்லை. இருக்கும் எனது மிகுதி  வாழ் நாளையும் என் குழந்தைகளுடனையே கழிக்க விரும்புகின்றேன் என தெரிவித்தார். 
தனது உடலுக்கு பொருத்தமாக ஒரு உடையை கூட அணியமுடியாமல் வீட்டில்  இருக்கும் இவர் தனது வாழ்நாளை தன் படுக்கையறையிலே கழிக்கிறார்.







 நன்றி, நியூயாழ்.

Sunday, April 3, 2011

உலகின் மிக இளவயதுத் தந்தை.

 உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய 13 வயதுடைய உலகின் மிக இளவயதுத் தந்தை அல்ஃபீ பேட்டன் (Alfie Patten). இந்தச் சிறுவன், 12 வயதாக இருக்கும் போது 15 வயதுடைய பள்ளித் தோழி சான்டெலி ஸ்டெட்மெனுடன் வைத்துக் கொண்ட பாதுகாப்பற்ற தகாத உறவின் காரணமாக ஒரு பெண் குழந்தைக்கு தந்தையானது பரபரப்பை ஏற்படுத்தியது.
13 வயதில் ஒரு பெண் குழந்தைக்கு தகப்பனாக மாறிய அல்ஃபீ பேட்டனை உலகப் பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டன. சான்டெலியின் ஆண் நண்பர்கள் சிலர் “சான்டெலியுடன் எங்களுக்கும் உடல் ரீதியான தொடர்பு இருந்தது” என்று வெளியிட்ட உண்மையின் காரணமாக சிறிது காலத்திலேயே இந்தப் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டு விட்டது.
இதன் பின்னர் மெய்ஸி ரோக்சனி என்ற அந்தப் பெண் குழந்தை மரபணு (DNA) பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போது,  சோதனையின் முடிவில் அக்குழந்தையின் தந்தை அல்ஃபீ பேட்டன் அல்ல என்ற உண்மை வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், பெண் குழந்தைக்கு உண்மையான தந்தை யார்? என்ற கேள்விக்கு சான்டெலி ஸ்டெட்மெனின் ஒன்றுவிட்ட சகோதரியான ஜோடி ஓனியல் சமீபத்தில் தெரிவித்த ஈஸ்ட் சுஸெக்ஸ் என்ற பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு சான்டெலி வந்திருந்த போது அங்கு ஒரு பையனுடன் ஏற்பட்ட பாதுகாப்பற்ற உறவுதான் குழந்தை உருவாவதற்கு காரணமாக இருக்கலாம் என்ற கருத்து மூலம் இந்த  கேள்விக்கு விடை கிடைக்கலாம்.
இருந்தாலும்,  13 வயதில் தந்தையான பெருமையை பெற்ற சில நாட்களிலேயே, அதற்கு களங்கம் ஏற்பட்டு விட்டதால் சிறுவன் அல்ஃபீ பேட்டன் கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளதாக தகவலகள் தெரிவிக்கின்றன..
பிரிட்டனில் 2000 மற்றும் 2005ம் ஆண்டு காலப்பகுதியில்  குழந்தை பெற்றுக்கொண்ட 1000 பேரில் 27 பேர் சுமார்  15-19  வயதுக்கிடைப்பட்டவர்கள் என சர்வதேச சனத்தொகை நடவடிக்கை நிறுவன ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஸ்பெயினில் 1000 க்கு 10 பேரும், பிரான்சில் 1,000 க்கு 8 பேரும், நெதர்லாந்தில் 1,000 க்கு 5 பேரும் என்ற கணக்கிலும் இளவயது முறையற்ற பிரவசங்கள் நடைபெறுவதாக மேலும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அத்துடன், அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது பிரிட்டனின் விகிதம் குறைவு என்ற போதிலும், ஆங்கிலம் பேசும் நாடுகளில் 1000 க்கு  44பேருடன், ஆஸ்திரேலியா மற்றும், நியூசிலாந்து போன்ற நாடுகளில்  1000 க்கு 17- 27 பேர் வரையில் 15 தொடக்கம் 19 வயதுக்குட்பட்ட முறையற்ற இளவயது பிரவசங்கள் இடம்பெறுகின்றன.
“பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும், இணையத்தளங்களும் காண்பிக்கும் ஆபாசக் காட்சிகளின் விளைவுதான் இது”
பெற்றோர்களே.........! தங்கள் பிள்ளைகளின் மீது எச்சரிக்கையாக இருங்கள்.