Showing posts with label Korea. Show all posts
Showing posts with label Korea. Show all posts

Friday, November 25, 2011

20,000 இலங்கையருக்கு தென்கொரியாவில் ஓய்வூதியம்.


தென் கொரியாவில் தொழில் புரியும் சுமார் 20,000 இலங்கையர்களும் கொரியாவின் தேசிய ஓய்வூதிய திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ள னர். இலங்கையர்களுக்கென 36 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொரிய அரசு ஒதுக்கியுள்ளது. இதன் படி, சுமார் மூன்று இலட்சம் ரூபா வரையில் இலங்கையர் ஒருவர் ஓய்வூதிய கொடுப்பனவாக பெறுவார் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக் கிறது.
கொரியாவில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தமொன்று கடந்த 22ஆம் திகதி வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கும் கொரிய தேசிய ஓய்வூதிய திணைக்களத் துக்குமிடையே ஒப்பந்தம் கைச்சாத்தானது.
அமைச்சின் செயலாளர் கர்னல் நிஸ்ஸங்க என். விஜேரட்னவும், கொரிய தேசிய ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பீசியோங் ஹ¥ன் என்பவரும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
அமைச்சர் டிலான் பெரேரா முன்னிலையில் செய்துகொள்ளப்பட்ட இரு தரப்பு ஒப்பந்தம் ஊடாக ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்களின் விபரங்களை அமைச்சுக்கு ஒவ்வொரு ஆறு மாதத்துக்கு ஒருமுறை கட்டம் கட்டமாக பெற்றுக் கொடுக்க கொரிய அரசு முன்வந்துள்ளது.
இத்தகவல்களின் அடிப்படையில் இலங்கையரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு அமைச்சினூடாக உறுதிப்படுத்தப்பட்டு கொரிய ஓய்வூதிய திணைக்களத்துக்கு அனுப்பப்படும்.
அனுப்பப்பட்ட தரவுகள் சரியானதாக இருக்கிறது என்பதை கொரிய திணைக்களம் உறுதி செய்த பின்னர் ஓய்வூதியம் பெறத் தகுதி பெற்றவருக்குரிய கொடுப்பனவுகள் வழங்கப்படும். தென் கொரியாவுக்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் டிலான் பெரேராவின் வேண்டுகோளை ஏற்றே கொரிய அரசு இந்த ஓய்வூதிய திட்டத்தை அமுல் படுத்தியுள்ளது.
Thanks to Thinakaran.

Sunday, February 20, 2011

உலகின் முதல் திருக்குர்ஆன் தொலைக்  காட்சி

உலகிலேயே முதன் முறையாக திருக்குர்ஆன் மென்பொருளை தன்னகத்தே கொண்ட தொலைக் காட்சிப் பெட்டிகளை தென் கொரியாவின் பிரபல நிறுவனமான எல்.ஜி (LG) த் தயாரிக்கிறது.
இம்மாதம் முதல் சந்தைக்கு வரும் 42 அங்குல  மற்றும் 50 அங்குல ப்ளாஸ்மா தொலைக் காட்சிகளில் இந்த மென்பொருள் நிறுவப்பட்டு விற்பனைக்குக் கிடைக்கின்றன. ரமளான் மாதத்தில் உலகமெங்கும் இஸ்லாமியர்கள் திருக் குர்ஆனை ஓதுவதைக் கருத்தில் கொண்டு  'குர் ஆன் டி.வி'கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
இதன் மூலம் CD, DVD Player  போன்றவை இணைக்காமலும் கேபிள் டிவி, சாட்டலைட் / டிஷ் ஆண்டெனா போன்ற இணைப்பு ஏதுமின்றி வெறும் தொலைக்காட்சிப் பெட்டியைக் கொண்டே குர்ஆனின் அத்தியாயங்கள் மற்றும் அதன் வசனங்களைப் பார்வையிடவும் அழகிய குரலில் ஓதுதலைக் கேட்கவும் முடியும்.
160 GB கொள்ளளவு கொண்ட ஹார்ட் டிஸ்க் வசதி கொண்ட இந்த டி.வியில் இதற்கான மென்பொருள் டி.வியின் ரிமோட் கண்ட்ரோல் மூலம் விரும்பிய பக்கங்களைப் பார்வையிடவும், விருப்பமுள்ள இறை வசனங்களை சேமித்துக்கொள்ளவும் (Bookmark) தன்னகத்தே அகவசதிகள் செய்யப்பட்டுள்ளன.

டிஜிட்டல் புரட்சிக்குப் பின்னர் சர்வதேச அளவில் முஸ்லிம்கள், குர்ஆனை DVD ப்ளேயர்களின் மூலமும், சாட்டலைட் சேனல்களின் மூலமும் பெருமளவு பயன்படுத்துவதைப் புள்ளிவிபரங்கள் மூலம் அறிந்து தனது வியாபாரத்தில் இந்தத் திட்டத்தினைப் புகுத்தியுள்ளது எல்.ஜி நிறுவனம்.
எல்.ஜி நிறுவனத்தின் எலக்ட்ரானிக்ஸ் பிரிவின் பிரதித்தலைவர் திரு. பார்க் ஜோங்-சியோக் அவர்கள் இந்த டி.வியை அறிமுகப் படுத்துவதற்கான சிறப்புப் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பேசுகையில், "சர்வதேச அளவில் முஸ்லிம்கள் இறை வேதமான குர்ஆனைத் தங்களது தினசரி வாழ்வில் ஓதி வருவதைக் கணக்கில் கொண்டே இந்தத் திட்டத்தினை அறிமுகப் படுத்தியுள்ளோம்" என்றார்.
42 அங்குல  ப்ளாஸ்மா டி.விக்கான விலை US$ 1,376 மற்றும் 50 அங்குல டிவிக்கான விலை US$ 2,160 ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இது நாளடைவில் குறையும் என்றும், தற்போது துபை, சவுதி அரேபியா உட்பட அனைத்து மத்திய கிழக்கு நாடுகளிலும் விற்பனையாகும் இந்த தொலைக்காட்சிகள்  மற்ற நாடுகளிலும் அடுத்தடுத்த மாதங்களில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
நன்றி- NagoreFlash.

Thursday, February 17, 2011

தென் கொரியாவை மூடியுள்ள பனிப்பொழிவு.

 தென் கொரியாவின் துறைமுக நகரமான சம்சாக் ( Samcheok) பிரதேசத்தில் கடந்த பெப்ரவரி 11, 12 ம் திகதிகளில்  39 அங்குலம்( 100Cm) பனிப்பொழிவு பெய்துள்ளதாக  Agence France செய்தி வெளியிட்டுள்ளது. 1911ம் ஆண்டின் பின்னர், கடந்த ஒரு நூற்றாண்டில் செய்த ஆகக்கூடிய பனிப்பொழிவாக இது பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
பனிப் பொழிவினால் பாதைகள் மூடப்பட்டதன்  காரணமாக, பாதைகளில் பயணத்தில் ஈடுபட்ட வாகன ஓட்டுனர்கள்  ஆபத்தை எதிர் கொள்ள நேரிட்டதுடன், பனியின் பாரம் காரணமாக நூற்றுக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளது உள்ளதாகவும்,தென்கொரிய அரசு அவசர மீட்பு பணிகளில் 12000 இராணுவத்தினரை ஈடுபடுத்தியுள்ளதாகவும்  BBC செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் தென்கொரியாவின் தலைநகர் சியோல் பகுதிகளும் கடும் பனிப்பொழிவுக்கு உள்ளாகியுள்ளதுடன், வரலாற்றில் முதல் தடவையாக ஹன் (Han River) ஆறும் உறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அத்துடன்,  1960 ம் ஆண்டின் பின்னர், இந்த ஆண்டு ஜனவரி காலப்பகுதியில் கடும் குளிரான காலநிலை நிலவுவதும் பதிவாகியுள்ளது.
வீடியோ  இணைப்பு.

Sunday, January 23, 2011

பேஸ்போல் (Baseball ) மட்டை வடிவிலான கலங்கரை விளக்கு (Lighthouse)

பேஸ்போல் (Baseball ) மட்டை வடிவிலான கலங்கரை விளக்கு (Lighthouse) ஒன்றினை தென் கொரியாவின் பூசான் (Busan) துறைமுக, கடல் பிரதேச அலுவலகம் கொரியாவின் தென் துறைமுகப்பட்டினமான பூசானின் (Busan)  சில்லம் (Chilam) கடற்பகுதியில் நிர்மாணித்து, கடந்த 2010 நவம்பர் மாதம் 25 ம் திகதி திறந்து வைத்துள்ளது.
 உயரமான மட்டையும், கையுறையும் சேந்ததாக  இந்த கலங்கரை விளக்கு அமைந்திருப்பது சிறப்பசமாகும். பூசான் பகுதியில்  பேஸ்போலினை அடையாளப்படுத்துமுகமாகவும், 2008 சீனாவின் பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக்கில் முதன் முதலாக பேஸ்போலில் தங்கம் வென்று சாதனை படைத்ததை நினைவு கூறுமுகமாகவும்  இந்த கலங்கரை விளக்கு அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


Wednesday, January 5, 2011

 69 வயது கொரிய பெண்ணின் சாதனை.

960 முறை பரீட்சைக்கு தோற்றி சாதனை.
69 வயதுடைய (Cha-Sa-Soon) சா-ச-சூன் என்ற கொரிய பெண்மணி நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக, தனக்கு வாகன செலுத்துவதற்கான அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக (4,000,000 Won) சுமார் 3500 அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளார்.இவர் தோற்றிய பரீட்சைகள் அனைத்திலும் பரிதாபகரமான முறையில் தேர்ச்சி பெற முடியவில்லை.

இறுதியாக, இவரது அயராத முயற்சியின் காரணமாக,கடந்த நவம்பர் 4, 2009ல் நடைபெற்ற பரீட்சையில் 960 வது முறையாக தோற்றி, 100 புள்ளிகளுக்கு 60 புள்ளிகளைப்பெற்று தேர்ச்சி பெற்று சாதனை படைத்து,  தனக்குரிய வாகன ஓட்டுவதற்கான அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

தான் தேர்ச்சி பெற்ற சந்தோஷத்தில் Yonhap செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்த (Cha-Sa-Soon), தனக்கென ஒரு காரை சொந்தமாக வாங்கி தனது பிள்ளைகளின்வீடுகளுக்கு செல்லவும், தனது மரக்கறி வியாபாரத்தை விரிவுபடுத்தவும் எண்ணி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Thursday, December 30, 2010

தென்கொரியா பாடசாலைகளில் ஆங்கிலம் கற்பிக்கும் “ரோபோ”க்கள்.

தென்கொரிய பள்ளிகளில் “ரோபோ”க்கள் மூலம் ஆங்கிலம் கற்றுத் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக “எங்ஜீ” என்றழைக்கப்படும் வெள்ளை நிற முட்டை வடிவிலான “ரோபோ”க்களை கொரிய அறிவியல் தொழில் நுட்ப நிறுவனம் உருவாக்கியுள்ளது.
3.3 அடி உயரமுள்ள “ரோபோ”க்களில் உருவப் படங்கள் தெரியும் வகையில் டி.வி. வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியை போன்று வகுப்பறை முழுவதும் சுற்றி நகர்ந்து வந்து மாணவர்களிடம் பேசிய படியே பாடம் நடத்தும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், பாட்டுபாடிக் கொண்டும், கை, கால் மற்றும் தலையை அசைத்த படி நடனமாடிய படியும் குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் வசதியும் இதில் உள்ளது. தொடக்கத்தில் தென்கொரியாவில் உள்ள தேகு” என்ற இடத்தில் உள்ள 21 தொடக்கப்பள்ளிகளில் இந்த “ரோபோ”க்கள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன.
இப்பள்ளிகளில் சுமார் “30 ரோபோக்கள்” இது போன்று ஆங்கிலம் கற்றுத் தருகின்றன. பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து பெண் ஆசிரியைகள் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்குகின்றனர்.
ஆங்கில பாடம் பிலிப் பைன்ஸ் ஆசிரியைகளின் குரல் டேப்பில் பதிவு செய்யப்பட்டு நடத்தப்படுகிறது. இது தங்களுக்கு நல்ல அனுபவமாக இருப்ப தாக ஆசிரியைகள் தெரிவிக்கின்றனர்.
இதன் மூலம், குழந்தைகளும் மிகவும் அன்புடனும், ஆர்வமுடனும் ஆங்கில பாடம் கற்கின்றனர். இது போன்று தென்கொரியா முழுவதும் “ரோபோ”க்கள் மூலம் ஆங்கிலம் கற்றுத்தர முடிவு செய்யப்பட்டுள்ளது.
நன்றி.வீரகேசரி.

Monday, December 20, 2010

1200 சோடி செருப்புக்களை திருடிய கொரிய சாதனைத்திருடன்

தென் கொரியாவில் பாவித்த செருப்புக்கடை உரிமையாளர் ஒருவர் 1200 சோடிக்கும் மேற்பட்ட பெறுமதியான, புதிய புதிய வடிவமைப்புடைய செருப்புகளை மரண வீடுகளிலும், வைத்தியசாலைகளிலும் திருடியுள்ளமை அண்மையில் பொலிசாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், திருடனும் திருட்டில் ஈடுபட்டிருக்கும் போது வசமாக மாட்டிக்கொண்டுள்ளார்.
59 வயதுடைய பார்க் (Park) என்பவர் தான் இந்த சாதனைக்கு சொந்தக்காரரராகும். கொரியர்கள் மரண வீடுகளுக்கு சென்றால் தங்கள் செருப்புக்களை கழற்றி விட்டு நுழைவது அவர்களது பரம்பரை வழக்கமாகும். இதனை சாதகமாக பயன்படுத்திகொண்ட பார்க்,  மரண வீடுகளுக்கு செல்வோருடன் தானும் சென்று தான் அணிந்திருக்கும் பழைய செருப்பை கழற்றி விட்டு பெறுமதியான, புதிய வடிவமைப்புடைய செருப்புக்களை அணிந்து கொண்டு வெளியேறுவதை வழக்கமாக கொண்டிருந்தமையும், இவரது தொழில் இரகசியமும்  போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.
இவ்வாறு திருடி வரும் செருப்புக்களில்  சிறு சிறு திருத்தங்களை தனது செருப்புகடையில் செய்து நல்ல விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.
இவரது தொழில் இரகசியத்தை அறிந்து கொண்ட போலீசார் Sueso மாவட்டத்தில் மரண வீடொன்றுக்கு இவர் செல்லும்  இவரை பின் தொடரலானார்கள். வீட்டில் நுழைந்த பார்க், தான் அணிந்திருந்த பெறுமதியற்ற செருப்பை கழற்றி விட்டு அதனருகே கழற்றப்பட்டிருந்த செருப்பினையும் மேலும் இரண்டு சோடி செருப்புக்களையும் திருடிக்கொண்டு வெளியேறும் போது இவரை தொடர்ந்து வந்த போலீசார் கையும் மெய்யுமாக பிடித்து விட்டனர்.

Wednesday, December 15, 2010

உலகின் மிக நீளமான வானவில் பாலம் - கொரியா.

தென் கொரியாவின் ஹன் (Han River ) ஆற்றுக்கு மேலாக இடப்பட்டுள்ள பன்போ (Banpo Moonlight Rainbow Fountain) பாலமானது உலகின் மிக நீளமான வானவில் பாலமாக  கின்னஸ் உலக சாதனைபுத்தகத்தில் பதியப்பட்டுள்ளது.
 கடந்த 2009 ல் 1,140m நீள பாலத்தின் இரு பக்கத்திலும் சுமார் 10,000 LED நீர் பாய்ச்சும் குழாய்கள் பொருத்தப்பட்டு பாலம் அழகு படுத்தப்பட்டது. பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள இக்குழாயிகளினூடாக நிமிடத்திற்கு 190 தொன் ஆற்று நீர் தொடர்ச்சியாக பாய்ச்சப்படுகிறது. 
43 மீற்றர் தூரத்திற்கு கிடையாக வானவில் நிறத்தில் நீர் பீச்சப்படும் காட்சி கண் கொள்ளா காட்சியாகும்.இது  வார நாட்களில் தினமும் பி.ப 12:30 , பி.ப 3.00, பி.ப 8.00, பி.ப 8:40 , மற்றும் பி.ப  9:20 க்கும், வார இறுதி நாட்களில்  பி.ப 5.00, பி.ப 10.00 க்கும் இயக்கப்படுகின்றது.
 கொரிய தலை நகர மேயர் Oh Se-hoon, இது  குறித்து கருத்து தெரிவிக்கையில், இந்த வானவில் பாலத்தினால் நகரே அழகு பெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.
(Location: Express Bus Terminal Subway Station and getting out of exit number 8-1, the exit for Banpo Bridge)









Wednesday, December 1, 2010

கண் தெரியாத 5 வயது கொரியக் குழந்தையின் சாதுர்யம்.

ஐந்து வயதுடைய கண்கள் இரண்டு அற்ற  கொரிய பெற்றோருக்குப் பிறந்த  
Yoo Ye-eun என்ற குழந்தை தான் இந்த அபூர்வ அறிவைப்பெற்றுள்ளது.
3 வயதாக இருக்கும் போது,  ஒரு தடவை ஒரு பாடலை கேட்டால் அதனை உடனடியாக கிரகித்துக்கொண்டு அதற்குரிய இசையை பியானோவில் வாசிக்கிறது.
இக்குழந்தை அடிப்படையில் பியானோ சம்பந்தமான எந்த பயிற்சியையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வரிய திறமையை கொண்ட இக்குழந்தை, கண்கள் இரண்டு இல்லை என்ற காரணத்துக்காக பெற்றோரால் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
கொரியாவின் மிகப்பிரசித்தி பெற்ற Pandora TV என்ற இணைய தளத்தில் வெளியான இக்குழந்தையின் வீடியோக்காட்சியை 27 மில்லியன் பார்வையாளர்களும், YouTubeல் 2 மில்லியன்பார்வையாளர்களும் பார்வையிட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

Wednesday, August 18, 2010

7000 ஆண்டுகள் பழமையான துடுப்பு தென்கொரியாவில் கண்டுபிடிப்பு.

தென் கொரியாவின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 7000 வருடங்கள் தொன்மையான தேவதாரு மரத்தினாலான  படகோட்டும் துடுப்பொன்றை  கண்டு பிடித்துள்ளனர். சிதைவடையாமல் நல்ல நிலையிலிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக, கிமே தேசிய அரும்பொருள்காட்சியகம் (Gimhae National Museum ) விடுத்துள்ள செய்தியில், சியோலுக்கு (Seoul ) தென் கிழக்கு பக்கமாக 240Km (140Miles )  தொலைவில் சாங்யாங்(Changnyeong ) பிரதேசத்திலுள்ள சேற்று நிலப்பகுதியில் இந்த அரிய துடுப்பு கண்டெடுக்கப்பட்டதாக  தெரிவித்துள்ளது.
அரும்பொருள்காட்சியகத்தின் ஆராச்சியாளர் யூன் ஒன்-ஷிக்(Yoon On-Shik )  AFP செய்திச்சேவைக்கு கருத்து தெரிவிக்கையில், "இது தென் கொரியாவில் மட்டுமல்ல உலகிலேயே அரிய கண்டு பிடிப்பாகும்" என்றார்.
2005 ல் சீனாவின் Zhejiang  மாகாணத்தில் சீனாவின் கலையம்சங்களுடன் கண்டு பிடிக்கப்பட்ட சுமார் 8000 வருடங்கள் பழமையானதென கருதப்படும் உலகின் மிகவும் தொன்மையான படகுடன் இது சம்பந்தப்படுகிறதா என ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும், சேற்றில் புதைந்து காணப்பட்டமையினால், புறத்தாக்கங்களிளிலிருந்து அதன் முழுமைத்தன்மை  கெடாமல் பாதுகா க்கப்படுள்ளதுடன், அதன் முழு நீளம் 1.81M (அண்ணளவாக 6 அடி)ஆகும். என்றும்  தெரிவித்தார்.
இதனுடன் ஒத்ததான 6000 வருடங்கள் தொன்மையான தென நம்பப்படும் துடுப்பொன்றை ஜப்பானிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 1999 ல்  ஜப்பானின் கிழக்கு கடற்கரைப்பகுதியில் கண்டெடுத்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இதனூடாக கொரிய குடாவிற்க்கும் ஜப்பானுக்குமிடையிலான பண்டைய கால வர்த்தக தொடர்புகள் நன்கு புலப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Thanks To Yahoo News
More Details Click Here.....

Sunday, July 11, 2010

இன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர்.

இன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் தென் கொரியாவில் கைது.
 தென் கொரியாவைச் சேர்ந்த ஒரு தம்பதி இன்டர் நெட்டில் ஆர்வத்துடன் விளையாடும் பழக்கத்தை வைத்திருந்தனர். இவர்களுக்கு 3 மாத குழந்தை ஒன்றிருந்தது. அதுவும் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை.
தினமும் இவர்கள் இன்டர் நெட் மையத்துக்குச் சென்று ஒன் லைனில் விளையாடுவார்கள். அவ்வாறு விளையாடும் போது அவர்கள் தங்களையே மறந்து விடுவார்கள். சாப்பாடு, தண்ணீர் இன்றி தங்களின் அன்றாட பணிகளைக் கூட மறந்து விடுவதும் உண்டு.
தங்களையே மறந்து விளையாடும் இவர்கள் பெற்ற குழந்தையை மட்டும் நினைவு வைத்திருப்பார்களா? அதனையும் மறந்து விட்டனர்.
குழந்தைக்குப் பால் கொடுக்காமல் பட்டினி போட்டு வந்தனர். சம்பவத்தன்று ஒன்லைனில் ஆடிய விளையாட்டில் தங்களையே மறந்து விட்டனர்.
இதனால் குழந்தை பால் மற்றும் தண்ணீர் இன்றி நாக்கு வறண்டு, பசியால் இறந்து போனது. இச்சம்பவம் குறித்து பொலிசில் புகார் செய்யப்பட்டது.
கவிபோன் நகர பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் பசி, பட்டினியால்அது இறந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அந்தத் தம்பதியர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் தென் கொரியாவில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
Thanks To...Virakesari.

Sunday, June 27, 2010

கொரிய மொழியில் 500 தமிழ் வார்த்தைகள்

செம்மொழி ஆய்வரங்கத்தில் ஜுங் நம் கிம் எனும் கொரிய ஆராய்ச்சியாளர், கொரிய மொழியில் பயன்பட்டு வரும் 500 தமிழ் வார்த்தைகளை கண்டறிந்து 'கொரிய மற்றும் தமிழ் மொழிகளுக்கு இடையிலான ஒற்றுமைகள்' என்ற தலைப்பில் கட்டுரையாக சமர்பித்திருக்கிறார். கொரிய மொழியில் உள்ள தமிழ் வார்த்தைகளை கண்டறிந்தது குறித்து கூறியதாவது:-
கனடாவில் கொரிய மொழி ஆசிரியராக பணியாற்றி வரும் நான், ஆறு ஆண்டுகளுக்கு முன் டொரோண்டோ நகரில் ரயிலில் சென்று கொண்டிருந்தபோது ஒரு தமிழ் குடும்பத்தை சந்தித்தேன். அவர்கள் பேசிய தமிழ் வார்த்தைகளின் உச்சரிப்பு கொரிய மொழி போல இருப்பதைக் கேட்டு வியந்தேன். அவர்களிடம் விசாரித்தபோது, இந்தியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கூறினார்கள். அப்போதுதான் இரு மொழி வார்த்தைகளுகிடையே உள்ள ஒற்றுமைகளை உணர்ந்தேன்.
அதை தொடர்ந்து தமிழ் மொழியை கற்க ஆரம்பித்தேன். மேலும், இரு மொழி வார்த்தைகளுக்குமிடையே உள்ள உச்சரிப்பு ஒற்றுமை குறித்து ஆய்வு செய்யத் தொடங்கினேன்.
அப்போது கொரிய மொழியில் சுமார் 500 தமிழ் வார்த்தைகள் இருப்பதை கண்டறிந்தேன். ஒரே உச்சரிப்பு மற்றும் ஒரே அர்த்தத்தை உடையவையாக அந்த வார்த்தைகள் இருந்தன. அப்பாவை 'அபா' என்றும் வணக்கம் என்பதை 'வணக்காம்தா' என்று பாம்பு என்பதை 'பாயெம்' என்றும் சந்தோசம் என்பதை 'சந்துதம்' என்றும் ஏன் என்பதற்கு 'வேன்' என்றும் மனைவி என்பதை 'மனுரா' என்றும் கொரிய மொழியில் அழைக்கின்றனர்.
உரத்துக்கு 'உரம்' என்றும், கண்ணுக்கு 'நுகண்' என்றும், மூக்குக்கு 'கோ' என்றும், பல்லுக்கு 'இப்பல்', புல்லுக்கு 'புல்', கொஞ்சம் என்பதற்கு 'சொங்கும்' என கூறுகின்றனர்.
இதுபோல, உடலியல் செய்கைகளும் இரு மொழிகளுக்கிடையே ஒற்றுமையாக உள்ளன. குழந்தைகளின் தலையை ஆட்டியபடி 'தோரி தோரி' என கூறுவதும் கைகளை தட்டிக் கொண்டு விளையாடுவதும் 'சா சா க்குங்' என குழந்தைகளை கொஞ்சுவதும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. கொஞ்சுதல் என்ற வார்த்தை கூட 'கொஞ்சு' என்றே கொரிய மொழியில் உள்ளது.
வீட்டில் புதிதாக குழந்தை பிறந்தால், மாவிலைத் தோரணத்தால் அலங்காரம் செய்வது தமிழக பண்பாடு. நோய் கிருமிகளை அண்டாமல் தடுக்கும் சக்தியாக மாவிலை கருதப்படுகிறது. இதுபோல, கொரியாவில் ஆண் குழந்தை பிறந்தால் சிவப்பு மிளகாய் தோரணமும், பெண் குழந்தை பிறந்தால் விறகு கரி தோரணமும் தொங்கவிடுவது வழக்கம். கெட்ட ஆவிகளை தடுக்கும் சக்தியாக அவை கருதப்படுகின்றன.
கிருஸ்து பிறப்பதற்கு முன்னால், ரோமாபுரி பேரரசு மற்றும் தெற்கு சீனாவுக்கு தமிழர்கள் வந்திருக்க கூடும். ஏனெனில், தென்னிந்தியா மற்றும் இலங்கை போன்ற பகுதிகள் அப்போதைய வர்த்தக மையங்களாக விளங்கின. மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளுக்கு இடையிலான பாலமாகவும் அவை விளங்கின.
எனவே, கிழக்கு மார்க்கமாக தெற்கு சீனா, கொரிய தீபகற்பம், ஜப்பானிய தீவுகள் போன்ற நாடுகளுக்கு தமிழர்கள் வந்துள்ளனர். கி.பி.முதலாம் நூற்றாண்டு வரையிலும் கொரியாவுக்கு திராவிட இனத்துக்கும் (குறிப்பாக தமிழர்கள்) இடையே தொடர்பு இருந்துள்ளது.
வெப்பமான சூழ்நிலை காரணமாக, வெள்ளை நிற ஆடை அணிவதை தமிழர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், குளிர் சூழ்நிலை இருந்த போதிலும் கொரிய மக்களும் வெள்ளை நிற ஆடைகள் அணிவதில் ஆர்வமாக இருக்கின்றனர்.
இவ்வாறு ஜூங் நம் கிம் தெரிவித்துள்ளார்.   
Thanks To......Ularuvaayan

Thursday, May 27, 2010

தென்கொரியாவில் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட வடகொரிய பெண் உளவாளி


வடகொரியாவை சேர்ந்தவர் கிம் (36). பெண் உளவாளி. இவர் தென் கொரியாவின் ராணுவ ரகசியங்கள் மற்றும் அவசர காலங்களில் பயன் படுத்தப்படும் சுரங்க பாதைகள் குறித்த ரகசிய தகவல்களை சேகரித்து வடகொரியாவுக்கு அனுப்பி வைத்தார்.

இதை அறிந்த தென் கொரிய அதிகாரிகள் பொறி வைத்து அவரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து விசாரணை நடத்தி அவரை 5 ஆண்டுகள் சிறையில் அடைத்தனர்.

தகவல்களை சேகரிக்க தென்கொரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் “செக்ஸ்” லீலையில் ஈடுபட்டு இருக்கிறாள். இந்த தகவல் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இவள் சீனா மற்றும் லவோஸ் வழியாக தென் கொரியாவுக்குள் நுழைந்து, ஆன்லைன் மூலம் சுரங்கப்பாதை ஊழியர் ஒருவருடன் காதல் நாடகமாடி அவரை சீனாவுக்கு வரவழைத்து இருக்கிறாள்.

பின்னர் அவர் கொடுத்த தகவலின் மூலம் தென் கொரியாவுக்குள் நுழைந்து தனது உளவு வேலையில் ஈடுபட்டாள். இந்த தகவலை தென்கொரியா அதிகாரி ஓசென்-இன் தெரிவித்துள்ளார்.

நன்றி,www.z9world.com