2012 இல் டைட்டானிக் கப்பல் மூழ்கி 100 ஆவது ஆண்டு நிறைவு.
எதிர்வரும் 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆந் திகதி டைட்டானிக் கப்பல் மூழ்கி 100ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்படவிருக்கின்றது.
இதனை நினைவுகூரும் வகையில் டைட்டானிக் படத்தை 3டி படமாக மாற்றித் தருகிறார் படத்தின் தயாரிப்பாளர் ஜேம்ஸ் கமரூன். உலகம் முழுக்க இதே தினத்தில் டைட்டானிக் 3டி வெளியாகிறது.
11 ஆஸ்கர் விருதுகள் மற்றும் 1.8 பில்லியன் வசூல் என உலக அளவில் பல சாதனைகள் படைத்த படம் டைட்டானிக். இதனை ஜேம்ஸ் கமரூனே தயாரித்து இயக்கினார். 1997ஆம் ஆண்டு டிகேப்ரியோ கேன் வின்ஸ்லெட் நடித்து வெளியான இந்தப் படம் ஆசிய நாடுகளிலும் பெரும் வசூல் சாதனை படைத்தது.
இதுகுறித்து கமரூன் கூறுகையில்,
"முப்பரிமாணத்தில் டைட்டானிக் படத்தை மாற்றும் பணிகளை விரைவில் ஆரம்பிக்க இருக்கிறேன். அதனுடன் அசல் டைட்டானிக் கப்பல் கடலுக்குள் சிதைந்த நிலையில் இருக்கும் காட்சிகளும் இடம்பெறும். ஆனால் 'அவதார்' அளவுக்கு தத்ரூபமான 3டி பதிப்பு இந்தப் படத்தில் வருமா என்று தெரியவில்லை" என்றார்.
1912ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் திகதி இந்தக் கப்பல் அட்லாண்டிக் கடலில் 2,223 பயணிகளுடன் மூழ்கியது. அதில் 1,517 பேர் உயிரிழந்தனர். கடலில் மூழ்கிய அந்தக் கப்பலை, கடலுக்குள் நேரில் போய் ஆய்வு செய்து ஓர் அற்புதமான காதல் கதையுடன் தத்ரூபமாக தந்திருந்தார் கமரூன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Showing posts with label Tittanic. Show all posts
Showing posts with label Tittanic. Show all posts
Sunday, July 11, 2010
Friday, July 2, 2010
“டைட்டானிக் 2′
டைட்டானிக் பயணத்தை முழுமையாக்கும் “டைட்டானிக் 2′
டைட்டானிக் கப்பல் மூழ்கி, நூறு ஆண்டுகள், நிறைவு பெறுவதை குறிக்கும் வகையில், டைட்டானிக் நினைவு சுற்றுலா கப்பலை இயக்க, பிரிட்டன் சுற்றுலா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இங்கிலாந்திலிருந்து, 1912ம் ஆண்டு, ஏப்ரல் 8ம் தேதி, பயணத்தை துவங்கிய, டைட்டானிக் சுற்றுலா கப்பல், ஏப்ரல் 15ம் தேதி, அட்லாண்டிக் சமுத்திரத்தில், பயணித்தபோது, பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கியது. இந்த பயங்கர விபத்தில், சுற்றுலா பயணிகள், ஊழியர்கள் என, மொத்தம் 2,223 பேரில், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 1,578 பேர், கடலில் மூழ்கி பலியாகினர். நடுக்கடலில் தத்தளித்த மீதமிருந்தோர், கடும் முயற்சிக்கு பின் மீட்கப்பட்டனர்.டைட்டானிக் சுற்றுலா கப்பல் கடலில் மூழ்கிய சம்பவம், உலக வரலாற்றில், கருப்பு தினமாக கருதப்படுகிறது. டைட்டானிக் கப்பல் மூழ்கி, 2012ம் ஆண்டுடன், நூறு ஆண்டுகள் ஆகின்றன. இந்நினைவு தினத்தையொட்டி, டைட்டானிக் பயணம் செய்த, அதே பாதையில், டைட்டானிக் நினைவு சுற்றுலா கப்பலை, (டைட்டானிக் 2) இயக்க, பிரிட்டனை சேர்ந்த, பிரபல மைல்மார்கன் சுற்றுலா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இக்கப்பல், 2012ம் ஆண்டு, ஏப்ரல் 8ம் தேதி, சவுத்ஆம்டன் நகரில், தனது பயணத்தை துவக்கவுள்ளது.
டைட்டானிக் கப்பல் மூழ்கிய தினமான, ஏப்ரல் 15ம் தேதி அன்று, அதே இடத்தில், நினைவு சுற்றுலா கப்பல் நிலை நிறுத்தப் படுகிறது. இரவு 2.20 மணிக்கு, நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பின், பயணத்தை தொடரும் கப்பல், ஏப்ரல் 20ம் தேதி, நியூயார்க் நகரை சென்றடையும். டைட்டானிக் கப்பலில், பயணம் செய்த போது, உயிரிழந்தவர்களின், குடும்ப உறுப்பினர்கள் பலர், விபத்து குறித்தும், இறந்தவர்களின் அனுபவங்கள் குறித்தும், விளக்குவர். கப்பலில் பயணம் செய்வதற்கான, முன்பதிவு துவங்கியுள்ளது.
Thanks To........Alaikal.
Sunday, June 20, 2010
கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் கடிதம் ரூ. 38 1/2 லட்சத்துக்கு ஏலம்
லண்டன், ஏப். 19-
உலகிலேயே மிகப்பெரிய அதிநவீன சொகுசு கப்பல் டைட்டானிக். 1517 பேருடன் பயணம் செய்த இக்கப்பல் கடந்த
1912-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந்தேதி கடலில் மூழ்கியது.
இந்த விபத்தில் கப்பலில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் மரணம் அடைந்தனர்.
இக்கப்பலில் பயணம் செய்தவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கடித தொடர்பு வைத்திருந்தனர். அவ்வாறு எழுதப்பட்ட
ஒரு கடிதம் லண்டனில் ரூ. 38 லட்சத்து 50 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
இந்த கடிதத்தை கப்பலில் முதல் வகுப்பில் பயணம் செய்த அடோல்ப் சபீல்டு என்பவர் தனது மனைவிக்கு அன்புடன்
எழுதியிருந்தார். டைட்டானிக் கப்பலில் பயணம் செய்த அனுபவம் குறித்து அதில் எழுதப்பட்டிருந்தது.
கப்பல் மூழ்குவதற்கு 5 நாட்களுக்கு முன்பு இக்கடிதம் எழுதப்பட்டது. லண்டனில் உள்ள ஒரு அருங்காட்சியகம்
இக்கடிதத்தை ஏலத்தில் எடுத்தது. ஏலத்தில் எடுத்த அருங்காட்சியகத்தின் பெயர் வெளியிடப்படவில்லை.
நன்றி - மாலை மலர்.
Subscribe to:
Posts (Atom)
