Showing posts with label Internet. Show all posts
Showing posts with label Internet. Show all posts

Wednesday, June 19, 2013

கூகுளின் புரட்சிகரத் திட்டம் !

பலூன்களை வானில் பறக்கவிட்டு அதனூடாக இணைய வசதியை வழங்கும் திட்டமொன்றை கூகுள் ஆரம்பித்துள்ளது.

இத்திட்டத்திற்கு ' புரொஜெக்ட் லூன்' என கூகுள் பெயரிட்டுள்ளது.

சுமார் 18 மாத கால முயற்சியின் பலனே இதுவென கூகுள் தெரிவிக்கின்றது. உலகில் இணைய வசதியற்றோருக்கு அதனை பெற்றுக்கொடுக்கும் பொருட்டே இம்முன்னோடித் திட்டத்தை கூகுள் ஆரம்பித்துள்ளது.


பலூன்களின் இதற்கு தேவையான உபகரணங்களைப் பொருத்தி வானத்தில் பறக்கவிடுவதன் மூலம் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இவ் உபகரணங்கள் மூலமாக 3ஜி வேக இணைய வசதியை கூகுள் வழங்க எதிர்ப்பார்த்துள்ளது.

 ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப்படுவதுடன் நிலத்திலிருந்து 20 கிலோமீற்றர் உயரத்தில் இவை பறக்கவிடப்பட்டுள்ளன. தற்போது பரீட்சாத்த நிலையில் உள்ள இத்திட்டத்தை நியூசிலாந்தில் கூகுள் ஆரம்பித்துள்ளது.
 இதன் முதற்கட்டமாக 30 பலூன்களை கூகுள் நியூசிலாந்தின் தெற்கிலுள்ள தீவொன்றிலிருந்து அனுப்பியுள்ளது. தற்போது அனுப்பப்பட்டுள்ள ஒவ்வொரு பலூனும் சுமார் 1200 சதுர கிலோமீற்றர் பிரதேசத்திற்கு இணைய வசதியை வழங்கக்கூடியது. ஈலியம் நிரப்பப்பட்ட இப்பலூன்கள் இவ்வசதியை வழங்குவதற்கு தேவையான சக்தியை ஒளியிலிருந்து பெற்றுக்கொள்கின்றன.

இதன் மூலம் இணைய வசதியற்றோருக்கு அதனை வழங்குவது மட்டுமன்றி, அனர்த்த நிலைகளின் போது தொடர்பாடல் சாதனங்கள் துண்டிக்கப்படும் போது இதன் மூலம் சிறந்த பயனை பெற்றுக்கொள்ள முடியுமென கூகுள் தெரிவிக்கின்றது. கூகுள் கிளாஸ், ஓட்டுநர் அற்ற கார் போன்ற புரட்சிகர தயாரிப்புகளை உருவாக்கும் கூகுளின் 'லெப் x' இலேயே இப் புரட்சிகர திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டமானது வெற்றியளிக்கும் பட்சத்தில் இதனூடாக இணையக் கேபிள்களை உருவாக்குதல், அவற்றை பொருத்துதல், பராமரித்தல் போன்ற செலவுகள் கட்டுப்படுத்தப்படுமென நம்பப்படுகின்றது. உலக சனத்தொகையில் 4.8 பில்லியன் பேர் இணைய வசதியற்றவர்களாக இருப்பதுடன் , 2.2 பில்லியன் பேர் அவ்வசதியை பெற்றுள்ளதாக புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

எனினும் இத்திட்டத்தின் ஊடாக அனைவருக்கும் இணையவசதியை வழங்க கூகுள் எதிர்ப்பார்த்துள்ளது ஆனாலும் பல நடைமுறைச் சிக்கல்களும் இதில் உள்ளன. குறிப்பாக காற்றின் வேகத்திற்கு பலூன்களால் ஈடுகொடுக்க முடியாமல் போதல், இதனால் இணைப்பு இடை நடுவே துண்டிக்கப்படுதல் போன்ற பல காரணிகளையும் கூகுள் கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளது.

எந்தவொரு புது முயற்சியைப் போல இதிலும் சவால்கள் இருக்கவே செய்கின்றன. இதிலிருந்து கூகுள் மீளுமா? இத்திட்டத்தில் வெற்றி பெறுமா? என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நன்றி ilangaimuslim.தளத்திலிருந்து...

Saturday, March 31, 2012

வீடியோ ஈமெயில்

வீடியோவை இமெயில் உங்களது நண்பர்களுக்கு அனுப்பிட . . .
 
நீங்கள் சொல்ல நினைக்கும் தகவலை வீடியோ வடிவில் பதிவுசெய்து மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு விருப்பமான நபர்களுக்கு அனுப்பலாம்.

இதற்கு உங்கள் கணணியில் வெப் கமெரா வச தி இருந்தால் மட்டுமே போது மானது. ஆனால் குறைந்தது 60 வினாடிகள் மட்டுமே பேசமுடி யும். (இந்த www.vsnap.com லிங்கை கிளிக் செய்து அதில் உங்களது வீடியோ தொகுப்பி னை பதிவுசெய்து கொள்ளுங்க ள்) இவ்வாறு வீடியோ வடிவில் நண்பர்களை தொடர்பு கொள்வது புதுமையாக இருப்பதுடன், நேரில் சந்திப்பதுபோன்ற ஒருநினை வை ஏற்படுத்தும்.

இந்த சேவையில் உள்ள மற்றும் ஒரு சிறப்பம்சம் மின்னஞ்சல் போன் றே, இதிலும் கோப்புகளை இணைத்து அனுப்பலாம். ஆகையால் நாம் அனுப்பும் கோப்புகளுக்கான அறிமுக உரை அல்லது விளக்க உரையாக வீடியோ மின்னஞ்சலை பயன்படுத்திக் கொள்ளலாம். இத ன் மூலம் இணைப்புகளின் சாரம்சத்தை எளிதாக புரிய வைக்கலாம்.

Tuesday, March 27, 2012

இணையத்தின் வேகத்தை அதிகரிக்க....

இணையத்தை பயன்படுத்தும் ஏராளமானோருக்கு அதன் வேகத்தை அதிகரிப்பதற்குஎவ்வாறான நடவடிக்கைகளை கணினியில் மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.Auslogics Internet Optimizer  என்ற மென்பொருளின் மூலம் சாதரண பாவனையாளரும் கூட இணைய வேகத்தை அதிகரிப்பதற்கானஆட்டோ ஆப்டிமைசேஷன் செயற்பாடுகளை மேற்கொள்ளலாம்.
Auslogics Internet Optimizer  கணினியில் நிறுவிய பின்னர் முதலில்உங்கள் இணைய வேகத்தை தேர்வு செய்துAnalyze ஐ அழுத்துங்கள். இதன் மூலம் இணைய வேகம் பரீசிலிக்கப்பட்டு மாற்றங்கள் செய்ய வேண்டிய செட்டிங்குகளின் விபரங்கள் திரட்டப்பட்டு பட்டியலிடப்படும். 
அதில் விரும்பிய அல்லது அனைத்தையும் தேர்வு செய்து Optimize  ஐ அழுத்துங்கள்.
அதன் பின்னர் கணினியை ரீ ஸ்டார்ட் செய்தல் வேண்டும்.

Manual 
Optimization  ஐ தேர்வு செய்து விரும்பிய செட்டிங்குகளை மட்டும் மாற்றிக்கொள்ளலாம்
http://www.downloadcrew.com/article/23452-auslogics_internet_optimizer

Friday, March 16, 2012

இன்டர்நெட் போதை

சிகரெட், மதுவைக் காட்டிலும் இண்டர்நெட் மோகத்தை கைவிடுவது கடினம்!

இன்றைய கணினி உலகில் மின்னஞ்சல், எஸ்எம்எஸ், ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக ஊடகம் இளைய தலைமுறையினரிடையே அத்தியாவசியமான ஒன்றாகி போய்விட்டது.
இன்றைய இளைஞர்கள் கையில் வேறு எது இருக்கிறதோ இல்லையோ... லேப்டாப் அல்லது மொபைல்ஃபோன் இருப்பது சர்வ நிச்சயமாகி விட்டது. 
இந்நிலையில் இந்த சமூக ஊடகம் நமது இளைஞர்களிடையே எந்த அளவுக்கு ஆழ ஊடுருவியுள்ளது என்பது குறித்து ஆய்வு ஒன்றை சிகாகோ பல்கலைக்கழக குழு ஒன்று நடத்தியது.
இதில் சிகரெட் மற்றும் மதுவைக் காட்டிலும் மேற்கூறிய சமூக ஊடகத்திற்கு பலர் மிகவும் அடிமைப்பட்டிருப்பது உறுதியானது.
உட்ஸ்பர்க்கின் ஜெர்மன் நகரத்தில், பிளாக்பெர்ரியைப் பயன்படுத்தி 18 முதல் 85 வயதிற்குட்பட்ட 205 பேர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களது மன உறுதி பரிசோதிக்கப்பட்டது.
ஆய்வில் பங்கேற்றவர்களிடம் அவர்களது அனுபவம் மற்றும் வலிமை பற்றி ஒரு நாளைக்கு ஏழு முறை கேட்கப்பட்டது.
அவர்கள் கூறிய முடிவுகளுடன், ஆயிரக்கணக்கான பதில்களைக் கொண்டு குழு பார்வையிட்டதிலிருந்து, மது மற்றும் சிகரெட்டைக் காட்டிலும் சமூக ஊடகத்தைத் தடைசெய்வது கடினம் என்று தெரியவந்துள்ளது.

 

Wednesday, March 14, 2012



ஒரு கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைத்திருக்கும் ஒவ்வொரு கணினியும் ஒரு இலக்கத்தைக் கொண்டிருக்கும். அந்த இலக்கத்தை வைத்தே ஒவ்வொரு கணினியும் இனங்காணப்படுகின்றன இதனையே ( IP Address ) ஐபி முகவரி எனப்படுகிறது. இங்கு IP என்பது Internet Protocol எனபதைக் குறிக்கிறது.

அந்த இலக்கம் ஒரு வலையமைப்பில் அந்த குறிப்பிட்ட ஒரு கணினியை மட்டுமே குறித்து நிற்கும். இன்னொரு கணினிக்கு அதே இலக்கம் வழங்கப் படமாட்டது.. இதனை ஆங்கிலத்தில்; Uniqueness எனப்படுகிறது.

இணையத்தில் இணையும் ஒவ்வொரு முறையும் எமது கணினிக்கு இந்த ஐபி முகவரியை இணைய சேவை வழங்கும் நிறுவனம் வழங்குகிறது.. இது ஒரு தற்காலிகமான ஐபி முகவரியே. அடுத்த முறை இணையத்தில் இணையும் போது வேறொரு ஐபி முகவரியே நமக்குக் கிடைக்கும்,

இதனை டைனமிக் ஐபி முகவரி (Dynamic) எனப்படும். அதேவேளை இணையத்தில் நிரந்தரமாக இணைந்துள்ள சேர்வர் கணினிகள் ஒரு நிலையான (Static) ஐபி முகவரியைக் கொண்டிருக்கும்.

ஒரு ஐபி முகவரி 216.27.61.137 எனும் வடிவத்தில் இருக்கும். இது நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கும். ஒரு புள்ளி கொண்டு இந்த நான்கு பகுதிகளும் பிரிக்கப்படிருக்கும். ஒவ்வொரு பகுதியும் 0 முதல் 255 வரையிலான ஒரு இலக்கமாக இருக்கும்.

ஐபி முகவரிகள் நமது வசதிக்காக தசம் எண்களினாலேயே குறிக்கப்படுவது வழக்கம். எனினும் கணினி இந்த இலக்கங்களை பைனரி வடிவத்திலேயே புரிந்து கொள்கிறது, மேலுள்ள ஐபி முகவரி 11011000.00011011.00111101.10001001 எனும் பைனரி வடிவைப் பெறும். ஐபி முகவரியிலுள்ள இந்த நான்கு பிரிவுகளையும் ஒரு ஒக்டட் (Octets) எனப்படும்.

பைனரி எண் வடிவில் ஒவ்வொரு இலக்கமும் 8 இடங்களைக் கொண்டிருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு எட்டு இலக்கங்களினதும் கூட்டுத் தொகையாக 32 எனும் இலக்கம் கிடைக்கிறது. இதனாலேயே ஐபி முகவரிகள் 32 பிட் எண் எனக் கருதப்படுகின்றன.

இந்த ஒவ்வொரு எட்டு இலக்கமும் 0 அல்லது 1 எனும் இரு வேறு நிலைகளைக் கொண்டிருக்க முடியுமாதலால் எட்டு இலக்கங்கள் கொண்ட ஒவ்வொரு ஒக்டட் கொண்டும் 28 = 256 வெவ்வேறான சேர்மானங்களை உருவாக்கலாம். எனவே ஒவ்வொரு ஒக்டட்டும் 0 முதல் 255 வரையிலான இலக்கங்களைக் கொண்டிருக்க முடியும்.

இவ்வாறு நான்கு ஒக்டட் சேரும்போது 232 அல்லது 4,294,967,296 வெவ்வேறான் சேர்மானங்களை அல்லது இலக்கங்களைக் உருவாக்கலாம். அதாவாது இந்த முறையினை உபயோகித்து உலகிலுள்ள 4.3 பில்லியன் கணினிகளுக்கு வெவ்வேறான ஐபி முகவரிகளை வழங்கி விடலாம்

Tuesday, March 6, 2012

WiFi என்றால் என்ன?


 
“WiFi” என்பது கேபிள்கள்,கம்பிகள் போன்றவற்றை பயன்படுத்தாமல் உபயோகப்படுத்தக்கூடிய அதிவேக இண்டர்நெட் மற்றும் நெட்வொர்க் இணைப்பு(wireless நெட்வொர்க்). இந்த இணைப்பு wired நெட்வொர்க் காட்டிலும் எளிதாக மற்றும் மலிவானதாக உள்ளது. phone socket தேவைப்படாத காரணத்தினால் கம்ப்யூட்டர் ஐ எங்கு வேண்டுமென்றாலும் நகர்த்திக் கொள்ளலாம்.அதுமட்டும் இல்லாமல் விரைவாகவும் எளிதாகவும், ஒரு இணைய இணைப்பைக் கொண்டு பல கணினிகளை இணைக்க அனுமதிக்கிறது.
WiFi Hotspots என்றால் என்ன?
WiFi ஹாட்ஸ்பாட் என்பது WiFi ரேடியோ சிக்னல்கள் கிடைக்கக்கூடிய குறிபிட்ட பகுதி.ஒரு வயர்லெஸ் ரவுட்டர் கொண்டு WiFi இனைப்பை உங்கள் கணினியில் செயல்படுத்திவிட்டால், சுமார் 20 மீட்டர் (65 அடி) (உள்புறம் மற்றும் அதிக அளவு வெளிப்புறங்களில்) WiFi  ஹாட்ஸ்பாட்டாக(access point) இருக்கும்.
வயர்லெஸ் நெட்வொர்க் அமைக்க என்ன தேவை?
1. வயர்லெஸ் நெட்வொர்க்கிங் ஆதரிக்கும் ஒரு இயக்க அமைப்பு(Operating system)
2. Broad band (DSL அல்லது கேபிள்) இணைய இணைப்பு.
3. ஒரு கம்பியில்லா திசைவி(wireless router), ஒரு டிஎஸ்எல் மோடம், அல்லது உள்ளமைக்கப்பட்ட(inbuilt) வயர்லெஸ் நெட்வொர்க்கிங் support கேபிள் மோடம்.
4. வயர்லெஸ் நெட்வொர்க்கிங் ஆதரவு அல்லது ஒரு வயர்லெஸ் நெட்வொர்க் adapter உள்ளமைக்கப்பட்ட கணினி.
5. உங்கள் திசைவி அமைப்பு அறிவுறுத்தல்கள்(router setup instructions) ஒரு நகல்.
வயர்லெஸ் நெட்வொர்க் அமைப்பது எப்படி?
1. இணையத்துடன் இணைக்கவும்
2. கம்பியில்லா திசைவி (wireless router)இணைக்கவும்.
3. கம்பியில்லா திசைவி(wireless router) யை configure செய்யவும்.
4. வயர்லெஸ் நெட்வொர்க்கில் கம்ப்யூட்டர்கள், பிரிண்டர்கள், மற்றும் பிற சாதனங்களை இணைக்கவும்.
5. இறுதியாக கோப்புகள், அச்சுப்பொறிகள், போன்றவற்றை பகிர்ந்து கொள்ளலாம்.


Saturday, February 11, 2012

கூகுள் சேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில் - Terminal for Google

கூகுள் பல எண்ணற்ற பயனுள்ள சேவைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. பிளாக்கர், ஜிமெயில், யூடியுப், பீட்பர்னர் என இதன் பட்டியல் நீள்கிறது. இந்த சேவைகளுக்கு செல்ல அந்தந்த தளத்தின் சரியான URL கொடுத்து தான் ஓபன் செய்ய வேண்டும்.
கூகுளின் அனைத்து சேவைகளுக்கும் தனித்தனியாக URL கொடுப்பதிர்க்கு பதில் ஒரு கிளிக் செய்தாலே அந்த குறிப்பிட்ட தளத்திற்கு செல்லும் வசதியை எப்படி கொண்டு வருவது என்பதை விளக்கும் பதிவு இது. இந்த செயலை சுலபமாக செய்ய ஒரு பயனுள்ள குரோம் நீட்சி உள்ளது. இந்த நீட்சியை குரோமில் இணைத்து கொண்டால் போதும். கூகுளின் அனைத்து சேவைகளுக்கும் ஒரு நொடியில் சென்றுவிடலாம். ஒவ்வொரு முறையும் URL டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை.

நீட்சியின் பயன்கள்:

  • ஒவ்வொரு முறையும் URL கொடுத்து தளத்தை ஓபன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை அடிக்கடி உபயோகிக்கும் கூகுள் சேவைகளில் முதலில் வைத்து கொண்டும் ஒரே கிளிக்கில் அந்த தளத்திற்கு சென்று விடலாம்.
  • உங்களுக்கு எத்தனை கூகுள் சேவைகள் தெரிய வேண்டும் என்பதை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.
  • எந்த இணையதளத்தின் இணைய பக்கத்தையும் ஜிமெயில் மற்றும் பிளாக்கரில் share செய்யும் வசதி.
  • கூகுள் சேவைகளை icon மட்டும் உங்களுக்கு தெரியும் படி தேர்வு செய்து கொள்ளலாம்.
  • ஜிமெயில் மற்றும் ரீடர்களில் இன்னும் படிக்காத பதிவுகளின் எண்ணிக்கையை காட்டுவது இதன் கூடுதல் சிறப்பு. 
உபயோகிக்கும் முறை:

இந்த Terminal for Google நீட்சியை டவுன்லோட் செய்து குரோம் உலவியில் இன்ஸ்டால் செய்து கொண்ட பிறகு க்ரோமில் தோன்றும் அந்த ஐகானை கிளிக் செய்தால் கூகுள் சேவைகள் வரும் அதில் நிறைய கூகுள் சேவைகள் இருக்கும் இது வேண்டாம் குறிப்பிட்ட சேவைகள் மட்டும் தெரிந்தால் போதும் என்று எண்ணினால் அங்கு உள்ள Options Page என்பதை கிளிக் செய்யுங்கள். கீழே இருப்பதை போல விண்டோ வரும். அதில் Services என்பதை கிளிக் செய்யுங்கள்.

அதில் Enabled Services என்பதில் உள்ள சேவைகள் நீட்சியை கிளிக் செய்தால் வரும், Disabled Services என்பதில் உள்ள சேவைகள் உங்களுக்கு தெரியாது. இதில் உங்கள் விருப்பம் சேவைகளை நகர்த்தி கொள்ளலாம்.

இனி அனைத்து சேவைகளின் URL ஞாபகம் வைத்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே கிளிக்கில் எந்த சேவைக்கும் சுலபமாக செல்லலாம்.  Thanks To LankaNow

Sunday, January 15, 2012

திருடர்களைப்பிடிக்க ஒரு இணைய தளம்.

வீடு புகுந்து கொள்ளை, வழிப்பறி, செயின் பறிப்பு ஆகியவை ஒரு ரகம் என்றால், கடைகள், ஷாப்பிங் மால்களில் யாருக்கும் தெரியாமல் நைசாக பொருட்களை லவட்டுவது இன்னொரு ரகம். பெரிய ஆள் தோரணையில் இருப்பவர்கள்கூட இதுபோல கேவல திருட்டில் ஈடுபடுவார்கள் என்பதால் கண்டுபிடிப்பது கடினம். இதுபோன்ற ‘டீசன்ட்’ கொள்ளையர்களை கண்டுபிடிக்க உதவியாக ஆஸ்திரேலிய முன்னாள் போலீஸ் அதிகாரிகள் சிலர் சேர்ந்து ‘ஹூ-டியூப்’ என்ற பெயரில் இணையதளம் தொடங்கியிருக்கிறார்கள். 
கடைகள், வர்த்தக நிறுவனங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் திருட்டு தொடர்பாக பதிவாகும் காட்சிகளை இந்த இணையதளத்தில் அப்லோடு செய்யலாம். திருடன் பற்றி தகவல்கள் தெரிந்தால் அதையும் பதிவு செய்து வைக்கலாம். இணையதளத்தை பார்க்கும் மற்ற கடைக்காரர்கள் உஷாராவதற்காக இந்த வசதி. 
இணையதளம் ஆரம்பித்து 3 மாதத்தில் மொத்தம் 127 காட்சிகளை பல பகுதிகளை சேர்ந்த கடைக்காரர்களும் அப்லோடு செய்திருக்கிறார்கள். இதன் உதவியுடன் 2 திருடர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Friday, January 6, 2012

இணையத்தின் வேகத்தை அதிகப்படுத்துவதற்கு....

 இணையத்தை பயன்படுத்தும் ஏராளமானோருக்கு அதன் வேகத்தை அதிகரிப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை கணணியில் மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
Auslogics Internet Optimizer என்ற மென்பொருளின் மூலம் சாதரண பாவனையாளரும் கூட இணைய வேகத்தை அதிகரிப்பதற்கான ஆட்டோ ஆப்டிமைசேஷன் செயற்பாடுகளை மேற்கொள்ளலாம்.
Auslogics Internet Optimizer மென்பொருளை கணணியில் நிறுவிய பின்னர் முதலில் உங்கள் இணைய வேகத்தை தெரிவு செய்து Analyze ஐ அழுத்துங்கள்.
இதன் மூலம் இணைய வேகம் பரீசிலிக்கப்பட்டு மாற்றங்கள் செய்ய வேண்டிய செட்டிங்குகளின் விபரங்கள் திரட்டப்பட்டு பட்டியலிடப்படும்.
இதில் Manual Optimizationஐ தெரிவு செய்து விரும்பிய செட்டிங்குகளை மட்டும் மாற்றிக் கொள்ளலாம்.
Thanks to Ansar Mohamed.

Sunday, July 10, 2011

இணைய வேகம் அதிகரிக்க சில வழிகள்.

இணைய தளங்கள் உங்கள் கம்ப்யூட்டர்களில் வேகமாக இறங்கவில்லையா? கம்ப்யூட்டர் வாங்கிப் பழசாகிவிட்டது என்று மட்டும் எண்ணி, ஒன்றும் செய்திடாமல் இருந்துவிட வேண்டாம். கம்ப்யூட்டரின் வேகம், அதனை நாளுக்கு நாள் பயன்படுத்துகையில் ஏன் குறைகிறது என்றும், அதற்கான தீர்வுகள் என்ன-என்ன?
இணைய வேகம் குறைய, கம்ப்யூட்டர் மட்டுமின்றி, வேறு சில விஷயங்களும் காரணமாக இருக்கலாம். அவற்றில் சிலவற்றிற்கான தீர்வுகளை இங்கு காணலாம்.
1.
வெப் பிரவுசரை மாற்றுக: இன்னும் பலர் தொடர்ந்து இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் தொகுப்பினையே பயன்படுத்தி வருகின்றனர். ஏனென்றால், அந்த பிரவுசர் தொகுப்பு விண்டோஸ் சிஸ்டத்துடன் வழங்கப் படுகிறது.  ஆனால் இன்னொரு பிரவுசரைப் பயன் படுத்துவதில் எந்த பிரச்னையும் இல்லையே! வேறு ஒரு பிரவுசர் மூலம் இணையத்தில்  நுழைந்து, தளங்கள் எவ்வளவு வேகமாக இயங்குகின்றன என்றும், அவற்றிலிருந்து பைல்கள் என்ன வேகத்தில் தரவிறக்கம் ஆகின்றன என்றும்-பார்க்கலாமே!
தற்போது வந்திருக்கும் பல பிரவுசர்கள், வேகத்தினை முதன்மை அம்சமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுக் கிடைக்கின்றன. எடுத்துக் காட்டாக, கூகுள் தரும் குரோம் பிரவுசரைக் கூறலாம்.  இதனுடைய ஜாவா ஸ்கிரிப்ட் இஞ்சின் அதிக வேகத்தினைத் தரும் வகையில் ட்யூன் செய்யப்பட்டுக் கிடைக்கிறது. இந்த பிரவுசரைப் பெறhttp://www.google.com/chrome  என்ற முகவரியில் உள்ள கூகுள் தளம்-செல்லவும்.
2.
இணைய விளம்பரங்கள் வேண்டாமே!: பல இணைய தளங்களில், விளம்பரங்கள், குறிப்பாக அனிமேஷன் படங்களுடன் காட்டப் படுகின்றன. இந்த தளங்களை டவுண்லோட் செய்கையில், இந்த விளம்பரங்களும் சேர்ந்து இறங்கி, பைலின் அளவை அதிகமாக்குகின்றன. இவற்றை நாம் வடிகட்டி விட்டால், விளம்பரங்கள் இல்லாத தளங்களை இறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பயர்பாக்ஸ் பிரவுசரைப் பயன்படுத்துபவராக இருந்தால், இவற்றை வடிகட்டFlashblock add-on  என்ற எக்ஸ்டென்ஷனைப் பயன்படுத்தலாம். இதனைப் பெற பயர்பாக்ஸ் பிரவுசரில்,Tools  மெனு சென்று, Add-ons  என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். Add-ons  கிடைத்தவுடன், அதில் உள்ள சர்ச் பாக்ஸில் Flashblock   என டைப் செய்திடவும். இந்த ஆட் ஆன் தளம் கிடைத்தவுடன், Add to Firefox  என்பதில் கிளிக் செய்திடவும். Flashblock  இயங்கத் தொடங்கியவுடன் பயர்பாக்ஸ் பிளாஷ் மூலம் அமைத்த எதனையும் உங்கள் கம்ப்யூட்டரில் இறங்கவிடாது. பிளாஷ் வழி விளம்பரங்கள் இருக்கும் இடத்தில் ‘F’ என்ற எழுத்து மட்டும் காட்டப்படும். இதில் விளம்பரம் இருந்து தடுக்கப்பட்டிருந்தால், அப்படியே விட்டுவிடவும். இல்லாமல், ஏதேனும் சிறிய வீடியோ அனிமேஷனாக இருந்து, நீங்கள் அதனைப் பார்க்க விரும்பினால், இந்த எப் எழுத்து உள்ள கட்டத்தில் டபுள் கிளிக் செய்தால், பிளாஷ் வீடியோ அல்லது அனிமேஷன் லோட் ஆகும்.  இதன் மூலம் இணையப் பக்கங்கள் அதிவேகமாக டவுண்லோட் ஆவதனைப் பார்க்கலாம்.
3.
மொபைல் இணையதளம் செல்க: இணைய தளங்களில், பிரித்துப் பார்க்க இயலாதவகையில் பல வகையான தகவல்கள் குப்பையாகத் தரப்பட்டுள்ளனவா? அவற்றில் உங்களுக்கானதைத் தேடி எடுப்பது சிரமமாக உள்ளதா? அப்படிப்பட்ட சூழ்நிலையில், அந்த இணைய தளத்திற்கான மொபைல் இணையதளம் உள்ளதா எனத் தேடவும்.  இப்போதெல்லாம், வழக்க மான இணைய தளங்களுக்கிணையாக, மொபைல் போன் வழி பயன்படுத்த, இத்தகைய இணைய தளங்கள் உருவாக்கப்பட்டுத் தரப்படுகின்றன. அவற்றில் குறைவான எண்ணிக்கையில் பைல்களுக்கான லிங்க்குகள் தரப்பட்டிருக்கும், இணைக்கப் பட்டிருக்கும். இவற்றைத் தேடி தரவிறக்கம் செய்வது எளிதாக இருக்கும். மேலும் இவற்றை டவுண்லோட் செய்திடும் முன், தளத்திலிருந்தவாறே பார்க்கவும் வசதி செய்து தரப்பட்டிருக்கும். இந்த மொபைல் தளங்களை எப்படிக் கண்டறிவது? வழக்கமான www   என்பதற்குப் பதிலாக ‘m’  என்ற எழுத்தை இவை கொண்டிருக்கும். எடுத்துக் காட்டாக, பி.பி.சி. நிறுவனத்தின் மொபைல் போன் இணைய தளத்தின் முகவரி http://m.bbc.co.uk  ஆகும். இவற்றை எப்படி அணுகுவது என்பதற்கான விவரங்களும் தரப்பட்டிருக்கும். இந்த வகை தளங்கள், சில நொடிகளில் கம்ப்யூட்டர்களில் இறங்குவதைக் காணலாம்.
4.
ஆர்.எஸ்.எஸ்.ரீடரைப்பயன்படுத்தவும்: ஆர்.எஸ்.எஸ். என்பது (RSS-Really Simple Syndication)   ஓர் இணைய தளம், புதிய விஷயங்களை இணைக்கும் போது, அதற்கான செய்தியைத் தந்து நம்மை நினைவூட்டும். இவற்றில் பல வேளைகளில், தகவலுக்கான தலைப்பு வரிகள் மட்டுமே இருக்கும். சில தளங்கள், புதிய தகவலை, அவை அடங்கியுள்ள கட்டுரையை மட்டும் அப்படியே தரும்.  ஆரஞ்சு நிறத்தில் ஆர்.எஸ்.எஸ். இமேஜ் ஐகான் இணைய தளம் ஒன்றில் இருந்தால், புதிய செய்திகள் வந்துள்ளன என்று பொருள். பயர்பாக்ஸ் போன்ற பிரவுசர்கள், இந்த ஐகானை அதன் அட்ரஸ் பாரிலேயே காட்டுகின்றன. அதில் கிளிக் செய்தால், பிரவுசர் அந்த தளத்தின் ஆர்.எஸ்.எஸ். வகை செய்தியினை இறக்கிக்-காட்டும்.
5.
வேகப்படுத்தும் புரோகிராம்கள்: இணையத்தில் கிடைக்கும் சில புரோ கிராம்கள், உங்கள் இன்டர்நெட் தளங்கள் இறங்கு வதனையும்,  பைல்கள் தரவிறக்கம் செய்யப்படுவதனையும் வேகமாக்கும். இந்த வகையில் ஆன்ஸ்பீட் (Onspeed)  என்ற  (http://portal.onspeed.com/)  பு@ராகிராம் நமக்கு உதவும். வேறு பல புரோகிராம்களும் இணையத்தில் கிடைக்கின்றன. இவை டெக்ஸ்ட்டை கம்ப்ரஸ் செய்து, இமேஜ் தன்மையைக் குறைத்து பைலின் அளவைக் குறைக்கின்றன. ஆனால் ஸ்ட்ரீமிங் வீடியோ போன்றவை உள்ள தளங்களில், இத்தகைய புரோகிராம்களின் பணி எடுக்காது.
6.
கேஷ் மெமரியைக் காலி செய்க:  அனைத்து பிரவுசர்களும், நாம் சென்று பார்த்த தளங்கள் குறித்த தகவல்களைத் தங்கள் கேஷ் மெமரியில் வைத்துக் கொள்கின்றன. இவற்றை அவ்வப்போது காலி செய்வதனால், நம் பிரவுசரின் வேகம் குறையாது. அதே போல தற்காலிகமாகச் சேமித்து வைக்கப்படும்  (Temporary Files)  பைல்களையும் நீக்க வேண்டும்.
7.
பார்க்காத தளங்களை மூடுங்கள்: சிலர் இணைய உலாவினைத் தொடங்கிப் பல தளங்களுக்குச் சென்று கொண்டே இருப்பார்கள். இதனால் பல தளங்கள் திறக்கப்பட்டு மூடப்படாமல் இருக்கும். எப்போதும் இணையத்தில் இருக்கும் ஒரு சிலர் இருபதுக்கும் மேற்பட்ட தளங்களைத் திறந்து வைத்து இயக்குவதனைப் பார்த்திருக்கிறேன்.  இவை இணைய வேகத்தினை நிச்சயம் குறைத்திடும். எனவே எப்போது ஓர் இணைய தளத்தினைப் பார்த்து முடித்து விட்டோமோ, உடனே அந்த தளத்தினை மூடுவது நல்லது.
 

Monday, July 4, 2011

இணைய கொடுக்கல்,வாங்கல்களா? - எச்சரிக்கை.

மக்கள் தங்கள் மனங்கவர்ந்த, இதுவரை திட்டமிட்ட பொருட்களை வாங்கிக் குவிக்கப் போகிறார்கள். இந்த முறை, பெரும்பாலானவர்கள் பொருட்கள் வாங்கிட, இணையத்தின் துணயை நிச்சயம் நாடுவார்கள். இந்தியாவில் இணையம் வழியாக பொருட்கள் வாங்குவது அதிகரித்துக் கொண்டே செல்வதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. இருப்பினும் இதில் நிறைய தில்லுமுல்லுகளும், திருட்டுகளும் அதிகரித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே சற்று எச்சரிக்கையாக இதனை மேற்கொள்ள நாம் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளைப் பார்ப்போம்.
1. நம்பிக்கையான கடைகளின் இணைய தளங்கள் வழியே மட்டும் வாங்கவும். இவை தங்களின் முகவரிகளையும், தொலைபேசி எண்களையும் தந்திருப்பார்கள். அவற்றை முதலில் உறுதி செய்து கொள்ளவும்.
2. இணையத்தில் வாங்க இருப்பதால், அந்த பொருளின் படம் மற்றும் விற்பவர் அது குறித்து தரும் தகவல்கள் மட்டுமே நமக்குத் தெரிய வரும். இது போதாது. வாங்க விரும்பும் பொருள் குறித்து இணையத் தளங்களுக்குச் சென்று தகவல் தேடிப் பெறவும். அவற்றை ஏற்கனவே வாங்கியவர்கள், அதன் பயன் மற்றும் நம்பகத் தன்மை குறித்து இணையத்தில் எழுதி இருப்பார்கள். அவற்றைப் படித்துப் பார்க்கவும்.பொருளின் விலை மட்டும் பார்க்காமல், வரி, அவற்றை உங்களிடம் சேர்ப்பிக்க இணைய தள விற்பனை மையம் வசூலிக்கும் ட்ரான்ஸ்போர்ட் மற்றும் பேக்கிங் கட்டணம் போன்றவற்றையும் சேர்த்துப் பார்க்கவும்.
3. பொருள் பிடிக்காமல் போனால், அதனை மீண்டும் அந்த கடைக்காரர் எடுத்துக் கொள்வாரா? எடுத்துக் கொள்வார் எனில், அதற்கான நடைமுறை என்ன? என்பன போன்ற தகவல்களைப் பெறவும்.
4. ஆர்டர் செய்து வாங்க முடிவு செய்து, ஆன் லைனிலேயே ஆர்டர் கொடுத்தால், நீங்கள் ஆர்டர் கொடுக்கும் பக்கத்தினை எச்.டி.எம்.எல். பக்கமாக சேவ் செய்து வைக்கவும். உங்கள் வங்கி அட்டை எண், பணப் பரிவர்த்தனைக்குக் கொடுக்கப்படும் எண், நாள், பொருள் விலை மற்றும் பிற கட்டணங்கள் ஆகிய தகவல்கள் அனைத்தும் இருக்க வேண்டும்.
5.உங்களுடைய கிரெடிட் கார்ட் ஸ்டேட்மென்ட்டினை அடிக்கடி சோதனை செய்திடவும். நீங்கள் வாங்காத பொருளுக்கு ஏதேனும் பணம் எடுக்கப்பட்டுள்ளதா என்று-பார்க்கவும்.
6. உங்கள் இல்ல மற்றும் நம்பிக்கையான அலுவலகக் கம்ப்யூட்டர் மூலமாக மட்டுமே ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடவும். பொதுவான மையங்களில் இந்த வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதை அறவே தவிர்க்கவும்.
7.உங்கள் பாஸ்வேர்டினைப் பாதுக்காக்கவும். மிகவும் உறுதியான பாஸ்வேர்டாக அமைத்து வைத்துக் கொள்ளவும். இதனையும், அடிக்கடி மாற்றவும்.
8.பிரபலமான கடைகளின் இணையத் தளங்கள் போலத் தோற்றமளித்து, ஆன்லைன் வர்த்தகத்தினை மேற்கொள்ள வழி தரும் மெயில்கள் மற்றும் தளங்களை நம்பக் கூடாது.
9. ஆன்லைன் வர்த்தக இணைய தளங்களின் முகவரியில் “https” என்ற முன்னொட்டு இருக்கிறதா எனச் சோதனை செய்திடவும். இது போல “http ” உடன் “s”இணைந்து இல்லை என்றால், சற்று சிந்திக்கவும். தயங்கவும்.
10.கூடுமானவரை டெபிட் கார்டுகளை ஆன்லைன் வர்த்தகத்தில் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். கிரெடிட் கார்டுகளுக்குக் கூடுதல் பாதுகாப்பு உண்டு.
11. கூடுதல் சலுகைகள், அதிரடி ஆபர்கள் என மெயில்கள் வந்தால், சற்று நிதானிக்கவும். இதெல்லாம், உங்களை சிக்க வைத்திடும் தூண்டில்கள். எனவே இவற்றை அலட்சியப்படுத்தவும்.

Friday, June 24, 2011

இணையத்தில் அதிக நேரம் செலவிட்டு கனேடியர்கள் சாதனை.

இணைய தளப் பயன்பாடு குறித்து ஆய்வு செய்திடும் காம்ஸ்கோர் நிறுவனம், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் எடுத்த ஆய்வு முடிவுகளை அறிவித்துள்ளது.
இதன்படி, இணையத்தில் யார் அதிக நேரம் உலா வருபவர்கள் தெரியுமா? அமெரிக்கர்களா? பிரிட்டிஷ்காரர்களா? சீன அல்லது இந்தியக் குடிமக்களா? இவர்கள் யாரும் இல்லை.
கனடா நாட்டு மக்கள் தான் அதிக நேரம் இணையத்தில் உள்ளனர். 2010 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், ஒவ்வொருவரும் சராசரியாக 43.5 மணி நேரம் இணையத்தில் செலவிடுகின்றனர்.
இது பன்னாட்டளவிலான சராசரி நேரத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாகும். இவர்களில் பெரும்பாலானவர் களின் வயது 55க்கும் மேல் என்பது இன்னொரு வியத்தகு செய்தி. 2009 ஆம் ஆண்டிலும் இதே பெருமையை கனடா தட்டிச் சென்றது.
தற்போது கனடாவில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் 2 கோடியே 30 லட்சம் பேர் உள்ளனர். இதே காலத்தில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள் 35.5 மணி நேரமும், பிரிட்டிஷ் நாட்டவர் 32.3 மணி நேரமும், தென் கொரியாவினைச் சேர்ந்தவர்கள் 27.7 மணி நேரமும் இணையத்தில் இருந்துள்ளனர்.
இந்திய இணையம் குறித்து இங்கே பார்க்கலாமா! மொபைல் பயன்பாடு வளர்ந்த அளவிற்கு, இந்தியாவில் பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு வளரவில்லை என்பது பலரின் கவலைக்கான விஷயமாகத் தொடர்ந்து இருந்து வருகிறது.
இருப்பினும் இப்போது இந்நிலை மாறத் தொடங்கி உள்ளது. சென்ற டிசம்பர் மாதத்திலிருந்து பார்க்கையில் வளர்ச்சி சற்று வேகமாக உள்ளது தெரிய வந்துள்ளது. ஒரு கோடியே 9 லட்சத்து 20 ஆயிரமாக இருந்த பிராட்பேண்ட் இணைப்பு, 2.7% உயர்ந்து, ஒரு கோடியே 12 லட்சத்து 10 ஆயிரமாக வளர்ந்துள்ளது.
மொபைல் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 77 கோடியே 11 லட்சத்து 80 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இவர்களில் நகரங்களில் பயன்படுத்துபவர்கள் 51.23 கோடி. கிராமப் புறங்களில் மொபைல் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 25 கோடியே 89 லட்சத்து 30 ஆயிரம் ஆகும்.
மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களில், பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் முதல் மூன்று இடத்தைப் பெற்றுள்ளன. காம் ஸ்கோர் நிறுவனத்தின் கணக்குப் படி, ஒரு நேரத்தில் சராசரியாக, 3 கோடியே 2 லட்சம் பேர் இன்டர்நெட் இணைப்பில் இருக்கின்றனர்.
இவர்களில் 72% பேர் வீடியோ படங்களை இணையத்தில் பார்க்கின்றனர். இவர்கள் சராசரியாக 58 படங்களைப் பார்க்கின்றனர். 5 மணி நேரம் இணையத்தில் செலவிடுகின்றனர்.
யு ட்யூப் தளத்தில் பார்க்கப்படும் இணைய வீடியோக்களில் 44.5 % இந்தியாவில் பார்க்கப்படுகின்றன. 78 கோடி தடவை இவை காணப்படுகின்றன. பேஸ்புக் சோஷியல் தளத்தில்66 லட்சம் பேர் பதிந்துள்ளனர். இவர்கள் 3 கோடி@ய ஒரு லட்சம் வீடியோ படங்களைப் பார்த்துள்ளனர.
நன்றி.சகோதரர் கான் - தோஹா, கத்தார்.

Friday, December 24, 2010

உலகின் மிகப்பெரிய தகவல் தொழிநுட்ப பூங்கா

Dubai Internet City

அபூதாபிக்கும் துபாய்க்குகிடையில் Sheikh Zayed வீதியில்   துபாய் நகருக்கு தெற்கே சுமார் 25 கிலோ மீற்றர் தூரத்தில் இந்த மிகப்பெரிய தகவல் தொழிநுட்ப பூங்கா அமைந்துள்ளது.
இது, துபாய் மரீனா, ஜுமேயரா கடற்கரை பாம் ஜுமேயரா ஆகியவற்றுக்கு சமீபமாகவும், கடற்கரை ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலிருந்து ஒரு கிலோ மீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளது.
துபாய் அரசாங்கத்தால் கடந்த 2000 ம் ஆண்டு ஒக்டோபரில்  உலகின் முக்கிய நிறுவனங்களுக்காக சுதந்திர வர்த்தக வலயமாக Dubai Internet City உருவாக்கப்பட்டது.
தற்போது, Dubai Internet City அரை மில்லியன் சதுர அடி மீற்றர் பரப்பில் பத்தாயிரத்துக்கும் அதிகமான ஊழியர்களைக்கொண்டு 850க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்குகின்றன.

முக்கிய  நிறுவனங்களின் படங்கள் கீழே.....

Dubai Internet City

Dubai Internet City

Seimens

Oracle

Microsoft

IBM

HSBC

DELL

DELL

Cannon

3M

Hollyday Inn

Sony Ericsson



Tuesday, July 20, 2010

இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம்.

மென்பொருள் துறையில் இந்தியா வெற்றிக்கொடி நாட்டி வரும் வேளையில், மேலும் ஒரு மகுடமாக, உள்நாட்டிலேயே வெப் பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளது.
‘எபிக்’ எபிக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் பிரவுசர், பெங்களூருவில் உள்ள ஹிட்டன் ரிப்ளக்ஸ் என்று சாப்ட்வேர் நிறுவனம் உருவாக்கியுள்ளது. மோஸில்லா பயர்பாக்சை அடிப்படையாகக் கொண்டு எபிக் வெப் பிரவுசர் தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து, ஹிட்டன் ரிப்ளெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
இது சர்வதேச அளவில் முதன் முறையாக ஆன்டிவைரஸ் பாதுகாப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், ஆன்டிவைரஸ் மற்றும் ஆன்டிஸ்பைவேர் தொகுபபுகள் இசெட்டை அடிப்படையானது ஆகும் என்றும், பயனாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த வெப் பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், உங்கள் விருப்பத்திற்கேற்ப தீம்களை மாற்றிக்கொள்ளலாம் என்றும் இதற்காக 1,500 தீம்கள் உள்ளதாகவும், இந்த எபிக் வெப் பிரவுசர் 12 இந்திய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஒன் கிளிக் பிரைவேட் ‌டேட்டா டெலீசன், பிளாஷ் குக்கீ டெலிசன், பில்ட் இன் மற்றும் நோ ஸ்டோரேஜ் ஆப் பிரவுசிங் ஹிஸ்ட்ரி, பாஸ்டர் டவுன்லோட்ஸ் மற்றும் பிரவுசிங் உள்ளிட்ட சிறப்பம்சங்களைக் கொண்டு இந்த பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.
Thanks To......www.z9tech.comதரவிறக்கம் செய்ய

Sunday, July 11, 2010

முதன் முறையாக இணையத்தள முகவரிகளை தாய்மொழியில் பயன்படுத்தும் சந்தர்ப்பம்.

உலக இணையத்தள வரலாற்றில் முதன் முறையாக இணையத்தள முகவரிகளை தாய்மொழியில் பயன்படுத்தும் சந்தர்ப்பம் இலங்கைக்கு கிட்டியுள்ளது.இந்த வாய்ப்பினைப் பெறுவதற்கு 'அய்கன்" (ICANN) நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது .

'அய்கன்' என்று சுருக்கமாக அழைக்கப்படும் Internet Corporation for Assigned Names and Numbers நிறுவனம் இணையத்தள முகவரிகளைப் பதிவுசெய்து பாதுகாக்கும் இலாபகரமற்ற அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மரினா டெல் ரே (Marina Del Rey) நகரத்தை தலைமைப் பீடமாக கொண்ட நிறுவனமாகும். 'இலங்கை" மற்றும் 'லங்கா" முதலான இணையத்தள முகவரியை பெற்றுக் கொள்வதாயின் www.nic.lk என்ற இணையத்தள முகவரி மூலம் பெற்று கொள்ளலாம். இந் நடைமுறையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
எனினும் இந் நடைமுறையை தற்போது தேசியளவிலேயே பாவிக்க முடியும் எனவும், இன்னும் சில காலத்திற்கு பிறகு சர்வதேச ரீதியில் பாவிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் ஏற்கனவே இணையத்தள முகவரியைப் பதிந்து கொண்டவர்கள் புதிய முறையினை இலவசமாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட புதிய நடைமுறையால் தமது சொந்த மொழியில் இலகுவாக இணையத்தளத்தை எவரும் பயன்படுத்த முடியும்.
உதாரணமாக
 Tamilcnn இணையத்தளத்தை பார்வையிடுவதாயின் 
 http://தளம்.தமிழ்சிஎன்என்.இலங்கை என்று தட்டச்சு செய்யலாம்.
அய்கன் (ICANN) பணிப்பாளர் சபை உறுப்பினர்களில் ஒருவரான ராம் மோகன் கருத்து தெரிவிக்கும் போது, "ஆசியாவில் தமிழில் தனது நாட்டின் பெயருடன், உலக இணையத்தள முகவரியை முதன் முதலாக அறிமுகப்படுத்திய ஒரே நாடு இலங்கை தான். இது ஒரு மாபெரும் சாதனை.
இதனையிட்டு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். முதன் முறையாக தாய்மொழியில் இணையத்தளத்தினூடாக, மின்னஞ்சலில் பயணிக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது.
இணையத்தள முகவரியை சிங்களத்தில் 'லங்கா' என்றும் தமிழில் 'இலங்கை' என்றும் நாம் அடைந்து கொள்ள இது நமக்கு வாய்ப்பளிக்கின்றது. இன்று மடி கணினி (லெப்டொப்) யைவிடவும் கையடக்கத் தொலைபேசி மூலமான இணையத்தள பாவனையாளர்கள் அநேகர் உள்ளனர்.
எனவே எதிர்காலத்தில் 'லங்கா' மற்றும் 'இலங்கை' ஆகிய இணைய முகவரிகள் பிரபல்யம் அடையும் என்பதில் ஐயம் இல்லை" என்றார்.
Thanks To..TamilCNN

Sunday, June 27, 2010

மூளையை வளர்க்கும் இணைய தேடல்

இண்டெர்நெட்டை பொருத்தவரை மூன்றுவிதமான தலைமுறை இருகின்றன தெரியுமா?
முதல் தலைமுறை இண்டெர்நெட்டோடு பிறந்து இணைய சூழலில் வளரும் டிஜிட்டல் தலைமுறை.இரண்டாவது தலைமுறை இண்டெர்நெட்டின் வளர்ச்சியை பார்த்து அதனோடு பரிட்சயம் செய்து கொண்ட தலைமுறை.30 வயதுக்கு மேற்பட்டவர்களை இந்த தலைமுறையில் தான் சேர்க்க வேண்டும்.
மூன்றாவ‌து த‌லைமுறை இண்டெர்நெட் என்றாலே ப‌ய‌ந்து ஒதுங்கி கொள்ளும் முத்த‌ த‌லைமுறை.விதிவிலக்கான‌ ஒரு சில‌ரைத்த‌விர‌ பெரும்பாலான‌ தாத்தா பாட்டிக‌ளை இந்த‌ பிரிவில் தான் சேர்க்க‌ வேண்டும்.
இப்ப‌டி இண்டெர்நெட் என்றால் ஏதோ புரியாத தொழில்நுட்ப‌ம் என்று க‌ருதக்கூடிய‌ தாத்த‌க்க‌ளுக்கும் பாட்டிக‌ளுக்கும் இண்டெர்நெட்டை அறிமுக‌ம் செய்து வைப்ப‌தை விட‌ பெரிய‌ சேவை வேறு இருக்க‌ முடியாது தெரியுமா?
இண்டெர்நெட் அறிமுக‌ம் வ‌ய‌தான‌வ‌ர்க‌ளுக்கு புதிய‌ உல‌கை திற‌ந்துவிடும் என்ப‌து ஒருபுற‌ம் இருக்க‌ அது அவ‌ர்க‌ளின் மூளை செய‌ல்பாட்டின் மேம்பாட்டிற்கு முக்கிய‌ ப‌ங்கு வ‌கிக்கும் என்ப‌தே விஷ‌ய‌ம்.அதாவ‌து இண்டெர்நெட்டில் த‌க‌வ‌ல்க‌ளை தேடுவ‌து மூளைக்கான‌ மிக‌ச்சிற‌ந்த‌ ப‌யிற்சியாக‌ அமையும் என‌ தெரிய‌ வ‌ந்துள்ள‌து.
அதிக‌ம் இல்லை ஒரு வார‌ கால‌ம் கூகுல் தேட‌லில் எடுப‌ட்டாலே போதும் பெரிய‌வ‌ர்க‌ளின் மூளை செய‌ல்பாடு சுறுசுறுப்பாகி முடிவெடுக்கும் ம‌ற்றும் புரிந்து கொள்ளும் ஆற்ற‌ல் மேம்ப‌டுபவ‌தாக‌ க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டுள்ள‌து.
அமெரிக்காவைச்சேர்ந்த‌ யுசிஎல்ஏ என்னும் அமைப்பு இது தொட‌ர்பான‌ ஆய்வை ந‌ட‌த்தியுள்ள‌து.55 வ‌ய‌து முத‌ல் 78 வ‌ய‌தான‌வ‌ர்க‌ளை கொண்டு ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட இந்த‌ ஆய்வில் எப் எம் ஆர் ஐ ஸ்கான் முறையில் முளையின் செய்ல்பாடு ஆல‌சி ஆராய‌ப்ப‌ட்ட‌து. ஆய்வில் ப‌ங்கேற்றோர் இண்டெர்நெட்டை ப‌ய‌ன்ப‌டுத்தும் போது அவ‌ர்க‌ள் மூலையில் நிக‌ழும் ராசாய‌ண‌ மாறுத‌ல்க‌ள் க‌வ‌னிக்க‌ப்ப‌ட்ட‌ன‌.
அப்போது தேடலில் ஈடுப‌ட்டவ‌ர்க‌ளின் மூளை செய‌ல்பாடு மிக‌வும் சுறுசுறுப்பாக‌ இருப்ப‌து க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்ட‌து.முளையில் முடிவெடுக்க‌ ப‌ய‌ன்ப‌டும் ப‌குதியில் இந்த‌ செய‌ல்பாடு அமைந்திருந்த‌தை ஆய்வால‌ர்க‌ள் க‌வ‌னித்துள்ள‌ன‌ர்.
இந்த‌ வ‌கை செய‌ல்பாடு முடிவெடுப்ப‌து ம‌ற்றும் புரிந்து கொள்ளுத‌லில் முக்கிய‌ பாங்காற்றும் என்று க‌ருத‌ப்ப‌டுகிற‌து.என‌வே இண்டெர்நெட்டில் த‌க‌வ‌ல்க‌ளை தேடுவ‌து மூளைக்கான‌ ப‌யிற்சியாக‌ அமையும் என்று க‌ருதப்ப‌டுகிற‌து.ஒரு வார‌ கால‌ம் தேட‌லில் ஈடுப‌ட்டாலே போதுமான‌து என்றும் தெரிய‌ வ‌ந்துள்ள‌து.
அல்சைம‌ர்ஸ் போன்ற‌ நினைவுத்திற‌ன் குறைபாட்டினால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு இணைய‌ தேடல் உத‌வ‌லாம் என்று எதிர்பார்க்க‌ப்ப‌டுகிற‌து.
என‌வே உங்க‌ள் வீட்டில் பெரிய‌வ‌ர்க‌ள் இருந்து அவ‌ர்க‌ள் இண்டெர்நெட் விஷ‌ய‌த்தில் ப‌ய‌ந்தாங்கொலிக‌ளாக‌ இருந்தால் அவ‌ர்க‌ளுக்கு இண்டெர்நெட்டை க‌ற்றுக்கொடுப்ப‌து மிக‌ச்சிற‌ந்த‌ உத‌வியாக‌ இருக்கும்.
Thanks To............Uthayan