Showing posts with label புதிய கண்டுபிடிப்பு. Show all posts
Showing posts with label புதிய கண்டுபிடிப்பு. Show all posts

Wednesday, June 19, 2013

கூகுளின் புரட்சிகரத் திட்டம் !

பலூன்களை வானில் பறக்கவிட்டு அதனூடாக இணைய வசதியை வழங்கும் திட்டமொன்றை கூகுள் ஆரம்பித்துள்ளது.

இத்திட்டத்திற்கு ' புரொஜெக்ட் லூன்' என கூகுள் பெயரிட்டுள்ளது.

சுமார் 18 மாத கால முயற்சியின் பலனே இதுவென கூகுள் தெரிவிக்கின்றது. உலகில் இணைய வசதியற்றோருக்கு அதனை பெற்றுக்கொடுக்கும் பொருட்டே இம்முன்னோடித் திட்டத்தை கூகுள் ஆரம்பித்துள்ளது.

பலூன்களின் இதற்கு தேவையான உபகரணங்களைப் பொருத்தி வானத்தில் பறக்கவிடுவதன் மூலம் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இவ் உபகரணங்கள் மூலமாக 3ஜி வேக இணைய வசதியை கூகுள் வழங்க எதிர்ப்பார்த்துள்ளது.

 ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப்படுவதுடன் நிலத்திலிருந்து 20 கிலோமீற்றர் உயரத்தில் இவை பறக்கவிடப்பட்டுள்ளன. தற்போது பரீட்சாத்த நிலையில் உள்ள இத்திட்டத்தை நியூசிலாந்தில் கூகுள் ஆரம்பித்துள்ளது.
 இதன் முதற்கட்டமாக 30 பலூன்களை கூகுள் நியூசிலாந்தின் தெற்கிலுள்ள தீவொன்றிலிருந்து அனுப்பியுள்ளது. தற்போது அனுப்பப்பட்டுள்ள ஒவ்வொரு பலூனும் சுமார் 1200 சதுர கிலோமீற்றர் பிரதேசத்திற்கு இணைய வசதியை வழங்கக்கூடியது. ஈலியம் நிரப்பப்பட்ட இப்பலூன்கள் இவ்வசதியை வழங்குவதற்கு தேவையான சக்தியை ஒளியிலிருந்து பெற்றுக்கொள்கின்றன.

இதன் மூலம் இணைய வசதியற்றோருக்கு அதனை வழங்குவது மட்டுமன்றி, அனர்த்த நிலைகளின் போது தொடர்பாடல் சாதனங்கள் துண்டிக்கப்படும் போது இதன் மூலம் சிறந்த பயனை பெற்றுக்கொள்ள முடியுமென கூகுள் தெரிவிக்கின்றது. கூகுள் கிளாஸ், ஓட்டுநர் அற்ற கார் போன்ற புரட்சிகர தயாரிப்புகளை உருவாக்கும் கூகுளின் 'லெப் x' இலேயே இப் புரட்சிகர திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டமானது வெற்றியளிக்கும் பட்சத்தில் இதனூடாக இணையக் கேபிள்களை உருவாக்குதல், அவற்றை பொருத்துதல், பராமரித்தல் போன்ற செலவுகள் கட்டுப்படுத்தப்படுமென நம்பப்படுகின்றது. உலக சனத்தொகையில் 4.8 பில்லியன் பேர் இணைய வசதியற்றவர்களாக இருப்பதுடன் , 2.2 பில்லியன் பேர் அவ்வசதியை பெற்றுள்ளதாக புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

எனினும் இத்திட்டத்தின் ஊடாக அனைவருக்கும் இணையவசதியை வழங்க கூகுள் எதிர்ப்பார்த்துள்ளது ஆனாலும் பல நடைமுறைச் சிக்கல்களும் இதில் உள்ளன. குறிப்பாக காற்றின் வேகத்திற்கு பலூன்களால் ஈடுகொடுக்க முடியாமல் போதல், இதனால் இணைப்பு இடை நடுவே துண்டிக்கப்படுதல் போன்ற பல காரணிகளையும் கூகுள் கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளது.

எந்தவொரு புது முயற்சியைப் போல இதிலும் சவால்கள் இருக்கவே செய்கின்றன. இதிலிருந்து கூகுள் மீளுமா? இத்திட்டத்தில் வெற்றி பெறுமா? என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நன்றி ilangaimuslim.தளத்திலிருந்து...

Tuesday, March 20, 2012

வியப்பில் ஆழ்த்தும் மொபைல் போன்.

நம்புறீங்களா? 15 வருடங்களுக்கு மேல் சார்ச் நிலைத்திருக்கும் மொபைல் போன் 

மொபைல் போன் வைத்திருக்கும் நம்மில் பலருக்கு இருக்கும் பிரச்சினை சார்ச் தான். போனை பாவிக்காமல் வைத்திருந்தாலும் ஓரிரு நாட்களில் பற்றரி சார்ச் தீர்ந்துவிடும். சுவிச் ஓஃப் நிலையில் வைத்திருந்தாலும் இதே நிலைதான். 

இப் பிரச்சினைக்கு தீர்வு வந்துள்ளது.

  X PAL Power நிறுவனம் தயாரித்திருக்கும் Spare-one என்ற பெயர் கொண்ட மொபைல் போனை ஒரு முறை சார்ச் பண்ணிவிட்டால், சுமார் 15 வருடங்களுக்கு மேலாக சார்ச் தீராது இருக்கும்.
இத் தொலைபேசியில் 10 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக பேச முடியும். போனை பாவிக்காது வைத்தால் அதன் சார்ச் 15 வருடங்களுக்கு அப்படியே இருக்கும்.
இத் தொலைபேசி தயாரிக்கப்பட்டதன் நோக்கம், அவசர நிலைமைகளில் பயன்படுத்துவதற்காகும்.
ஒருமுறை சார்ச் செய்து, சுவிச் ஓஃப் பன்ணி கைப்பையில் வைத்துவிட்டால் போதும், அவசர தேவைகளின் போது பயன்படுத்தலாம்.
இக் கைபேசியின் விலை வெறும் 50 டொலர்கள் என்பது மேலும் இனிப்பான செய்தி. இவ் வருட இறுதியில் சந்தைக்கு வர இருக்கிறது.
 
Saturday, March 17, 2012

இந்தியாவின் 2வது பெண் விஞ்ஞானி

நவீன செயற்கைக்கோள் தயாரித்து தமிழக பெண் விஞ்ஞானி சாதனை: விரைவில் விண்ணில் ஏவப்படுகிறது
இந்தியாவின் விண்வெளி மற்றும் அணு விஞ்ஞானியான அப்துல்கலாம் பல சாதனைகள் படைத்து தமிழகத்துக்கு பெருமை தேடித்தந்தார். அவரைத் தொடர்ந்து, மேலும் பல தமிழக விண்வெளி விஞ்ஞானிகள் சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

இந்தியா சந்திரனுக்கு ராக்கெட் பறக்க விட்டு உலக அளவில் சாதனை நிகழ்த்தியது. இந்த சந்திராயன் ராக்கெட் தயாரித்தவர் அதன் திட்ட இயக்குனர் தமிழகத்தின் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மயில்சாமி. இதற்காக இவருக்கு பாராட்டுக்கள் குவிந்தது. 

இவர்கள் வரிசையில் இப்போது தமிழகத்தைச் சேர்ந்த மேலும் ஒரு பெண் விஞ்ஞானியான வளர்மதி சாதனை படைத்துள்ளார். கோவையைச் சேர்ந்த வளர்மதி இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணிபுரிந்து வருகிறார். 

இந்தியா தற்போது அதிநவீன மைக்ரோவேவ் ரிமோட் சென்சிங்சேட்டி லைட் என்ற செயற்கை கோளை உருவாக்கி உள்ளது. இதனை தயாரித்தவர் தமிழக பெண் விஞ்ஞானி வளர்மதி. இவரிடம் செயற்கைக்கோள் தயாரிப்புக்கான திட்டப்பணியை இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார். இதையடுத்து அதன் திட்ட இயக்குனராக பெண் விஞ்ஞானி வளர்மதி பொறுப்பு ஏற்றார். 

அவரது தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் இரவு பகலாக உழைத்து செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளனர். இதற்கு ரிசாட் என்று பெயரிடப்பட்டுள்ளது. இன்னும் சில வாரங்களில் ரிசாட்-1 செயற்கைக்கோள் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. 

அனேகமாக மார்ச் 15-ந்தேதிக்கு பிறகு செலுத்த ஏற்பாடு நடப்பதாக இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். 

செயற்கைக்கோள் தயாரிப்பு பற்றி பெண் விஞ்ஞானி வளர்மதி கூறியதாவது:-
நான் கோவை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்தேன். 1981-ல் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொடர்பு பிரிவில் என்ஜினீயர் ஆகி இஸ்ரோவில் பணிபுரிந்தேன். ரிசாட்-1 தயாரிப்பு திட்ட இயக்குனராக இருந்த விஞ்ஞானி தியாகி ஓய்வு பெற்றதும் அதன் திட்ட இயக்குனர் பொறுப்பை நான் ஏற்றேன். 

இவ்வாறு அவர் கூறினார்.

2-வது பெண் இந்தியாவின் செயற்கைக்கோள் தயாரித்த 2-வது பெண்மணி வளர்மதியாவார். முதலாவது பெண் விஞ்ஞானி டி.கே.அனுராதா. இவர் ஜி சாட்-12 என்ற செயற்கைக்கோள் தயாரித்தார். அது கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை 15-ந்தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

Thursday, March 8, 2012

பார்ப்பவைகளை பதிவு செய்யும் கண்ணாடி

முற்காலங்களில் கண் பார்வையில் குறைபாடுடையர்கள்  தான். அதை ஈடு செய்வதற்காக மூக்குக்கண்ணாடிகளை அணிந்தார்கள். காலப்போக்கில் நாகரிகம் என்று கூறிக்கொண்டு அழகுக்காகவும் அணிந்தார்கள். ஆனால் தொழில்நுட்பவியலாளர்கள் ஒருபடி மேலே சென்று இந்த மூக்குக்கண்ணாடிகளையும் மின் சாதனமாக மாற்றிவிட்டார்கள். இதன் அடிப்படையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கண்ணாடியை அணிந்தவாறு பார்க்கும் காட்சிகள், பொருட்கள் என்பனவற்றை அதில் பொருத்தப்பட்டுள்ள உயர் திறன் கொண்ட வீடியோ கேமரா மூலம் 1080 பிக்சல்களில் பதிவு செய்ய முடியும்.

மேலும், அதில் பொருத்தப்பட்டுள்ள 8 மெகாபிக்ஸல் கொண்ட கேமரா மூலம் புகைப்படங்களை எடுக்கக்கூடியதாக காணப்படுவதுடன் 44.1 kHz அதிர்வெண்ணுடன் இயங்கக்கூடிய மைக்ரோபோனும் காணப்படுகின்றது. இன்மூலம் 720PT பிக்சல் அல்லது 1080PT பிக்சலில் பதிவு செய்யப்படும் வீடியோவானது செக்கன்டுக்கு 30 பிரேம்கள் என்ற வேகத்தில் பதிவாகுவதுடன் 720PT பிக்சலில் பதிவு செய்யும் போது செக்கன்டுக்கு 60PT பிரேம்கள் என்று மாற்றக்கூடிய வசதியும் காணப்படுகின்றது.

Sunday, February 19, 2012

எழுமிச்சையிலிருந்து மின்சாரம் :மாணவன் முஹம்மது ஹம்தான் சாதனை!

குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருபவர் மாணவன் முஹம்மது ஹம்தான், இவர் எலுமிச்சம் பழத்திலிருந்து மின்சாரம் தயாரித்து சாதனை படைத்துள்ளார்.

அது பற்றிய விவரம் வருமாறு:-

தென்காசியை சார்ந்த மெக்கானிக்கல் இன்ஜினியர். காதர் முகைதீன், ஷமீமா தம்பதிகளின் மகன் முகம்மது ஹம்தான். இவர் பழையகுற்றாலத்தில் உள்ள ஹில்டன் மெட்ரிக் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று பலரின் முன்னிலையில் எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்பதை செய்து காண்பித்து அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
நான்கு எலுமிச்சை பழங்களை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு பழத்திலும் இரும்பு ஆணி மற்றும் காப்பர் கம்பியை செருகினார். இதன் பின்னர் காப்பர் கம்பியை தனி வயரிலும், இரும்பு ஆணியை தனி வயரிலும் இணைத்து சிறிய 2 வோல்ட் திறன் கொண்ட சிறிய பல்பினை எரிய வைத்து இந்த சாதனையை நிகழ்த்தி காட்டினார்.

இந்த கண்டு பிடிப்பு குறித்து மாணவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

"எனது தந்தை காதர் முகைதீன் மெக்கானிக்கல் என்ஜினீயர். அவர் கத்தார் நாட்டில் பணிபுரிந்தார். நானும் அங்கு வசித்தேன். நான் அங்குள்ள டெல்லி பப்ளிக் பள்ளியில் 5-ம் வகுப்பு வரை படித்தேன். இந்நிலையில் எனது தந்தை நெல்லையில் ஏற்றுமதி-இறக்குமதி கம்பெனி தொடங்கியதால் நாங்கள் தென்காசி வந்துவிட்டோம். நான் பழையகுற்றாலத்தில் உள்ள ஹில்டன் பள்ளியில் சேர்ந்து 6-ம் வகுப்பு படித்து வருகிறேன். அறிவியல் பாடத்தில் சிட்ரிக் அமிலத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியும் என்று படித்தேன்.
அப்போதுதான் புதுவழியில் சிட்ரிக் அமிலத்தில் இருந்து மின்சாரம் எடுக்க வேண்டும் என்று எனக்கு ஆசை வந்தது. எலுமிச்சம்பழத்தில் சிட்ரிக் அமிலம் உள்ளதால் அதி லிருந்து மின்சாரம் எடுக்க நினைத்தேன். அதன்படி எலுமிச்சம்பழத்தில் இரும்பு மற்றும் செம்பு கம்பிகளை சொருகி அவற்றை மின்கம்பி களால் இணைத்து பார்த்த போது மின்சாரம் வந்தது. ஒரு எலுமிச்சம்பழத்தில் இருந்த 0.5 வாட்ஸ் மின்சாரம் கிடைக்கும். 4 பழங்களில் இருந்து 2வாட்ஸ் பல்பு எரிகிறது.
மேலும் "எலுமிச்சை, பல்லாரி, உருளைக்கிழங்கு, தக்காளி, கத்தரிக்காய், ஆரஞ்சு, வாழைப்பழம் உள்ளிட்டவைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என எனக்கு பாடம் நடத்திய ஆசிரியை கூறினார்கள். அதனை நான் செயல்படுத்தி மின்சாரம் கிடைப்பதை உறுதிபடுத்திக் கொண்டேன்."
இவ்வாறு மாணவன் முஹம்மது ஹம்தான் கூறினார்.

குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருபவர் மாணவன் முஹம்மது ஹம்தான், இவர் எலுமிச்சம் பழத்திலிருந்து மின்சாரம் தயாரித்து சாதனை படைத்துள்ளார்.
அதுபற்றிய விவரம் வருமாறு:-
தென்காசியை சார்ந்த மெக்கானிக்கல் இன்ஜினியர். காதர் முகைதீன், ஷமீமா தம்பதிகளின்  மகன் முகம்மது ஹம்தான். இவர் பழையகுற்றாலத்தில் உள்ள ஹில்டன் மெட்ரிக் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று பலரின் முன்னிலையில் எலுமிச்சம் பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்பதை செய்து காண்பித்து அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
நான்கு எலுமிச்சை பழங்களை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு பழத்திலும் இரும்பு ஆணி மற்றும் காப்பர் கம்பியை செருகினார். இதன் பின்னர் காப்பர் கம்பியை தனி வயரிலும், இரும்பு ஆணியை தனி வயரிலும் இணைத்து சிறிய 2 வோல்ட் திறன் கொண்ட சிறிய பல்பினை எரிய வைத்து இந்த சாதனையை நிகழ்த்தி காட்டினார்.
இந்த கண்டு பிடிப்பு குறித்து மாணவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
"எனது தந்தை காதர் முகைதீன் மெக்கானிக்கல் என்ஜினீயர். அவர் கத்தார் நாட்டில் பணிபுரிந்தார். நானும் அங்கு வசித்தேன். நான் அங்குள்ள டெல்லி பப்ளிக் பள்ளியில் 5-ம் வகுப்பு வரை படித்தேன். இந்நிலையில் எனது தந்தை நெல்லையில் ஏற்றுமதி-இறக்குமதி கம்பெனி தொடங்கியதால் நாங்கள் தென்காசி வந்துவிட்டோம். நான் பழைய குற்றாலத்தில் உள்ள ஹில்டன் பள்ளியில் சேர்ந்து 6-ம் வகுப்பு படித்து வருகிறேன். அறிவியல் பாடத்தில் சிட்ரிக் அமிலத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியும் என்று படித்தேன்.
அப்போதுதான் புது வழியில் சிட்ரிக் அமிலத்தில் இருந்து மின்சாரம் எடுக்க வேண்டும் என்று எனக்கு ஆசை வந்தது. எலுமிச்சம் பழத்தில் சிட்ரிக் அமிலம் உள்ளதால் அதிலிருந்து மின்சாரம் எடுக்க நினைத்தேன். அதன்படி எலுமிச்சம் பழத்தில் இரும்பு மற்றும் செம்பு கம்பிகளை சொருகி அவற்றை மின்கம்பிகளால் இணைத்து பார்த்த போது மின்சாரம் வந்தது. ஒரு எலுமிச்சம்பழத்தில் இருந்த 0.5 வாட்ஸ் மின்சாரம் கிடைக்கும். 4 பழங்களில் இருந்து 2வாட்ஸ் பல்பு எரிகிறது.
மேலும் "எலுமிச்சை, பல்லாரி, உருளைக்கிழங்கு, தக்காளி, கத்தரிக்காய், ஆரஞ்சு, வாழைப்பழம் உள்ளிட்டவைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என எனக்கு பாடம் நடத்திய ஆசிரியை கூறினார்கள். அதனை நான் செயல்படுத்தி மின்சாரம் கிடைப்பதை உறுதிபடுத்திக் கொண்டேன்."
இவ்வாறு மாணவன் முஹம்மது ஹம்தான் கூறினார்.

லம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருபவர் மாணவன் முஹம்மது ஹம்தான், இவர் எலுமிச்சம் பழத்திலிருந்து மின்சாரம் தயாரித்து சாதனை படைத்துள்ளார்.

Sunday, February 5, 2012

வினாடிக்கு ஒரு ட்ரில்லியன் ஃபிரேம்கள் - புதிய கேமிரா கண்டுப்பிடிப்பு

Ultra Slow motion கேமெராக்கள் தான் கிரிக்கட் போட்டியில் மிக முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த வகை கமெராக்கள் ஒரு வினாடிக்கு 1000 ஷாட் வரை எடுக்க கூடியவை. இதுவரை வினாடிக்கு 1 மில்லியன் ஷாட் எடுக்க கூடிய கமெராக்கள் தான் அதிகபட்சமாக இருந்து வந்தது. இந்த கமெரா மூலம் ஒரு துப்பாக்கியில் இருந்து வெளிவரும் குண்டு செல்வதை கூட எளிதாக படம் பிடிக்க முடியும். ஆனால் இதையெல்லாம் மீறி யாருமே யூகிக்க கூட முடியாத அளவுக்கு வினாடிக்கு 1 ட்ரில்லியன் ஃபிரேம்கள் எடுக்க கூடிய புதிய கமெராவை இந்திய MIT விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளார்.

இந்த புதிய கமெராவினால் ஒரு லிட்டர் பாட்டிலில் ஒளி(light) செல்லும் வேகத்தை கூட எளிதாக படம் பிடிக்க முடியும். அதாவது ஒளி எவ்வளவு வேகத்தில் செல்கிறது என்பதை slow motion ஆக காட்ட முடியும். இந்த கமெராவை MIT விஞ்ஞானி ரமேஷ் ரஷ்கர் கண்டுபிடித்துள்ளார். சமீபத்தில் The Eye Nerta என்ற விலை குறைந்த கருவியை இவர் உருவாக்கினார். இந்த கருவியின் மூலம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி உங்களின் கண்களை பரிசோதனை செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Sunday, January 22, 2012

அசத்தல் ஏடிஎம் மெஷின்

அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் சர்வதேச எலக்ட்ரானிக் பொருட்கள் கண்காட்சி நடக்கிறது. பல அறிவியல் கண்டுபிடிப்புகள் இதில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இதில் பலரையும் அதிசயிக்க வைத்த கண்டுபிடிப்பு பழைய எலக்ட்ரானிக் பொருட்களை பெற்றுக்கொண்டு பணம் தரும் ஏடிஎம் மெஷின். தேவையற்ற செல்போன்கள், ஐபாட், ஐபேட், எம்பி3 பிளேயர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை இதில் போடலாம். அதற்கான டிரேயில் முதலில் பொருளை வைக்க வேண்டும். சில வினாடிகளில் அதை கருவி உள்ளிழுத்துக் கொள்கிறது. அதை பல கோணங்களில் ஸ்கேன் செய்து தரத்தை மதிப்பிடுகிறது. அதற்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்ற தகவல் திரையில் மின்னுகிறது. தொகை நமக்கு ஓகே என்றால் அதற்கான பட்டனை அழுத்த வேண்டும். உடனே பணம் வெளியே வரும். தொகை கட்டுபடி ஆகாவிட்டால் கேன்சல் என அழுத்த வேண்டும். பொருள் வெளியே வந்துவிடும்.

பில் போவெல் என்ற விஞ்ஞானி இதை வடிவமைத்துள்ளார். பழைய எலக்ட்ரானிக் பொருட்களை குப்பையில் வீசுவது தவிர்க்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. இந்த கருத்தை உணர்த்தும் வகையில் ‘ஈக்கோ ஏடிஎம்’ என்று இதற்கு பெயர் வைத்திருக்கிறார் பில் போவெல். கணிசமான பழைய பொருட்கள் சேர்ந்த பிறகு, அவை அகற்றப்படும். சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் அந்த பொருட்களில் இருந்து பிளாஸ்டிக், உலோகங்கள் என தனித்தனியாக பிரித்தெடுக்கப்பட்டு மறு சுழற்சி செய்யப்படும். இதுபற்றி பில் போவெல் மேலும் கூறுகையில், எலக்ட்ரானிக் கழிவுகளை குப்பையோடு குப்பையாக வீசுவது மிகவும் தவறு. அது மண்வளத்தை பாதிக்கும். நிலத்தடி நீர்மட்டத்தை குறைக்கும். சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். இவற்றை பாதுகாப்பான முறையில் அழிப்பது அவசியம். அந்த கருத்தை வலியுறுத்தும் வகையிலேயே எலக்ட்ரானிக் குப்பை ஏடிஎம்மை உருவாக்கினேன்’’ என்றார். கண்காட்சியில் இந்த ஏடிஎம்முக்கு அமோக வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Friday, January 20, 2012

லேசர் தொழில்நுட்பம்

லேசர் ஒளிக்கற்றையைக் கண்டுபிடித்தபோது, உற்பத்தித் துறையிலிருந்து மருத்துவத் துறை வரை அனைத்துத் துறைகளிலும் இந்தளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என யாரும் நினைக்கவில்லை. வரும் 2020-க்குள் சிறிய மூலக்கூறுகளைக் கண்டறியும் வகையில் மிக நுண்ணிய லேசர் ஒளிக்கற்றைகள் கண்டுபிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவை கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க் வடிவமைப்பிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவைச் சேர்ந்த இயற்பியலாளரான மணிலால் பூமிக், கார்பன் மோனாக்சைடு லேசரைக் கண்டுபிடித்தார். அதன்பிறகு, லேசர் தொழில்நுட்பத்தில் புதிதாகக் கண்டுபிடிக்க ஒன்றுமில்லை என்று விஞ்ஞானிகள் கூறும் அளவுக்கு அவரது கண்டுபிடிப்பு முக்கியமானதாக இருந்தது. அவரைப் போன்று ஆராய்ச்சிகளில் ஆர்வமுள்ளவர்களையும், விஞ்ஞான மேதைகளையும் கண்டறிந்து ஊக்கப்படுத்தவும், கொண்டாடவும் தருணம் வந்துள்ளது.

Tuesday, July 19, 2011

உயர் தொழிநுட்பத்தில் உருவான பேனா'க்கள்.

1. Pendragon: The most crazy pen

2. Ruler Pen

3. Swiss Pens

4. Maze Pen

5. Puzzle Pen

6. The KZ Xtreme Defense Pen – Pen, Stylus and Killer
7.color picker pen by jinsu park

8. PenAgain – Ergonomic Pen

  9. Yoropen   

10. Free Ride Pen

11. USB Pen, MP3 Player, FM Radio, Voice Recorder

Tuesday, July 12, 2011

புளியங்கொட்டை

மூளை, முதுகெலும்பு ஆகியவற்றில் உள்ள நரம்புகள் சேதம் அடைந்து இருந்தால் அவற்றை குணப்படுத்தி மீண்டும் வளர உதவும் மருந்து ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தமருந்து புளியங்கொட்டையில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. பர்க்கின்சன் போன்ற நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்துவதற்கான சிகிச்சையில் இந்த மருந்து ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மருந்தை சர்வதேச விஞ்ஞானிகள் குழு பரிசோதித்து பார்த்து இது சேதம் அடைந்த நரம்பு செல்களை குணப்படுத்துவதில் மிகப்பெரிய பங்காற்றும் என்று தெரிவித்துள்ளது.
இந்த மருந்தை காயம்பட்ட இடத்தில் திரவமாக ஊசி மூலம் செலுத்த முடியும் என்றும் அந்தக் குழு தெரிவித்தது.
Thanks To Lankasri.