Showing posts with label Image. Show all posts
Showing posts with label Image. Show all posts
Friday, March 30, 2012
உலகின் வேகமான பறவைகள்.
உலகின் வேகமான பறவைகள்.
Thursday, March 8, 2012
உலகின் மிகப்பெரிய பல்கலைக் கழகம்
உலகின் மிகப்பெரிய பல்கலைக் கழகம்
பொதுவாக இப்பொழுது உலகில் ஒவ்வொரு நாடுகளும் தங்கள் நாட்டின் கல்வி வளர்ச்சியில் மிகவும் முனைப்புடன் திகழ்ந்து வருகிறது. காரணம் சிறந்தக் கல்விதான் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதை நாம் அனைவரும் நன்றாக அறிவோம். அந்த வகையில் உலகமே திரும்பிப் பார்க்கும் ஒரு பிரமிப்பை கல்வி சார்ந்தத் துறையில் ஏற்படுத்தி இருக்கிறது சவூதி அரேபியா ரியாத் தலை நகரில் என்றால் நம்புவீர்களா !?
ஆம் நண்பர்களே..!! இதுநாள் வரை நம் அனைவருக்கும் சவூதி அரேபியா என்றாலே உடனே ஞபாகத்திற்கு வருவது உலகத்தின் மிகப்பெரிய மசூதி
என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்ததே. அத்துடன் இப்பொழுது ஒரு புதிய சாதனையை பெண்களுக்காக மட்டுமே நிகழ்த்தி இருக்கிறார்கள் சவூதி அரபியர்கள். ஆம்..! உலகத்தில் மிகப்பெரிய பெண்கள் பல்கலைக் கழகம் (World's Largest University Gives Saudi Women Hope for Change ) ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். இதில் என்ன சிறப்பு என்றால் இந்தப் பல்கலைக்
கழகத்தில் ஒரே நேரத்தில் ஐம்பது ஆயிரம் பெண்கள் பயிலும் அளவில் இந்த பிரமாண்டப் பல்கலைக் கழகத்தை வடிவமைத்து இருக்கிறார்கள்.
அது மட்டுமல்லாது இதுவரை உலகத்தில் எங்கும் இல்லாத அளவில் ஒரு பல்கலைக் கழகத்திற்குள் ஆராய்ச்சிக்காகவும், நூலகத்துக்காகவும் இங்கு கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் புத்தகங்கள் கொண்ட நூலகம் அமைக்கப் பட்டிருப்பது இதுவே
முதல் முறையாகும். மேலும் மாணவிகள் ஒரே நேரத்தில் தங்கிப் படிப்பதற்காக 12,000 அறைகள் கொண்ட தங்கும் விடுதிகளும் அருகில் ஏற்படுத்தி இருக்கிறார்கள். உடற்பயிற்சி, மற்றும் விளையாட்டு, சிறப்பு ஆய்வுகள் என இதன் சுற்றளவு 26 கி.மீ தூரத்தை தாண்டி நீள்கிறது இதன் பரப்பளவு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்..!!
உலகத்தில் முதன் முறையாக பல்கலைக் கழகத்தை முழுவதும் சுற்றி வருவதற்கு மெட்ரோ ரயில் அமைத்திருக்கும் ஒரே பல்கலைக் கழகம் இதுதான் என்று சொல்லவேண்டும். அந்த அளவிற்கு பல்கலைக் கழகத்தில் பரப்பளவு
விரிந்துக் கிடக்கிறது என்றால் பார்த்துகொள்ளுங்கள்..!
கால நிலையை மாற்றி அமைப்பதற்காக செயற்கையான முறையில் பல புதுமைகளை ஏற்படுத்தி இருக்கிறது சவூதி அரேபியா. 40000 சதுர மீட்டரில் சூரிய
ஒளியின் மூலம் மின்சார தேவையை பூர்த்தி செய்யும் விதமாக கட்டிடம்
வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சார செலவுகளையும் ஓரளவு மிச்சப்படுத்தலாம். அதிக குளிர் இல்லாமல், அதிக வெப்பமும் இல்லாமல் பல்கலைக் கழகத்தின் வெப்பநிலையை சீராக வைக்க சூரிய ஒளி பயன்படுத்தப்படுகிறது.
இதுமட்டுமல்லாது தேவைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் அமைக்கும் பொருட்டு 700 படுக்கை அறை கொண்ட ஹாஸ்பிடல், கான்ஃபரன்ஸ் ஹால், பரிசோதனைக்
கூடம், நோனோ டெக்னாலஜி சம்பந்தமான ஆராய்ச்சிப் பிரிவு, தகவல் தொழில்
நுட்பம், உயிரியியல் போன்றவற்றிற்காக தனித்தனி துறைகள் இயக்கி இருக்கிறார்கள்.
இத்தனை சிறப்பு மிக்க இந்தப் பல்கலைக் கழகத்தின் பெயர் நூரா பின்த் அப்துல் ரஹ்மான் பல்கலைக் கழகம் (Princess Nora Bint Abdulrahman University in Riyadh) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 20 பில்லியன் ரியால் தாண்டும் என்கிறது Tuesday, February 21, 2012
Wednesday, January 18, 2012
Thursday, December 1, 2011
Wednesday, November 30, 2011
Shanghai 1990 Vs. 2010
Monday, August 1, 2011
கடலடியில் வாழும் விசித்திர உயிரினங்கள்.
கடலடியில் வாழும் விசித்திர உயிரினங்கள்.
Wednesday, July 27, 2011
ஜப்பானின் அற்புதமான தொழில்நுட்பம்.
ஜப்பானின் அற்புதமான தொழில்நுட்பம்.
இதனை நன்று உற்றுப்பாருங்கள். என்னவாக இருக்கக் கூடும்? உங்களால் ஊகிக்க முடிகிறதா?
பேனாக்களா? இல்லை.
இன்றைய நவீன உலகில் கணனியின் தேவை தவிர்க்க முடியாத ஒன்று என்பதுடன், அது பல்வேறு பரிணாமங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இன்று பேனா அமைப்புக்களில் அமைந்த, ஆடைகளில் செருகிக்கொண்டு செல்லும் வகையில் உருவாக்கப்பட்ட புதிய கணணிகளை புதிய தொழிநுட்பத்தின் முன்னோடிகளான ஜப்பானியர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
கீழ் வரும் படங்களில் காணலாம்.
பேனாக்களா? இல்லை.
இன்றைய நவீன உலகில் கணனியின் தேவை தவிர்க்க முடியாத ஒன்று என்பதுடன், அது பல்வேறு பரிணாமங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இன்று பேனா அமைப்புக்களில் அமைந்த, ஆடைகளில் செருகிக்கொண்டு செல்லும் வகையில் உருவாக்கப்பட்ட புதிய கணணிகளை புதிய தொழிநுட்பத்தின் முன்னோடிகளான ஜப்பானியர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
கீழ் வரும் படங்களில் காணலாம்.
Posted by
abuanu
at
Wednesday, July 27, 2011
Labels:
Amazing,
Computer,
Image,
Technology
No comments:
Subscribe to:
Posts (Atom)












































