Showing posts with label உலகில் அடுத்த குள்ள மனிதர். Show all posts
Showing posts with label உலகில் அடுத்த குள்ள மனிதர். Show all posts

Sunday, March 20, 2011

17 வயது 22 அங்குல உயரம்!

பிலிப்பைன்ஸ் நாட்டின் நோர்டே மாநிலத்தில் ஒரு பின்தங்கிய கிராமத்தில் பிறந்த  17 வயதுடைய டைனி ஜன்ரி பாலாவிங் (Tiny Junrey Balawing) என்பவரின் உயரம் 22 அங்குலங்கள் மட்டுமே.  இவர் தான் விரைவில் உலகின் குள்ளமான மனிதர் என்ற புகழைப் பெறவுள்ளதுடன்,கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்திலும் இடம் பெறவுள்ளார்.
ஜுன் மாதம் 12ம் திகதி  18 வயதை அடையும் போது இந்தப் பெருமையை இவர் தனதாக்கி கொள்ளவுள்ளார்.
தற்போது உலகின் குள்ளமான மனிதரான  நேபாளத்தின் கஜேந்திர தாபா மாகாவை (உயரம் 26.4 அங்குலம்) விட இவர் ஐந்து அங்குலம் குறைவான உயரத்தை அப்போது கொண்டிருப்பார்.
தனது முதலாவது பிறந்த நாளைக்குப் பின் இவரின் உடல் உயரம் வளரவே இல்லை என்று கூறப்படுகின்றது.
நடக்கவும் நிற்கவும் சிரமப்படும் இவர்  தனது வருங்கால புகழை எண்ணி மகிழ்ச்சியடையும்  இவர் தனது பெற்றோர் மற்றும் மூன்று இளைய சகோதரர்களுடன் வசித்து வருகின்றார். ஆனால் சகோதரர்கள் மூவரும் நல்ல உயரமானவர்கள்.
13,11 மற்றும் 6 வயதான இவரின் இளைய சகோதரர்கள் பாடசாலை செல்லும் போது இவர் மட்டும் தாயுடன் வீட்டிலேயே இருந்து விடுகின்றார்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இவரைப் பெற்றோர் இடுப்பில் தூக்கியே சுமக்கின்றனர்.





Sunday, October 17, 2010

முடி சூடும் உலகின் மிக சிறிய மனிதன்.

2010, October ல் தனது 18வது பிறந்த நாளைக்கொண்டாடிய  நேபாளத்தின் மத்திய பிரதேசமான Pokhara வைச் சேர்ந்த  Khagendra Thapa Magar என்பவர் தான் உலகின் புதிய குள்ள மனிதராக முடி சூடவுள்ளார்.
5.5kg (12lb) நிறையும், 67.08cm (2ft 2.41in) உயரமுடைய இவர், தற்போது உலகின் குள்ள மனிதராகவுள்ள கொலம்பியாவைச் சேர்ந்த 24 வயதுடைய  Edward “Nino” Hernandez என்பவரை விட 3Cm உயரம் குறைவாகவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.




Monday, August 2, 2010

உலகில் அடுத்த குள்ள மனிதர்!

ஒரு மனிதன் குள்ளமாக இருந்தால் அவனை நாம் கேலி செய்வோம் ஆனால் அந்த குள்ளம்தான் உலகளவில் பேசப்படுகின்றது. அதாவது உலகத்தில் குள்ளமான மனிதர் , உயரமான மனிதர், நிறை கூடிய மனிதர் என்று பல விதத்தில் மனிதனை உலகத்திற்கு எடுத்து காட்டுகின்றனர்.
சிலர் தனது உடல் அமைப்பை வைத்து கவலைப் படுவது உண்டு. ஆனால் அந்த உடல் அமைப்பே உலகத்தையை வியக்க வைக்கின்றது என்பது உண்மை.
அந்த வகையில் உலகில் குள்ளமான மனிதராக இருந்த பிங்பிங் கடந்த மார்ச் மாதம் இறந்து விட்டார். இதையடுத்து உலகில் குள்ளமான மனிதர் என்ற இடத்தை சீனாவை சேர்ந்த ஹவுங் கைகான் பிடித்துள்ளார்.
அவரது வயது 40. இவருடைய உயரம் 76 சென்டி மீட்டர். பிங்பிங்கை விட இவர் 1.4 சென்டி மீட்டர் அதிக உயரமாக இருக்கிறார். இவர் பிறந்து 1 மாதம் வரை உடல வளர்ச்சி இருந்து உள்ளது. 1 மாதத்துக்கு பிறகு உடல் வளர்ச்சி முற்றிலும் நின்று விட்டது. இப்போது அவர் ஒரு வயது குழந்தைகள் அணியும் ஆடையையே அணிகிறார். தனது தாயாருடன் வசித்து வரும் இவர் மேஜிக் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.