Showing posts with label Yahoo. Show all posts
Showing posts with label Yahoo. Show all posts

Monday, March 21, 2011

Yahoo Messenger இல் Facebook

Yahoo Messenger இல் இருந்த வண்ணமே சமூக வளைத்தளங்களான Facebook, Flicker, Twitter மற்றும் சில வலைத்தளங்களுடன் தொடர்பு கொள்ள ஒரு புதிய வழி ஆச்சரியமூட்டும் விதத்தில் அமைந்துள்ளது.
புதிய Yahoo புதுப்பித்தல்கள் (updates) மற்றும் add ons கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் Yahoo Messenger உள் நுழைந்த பிறகு  உங்களுக்கு பிடித்த சமூக வலைத்தளங்களுடன் இலகுவாக தொடர்பு கொள்ள முடியும்.

  Facebook உடன் தொடர்பு கொள்ளும் முறை.

1. Yahoo Messenger 11 Beta வை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

தரவிறக்கச்  சுட்டி: http://messenger.yahoo.com/beta/win
2. பின் அதனை உங்கள் கணனியில் நிறுவும் போது உங்கள்  Yahoo கணக்கை  Facebook உடன் தொடர்பு படுத்த வேண்டுமா? என கேற்கும், அதனை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
3. பின்னர் உங்கள் Facebook கணக்கிற்கு நுளைய (log in) ஆகுக, என கேட்கும்.
4. நீங்கள் உங்கள் Facebook கணக்கிற்கு நுளைந்த பிறகு Yahoo Application அனுமதிக்க கூறி கேட்கும், அதனை (Allow) அனுமதி கொடுங்கள்.
5. இப்பொழுது நீங்கள் Facebook உடன் தொடர்பை ஏற்படுத்திவிட்டீர்கள்.
6.  Yahoo Messenger இல் log in ஆகியவிட்டதும் Facebook ற்கு  log in ஆகாமலே  Facebook நண்பர்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.
7. மேலும் Yahoo Messenger உள் நின்றபடி Facebook அரட்டை தொடர்பை log off அல்லது  log in ஆகவும் முடியும்.
8. அது மட்டுமல்லாது உங்களுக்கு பிடித்த  Facebook விளையாட்டுகளை  (Games) களையும் விளையாட முடிவதுடன், மேலும் பல முக்கியமான Plug-ins களையும் வழங்கி வருகின்றது. குறிப்பாக Picasa, YouTube, Pandora, Blogger போன்றவற்றுடன் தொடர்புகளை மேற்கொள்ள கூடிய வழி வகைகளை  வழங்குகின்றது.

நன்றி. புதிய யாழ்.

Saturday, September 18, 2010

புதுப் பொலிவுடன் யாஹூ மெயில் (Yahoo Mail) சேவை

பல நவீன வசதிகள் கொண்டதாகவும் புதிய தோற்றத்துடனும் தனது மெயில் சேவையை யாஹூ வெளியிடவுள்ளது.
மிக வேகமான சேவை, புதிய கண்கவர் தோற்றம், குறைந்தளவிலான ஸ்பாம் என்பவவையே முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
தனது பாவனையாளர்கள் வேகமாக குறைந்து வருவதே இதற்கான முக்கிய காரணமாகும்.
யாஹூ மெயில் சேவையானது ஐ பேட் மற்றும் அண்ரோயிட் ஆகியவற்றிற்கு ஏதுவான யூசர் இன்டர் பேஸினை உருவாக்கிவருகின்றது.
அப்பிளின் ஐஓஎஸ் மற்றும் அன்ரோயிட் இயக்குதளங்களில் வேகமாக இயங்குவதற்காக யாஹூ மெயிலானது முற்றிலுமாக எச்டிஎம்எல் 5 இன்டர் பேஸிற்கு நகரவுள்ளது.
டுவிட்டர் மற்றும் பேஸ்புக் என்பனவற்றுடன் யாஹூ இணைந்து மிகச் சுலபமாக மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
மேலும் தனது தேடல் பொறியையும் யாஹூ மேம்படுத்தவுள்ளது.
பாவனையாளர்கள் இதன் மூலமாக அதிகமான தகவல்கள் சிறப்பான புகைப்படங்கள் வீடியோக்கள் என்பனவற்றையும் பெறக்கூடியதாகவிருக்கும்.
நன்றி,வீரகேசரி.
வீடியோ இணைப்பு.

Wednesday, July 28, 2010

கூகுளுடன் கைகோர்க்கும் யாஹூ

இணைய உலகின் ஜாம்பவான்களாகிய யாஹூவும் கூகுளும் இன்று ஜபானில் கைகோர்த்துள்ளது. yahoo japan நிறுவனம் தனது தேடுபொறியை கூகிளின் உதவியுடன் இயக்கும் என அறிவித்துள்ளது.
இன்று காலை இந்த அறிவித்தல் வெளியானதாக பல இணைய தளங்கள் உறுதி செய்துள்ளன. yahoo japan நிறுவனமாத்தின் பெரும்பான்மை பங்கினை(40%) Softbank Corp நிறுவனம் கொண்டிருப்பதும் yahoo inc 35% பங்கினை கொண்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஜபான் சந்தையில் 53% பங்கினை யாஹூ ஜபானும் 35% பங்கினை கூகிளும் கொண்டுள்ள இந்த தருணத்தில் இந்த ஒப்பந்தமானது மற்றய அனைத்து தேடுபொறிகளையும் பின்தள்ளிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sunday, May 2, 2010

Yahoo messenger இன் வீடியோ chat ஐ record பண்ணுவது எப்படி ?


நாம் Yahoo messenger இல் நம் நண்பர்களுடன் online இல் முகம் பார்த்து வீடியோ chat செய்திருப்போம். நமக்கு எதிரில் இருப்பவரின் வீடியோவை Record பண்ண வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் முடிவதில்லை.
அவ்வாறு Yahoo messenger இல் video chat செய்யும் வீடியோகளை Record பண்ணுவதற்கு எந்த வசதியும் Yahoo messenger இல் இல்லை அதற்கு உதவுவது தான் YCC Camp Cap என்ற இந்த Software.
நீங்கள் வீடியோ chat செய்வதற்கு முன் இந்த software ஐ இயக்கி அதில் Start Capture ஐ click செய்துவிட்டு chat பண்ண வேண்டியது தான் பிறகு chat செய்துமுடிந்ததும் stop All என்ற பட்டன் ஐ click செய்தால் உங்களுடன் இவ்வளவு நேரமும் chat செய்த வீடியோ Record பண்ணப்பட்டு அந்த software இன் folder இக்குள் save செய்யப்பட்டிருக்கும்.
Download here: http://www.box.net/shared/dvysrl5gslThamil To........Tamilhackx

Saturday, April 24, 2010

Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது?

                        சில வேளைகளில் நம் நண்பர்களில் சிலர் Yahoo Messenger இல் Onling இல் இருந்தாலும்  நமக்கு தெரியாதபடி appear offline (அதாவது Invisible) இல் இருப்பார்கள். அப்படிப்பட்ட Online இல் இருந்தும் Offline இல் இருப்பது போல நடிப்பவர்களைக் கண்டு பிடிப்பதற்கும் ஒரு வழி உண்டு.
முதலில் உங்கள் Yahoo Messenger அய் Open பண்ணி அதில் நீங்கள் யாரை Check பண்ணப் போகிறீர்களோ அவரின் பெயரை Double Click பண்ணவும். அதில் உள்ள IM Vironment தெரிவு செய்து அதில் See all IMVironments ,இல் Yhaoo! Tools அல்லது Interactive Fun அய் click பண்ணி Doodle அய் தெரிவு செய்யவும். அப்போது படத்தில் காட்டியவாறு “waiting for your friend to load Doodle” என்ற திரை தோன்றும்.
sunday malar template.pmd
அதில் ஏதாவது type செய்து send பண்ணும் போது அந்த நபர் அந்த appear offline இல் இருந்தால் “waiting for your friend to load Doodle” என்ற எழுத்துக்கள் மறைந்து வெள்ளை நிற திரை தோன்றும். நிஜமாகவே அவர் இல்லையென்றால் அந்தத் திரை மாறாது அப்படியே இருக்கும்.
                  இதில் இருந்து அவர் Online இல் இருந்துகொண்டு Offline போல நடிக்கிறாரா அல்லது அவர் நிஜமாகவே இல்லையா என்பதைக் கண்டுபிடிக்கலாம்.
           நன்றி,தமிழ்நிருபர்.