Showing posts with label Video. Show all posts
Showing posts with label Video. Show all posts

Monday, July 29, 2013

78 பேரின் உயிரை காவு கொண்ட பேஸ்புக்?

(NON) ஸ்பெயினில் 78 பேரின் உயிரை காவு வாங்கிய ரயில் விபத்திற்கு டிரைவர் பேஸ்புக்கில் அப்டேட் செய்தபடி ரயிலை ஓட்டியதே காரணம் என தெரிய வந்துள்ளது.
ஸ்பெயினின் வடக்குப் பகுதியில் உள்ள சாண்டியாகோ டி கம்போஸ்டெலா என்ற இடத்தில் கடந்த 25ம் திகதி ரயில் ஒன்று தடம் புரண்டதில் 78 பேர் பலியாயினர்.
80 கி.மீ. வேகத்தில் செல்ல வேண்டிய வளைவு பாதையில் 200 கி.மீ. வேகத்தில் ரயில் வந்ததே விபத்துக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.
மேலும் விபத்துக்குள்ளான ரயிலில் 2 ஓட்டுநர்கள் இருந்துள்ளனர். இதில் பிரான்சிஸ்கோ ஜோஸ் கர்சான் அமோ(வயது 52) என்பவர் ரயிலை ஓட்டிய போது தான் விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில், தற்போது கர்சான் கவனக்குறைவாக

Saturday, March 31, 2012

வீடியோ ஈமெயில்

வீடியோவை இமெயில் உங்களது நண்பர்களுக்கு அனுப்பிட . . .
 
நீங்கள் சொல்ல நினைக்கும் தகவலை வீடியோ வடிவில் பதிவுசெய்து மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு விருப்பமான நபர்களுக்கு அனுப்பலாம்.

இதற்கு உங்கள் கணணியில் வெப் கமெரா வச தி இருந்தால் மட்டுமே போது மானது. ஆனால் குறைந்தது 60 வினாடிகள் மட்டுமே பேசமுடி யும். (இந்த www.vsnap.com லிங்கை கிளிக் செய்து அதில் உங்களது வீடியோ தொகுப்பி னை பதிவுசெய்து கொள்ளுங்க ள்) இவ்வாறு வீடியோ வடிவில் நண்பர்களை தொடர்பு கொள்வது புதுமையாக இருப்பதுடன், நேரில் சந்திப்பதுபோன்ற ஒருநினை வை ஏற்படுத்தும்.

இந்த சேவையில் உள்ள மற்றும் ஒரு சிறப்பம்சம் மின்னஞ்சல் போன் றே, இதிலும் கோப்புகளை இணைத்து அனுப்பலாம். ஆகையால் நாம் அனுப்பும் கோப்புகளுக்கான அறிமுக உரை அல்லது விளக்க உரையாக வீடியோ மின்னஞ்சலை பயன்படுத்திக் கொள்ளலாம். இத ன் மூலம் இணைப்புகளின் சாரம்சத்தை எளிதாக புரிய வைக்கலாம்.

Monday, January 16, 2012

கூகிளின் மற்றொரு சாதனை.

பள்ளி மாணவர்களுக்கான யூடியூப் சேனல்.
முன்பெல்லாம் பள்ளிகள்/கல்லூரிகளில் எதேனும் கட்டுரை எழுதி வரச்சொன்னால் மாணவர்கள் நூலகத்தில் தேடி குறிப்பெடுப்பார்கள். இல்லையெனில் பக்கத்திலிருக்கும் அறிவான நபர்களிடம் பொறுப்பைக் கொடுத்து உதவி கேட்பார்கள். இன்றைய தொழில்நுட்ப உலகில் இதெல்லாம் மறந்து எதாவது ஒரு விசயம் தெரியலையா கூகிள் போப்பா என்று சொல்லுமளவுக்கு வந்து விட்டது. 
இணையத்தில் நல்ல விசய்ங்களோடு கெட்ட விசயங்களும் இணைந்தே தான் இருக்கின்றன. இணையத்தில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி சார்ந்த வீடியோக்களை பார்ப்பதன் மூலம் குறிப்பிட்ட ஒன்றை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். கூகிள் தனது யூடியுப் சேவையில் பள்ளி மாணவர்களுக்காக ஒரு சேனல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
Youtube for Schools என்ற இந்தப் பிரிவின் மூலம் பள்ளி மாணவர்கள் கல்வி சார்ந்த வீடியோக்களை பார்த்து பயன்பெற முடியும். இதற்கு பள்ளி முதல்வர்கள் பள்ளிகளுக்கான கூகிள் கணக்கொன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தங்கள் பள்ளியின் பாடம் சம்பந்தப்பட்ட வீடியோக்களைத் தரவேற்றிக் கொள்ளலாம். யூடியுபில் ஏற்கனவே Youtube Education என்ற சேனலில் பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் பல கல்வி நிறுவனங்களால் தரவேற்றப்பட்டுள்ளன. இவைகளின் மூலம் கணிதம், மொழிகள், வரலாறு, அறிவியல் சோதனைகள் போன்றவற்றை மாணவர்கள் கற்றுக் கொள்ளலாம். (educational videos, maths help, learn foreign languages, university lectures, science experiments and world events)
பள்ளி முதல்வர்கள்/ஆசிரியர்கள் யுடியூபில் எந்த வீடியோவினையும் பார்க்க முடியும். ஆனால் மாணவர்களுக்கு Youtube Education சேனலில் உள்ள வீடியோக்களும் தங்கள் பள்ளி சம்பந்தப்பட்ட வீடியோக்களையும் மட்டுமே பார்க்க முடியும். மாணவர்கள் பார்க்கும் போது வீடியோக்களின் கீழே எந்த கருத்துரையும் வராது. Related Videos என்பதும் வராது. தேடினாலும் பாடங்கள் குறித்தான வீடியோக்கள் மட்டுமே வரும். இதனால் வேறு எதேனும் வீடியோக்களைப் பார்த்து மாணவர்களின் கவனம் சிதறாது.
பள்ளி ஆசிரியர்களுக்கென்று Youtube for Teachers என்ற சேனல் இருக்கிறது. இதில் மற்ற ஆசிரியர்களின் பாட வீடியோக்களை நம் பள்ளி ஆசிரியர்கள் பார்த்து அறிவை மேம்படுத்தலாம். மேலும் பள்ளியின் மூலம் தரவேற்றப்படும் வீடியோக்களை தங்கள் பள்ளி மட்டுமே பார்க்க முடியுமாறு அமைக்க முடியும். மாணவர்களுக்கு பள்ளியிலேயே கல்வி சார்ந்த வீடியோக்களை மட்டும் காண்பித்து அறிவைப் பெருக்கும் யூடியுபின் இந்த சேவை பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
 

Thursday, June 30, 2011

பேஸ் புக் பார்வையாளர்களே ! பேரதிர்ச்சிச் செய்தி.

பேஸ் புக் பார்வையாளர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கக் கூடிய செய்தி இது. பேஸ் புக், ட்விட்டர், லிங்ட்ஸ் இன் போன்ற சமூக இணைப்பு இணையத் தளங்களின் பார்வையாளர்களின் போட்டோக்கள் பயங்கரமாக பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்படக் கூடிய அதிக பட்ச ஆபத்து உருவாகி உள்ளது.
ஆம், புதிதாக வந்து உள்ளது http://www.orgasmprofile.com என்கிற இணையத் தளம். இந்த இணையம் மூலமாக எவருடைய போட்டோவையும் செக்ஸ் வீடியோவாக மாற்றலாம். ஒலித் தொழிநுட்பமும் மிகவும்நேர்த்தியானது.
எல்லாமே ஒரு ஏமாற்று வித்தைதான். ஆனால் மிகவும் நுட்பமானது. எவருடைய புகைப்படத்தையும் மேற்சொன்ன இணையத்தில் பதிவேற்றம் செய்ய முடியும். புகைப்படத்தில் தோன்றி இருந்தவர் 18 வயதுக்கு மேற்பட்டவர் என்று பிரகடனப்படுத்துதல் வேண்டும். புகைப்படத்தில் தோன்றி இருந்தவரின் பால் அடையாளத்தை கட்டத்தில் குறிப்பிடுதல் வேண்டும். அவ்வளவுதான்.
புகைப்படத்தில் தோன்றி இருந்தவர் பாலியல் உச்சப் பரவச நிலையில் உள்ளார் என்று காட்டுகின்ற வீடியோ தயாராகி விடும். வீடியோவை எவருடனும் பகிர்ந்து கொள்ளலாம்.