Showing posts with label Software. Show all posts
Showing posts with label Software. Show all posts

Sunday, April 15, 2012

இலவசம் - WinX DVD Copy Pro

ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி Digiarty நிறுவனம் DVD Copy Pro என்ற மென்பொருளை முற்றிலும் இலவசமாக வாசகர்களுக்கு வழங்குகிறது. வழக்கமாக இந்த மென்பொருளின் விலை ரூபாய் 2500 ஆகும். ஆனால் வரும் 16 Apr தேதிக்கு முன்னர் இந்த மென்பொருளை இலவசமாக டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். இந்த மென்பொருள் மூலம் DVD இருந்து DVD காப்பி செய்து கொள்ளலாம். DVD இல இருந்து ஆடியோ மற்றும் வீடியோக்களை தனித்தனியாக பிரித்தெடுக்கலாம். DVD யை ISO இமேஜாக மாற்றலாம். மற்றும் பல வசதிகள் உள்ள இந்த மென்பொருளை இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே தொடருங்கள்.
முதலில் இந்த லிங்கில் www.winxdvd.com/giveaway சென்று சலுகை தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள். அதில் சில முட்டைகள் காணப்படும் அதில் ஒவ்வொரு முட்டையாக கிளிக் செய்து சரியான  முட்டையில் மறைந்து இருக்கும் DVD Copy Pro மென்பொருளை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
 டவுன்லோட் செய்தவுடன் அதில் உள்ள லைசன்ஸ் கீயை காப்பி செய்து இதனை இன்ஸ்டால் செய்யும் பொழுது கொடுத்து ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள்.

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

Wednesday, March 28, 2012

அடோப் போட்டோஷாப்  இலவசமாக.....


அடோப் போட்டோஷாப் மென்பொருளின் புதிய பதிப்பு இலவசமாக டவுன்லோட் செய்ய - Photoshop CS6 beta

அடோப் நிறுவனத்தின் போட்டோஷாப் மென்பொருளை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. இணையத்திற்கு எப்படி கூகுளோ அது போல போட்டோ எடிட்டிங் சாப்ட்வேர் என்றால் போட்டோஷாப் தான் அதற்க்கு ஈடான மென்பொருள் இல்லை. உலகம் முழுவதும் போட்டோஷாப் மென்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி. வெகுநாட்களாக எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த மென்பொருளின் புதிய பதிப்பான CS6 Beta வெளியிட்டு உள்ளனர். இந்த புதிய பதிப்பை அனைவரும் இலவசமாக உபயோகிக்கலாம் என்பது மேலும் ஒரு இனிப்பான செய்தி.

இலவசமாக டவுன்லோட் செய்ய:

முதலில் கீழே உள்ள லிங்கில் சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். இந்த டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யும் பொழுது I want to try Adobe Photoshop CS6 for a limited time என்பதை கொடுத்து உள்ளே சென்றால் சீரியல் எண் கேட்காது இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம்.

மற்றும் இந்த இலவச பதிப்பை 7 நாட்களுக்குள் ஆக்டிவேட் செய்ய வேண்டும்.  ஆக்டிவேட் செய்ய அடோப் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து இலவசமாக ஆன்லைனில் ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள். இதற்க்கு முன் Adobe ID இல்லை என்றால் புதிதாக உருவாக்கி கொண்டு ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள். 7 நாட்களுக்குள் ஆக்டிவேட் செய்ய வில்லை என்றால் இந்த மென்பொருள் உங்கள் கணினியில் வேலை செய்யாது.

இதிலுள்ள வசதிகளை பற்றிய அறிய கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.

Direct Download Links: 


Download Photoshop CS6 beta for Mac (DMG, 984 MB)

Download Photoshop CS6 beta for Windows (ZIP, 1.7 GB)


போட்டோஷாப் மென்பொருள் இன்ஸ்டால் செய்ய தேவையான
Minimum System Requirements  அறிய இந்து செல்லவும்.

From:  Lanka Now

Wednesday, March 21, 2012

போலி Memory Card, USB Flash drive வை கண்டுபிடிக்க இலவச மென்பொருள்..!!

 வணிகமயமாகிவிட்ட இந்த உலகில் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப பொருட்களின் உற்பத்தி என்பது நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. நுகர்வோர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே இருப்பதால், பொருட்களை உற்பத்திசெய்யும் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது..

இந்த வகையில் எலட்க்ரானிக் டிஜிட்டல் (Electronic Digital) சாதனங்களின் வரவும் வணிக சந்தையில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இத்தகைய சாதனங்கள் தற்காலத்தில் குப்பைப் போல குவிந்துகிடக்கிறது.

உதாரணமாக கணினி சார்ந்த பொருட்கள், யு.எஸ்.பி டிரைவ்(USB Flash Drive), மெமரி கார்ட் (Memory Card), செல்போன்கள்(Cell phones) போன்றவைகள் ஏகமாக உற்பத்தி ஆகி வருகின்றன.

இவைகள் நாளும் ஒரு புது தொழில்நுட்பத்துடன் வெளிவந்துகொண்டிருக்கிறது.

அதாவது இன்று வாங்கிய புது மாடல்(New Model), அடுத்த நாளே அது பழைய மாடல்(old Model) என்று சொல்லும் அளவுக்கு தொழில்நுட்பம் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே உள்ளது.

நுகர்வோர்களின் தேவையைக் கருதி இத்தகைய எலக்ட்ரானிக்(Electronic)- டிஜிட்டல் சாதனங்கள்(Digital Device) ஒரிஜினலைப் போன்றே தோற்றத்தில் உள்ள பல போலிகளையும் சந்தையில் வெளியிட்டு விற்றுக்கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய போலிகளை சந்தையில் விற்பனைக்கு கொண்டுவருவது சீனத் தயாரிப்புகள்தான்.

E Bay என்று சொல்லக்கூடிய ஆன்லைன் வர்த்தகத்தில்கூட இத்தகைய போலிகள் மலிந்து கொட்டிக்கிடக்கின்றன.

இத்தகைய போலி பிளாஸ் டிரைவ்கள்(duplicate flash drive), யு.எஸ்.பி(USB_pendrive), மெமரி கார்டுகள்(Memory Card) அனைத்தும் சோனி(Sony),கிங்ஸ்டன்(Kingston) போன்ற பிரபல நிறுவனங்களில் பெயர்களிலேயே கிடைப்பதால் நம்மவர்களும் இதை உண்மையானதென எண்ணி வாங்கிவிடுகின்றனர்.

குறிப்பாக சொல்லவேண்டுமானால், நாம் அடிக்கடிப் பயன்படுத்தும் USB Drive, Memory Card போன்றவற்றைக் கூறலாம்.

குறைந்த விலைக்கே 256GB, 512GB, 640GB என கிடைப்பதால்தான் இதை பலரும் வாங்கிவிடுகின்றனர்.

ஆனால் உண்மையான ஸ்டோரேஜ் அவ்வளவு இருக்காது. ஒரு 4GB அல்லது 6GB வரைதான் இருக்கும். அதனால் குறிப்பிட அளவிற்கு மேல் கோப்புகளை அதில் சேமிக்கும்போது அதனுடைய செயல்படும் திறன் அப்படியே ஸ்தம்பித்துப் போகும் அல்லது அத்தோடு அதனுடைய வாழ்நாள் முடிந்துவிடும்.

உதாரணமாக 256GB கொள்ளவு கொண்ட ஒரு யூ.எஸ்.பி உங்களிடம் இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். கணினியில் நிறுவிப் பார்க்கும்போது அதனுடைய கொள்ளவு 256GB என்று காட்டும். 

ஆனால் அது உண்மையல்ல.அவ்வாறு கொள்ளளவை மாற்றிக் காட்டுவதற்கென (அதவாது 256GB) என காட்ட அதில் ஒரு புரோகிராம் பதிந்து வைக்கப்பட்டிருக்கும். - பொய்யான தகவல்களை நமக்குக் காட்டும்.

Flash Driver, Memoy Card போலியானதா என கண்டுப்பிடிக்க:

இதற்கென வடிவமைக்கப்பட்ட மென்பொருளைக் கொண்டு நாம் எளிதாக இத்தகைய போலிகளை கண்டுபிடிக்கலாம்.

மென்பொருளின் பெயர்: H2testw

மென்பொருள் தரவிறக்க சுட்டி:


இம்மொன்பொருளைப் பற்றிய மேலதிக விவரங்கள் காண சுட்டி:


இம்மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.

பிறகு உங்கள் USB Flash Drive , Memory card போன்வைகளை முழுவதுமாக எந்த கோப்புகளில்லாமல் செய்து கணினியில் இணைத்துவிட்டு, மென்பொருளில் டார்கெட்டாக மெமரி கார்ட் அல்லது பிளாஸ் டிரைவ்வை கொடுங்கள்.

சிறிய நேர சோதனைக்குப் பிறகு உங்களுடைய பிளாஷ் டிரைவ் அல்லது மெமரிகார்ட் போலியானதா.. அல்லது உண்மையானதா.. உண்மையான கொள்ளவு எவ்வளவு என்பதை துல்லியமாக காட்டிவிடும்.

சோதனையின் முடிவில் Test finished without errors என்று காட்டினால் உங்களது பிளாஷ் டிரைவ், Memory card உண்மையானது என கண்டுகொள்ளலாம்.

The media is likely to be defective என்ற செய்தி கிடைத்தால்...

நான் சொல்லவும் வேண்டுமா? என்ன? போலியானது என்பது உறுதியாகிவிடும். எனவே இத்தகை கணினி சார்ந்த சாதனங்களை வாங்கும்போது நன்றாக தெரிந்தவர்களிடம் வாங்குவது ஒன்றேதான் இத்தகைய பிரச்னைகளைத் தவிர்க்கும். பணமும் விரயமாகாது.

குறைவான விலையில் கிடைக்கிறதே என வாங்கிவிட்டு பிறகு அவதிக்குள்ளாவது நாம் தான். கவனம் நண்பர்களே..!! எச்சரிக்கையாக இருப்பது என்றுமே நம் கையில்தான் இருக்கிறது. போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்.

Monday, March 5, 2012

வித்தியாசமான மென்பொருள்


Code Files (.vb, .c, .cs, .java, .js, .php, .sql, .css, .aspx, .asp)
Web Pages (.htm, .html)
Photoshop Documents (.psd)
Images (.bmp, .gif, .jpg, .jpeg, .png, .tif, .tiff)
XML Files (.resx, .xml)
PowerPoint  Presentations (.ppt, .pptx, .pps)
Media (.avi, .flv, .mid, .mkv, .mp3, .mp4, .mpeg, .mpg, .mov, .wav, .wmv, .3gp, .flac)
Microsoft  Word Documents (.doc, .docx)
SRT Subtitles (.srt)
RAW Images (.arw, .cf2, .cr2, .crw, .dng, .erf, .mef, .mrw, .nef, .orf, .pef, .raf, .raw, .sr2, .x3f)
Icons (.ico)
Open XML Paper (.xps)
ML Paper (.xps)
Torrent (.torrent)
Flash Animation (.swf)
Archives (.7z, .gz, .jar, .rar, .tar, .tgz, .zip)
Rich Text Format (.rtf)
Text Files (.bat, .cfg, .ini, .log, .reg, .txt)
Apple Pages (.pages)
Microsoft Excel Documents (.xls, .xlsm, .xlsx)
Comma-Delimited (.csv)
Outlook Messages (.msg)
PDF Documents (.pdf)
vCard Files (.vcf)
EML Files (.eml)

 போன்ற 75 விதமான பைல் பார்மேட்களை திறந்திட உதவும் ஒரு வித்தியாசமான, மிகவும் பிரயோசனமுள்ள  மென்பொருள்.
கீழ் தரப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கி , இதனை தரவிறக்கிக் கொள்ளலாம். 

http://dl.installiq.com/download/downloadpop.aspx?shortname=freeopener&a=13193&f=FO-Main

Saturday, February 18, 2012

உங்களுக்கு தெரியுமா?

1.ATM card வச்சு இருக்கீங்களா?? 
24X7 Customer Helpline for ATM card holders
1800 11 22 11 - Toll Free Number (From BSNL/MTNL)
080-26599990 - (Through any Landline or Mobile)
For ATM related Services:
> ATM Card/PIN delivery status
> Lost Card/Card Blocking/Hotlisting
> Details of other value added services available – of State Bank ATMs
> State Bank ATM locations/addresses
> Guidance for Card usage at ATMs and Point of Sales.
2.உங்கள் InterNet History, Cookies, Saved Passwords ஐ ஒரே நேரத்தில் Delete செய்ய வேண்டுமா ??
Run---> inetcpl.cpl
இப்போது Browsing History  என்ற பகுதியை கிளிக் செய்து Delete கொடுக்கவும். அவ்ளோதான். இதை browsing centre களில் பயன்படுத்தலாம்.

3. Google URL Shortener எதற்கு??
Go...
இங்கு உங்கள் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யயயய  URL ஐ மிக சிறியதாக மாற்றிக் கொள்ளலாம். இதனை எளிதாக பகிர்ந்து கொள்ளலாம். இதில் கடைசி 4 letters மட்டுமே மாறும் என்பதால் SMS இல் கூட பகிர்ந்து கொள்ளலாம்.

4. Hardware Helping Sites வேண்டுமா ??

5. உங்கள் போன் தண்ணில விழுந்துடுச்சா??
உங்கள் போன் தண்ணில விழுந்துடுச்சா??. கவலை வேண்டாம். நீங்கள் அதை உடனே ON செய்யாமல் இருந்தால் போதும். உங்கள் போனில் இருந்து பாட்டரி, சிம்கார்ட் ,மெமரி கார்டு ஆகியவற்றை முதலில் கழட்டி விடவும். உங்கள் வீட்டில் Vaccum cleaner இருந்தால்  அதனை Sucksion mode இல் வைத்து இப்போது உங்கள் போனை காட்டவும் இதனால் தண்ணீர் ஆவியாகி விடும்.

Vacuum cleaner  இல்லை என்றால் கவலை வேண்டாம். உங்கள் வீட்டில் அரிசி வைத்து இருக்கும் பாத்திரம் இருந்தால் அதில் உங்கள் போனை வைத்து போன் தெரியாதபடி முழுவதுமாக மூடி விடவும். இதனால் தண்ணீர் முழுவதுமாக அரிசியால் ஈர்க்கப்பட்டு விடும். ஆனால் இதற்கு பொறுமை மிக அவசியம்.(குறைந்த பட்சம் இரண்டு மணி நேரம் ). அத்துடன் ஏதேனும் சூடான கருவி கொண்டு கூட பாதுகாப்பாக நீரை எடுக்க முயற்சி செய்யலாம் ( அடுப்படி?? ). பின்னர் ஒரு கடையில் கொடுத்து பார்ப்பது நல்லது.

6.To know your IP address??
www.knowmyip.com
www.whatismyip.com
www.ipaddresslocation.com


7. Toll Free Numbers for computer Problems solving??
TOLL FREE NUMBERS For any PC problems
AMD-18OO4256664
Dell-18OO444O26
HCL-18OO18O8O8O
IBM-18OO443333
Microsoft-18OO1111OO

8. keyboard shortcut keys எல்லாம் தெரிந்து கொள்ள எங்கே??
Computer keyboard shortcut keys
It has List of all Computer
shortcut keys 4 applications.

9. Online இல் you tube  வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி??
youtube  வீடியோ URL ஐ இங்கு paste செய்து Download செய்யலாம்.
10. தேவை இல்லாத program start ஆகுவதை தடுப்பது எப்படி??
Run--> msconfig
Start up என்ற  பகுதியில் தேவை இல்லாத Program களை கிளிக் செய்துள்ளதை unmark செய்து ok கொடுக்கவும். அவை ஸ்டார்ட் ஆவதை நீங்கள் Computer On ஆகும் போது தடுத்து விட முடியும்.

நன்றி:கற்போம் தளம்

Wednesday, February 15, 2012

அழித்த, அழிந்த  பைல்களை மீட்க.......

  Format செய்த அல்லது அழிந்த, அழித்த Hard disc, Usb, Memory Card களின் பைல்களை 100% மீட்டெடுக்க இலவச மென்பொருள்.  கீழுள்ள இணைப்பை சொடுக்கி, வரும் பக்கத்தில் Choose your download method என்பதில் Free Download என்பதை தெரிவு செய்து, வரும் பெட்டி-பாக்ஸின் மேலுள்ள எழுத்துக்களை டைப் செய்து கீழே டவ்ன்லோட் என்பதை க்ளிக் செய்யவும். பின் இன்ஸ்டால் செய்து நிறுவி அழித்த, அழிந்த  பைல்களை மீட்க  முடியும்.
மென்பொருள் தரவிறக்க.......
இங்கே அழுத்தவும்.
http://uploaded.to/file/nyuqwe1o

Monday, January 23, 2012

பில்கேட்ஸ் அதிர்ச்சி

மைக்ரோசாப்ட் இளம் சாதனையாளர் பாக். சிறுமி சாவு
 உலகின் இளம் மைக்ரோசாப்ட் சாதனையாளர் என்ற பெயர் பெற்ற பாகிஸ்தான் சிறுமி உடல்நலக் குறைவால் பரிதாபமாக இறந்தாள்.  இதை அறிந்து மைக்ரோசாப்ட் தலைவர் பில்கேட்ஸ் அதிர்ச்சி அடைந்துள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த சிறுமி அர்பா கரீம் ரன்தவா. வயது 16. தனது 9 வயதிலேயே சாப்ட்வேர் துறையில் அபாரமான அறிவுடன் திகழ்ந்தாள். இதையடுத்து உலகின் பிரபலமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இளம் சாதனையாளர் விருது இவருக்கு கடந்த 2004ம் ஆண்டு வழங்கப்பட்டது. தொடர்ந்து சாப்ட்வேர் துறையில் ஈடுபாடு காட்டி வந்த அர்பாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.  கடந்த ஆண்டு டிசம்பர் 22ம் தேதி சிறுமிக்கு வலிப்பு நோய் வந்ததால், உடனடியாக லாகூரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். 
இதை அறிந்த மைக்ரோசாப்ட் தலைவர் பில்கேட்ஸ், சிகிச்சைக்கான செலவு முழுவதையும் தான் ஏற்றுக் கொள்வதாகவும், அமெரிக்காவில் மேல் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதாகவும் கூறினார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை அர்பா பரிதாபமாக உயிரிழந்தாள். இதுகுறித்து சிறுமியின் தந்தை அம்ஜத் கரீம் கூறுகையில், என் மகள் இறந்த செய்தி கேட்டு பில்கேட்ஸ் அதிர்ச்சி அடைந்துவிட்டார். அர்பானின் திறனை உலகறிய செய்தவர் பில்கேட்ஸ். அவள் இப்போது மறைந்துவிட்டாலும், உலகில் உள்ளவர்களின் அன்பு அவளுக்கு கிடைத்தது. அதற்காக பில்கேட்சுக்கு நன்றி தெரிவித்து கொண்டேன் என்றார்

Friday, November 4, 2011

ஹஜ் பயணிகளுக்காக சிறப்பு வசதிகளுடன் பிளாக்பெர்ரி


ஹஜ் பயணிகளுக்கு மிகவும் உபயோகமான தகவல்களைக் கொண்டதாக பிளாக்பெர்ரி (Blackberry) மொபைல் போன் வந்துள்ளது. புனிதப் பயணத்தின் நோக்கத்தை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு உபயோகமான விஷயங்கள் பிளாக்பெர்ரி மொபைலில் இடம்பெற்றுள்ளன.
இதற்கான சாஃப்ட்வேரை பிளாக்பெர்ரி நிறுவனத்தின் துணை நிறுவனமான அஸ்கேட்ஸ் உருவாக்கியுள்ளது. பிளாக்பெர்ரி பயன்படுத்துவோர் இந்த சாஃப்ட்வேரை  ஆப்வேர்ல்ட் இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
இந்த சாஃப்ட்வேர் அரபு, ஆங்கிலம், துருக்கி, பார்சி, உருது மற்றும் பஹசா உள்ளிட்ட 6 மொழிகளில் செயல்படும். ஹஜ் புனித யாத்திரைக்கான வழி உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ளலாம். வீடியோ காட்சிகளும் இதில் உள்ளன. இஹ்ரம் முதல் உம்ரா வரை அனைத்து புனித யாத்திரை சார்ந்த விஷயங்களும் இதில் விளக்கமாக உள்ளது. 
பட விளக்கம், படக் காட்சிகள் மற்றும் வீடியோ காட்சிகளாக இவை இடம்பெற்றுள்ளன.

Wednesday, March 23, 2011

உங்கள் மொபைல் போன்களுக்கு "Snaptu"

எந்த வித மொபைல் போன்களுக்கும் பொருந்தும் வகையில் இலவசமாகவும், இலகுவாகவும், விரைவாகவும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது Snaptu.
இதில் பேஷ்புக், டிவிட்டர், உடனடி கிரிக்கெட் தகவல்கள், செய்தி தொகுப்புக்கள், காலநிலை தகவல்கள் என்பவற்றுடன், பிகாஸா வெப் அல்பம், உடனடி நிகழ்வுகளின் படங்கள் என ஏராளாமான பயனுள்ள தகவல்களை உள்ளக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
இதனை  தரவிறக்க...

Friday, May 28, 2010

மைக்ரோசொப்டின் புதிய மென்பொருள்


எப்பொழுதும் புதியதாக யோசிக்கும் மைக்ரோசொப்ட் நிறுவனம் மீண்டும் தன்னை நிருபித்துள்ளது. மென்பொருள் உலகின் சுல்தான் ஆன மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஒரு அறிய படைப்பு இது.

நம் அனைவருக்கும் கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவது என்றால் கொள்ளை விருப்பம்தானே. அது போல நாம் ஒரு கம்ப்யூட்டர் கேம்சை உருவாக்கினால், அப்படிதான் யோசித்தது மைக்ரோசாப்ட். அதன் விளைவாக அனைவரும் கம்ப்யூட்டர் கேம்ஸ் உருவாக்கும் வகையில் ஒரு மென்பொருளை கண்டுபிடித்துள்ளது. அதன் பெயர் கோடு (KODU)

இதனை பயன்படுத்த எந்த ஒரு கம்ப்யூட்டர் மொழியும் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அனைத்தும் மிக எளிய வகையில் செய்து விடலாம். இதை பயன்படுத்தி ஒரு குழந்தை கூட ஓர் விளையாட்டை உருவாக்கிவிடும். மைக்ரோசொப்டின் இந்த முயற்சி கண்டிப்பாக பாராட்டத்தக்கது.

கம்ப்யூட்டர் அனைவருக்கும் உரிய சாதனமாகும் மைக்ரோசொப்டின் முயற்சியில் இது ஒரு மைல்கல். இந்த சாப்ட்வேர்ஐ பயன்படுத்தி மைக்ரோசொப்டின் Xbox எனப்படும் சாதனத்துக்கும் விளையாட்டுக்களை உருவாக்கலாம்.

நன்றி,www.z9tech.com

மென்பொருள் தரவிறக்கம் செய்ய