Showing posts with label Guinness. Show all posts
Showing posts with label Guinness. Show all posts

Friday, June 14, 2013

உலகின் மிகவும் வயதான மனிதராக இலங்கையர்

(JM) உலகின் மிகவும் வயதான மனிதராக இலங்கையைச் சேர்ந்த சேர்ந்த 116 வயது மூதாட்டியை கின்னஸ் சாதனைத் பதிவேடு அறிவித்துள்ளது.  உலகின் வயதான மனிதராக அறிவிக்கப்பட்டிருந்த ஜப்பானைச் சேர்ந்த, ஜிரோமோன் கிமுரா கடந்த 12ம் நாள் மரணமானதையடுத்தே, இலங்கையைச்  சேர்ந்த அப்புலானந்த உக்கு உலகின் மூத்த மனிதராக அறிவிக்கப்பட்டுள்ளார்.   
 
அப்புலாந்த உக்கு என்ற இந்த மூதாட்டி கேகாலை மாவட்டத்தில் உள்ள மாவனல்ல பிரதேசத்தில் உள்ள புலத்கமுவ என்ற இடத்தில் வசித்து வருகிறார்.    இவர் 1897ஆம் ஆண்டு ஓகஸ்ட் 22 ஆம் திகதி பிறந்தவர். 
இவரது தேசிய அடையாள அட்டை இலக்கம் - 977960037V ஆகும்.   இவருக்கு எட்டு பிள்ளைகளும், 80இற்கும் அதிகமான பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.    இவரையடுத்து உலகின் அடுத்த வயதான நபராக ஜப்பானின் மிசாகா ஒகாவா இருந்து வருகிறார், அவர் 1898இல் பிறந்தவர். 

Friday, March 15, 2013

ஒற்றை விரலில் உலகை திரும்பிப் பார்க்க வைத்த மனிதர்-வீடியோ

கின்னஸில் இடம்பிடித்த உலகின் வயதான பாட்டி!

 ஜப்பான் நாட்டில் 100 வயதை கடந்தவர்கள் 50 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளனர். அந்நாட்டின், ஒசாகா நகரில் வாழும் மிசாகா ஒகாவா 114 உலகிலேயே அதிக வயதான பெண் என கின்னஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த 1898ம் ஆண்டு மார்ச் 5ம் திகதி பிறந்த மிசாகா, ஒசாகா நகரின் மருத்துவனை ஒன்றின் பராமரிப்பில் உள்ளார். இன்னும் ஒரு வாரத்தில் 115வது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் மிசாகா, உடல்நலத்தில் காட்டிய அக்கறையே தனக்கு நீண்ட ஆயுளை தந்துள்ளதாக தெரிவிக்கிறார்.

ஜப்பானை சேர்ந்த 115 வயது ஜிரோமோன் கிமுரா , உலகிலேயே அதிக வயதான தாத்தா என்பது குறிப்பிடத்தக்கது.




Sunday, April 15, 2012

உலக சாதனை மாணவன்

உத்தர பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்த முகமது இக்ரம் - நூர் ஹாஷ்மி தம்பதியின் மகன் முகமது ஓமர், 17. இவன் இங்குள்ள செயின்ட் அலோஷியஸ் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறான். இவன், தன் சாதனை குறித்து கூறியதாவது:
நான் பள்ளிக்குத் தவறாமல் செல்வேன். இதை நான் வேண்டுமென்றே செய்வதில்லை. சொந்த விருப்பம் மற்றும் ஆர்வத்தின் பேரில் தான் செய்து வருகிறேன். ஒரு நாள் எங்கள் வீடு இருக்கும் பகுதியை மழை நீர் சூழ்ந்த போதும், பள்ளிக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு சென்றேன்.
உடல் நலக்குறைவு ஏற்பட்டாலும், மாத்திரையை விழுங்கி விட்டு, பள்ளிக்குச் சென்று விடுவேன். மழைக் காலத்தில் ஒரு நாள், என் வீட்டைச் சுற்றி முழங்கால் அளவுக்கு தண்ணீர் நின்றதால், என் தந்தையின் ஸ்கூட்டர் பழுதாகி விட்டது. ஆனாலும், விடவில்லை. தொழிலாளி ஒருவரிடம் சைக்கிளை வாங்கிக் கொண்டு பள்ளிக்குச் சென்றேன்.
நான், நாள் தவறாமல் பள்ளி சென்று வருவதற்கு என் தாயும் ஒரு காரணம். அவர் தான் என்னை தூண்டி விட்டு, எந்தத் தருணத்திலும் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கக்கூடாது என, அடிக்கடி அறிவுரை கூறுவார். என் தம்பி தற்போது பத்தாவது படித்து வருகிறான். அவனும் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பள்ளிக்குச் சென்று வருகிறான்.
நான் கிரிக்கெட் ரசிகன். பாட்டுக் கேட்பதிலும் ஆர்வம் உண்டு. தொடர்ந்து 14 ஆண்டுகளாக, ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பள்ளி சென்றதால், கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளேன். எனது இந்தச் சாதனைக்கு கடவுளும் துணையாக இருந்துள்ளார். நான் இப்படி அர்ப்பணிப்பு உணர்வுடன் நடந்து கொள்வதைப் பார்த்து, எனது ஆசிரியர்களும் என்னைப் பாராட்டுவர். இவ்வாறு ஒமர் கூறினார்.
ஒமரின் ஆசிரியரான பிரதீப் குப்தா கூறுகையில், "கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற எப்படி விண்ணப்பிப்பது என, ஒமருக்கு நான்தான் சொல்லிக் கொடுத்தேன். இளம் வயதிலேயே அவர் சாதித்துள்ளான். தொடர்ந்து 14 ஆண்டுகளாக, விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வருவது சாதனை இல்லையா? 100 சதவீத வருகைப் பதிவுக்காக ஒமருக்கு சான்றிதழ் வழங்கவும் பள்ளி நிர்வாகம் தீர்மானித்துள்ளது. அந்தச் சான்றிதழும் கின்னஸ் சாதனை புத்தக அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும், என்றார்.

Saturday, March 17, 2012

கின்னஸ் சாதனை படைத்த நபி(ஸல்) அவர்களின் வாழ்வைக்கூறும் உலகின் மிகப்பெரிய புத்தகம்

 நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையைப்பற்றிக்கூறும் புத்தகம்,உலகின் மிகப்பெரிய புத்தகம் என்ற கின்னஸ் சாதiனையை பெற்றுள்ளது.
உலகின் மிகப்பெரிய மற்றும் மிகப்பாரமான புத்தகமாக இது காணப்படுவதுடன், இப்புத்தகத்தை உருவாக்குவதற்கு 11 மில்லியன் திர்ஹம்கள் செலவிடப்பட்டுள்ளது.
உலகில் அதிகளவு செலவில் உருவாக்கப்பட்ட புத்தமாகவும்,நபி(ஸல்) அவர்களின் வாழ்வைப்பற்றிக்கூறும் இப்புத்தகம் விளங்குகின்றது.துபாயின் பிரதி ஆட்சியாளாரும், ஐக்கிய அரபு இராட்சியத்தின் நிதி அமைச்சருமான செய்க் ஹம்தான் பின் அல்மக்தூமால் இப்புத்தகமானது வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
இவ்வைபவத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் உயர் அதிகாரிகள், ராஜதந்திரிகள், அறிஞர்கள் மற்றும் வர்த்தகர்கள் போன்ற பலர் கலந்து கொண்டனர்.
இஸ்லாத்தின் கடைசி நபியாக முஹம்மத்(ஸல்) அவர்கள் காணப்படுவதுடன், சர்வதேச மற்றும் மனிதாபிமான ரீதியில் மிகவும் செல்வாக்குவாக்குச் செலுத்தியவர்களாகவும் நபி(ஸல்) அவர்கள் விளங்குகின்றார். நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையை முன்னிலைப் படுத்துவதன் மூலம் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இச்செயல்திட்டத்தின் நோக்கமாகும் என இப்புத்தகத்தின் வெளியீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நபி(ஸல்) அவர்களின் வாழ்வைப் பற்றிக்கூறும் இப்புத்தகமானது 420 பக்கங்ளைக்கொண்டதுடன் ஆயிரம் கிலோகிராம் நிறையுடையது.
இது 5 மீற்றர் நீளமும்,4 மீற்றர் அகலமும் உடையது என்பது குறிப்பிடத்தக்கது.
நபி(ஸல்) அவர்களின் முன்மாதிரியான வாழ்வைப் பற்றி சமூகம் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இப்புத்தகத்தின் 50,000 சாதாரண பிரதிகளை தனது சொந்தச்செலவில் வெளியிடுவதற்கு செய்க் ஹம்தான் உத்தரவிட்டுள்ளார்.




 
 

Wednesday, April 27, 2011

உலக சாதனை கட்டடக் கலை அதிசயங்கள்.

உலகின் மிகப் பெரிய உள்ளக நீச்சல் தடாகம் - கனடா.
World Water Park ….. Edmonton , Albert , Canada-5 Acrs.
உலகின் மிகப்பெரிய அலுவலகக் கட்டடம் -சிக்காகோ.


Chicago Merchandise Mart….. Illinois , USA
உலகின் மிகப்பெரிய கடைத்தொகுதி.
South China Mall, Dongguan, China ………892,000 meter-square

உலகின் பரபரப்பு மிக்க விமான நிலையம் - நியூ யோர்க்.

J.F.K International Airport , New York-USA
உலகின்  மிக அகலமான பாலம் - ஆஸ்திரேலியா .
Sydney harbor bridge, Australia ……..16 lanes of car traffic…..8 lanes in the upper floor, 8 in the lower floor
உலகின் மிக நீளமான பாலம் - சீனா.
Donghai Bridge. China 32.5 Km
உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்.
MS Freedom of the Seas……4300 passenger Capacity Inside
உலகின் மிகப்பெரிய விமானம் - Airbus
Airbus A380………..555 Passengers
உலகின் மிகப்பெரிய பஸ் வண்டி.
Neoplan Jumbo - cruiser……..2 in 1 bus….double deck bus……170 passenger capacity
உலகின் மிக உயரமான சிலை - பிரேசில்.
CHRIST THE REDEEMER STATUE…..RIO.D.J- BRAZIL
 உலகின் மிக உயர்ந்த கட்டடம் - துபாய்.
Burj Dubai……….900 M
உலகின் மிகப்பெரிய அரண்மனை -ரோமானியா.
Palace of the Parliament-Bucharest,Romania ………. more than 500 bedrooms, 55 kitchens,120 sitting rooms
 உலகின் மிகப்பெரிய விளையாட்டரங்கம் - பிரேசில்.
MARACANA STADIUM - RIO D.J-BRAZIL. CAPACITY…199,000Sq
 உலகின் மிகவும் பெறுமதி வாய்ந்த விளையாட்டரங்கம் - இங்கிலாந்து.
New WEMBLEY STADIUM, London ….90, 000 capacities…………….cost…..$1.6 billion
உலகின் மிகப்பெரிய தோண்டும் கருவி - ஜெர்மனி.
Built by KRUPP of Germany………….45,500 tons……95 meters high……215 meters long
 உலகின் மிகப்பெரிய பள்ளிவாயல் - பாகிஸ்தான்.
Shah Feisal mosque….. Islamabad …… Pakistan
Inside hall capacity ….35, 000 outside overflow capacity…… 150,000
 உலகின் மிகப்பெரிய உணவகம் -லாஸ் வேகாஸ்.
MGM Grand Hotel….Las Vegas….6, 276 rooms
  உலகின் மிகப்பெரறுமதி வாய்ந்த உணவகம் -துபாய்.
Burj Al Arab Hotel, Dubai ….only 7 Star Hotel in the World
Cheapest room…$1000 per night.…..Royal suit…$28,000 per night
உலகின் மிகப்பெரிய கிறிஸ்தவ ஆலயம் - நைஜீரியா.
Winners` C hapel…….Canaanland ………. Otta…..… Nigeria
Inside Sitting Capacity……50,000 Outside Overflow Capacity……250,000
 உலகின் மிகப்பெரிய மாதா கோவில் -ஐவொரி கோஸ்ட்.
Basilica of our Lady of Peace, Yamoussoukro o.
Inside sitting capacity………..18,000 Outside overflow capacity….100, 000

Saturday, March 5, 2011

கின்னஸ் உலக சாதனைச்சிறுமி

முகம் முழுவதும் ரோமங்களால் மூடப்பட்ட மனிதர்கள் பற்றி பல செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ள  நிலையில், முதல் தடவையாக உடல் முழுவதும் உரோமங்களால் மூடப்பட்ட தாய்லாந்தைச் சேர்ந்த சுப்ரா சசுப்பான் என்கிற 11 வயதுச்சிறுமி ஒருத்தி கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
 இந்த சுட்டிப் பெண்ணின் முகம்,கைகள்,கால்கள்,காதுகள் என்று உடல் முழுவதும் அடர்ந்த உரோமங்கள் வளர்ந்துள்ளன.
இந்த உரோமங்களை நிரந்தரமாக அகற்ற வைத்திய நிபுணர்கள் மேற்கொண்ட பகீரத முயற்சிகள் தோல்வியில் முடிந்து விட்டமை கவலையளிப்பதாக இருப்பினும்,  கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றமையை தொடர்ந்து, சுப்ரா  மகிழ்ச்சியில் ஆரவாரிக்கின்றார். முன்பு கேலிகள், நக்கல்கள், ஓரம் கட்டுதல்களுக்குள்ளான இச்சிறுமி  இன்று அந்நாட்டின் கதாநாயகி ஆகி விட்டார்.  சுப்ராவுக்கு ஏற்பட்டுள்ள நோய் உலகில் 50 சிறுமிகளுக்கு உள்ளது என்று மருத்துவ உலகம் கூறுகின்றது.


Tuesday, December 28, 2010

மணிக்கு 486Km வேகம் கின்னஸ் உலக சாதனை

சீனா மணிக்கு 486Km வேகத்தில் இயங் கும் அதிவேக இரயிலை வடிவமைத்துள்ளது. இந்த இரயில் வெள்ளோட்டம் நேற்று சீன தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் நகரங்களுக்கு இடையே நேற்று விடப்பட்டது.
1,318Km தூரமுள்ள இந்த தூரத்தை இந்த ரெயில் சுமார் 5 மணி நேரத்தில் சென்றடைந்தது. இந்த ரெயில் வருகிற 2012-ம் ஆண்டு முதல் பயணிகள் பயன்பாட்டிற்கு விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரெயில் ஓடத் தொடங்கும் பட்சத்தில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறும் வாய்ப்பு உள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் டி.ஜி.வி. அதிவேக ரெயில் மணிக்கு 574Km வேகத்தில் ஓட்டி வெள்ளோட்டம் நிகழ்த்தப்பட்டது.
2005-ம் ஆண்டு ஜப்பானில் மணிக்கு 581Km வேகத்தில் சோதனை ஓட் டம் நிகழ்த்தப்பட்டது. தற்போது சீனாவின் அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் (வெள்ளோட்டம்) நடத்தப்பட்டுள்ளது.
வருகிற 2012-ம் ஆண்டு மக்கள் பயணம் செய்யும் வகையில் ஓட்டப்படும். அதற்காக ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது என சீன அரசு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த ரெயிலை 2012-ம் ஆண்டில் 13000Km தூரம் இயக்கவும், 2020-ம் ஆண்டில் 16000Km தூரம் இயக்கவும் திட்ட மிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மிகப்பெரிய நகரங்களுக்கு இடையே ஏற்படும் போக்கு நெரில் குறையும் என்றும் கருதப்படுகிறது.

Saturday, November 27, 2010

உலகின் பலசாலிப் பெண் குழந்தை.

உலகின் மிக பலசாலியான பெண் குழந்தையாக விளங்கும் Varya Akulova  “Hercules Girl”  என சிறப்புப்பெயரால் அழைக்கப்படுகின்றார்.
 40 Kg  நிறையுடைய இக்குழந்தையால் 350 Kg பாரத்தை தூக்க முடிகிறது.
இச்சாதனை இரண்டு முறை கின்னஸ் உலக சாதனை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த பலசாலி குழந்தை ஆரம்பப்பாடசாலையில் 7ம் தரம் படிக்கிறார்.
இணையத்தள முகவரி - http://www.varyaakulova.com/









Friday, November 26, 2010

உலகின் பலசாலி - புதிய உலக சாதனை



ஜூலை 15, 1975 ல் பிறந்த, லிதோனியா (Lithuania) வைச்சேர்ந்த 6 அடி  3 அங்குலம் (1.90M) உயரமும், 155Kg (342Lb) நிறையும் கொண்ட Zydrunas Savickas தான் உலகின் தற்போதைய பலசாலியாகும்.
இவர்  பல்வேறு உலக சாதனைகளை நிலை நாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவர் அண்மையில் (2010-10-26) Shanghai Expo நிகழ்வின் போது 15 தொன் நிறையுடைய பஸ் வண்டியை 20 M வரை இழுத்து புதிய உலக சாதனையை படைத்து, உலகின் பலசாலி என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்துள்ளார்.