Showing posts with label Twitter. Show all posts
Showing posts with label Twitter. Show all posts

Tuesday, April 3, 2012

சவுதி இளவரசர் "ட்விட்டரில்' முதலீடு

சமூக வலைத் தளமான "ட்விட்டரில்', சவுதி அரேபிய இளவரசர் 300 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளார். சமூக வலைத் தளமான "ட்விட்டர்' , 2006ல் துவக்கப்பட்டது. உலகளவில் தற்போது இந்த வலைத் தளத்தை 10 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சவுதி இளவரசர் அல்வலீத் பின் தலால் பின் அப்துல் அஜீஸ் அல்சவுத், "ட்விட்டரில்' 300 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளதாக, அவரது கிங்டம் ஹோல்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஏழு மாதங்களாக இருதரப்புக்கும் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இந்த முதலீடு நடந்துள்ளது. அரபு புரட்சியில் "ட்விட்டர்' மற்றும் "பேஸ்புக்' சமூக வலைத் தளங்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றின. சிரியாவில் வெளிநாட்டு ஊடகங்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், அந்நாட்டு மக்கள், அங்கு நடப்பதை இந்த இரு வலைத் தளங்களின் வழியாக வெளியுலகுக்கு கொண்டு வருகின்றனர்.
இது குறித்து கிங்டம் ஹோல்டிங் நிறுவன இயக்குனர் அகமது ஹலாவானி கூறுகையில்,"இந்த சமூக வலைத்தளங்கள் வரும் ஆண்டுகளில், ஊடக உலகத்தின் அடிப்படையையே மாற்றி அமைத்து விடும் என நம்புகிறோம்' என்றார்.

Sunday, August 8, 2010

'டுவிட்டர்' இணையத்தளம் நெருக்கடியில்...!

உலகின் பிரபல்யமாக விளங்கிய சமூக இணையத்தளமான 'டுவிட்டர்' தற்போது நெருக்கடி ஒன்றைச் சந்தித்துள்ளது. 'டுவிட்டர்' இணையத்தளத்தில் கணக்குகளைப் பேணும் பலர் அவர்களைத் தொடர்வோர் மற்றும் நண்பர்களை இழந்துள்ளனர்.
அதிகமான பாவனையாளர்கள் தமது நண்பர்களுக்குப் 'பின்பற்று' (follow) என்ற வேண்டுகோளை பலவந்தமாக அனுப்புகின்றனர்.இதனை ஏற்றுக்கொள்ளும் நண்பர்களின் கணக்குகள் மூலமாக சமூக வலைப்பின்னலில் உள்ள ஏனையோரது கணக்குகளை 'ஹக்' (hack) செய்ய முடியும்.
இது தொடர்பில் 'டுவிட்டர்' இணையத்தளம் துரிதகெதியில் செயற்பட்டு வருவதுடன் நண்பர்களைத் தொடரும் இணைப்பை நிறுத்தியுள்ளது. தவறுகள் ஏற்பட்ட 'டுவிட்டர்' கணக்குகளை மீள ஒழுங்கமைக்கும் நடவடிக்கையிலும் 'டுவிட்டர்' தொழில்நுட்பப் பிரிவு ஈடுபட்டுள்ளது.
100 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்ட 'டுவிட்டர்' இணையத்தளத்தின் சேவைகளைப் பிரபல ஊடகங்கள் உட்பட பல நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Saturday, August 7, 2010

பேஸ்புக் - டுவிட்டர் நிறுவனங்களின் புதிய எதிரி

பேஸ்புக் டுவிட்டர் போன்ற சமூக வலை பின்னல் தளங்களில் அதிக நேரம் விரயம் செய்யும் ஊழியர்களினால் பிரித்தானிய நிறுவனங்களுக்கு பில்லியனளவில் பணவிரயமேற்படுவதாக ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கின்றது.
பிரித்தானிய இணையத்தளமொன்று நடத்திய வாக்கெடுப்பு ஒன்றின் முடிவின்படி பிரித்தானியாவின் 34 மில்லியன் ஊழியப்படையில் 2 மில்லியன் பேர் 1 மணித்தியாலத்திற்கும் அதிகமான தங்களது வேலை நேரத்தை மேற்படி சமூக வலை பின்ணல் தளங்களில் செலவிடுவதாக அந்த இணையத்தளம் தெரிவிக்கின்றது. இது மொத்த வேலை நேரத்தில் 8 இல் 1 பங்காகும்.
மேற்படி இணையதளத்தளத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியின் கருத்துப்படி ஐக்கிய இராச்சியத்தில் ஊழியர்கள் மிகவும் அதிக நேரத்தினை சமூக வலை பின்னல் தளங்களில் செலவிடுவதாகவும், இது நிறுவனங்களினால் கவனத்தில் கொள்ளப்படுவதில்லையெனவும் இது ஊழியர்களின் ஆக்கத்திறனில் மறைமுக பாதிப்பை எற்படுத்துவதாகவும் இதனால் நிறுவனங்கள் பல்வேறு நட்டங்களை சந்திப்பதாகவும் தெரிவித்தார்.
இத்தகைய செயற்பாட்டினால் நிறுவனங்களுக்கு 14 பில்லியன் பவுண்கள் வரை பணவிரயமேற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அவ்வாய்வறிக்கையின்படி பிரித்தானிய ஊழியர்களில் 55% வீதத்திற்கும் அதிகமானவர்கள் தாம் தமது வேலைநேரங்களின் மேற்படி தளங்களினை உபயோகிப்பதாக வெளிப்படையாகth தெரிவிப்பதாகவும் இதில் பலர் மிகவும் அதிக நேரம் செலவிடுவதாகவும் அவ் அறிக்கை தெரிவிக்கின்றது.
இப்புதிய சவாலனது நிறுவனங்களுக்கு பாரிய அடியென தெரிவிக்கப்படுகின்றது.
ச.கவிந்தன். 

Monday, August 2, 2010

இந்திய மொழிகளில் பேஸ்புக்.

சமுதாய இணைய வலை அமைப்பில் முதல் இடம் பெற்றிருக்கும் பேஸ்புக் இந்தியாவில் இன்னும் அதிகமான எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களைப் பெறும் வகையில் இந்திய மொழிகளில் தன்வலைத் தளத்தை உருவாக்கியுள்ளது. முதல் கட்டமாக தமிழ், இந்தி, பஞ்சாபி, பெங்காலி, தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பேஸ்புக் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் தமிழிலேயே தங்கள் அக்கவுண்ட்டை உருவாக்கி அப்டேட் செய்திடலாம். பேஸ்புக் வலைத்தளத்திற்குப் போட்டியாகச் செயல்பட்டு வரும் ஆர்குட் ஏற்கனவே தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் ஒலிக் குறிப்பின் அடிப்படையில் அந்த அந்த மொழிகளில் எழுதும் வசதியைத் தந்துள்ளது. ஆனால் பேஸ் புக் இன்னும் அந்த வசதியைத் தரவில்லை. இருப்பினும் தற்போதைய வசதியின் அடிப்படையில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களை பேஸ்புக் பெறுமா என்பதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Sunday, July 11, 2010

Facebook புதிய வைரஸ் : எச்சரிக்கை

Koobface என்ற புதிய வைரஸ் தற்போது உருவாகி கம்ப்யூட்டர்களை பழுதாக்கி வருகிறது. சமூக உறவு இணையத்தளங்களான facebook, twitter மற்றும் my space ஆகிய தளங்களை இது அதிகமாக தாக்கி வருவதாக தெரிகிறது.Sky News தகவலின்படி face book இணையதளமே அதிகமாக பாதிப்புள்ளாகும் வாய்ப்பு இருக்கிறது.
You tube இணையதளத்தில் கிறிஸ்துமஸ் வாழ்த்து வீடியோக்களில் இந்த வைரஸ் மறைந்து இருந்து யாரேனும் அந்த வீடியோக்களை கிளிக் செய்யும்போது கம்ப்யூட்டருக்குள் ஊடுருவி 3 நிமிடத்திற்குள் ஒரு புதிரை விடுவிக்கும்படி கேட்கும். அப்படி முடியாத பட்சத்தில் கம்ப்யூட்டர் வேலை செய்வதை நிறுத்தி விடும்.
கம்ப்யூட்டர் பயனாளர்கள் சந்தேகத்துக்கிடமான எந்த இணைய தள முகவரியையும் கிளிக் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
Thanks To......www.z9tech.com

Sunday, July 4, 2010

மக்கள் விருப்பைத் தீர்மானிக்கும் ஃபேஸ்புக்-டுவிட்டர்

பிரபல சமூக வலைப்பின்னல் தளங்களான ஃபேஸ்புக், கூகுள் மற்றும் டுவிட்டர் தளங்கள் தற்காலத்தில் மக்களின் கொள்வனவு விருப்பத்தை தீர்மானிக்கும் சக்திமிக்க கருவிகளாக உள்ளன எனப் பிரபல இணையத்தள ஆராய்ச்சி நிறுவனமான நீல்சன் தெரிவித்துள்ளது.
உலகளாவிய இணையத்தள பாவனையாளர்கள் நால்வரில் ஒருவர் மேற்கூறிய சமூக வலைப்பின்னல் தளங்களுடன் இணைந்திருப்பதாகவும் அவர்கள் சராசரியாக மாதத்திற்கு 6 மணி நேரம் அவற்றுடன் செலவிடுவதாகவம் மேற்படி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் மிகப்பெரிய வர்த்தகக் குறிகளில் சமூக வலைப்பின்னல் தளங்களான ஃபேஸ்புக், விக்கிபீடியா, யூ டியூப் ஆகிய தளங்களும் உள்ளடங்குவதாக மேற்படி நிறுவனம் தனது கடந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.
மேற் கூரிய சமூகவலைப் பின்னல் தளங்கள் மக்களின் நுகர்வுத் தெரிவில் பாரிய செல்வாக்கு செலுத்துவதாகவும், அவை மிக வேகமாக வளர்ந்து வருவதாகவும் நீல்சன் நிறுவனத் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சார்ள்ஸ் புச்வால்டர் தெரிவித்துள்ளார்.
இணையத்தளத்தின் ஊடாக பொருட்களை மதிப்பீடு செய்வது மக்களிடையே மிகவும் நம்பிக்கைக்குரிய விடயமாகத் தாம் கருதுவதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்தியா, சீனா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் மேற்படி நடைமுறையானது இலத்திரனியல் அழகுசாதனம் மற்றும் உணவுப்பொருட்கள் கொள்வனவில் அதிக ஆதிக்கம் செலுத்துவதாகவும் கூறப்படுகின்றது. சமூக வலைப்பின்னல் பாவனையாளர்களில் 32 சதவீதமானோர் தங்களது அலுவலகங்களிருந்தும், 31 சதவீதமானோர் தங்கள் படுக்கை அறைகளிருந்தும் வருகை தருவதாக மேற்படி ஆய்வு தெரிவித்துள்ளது.
ஆய்வாளர்களின் கருத்துப்படி இந்த வலைப்பின்னல், வலைதளங்கள் வணிக நடவடிக்கைகளில் பாரிய செல்வாக்கு செலுத்துவதுடன் இந்த மாற்றங்களுக்கு இசைவாகவும் அவை செயற்படுகின்றன என்பது புலனாகிறது.Thanks To.....Virakesari.
 

Thursday, July 1, 2010

டுவிட்டரில் தகவல் தந்துவிட்டு ஒருவர் தற்கொலை : தென் கொரியாவில் சம்பவம்

டுவிட்டர் இணையத்தளத்தில் தகவல் ஒன்றைத் தரவேற்றம் செய்துவிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் ஒருவர். தென் கொரியாவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தென்கொரியாவைச் சேர்ந்த லீ-கே-ஹவா எனும் 27 வயதான இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகத் தன் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இவர் டுவிட்டர் ஊடாக தகவல் ஒன்றைத் தரவேற்றம் செய்துள்ளார்.
கடந்த 13.06.2010 ஞாயிற்றுக்கிழமையே தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகத் தெரிவித்திருந்த இவர், பின்னர் தலைமறைவாகியுள்ளார்.
இவர் காணாமல் போனதாக இவரது குடும்பத்தார் முறைப்பாடு செய்துள்ளனர். லீ மரணித்த விடயம் டுவிட்டர் பாவனையாளர்கள் மூலம் அனைவருக்கும் விரைவாகத் தெரிய வந்தது.
அவரது தொடர்பாளர்கள் லீயின் மரணச் செய்திக்கான தம் அனுதாபங்களை அதிர்ச்சி மேலிட தெரிவித்த வண்ணமுள்ளனர்.
டுவிட்டர் மூலம் தகவல் தெரிவித்து விட்டுத் தன்னை ஒருவர் மாய்த்துக் கொண்ட சம்பவம் இதுவே முதல் தடவையாக நிகழ்ந்துள்ளதாக இணையத்தள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Thanks To......Virakesari