Showing posts with label கார். Show all posts
Showing posts with label கார். Show all posts

Thursday, February 17, 2011

இலங்கை வாலிபரின் சாதனை.

தண்ணீர் மூலம் இயங்கும் கார்.
பெட்ரோல் டீசல் விலைகள் அதிகரித்து வரும் இந்நிலையில் இலங்கை வாலிபரான "துஷார ஹெதிரிசிங்க" சாதனை கண்டுபிடிப்பினை மேற்கொண்டுள்ளார்.
இவர் தண்ணீரில் இயங்க கூடிய காரை வடிவமைத்துள்ளார். சோதனை முயற்சியாக 3 லிட்டர் தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி 300 km பயணம் மேற்கொண்டு சாதனை புரிந்துள்ளார். தண்ணீரில் இயங்க கூடிய இந்த காரின் மிக முக்கியமான அம்சமாக கருதப்படுவது சுற்று சூழலிற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் புகை இல்லை என்பதே.
வெளிநாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு இவரது தொழிநுட்பத்தை வாங்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டும், இந்த தொழில்நுட்பத்தை தாய் நாட்டிற்காக சமர்பிக்கும் நோக்கோடு அவர்களின் கோரிக்கைகைளை நிராகரித்து விட்டார்.
 Thanks To Lankasri.

Wednesday, August 11, 2010

புதிய தொழில்நுட்பங்களுடன் உருவாகும் ‘நிஷான்’ கார்கள்

காரில் பயணிப்போரின் ஆரோக்கியத்தை கருத்திற்கொண்டு பல புதிய தொழிநுட்ப அம்சங்களை தமது கார்களில் உள்ளடக்கவுள்ளதாக ஜப்பானின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ‘நிஷான்’ அறிவித்துள்ளது.
இதன்படி கார்களிலுள்ள குளிரூட்டீகளினூடாக விட்டமின் ‘சி’ யை விசிற உத்தேசித்துள்ளதாகவும் இது பயணிகளின் உடற்தோளினை ஈரலிப்பாகப் பேண உதவுமெனவும் இதன்மூலம் வெளியில் இருப்பதை காரினுள் ஆரோக்கியமாக உணரமுடியுமெனவும் அதன் பொறியியலாளர் தெரிவித்தார்.
உடலினுள் இதனோடு இரத்த ஓட்டத்தை சீர்செய்யக்கூடியதும் முதுகு வலியை குறைக்க கூடியதுமான இருக்கைகளையும் பொருத்த தாம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். மேலும் நவீனமயப்படுத்தப்பட்டதும் முக்கிய நாட்களை நினைவு கூறக்கூடியதுமான வேகமானிகளையும் பொருத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இவற்றிற்கு மேலதிகமாக ‘என்டி கொலிசன்’ எனப்படும் விமானம் மற்றும் கப்பல்களில் பயன்படுத்தப்படும் ‘ராடர்’’ தொழிநுட்பத்திற்கு இணையான தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படவுள்ளது. இத்தொழில்நுட்பமானது விபத்து ஒன்று நிகழக்கூடிய அபாயமிருப்பின் அது தொடர்பாக பயணிக்கு சமிக்ஞைகளை எழுப்பி எச்சரிக்கை செய்யக்கூடியதாகும்.
அதிக போட்டித்தன்மை கொண்ட கார் சந்தையில் நிஷான் நிறுவனத்தின் இத்தொழில்நுட்பங்கள் அதன் போட்டியாளருக்கு தகுந்த போட்டியாக அமையுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Monday, August 9, 2010

பெட்ரோல் இல்லாமல் காற்றின் மூலம் இயங்கும் கார் தயாரிப்பு

நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்து வருகிறது. இதனால் காரில் பயணம் செய்பவர்கள் விலையேற்றம் காரணமாக அதில் பயணம் செய்ய அச்சப்படுகின்றனர். இனி அந்த கவலை வேண்டாம்.
பெட்ரோல் இல்லாமல் காற்றின் மூலம் இயங்கும் கார் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கார் இயங்க தேவையான எரிபொருளை மண்ணில் உள்ள பேக்டீரியாவில் இருந்து எடுக்கப்படும் என்சைம்களை (வேதிப்பொருளை) கொண்டு காற்றின் மூலம் தயாரிக்க முடியும் என கண்டு பிடித்துள்ளனர். இதற்கு மிகவும் குறைந்த செலவாகும்.
இதன்மூலம் சுற்றுச்சூழலில் மாசு ஏற்படாது. கார் என்ஜின்களும் பழுது படாது என்றும் தெரிவித்துள்ளனர்.
“என்சைம்”களில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் “புரோபேன்” மூலக்கூறில் இருந்து 3 கார்பன் அணுக்கள் சங்கிலி தொடர் போன்று உருவாகிறது. இது தொடர்ச்சியாக சங்கிலியாக உருவாகி பெட்ரோல் ஆக மாறுகிறது. இதுவே செயற்கை எரி பொருள் ஆகிறது என கலி போர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானி மார்கஸ்ரிப்பே தெரிவித்துள்ளார்.