Showing posts with label உங்களுக்கு தெரியுமா?. Show all posts
Showing posts with label உங்களுக்கு தெரியுமா?. Show all posts
Friday, September 20, 2013
Wednesday, September 18, 2013
வியந்து போவீர்கள்!
வியந்து போவீர்கள்!
அரேபியாவில் ஆறுகள் இல்லை.
அத்தி, பலா மரங்கள் பூ பூப்பதில்லை.
ஆமைக்குப் பற்கள் இல்லை.
இந்திய ஜனாதிபதிக்கு ஓய்வு பெறும் வயதிற்கு வரம்பு இல்லை.
இனிப்பை உணர்ந்தறியும் சக்தி பூனைக்கில்லை.
இலந்தை மரங்களில் பறவைகள் கூடு கட்டுவதில்லை.
ஈசலுக்கு வயிறு இல்லை.
உலகில் 26 நாடுகளில் கடலோ, கடற்கரையோ இல்லை.
ஐஸ்லாந்தில் ரெயில்கள் இல்லை.
ஒட்டகங்களுக்கு நீந்தத் தெரிவதில்லை.
ஹவாய்த் தீவில் பாம்புகள் இல்லை.
கடலில் முதலைகள் வாழ்வதில்லை.
பல்லி தண்ணீர் குடிப்பதே இல்லை.
பக்ரைன் நாட்டு தேசியகீதத்தில் வார்த்தைகளே இல்லை.
மாசிடோனியா நாட்டுக்கு தேசியக் கொடி இல்லை.
மலைப் பாம்புகளுக்கு நஞ்சு இல்லை.
யமுனை நதி கடலில் கலப்பதில்லை.
யானையின் துதிக்கையில் எலும்புகள் இல்லை.
வண்ணத்துப் பூச்சிகளுக்கு வாயில்லை.
ஜோர்டான் நதியில் மீன்கள் இல்லை.
ஸ்பெயின் நாட்டில் தந்தை பெயரை முதல் எழுத்தாகப் பயன்படுத்துவதில்லை.
கிவி பறவைக்கு இறக்கைகள் இல்லை.
குயில்கள் கூடு கட்டி வாழ்வதில்லை.
குயில்கள் குளிர் காலத்தில் கூவுவதில்லை.
பூடான் நாட்டில் திரை அரங்குகள் இல்லை.
Monday, July 29, 2013
78 பேரின் உயிரை காவு கொண்ட பேஸ்புக்?
(NON) ஸ்பெயினில் 78 பேரின் உயிரை காவு வாங்கிய ரயில் விபத்திற்கு டிரைவர்
பேஸ்புக்கில் அப்டேட் செய்தபடி ரயிலை ஓட்டியதே காரணம் என தெரிய வந்துள்ளது.
ஸ்பெயினின் வடக்குப் பகுதியில் உள்ள சாண்டியாகோ டி கம்போஸ்டெலா என்ற இடத்தில் கடந்த 25ம் திகதி ரயில் ஒன்று தடம் புரண்டதில் 78 பேர் பலியாயினர்.
80 கி.மீ. வேகத்தில் செல்ல வேண்டிய வளைவு பாதையில் 200 கி.மீ. வேகத்தில் ரயில் வந்ததே விபத்துக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.
மேலும் விபத்துக்குள்ளான ரயிலில் 2 ஓட்டுநர்கள் இருந்துள்ளனர். இதில் பிரான்சிஸ்கோ ஜோஸ் கர்சான் அமோ(வயது 52) என்பவர் ரயிலை ஓட்டிய போது தான் விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில், தற்போது கர்சான் கவனக்குறைவாக

Saturday, July 20, 2013
100 ஆண்டுகளின் பின் சூரிய ஒளியை தரிசிக்கும் 'ருஜூகான்' மக்கள்
(TM) சூரிய ஒளியே படாமல் நூறு ஆண்டுகளைக் கடந்து விட்ட நோர்வேயின் ருஜூகான்
நகரம், தற்போது கண்ணாடிகளின் உதவியைக் கொண்டு சூரிய வெளிச்சத்தைப்
பெறவுள்ளது.
நோர்வேயில் டெலிமார்க் பகுதியில் அமைந்திருக்கும் தொழிற்பேட்டை நகரமான ருஜூகான், குறுகலான பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. எனவே, இங்கு சூரிய வெளிச்சம் இயற்கையாக விழுவதற்கு வாய்ப்பே இல்லை.
எனவே, சூரிய ஒளியை விரும்பும் மக்கள், ரோப்காரில் குறிப்பிட்ட மலைச் சிகரங்களுக்குச் சென்று சூரிய நமஸ்காரம் செய்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
1907ஆம் ஆண்டு, நோர்ஸ்க் ஹைட்ரோ என்ற தொழில் நிறுவனத்தின் இணை இயக்குனரான சாம் அய்டு என்பவரால் இந்த ருஜூகான் தொழில்நகரம் உருவானது.
குளிர்காலத்தில் இங்குள்ள மக்கள் கேபிள் கார் மூலம் அருகில் உள்ள மலை உச்சிக்கு சென்று சூரிய வெளிச்சத்தை அனுபவித்துத் திரும்புவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.
ருஜூகான் நகரத்திற்கு சூரிய ஒளியை கொண்டு வருவது குறித்து கடந்த ஐந்து வருடங்களாகவே திட்டமிடப் பட்டு வந்தநிலையில், தற்போது சரியான ஒரு மாற்றுத் தீர்வு கண்டறியப் பட்டுள்ளது.
அதன் படி, அருகில் உள்ள மலையில் 450 மீட்டர் உயரத்தில் மூன்று பெரிய கண்ணாடிகளைப் பொருத்தியுள்ளனர். அக்கண்ணாடிகளில் படும் சூரிய வெளிச்சம் எதிரொலிப்பதன் மூலம், நகரின் மத்தியப் பகுதியில் சூரிய வெளிச்சம் படுகிறது.
இத்திட்டம் கடந்த முதலாம் திகதி முதல் செயல் படுத்தப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் பயணம் மேற்கொள்ளாமல் இருந்த இடத்தில் இருந்தே தற்போது சூரிய ஒளியைப் பெறுகின்றனர்.

Saturday, June 22, 2013
சாதனை படைத்த சீனாவின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்
(mypno) அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், உலகின்
வலிமையான நாடுகளில் ஒன்றாக மாறிவரும் சீனா, இப்போது தொழில்நுட்பத்திலும்
வேகமான முன்னேற்றம் கண்டு வருகிறது. உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டரை
இப்போது சீனா உருவாக்கியுள்ளது.
டியானி 2 (Tianhe 2)
: இது சீன விஞ்ஞானிகள் அண்மையில் உருவாக்கியுள்ள புதிய சூப்பர்
கம்ப்யூட்டர். தமிழில், பால்வழி என்ற தரும் பொருள் தரும் பெயரைக் கொண்டுள்ள
இந்த கம்ப்யூட்டரை, மத்திய சீனாவின் சாங்ஷா நகரில் உள்ள, தேசிய பாதுகாப்பு
தொழில்நுட்ப பல்கலைக் கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதன் வேகம்,
நொடிக்கு 33.86 பெடாஃப்லாப் (Petaflap). அதாவது, நொடிக்கு 33,860 லட்சம்
கோடி கணக்குகளைச்
Posted by
abuanu
at
Saturday, June 22, 2013
Labels:
Amazing,
Computer,
Technology,
உங்களுக்கு தெரியுமா?
No comments:
Friday, May 10, 2013
மருத்துவ உலகை அதிர வைத்த பிரசவம்!
மருத்துவ உலகை அதிர வைத்த பிரசவம்!
(IN) ஒட்டிய நிலையில் உள்ள இரட்டைக் குழந்தைகளை எவ்வித சத்திரசிகிச்சையுமின்றி
இயற்கையான முறையில் பிரசவித்து இந்திய பெண்மணியொருவர் மருத்துவ உலகத்தை
ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
இந்திய மாஹாராஷ்டிரா மாநிலத்தின் , ரயிகாட் மாவட்டத்தில் உள்ள பன்வெல் என்ற இடத்தைச் சேர்ந்த சாலு பவார் என்ற பெண்ணே இக் குழந்தைகளை பிரசவித்துள்ளார்.
இக்குழந்தைகள் இரண்டும் வயிறு ஒட்டிய நிலையில் பிறந்துள்ளன.
சாலு பவாரின் கணவர் சாரதி என்பதால் அவரது குறைந்த வருமானத்தைக் கொண்டு அவர்களால் பிரசவத்துக்கென வைத்தியசாலைக்குச் செல்ல முடியவில்லை. எனவே வீட்டிலேயே சாகுவுக்கு பிரசவம் நடந்துள்ளது.தற்போது தாயும், குழந்தைகளும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுவாக ஒட்டிய நிலையில் உள்ள இரட்டைக் குழந்தைகள் சிசேரியன் மூலமே பிறக்கின்றன.
எனினும் சாலுவின் விடயத்தில் அது பொய்யாகியுள்ளது. எவ்வித மருத்துவ உதவியுமின்றி இரட்டைக் குழந்தைகளை பெற்றுள்ளார் சாலு.

Tuesday, April 23, 2013
உலகின் மிகப்பெரிய சமாதானப் புறா
உலகின் மிகப்பெரிய சமாதானப் புறா
1.2 மில்லிய் பொத்தான்களை கொண்டு உலகின் மிகப்பெரிய சமாதான புறா வடிவமைக்கப்பட்டுள்ளது.
டுபாயில் வடிவமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய சமதான புறா கொடியானது ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் கொடியில் உள்ள நிறங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
19x9 மீட்டர் அளவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சமாதான புறா பூஜிப் கலிஃபா வளாகத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
இப்பகுதியில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23-24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள முதலாவது சமாதான மற்றும் விளையாட்டு போட்டிகளை முன்னிட்டு இதன் விழா ஏற்பாட்டுக் குழு இப் பிரமாண்ட சமாதான புறா அடங்கிய கொடியை இவ்விடத்தில் பறக்கவிட்டுள்ளது.
இச்சமாதான புறாவை ஈராக்கின் சிறந்த விளையாட்டு வீரரான பரீட் லப்டா (வயது 33) என்பவரே வடிவமைத்துள்ளார். நல்லெண்ண தூதுவரும் சமாதான பிரசாரகாரருமான பரீத் டுபாயிலுள்ள பாடசாலை சிறுவர்களை இணைத்துகொண்டு இப்புறாவை வடிமைத்துள்ளார்.
மேற்படி விளையாட்டு வீரரை உள்ளடக்கிய குழுவினர் புறாவை வடிவமைக்கும் செயற்பாட்டை கடந்த 2 ஆம் திகதி ஆரம்பித்துள்ளனர். இதனை முற்று முழுதாக வடிவமைப்பதற்கு 7 நாட்கள் சென்றுள்ளன.
விளையாட்டு மற்றும் சமாதான நிகழ்வு நடைபெறும் தினத்தில் இப்புறாவிற்கான கின்னஸ் சான்றிதழ் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Friday, March 15, 2013
மும்மொழி பேசும் கிளி!
பிரிட்டனில் கிளியொன்று ஆங்கிலம் உருது அராபி ஆகிய மொழிகளை பேசி பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.
இஷான் மஹமூத் என்பவர் வளர்த்து வந்த 'ரொகேட்' என்று அழைக்கப்படும் ஆண் கிளியே இவ்வாறு பல மொழிகளை பேசும் திறமைமிக்க பறவையாக இருந்து வருகின்றது.
இக்கிளியானது 'ஹலோ, அவ் ஆர் யூ', 'ஆர்க் யான்' 'தே ஆர் இயர்' போன்ற வார்த்தைகளை பேசுவதாக அதனது உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
ரொகேர்ட் என்ற இக்கிளியானது எப்போதும் வரவேற்பரையில்தான் இருக்கும். எப்போதும் எம்மை சுற்றியே காணப்படும். அதனால், அது வெவ்வேறான மொழிகளை கற்றுகொண்டது. அது அதிகமான வார்த்தைகளை கற்றுகொண்டது' என இது தொடர்பில் அக்கிளியின் உரிமையாளரான இஷான் மஹமூட் தெரிவித்துள்ளார்.
உருது மற்றும் ஆங்கில மொழிகளை அதற்கு கற்றுகொடுக்க நாங்கள் முயற்சிக்கின்றோம். அவ்வாறு கற்றுகொடுத்தால் அதனை எமது நிறுவனத்திற்கும் அழைத்து செல்ல முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இஷானுடைய தந்தை டாரிக் இந்த கிளியை பாகிஸ்தானில் வளர்த்து வந்துள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்பே அதனை பிரிட்டனுக்கு அழைத்து வந்துள்ளார்;. 'ஹலோ' , 'ஆர் யூ ஓல்ரைட்', 'பாய்' ஆகிய ஆங்கில வார்த்தைகளையே ரொகேட் முதலில் பேசியுள்ளது. இதேவேளை, வீட்டில் உள்ள நாய் பூனையை போன்றும் இந்த ரொகேட் பேசுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கின்னஸில் இடம்பிடித்த உலகின் வயதான பாட்டி!
ஜப்பான் நாட்டில் 100 வயதை கடந்தவர்கள் 50
ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளனர். அந்நாட்டின், ஒசாகா நகரில் வாழும் மிசாகா
ஒகாவா 114 உலகிலேயே அதிக வயதான பெண் என கின்னஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த 1898ம் ஆண்டு மார்ச் 5ம் திகதி பிறந்த மிசாகா, ஒசாகா நகரின் மருத்துவனை ஒன்றின் பராமரிப்பில் உள்ளார். இன்னும் ஒரு வாரத்தில் 115வது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் மிசாகா, உடல்நலத்தில் காட்டிய அக்கறையே தனக்கு நீண்ட ஆயுளை தந்துள்ளதாக தெரிவிக்கிறார்.
ஜப்பானை சேர்ந்த 115 வயது ஜிரோமோன் கிமுரா , உலகிலேயே அதிக வயதான தாத்தா என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, March 9, 2013
உலகின் மிகச் சிறிய ஆசிரியர்?
உலகின் மிகச் சிறிய ஆசிரியர் என 3 அடி உயரம் நிறைந்த அசாத் சிங் கருதப்படுகிறார்.
இந்தியா, ஹரியான மாநிலத்தில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் அசாத் கணினித்துறையில் கல்வி கற்பித்து வருகின்றார்.
அசாத்திற்கு தற்போது 22 வயது ஆனாலும்கூட 13 இறாத்தல் நிறையுடவராகவும் 7 வயதினருக்குரிய ஆடையை அணிபவராகவும் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவர் 5 வயதாக காணப்படும்போது ஹார்மோன் குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் இவரது வளரச்சி தடைப்பட்டுள்ளது. குடும்பத்தின் வறுமைநிலைக்காரணமாக இவருக்கான மருத்துவ வசதிகளும் மறுக்கப்பட்டுள்ளது.
சர்க்கஸ் குழுவொன்றினால் தான் சிறுவயதிலே கடத்தப்பட்டதாக இவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கணினித்துறை கற்பித்தல் ஊடாக இவர் தற்போது மாதம் ஒன்றுக்கு 10,000 இந்தியன் ரூபாய்களை வருவயாக பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கல்லூரி மாணவர்கள் இவரை 'லிட்ல் ஸ்டார்' என செல்லமாக அழைத்து வருகின்றனர்.
'நான் எதை பற்றியும் கவலைப்படுவதில்லை. நான் எப்போதும் எதை விரும்பினேனோ தற்போது அதை அடைந்துள்ளேன்' என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அசாத் தற்போது மகிழ்ச்சியாக இருப்பதாக அவரது தாயார் பார்வதி தெரிவித்துள்ளார்.

Thursday, March 22, 2012
மனிதர்கள்
மனிதர்கள்
மனிதர்கள் குழந்தையாக இருக்கும்போது அயர்ச்சி
அடைந்து வளரத் துடிக்கிறார்கள்.
வளர்ந்த பிறகோ, குழந்தைகளாகவே இருந்திருக்கக் கூடாதா' என்று
ஏங்குகிறார்கள்.
பணத்தை ஈட்டுவதற்கு உடல் நலத்தை இழக்கிறார்கள்.
பிறகு,பணத்தை செலவழித்து உடல் நலத்தை மீட்க அரும் பாடு
படுகிறார்கள்.
எதிர்காலத்தை எண்ணி நிகழ காலத்தை தவற
விடுகிறார்கள்.அதனால் அவர்கள் நிகழ காலத்திலும் இல்லை, எதிர்
காலத்திலும் இல்லை.
அவர்கள் வாழும்போது, சாகப்
போவதே இல்லை என்பதுபோல வாழ்கிறார்கள்.
சாகும்போது வாழவே இல்லை என்பதுபோல
வாடுகிறார்கள்.
Friday, March 16, 2012
இன்டர்நெட் போதை
இன்டர்நெட் போதை
சிகரெட், மதுவைக் காட்டிலும் இண்டர்நெட் மோகத்தை கைவிடுவது கடினம்!
இன்றைய
கணினி உலகில் மின்னஞ்சல், எஸ்எம்எஸ், ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக ஊடகம்
இளைய தலைமுறையினரிடையே அத்தியாவசியமான ஒன்றாகி போய்விட்டது.
இன்றைய இளைஞர்கள் கையில் வேறு எது இருக்கிறதோ இல்லையோ... லேப்டாப் அல்லது மொபைல்ஃபோன் இருப்பது சர்வ நிச்சயமாகி விட்டது.
இந்நிலையில்
இந்த சமூக ஊடகம் நமது இளைஞர்களிடையே எந்த அளவுக்கு ஆழ ஊடுருவியுள்ளது
என்பது குறித்து ஆய்வு ஒன்றை சிகாகோ பல்கலைக்கழக குழு ஒன்று நடத்தியது.
இதில் சிகரெட் மற்றும் மதுவைக் காட்டிலும் மேற்கூறிய சமூக ஊடகத்திற்கு பலர் மிகவும் அடிமைப்பட்டிருப்பது உறுதியானது.
உட்ஸ்பர்க்கின்
ஜெர்மன் நகரத்தில், பிளாக்பெர்ரியைப் பயன்படுத்தி 18 முதல் 85
வயதிற்குட்பட்ட 205 பேர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களது மன
உறுதி பரிசோதிக்கப்பட்டது.
ஆய்வில் பங்கேற்றவர்களிடம் அவர்களது அனுபவம் மற்றும் வலிமை பற்றி ஒரு நாளைக்கு ஏழு முறை கேட்கப்பட்டது.
அவர்கள்
கூறிய முடிவுகளுடன், ஆயிரக்கணக்கான பதில்களைக் கொண்டு குழு
பார்வையிட்டதிலிருந்து, மது மற்றும் சிகரெட்டைக் காட்டிலும் சமூக ஊடகத்தைத்
தடைசெய்வது கடினம் என்று தெரியவந்துள்ளது.
Posted by
abuanu
at
Friday, March 16, 2012
Labels:
Facebook,
Internet,
உங்களுக்கு தெரியுமா?
1 comment:
Wednesday, March 14, 2012
ஒரு
கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைத்திருக்கும் ஒவ்வொரு கணினியும்
ஒரு இலக்கத்தைக் கொண்டிருக்கும். அந்த இலக்கத்தை வைத்தே ஒவ்வொரு கணினியும்
இனங்காணப்படுகின்றன இதனையே ( IP Address ) ஐபி முகவரி எனப்படுகிறது. இங்கு
IP என்பது Internet Protocol எனபதைக் குறிக்கிறது.
அந்த
இலக்கம் ஒரு வலையமைப்பில் அந்த குறிப்பிட்ட ஒரு கணினியை மட்டுமே குறித்து
நிற்கும். இன்னொரு கணினிக்கு அதே இலக்கம் வழங்கப் படமாட்டது.. இதனை
ஆங்கிலத்தில்; Uniqueness எனப்படுகிறது.
இணையத்தில்
இணையும் ஒவ்வொரு முறையும் எமது கணினிக்கு இந்த ஐபி முகவரியை இணைய சேவை
வழங்கும் நிறுவனம் வழங்குகிறது.. இது ஒரு தற்காலிகமான ஐபி முகவரியே. அடுத்த
முறை இணையத்தில் இணையும் போது வேறொரு ஐபி முகவரியே நமக்குக் கிடைக்கும்,
இதனை
டைனமிக் ஐபி முகவரி (Dynamic) எனப்படும். அதேவேளை இணையத்தில் நிரந்தரமாக
இணைந்துள்ள சேர்வர் கணினிகள் ஒரு நிலையான (Static) ஐபி முகவரியைக்
கொண்டிருக்கும்.
ஒரு
ஐபி முகவரி 216.27.61.137 எனும் வடிவத்தில் இருக்கும். இது நான்கு
பகுதிகளைக் கொண்டிருக்கும். ஒரு புள்ளி கொண்டு இந்த நான்கு பகுதிகளும்
பிரிக்கப்படிருக்கும். ஒவ்வொரு பகுதியும் 0 முதல் 255 வரையிலான ஒரு
இலக்கமாக இருக்கும்.
ஐபி
முகவரிகள் நமது வசதிக்காக தசம் எண்களினாலேயே குறிக்கப்படுவது வழக்கம்.
எனினும் கணினி இந்த இலக்கங்களை பைனரி வடிவத்திலேயே புரிந்து கொள்கிறது,
மேலுள்ள ஐபி முகவரி 11011000.00011011.00111101.10001001 எனும் பைனரி
வடிவைப் பெறும். ஐபி முகவரியிலுள்ள இந்த நான்கு பிரிவுகளையும் ஒரு ஒக்டட்
(Octets) எனப்படும்.
பைனரி
எண் வடிவில் ஒவ்வொரு இலக்கமும் 8 இடங்களைக் கொண்டிருப்பதால் இவ்வாறு
அழைக்கப்படுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு எட்டு இலக்கங்களினதும் கூட்டுத்
தொகையாக 32 எனும் இலக்கம் கிடைக்கிறது. இதனாலேயே ஐபி முகவரிகள் 32 பிட் எண்
எனக் கருதப்படுகின்றன.
இந்த
ஒவ்வொரு எட்டு இலக்கமும் 0 அல்லது 1 எனும் இரு வேறு நிலைகளைக் கொண்டிருக்க
முடியுமாதலால் எட்டு இலக்கங்கள் கொண்ட ஒவ்வொரு ஒக்டட் கொண்டும் 28 = 256
வெவ்வேறான சேர்மானங்களை உருவாக்கலாம். எனவே ஒவ்வொரு ஒக்டட்டும் 0 முதல் 255
வரையிலான இலக்கங்களைக் கொண்டிருக்க முடியும்.
இவ்வாறு
நான்கு ஒக்டட் சேரும்போது 232 அல்லது 4,294,967,296 வெவ்வேறான்
சேர்மானங்களை அல்லது இலக்கங்களைக் உருவாக்கலாம். அதாவாது இந்த முறையினை
உபயோகித்து உலகிலுள்ள 4.3 பில்லியன் கணினிகளுக்கு வெவ்வேறான ஐபி முகவரிகளை
வழங்கி விடலாம்
Tuesday, March 13, 2012
சாலை விதிமீறல்கள்
1. சிவப்பு சிக்னலை மீறி வாகனம் ஓட்டுவது.
2. இன்டிகேட்டர் போடாமல் இடதுபுறம் நோக்கி வாகனத்தை ஓட்டிச் செல்வது.
3. அனுமதி இல்லாத இடத்தில் வாகனத்தை நிறுத்துவது.
4. மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணம் செய்வது.
5. ஹெல்மட் இல்லாமல் வாகனம் ஓட்டுவது.
6. நம்பர் பிளேட் இல்லாமை.
7. பயணிகளிடம் கார் ஓட்டுனர் தவறாக நடந்து கொள்வது.
8. வாடகை கார்-ஆட்டோ டிரைவர் அதிக கட்டணம் வசூலிப்பது.
9. வாடகை கார் டிரைவர், பயணி அழைக்கும்போது வரமறுப்பது.
10. இரவில் லைட் போடாமல் செல்வது.
11. ஹாரன் இல்லாமல் வாகனம் ஓட்டுவது.
12. சைலன்சர் இல்லாமல் வாகனம் ஓட்டுவது.
13. எண் சரியாக தெரியாத நம்பர் பிளேட்டுடன் வண்டி ஓட்டுவது.
14. சாலையில் வாகன நிறுத்தகோட்டை கடந்து சென்று நிற்பது.
15. சட்டத்திற்கு உட்பட்ட திசையில் வாகனம் ஓட்ட மறுப்பது.
16. வாகனம் ஓட்ட அனுமதி பெறாதவரை வண்டி ஓட்டச் செய்வது.
17. உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது.
18. 18 வயதுக்குட்பட்ட மைனர்கள் வாகனம் ஓட்டுவது.
19. அதிக வேகமாக வாகனம் ஓட்டுவது (முதல் குற்றம்).
20. அதிக வேகமாக வாகனம் ஓட்டுவது (அடுத்தடுத்து செய்யும் குற்றம்)
21. வேகமாக வாகனம் ஓட்டுவதற்கு உடந்தையாக இருப்பது.
22. ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவது (முதல் குற்றம்)
23. ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவது (2-வது குற்றம்)
24. பதிவு செய்யாத வாக னங்களை ஓட்டிச் செல்வது.
25. மஞ்சள் கோட்டை கடப்பது.
26. சில ரோடுகளில் அமல்படுத்தப்படும் போக்குவரத்து தடை நேரத்தை மீறுவது.
27. ஒரு வழிப்பாதை, இடதுபுறம்-வலதுபுறம் செல்ல தடை, ஹாரன் அடிக்கத் தடை போன்றவற்றை மீறுவது.
28. வாகனங்களில் அதிக புகை வெளியேறுவது.
29. அதிக ஒலியுடன் ஹாரன் ஒலிப்பது.
30. நடத்துனர் சீருடை அணியாமல் இருப்பது.
31. டிரைவர் சீருடை அணியாமல் இருப்பது.
32. நடத்துனர் ‘பேட்ஜ்’ அணியாமல் இருப்பது.
33. சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் செல்வது.
34. பயணிகள் வாகனத்தில் சரக்குகளை ஏற்றி செல்வது.
35. வாகனங்களில் அமர்ந்து புகை பிடிப்பது.
36. வாகனங்களில் வண்ண விளக்குகளை பயன்படுத்துவது.
37. வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசுவது.
38. தவறான முறையில் முன்புறம் செல்லும் வாகனத்தை முந்துவது.
39. மது அருந்தி விட்டு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் செல்வது.
40. வாடகைக்கு பயன்படுத்த அனுமதி பெறாமல் வாகனம் ஓட்டுவது.
41. ஓடும் வாகனத்தில் டிரைவர்(ஓட்டுனர்) ஏறுவது.
42. ஓடும் வாகனத்தில் பயணிகள் ஏறுவது.
Monday, March 12, 2012
கிரிக்கெட் ரசிகர்களுக்கு.....
கிரிக்கெட் ரசிகர்களுக்கு.....
இங்கிலாந்து சண்டே டைம்ஸின் அதிரடி செய்தி. 2011 உலக கோப்பை இந்திய, பாகிஸ்தான் அரையிறுதியில் சூதாட்டம் -பொலிவூட் நடிகை
இந்திய,
பாகிஸ்தான் அணிகள் பங்குபற்றிய கடந்த ஆண்டின் உலகக்கிண்ண
அரையிறுதிப்போட்டியில் சூதாட்டம் இடம்பெற்றுள்ளதாக இங்கிலாந்தின் "சண்டே
டைம்ஸ்" பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
சண்டே டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின் படி, இந்தியாவைச் சேர்ந்த
சூதாட்டக்காரர்கள் இங்கிலாந்தின் பிராந்தியப் போட்டிகளிலும், சர்வதேசப்
போட்டிகளிலும் இலகுவாக சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், சர்வதேச
கிரிக்கெட் சபை இதுகுறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும்
தெரிவித்துள்ளது.
வழங்கப்படும் ஏராளமான பணத்தின் காரணமாக போட்டிகளின் முடிவுகளை முன்னரே
தீர்மானிப்பது இலகுவாக உள்ளதாகத் தெரிவித்த குறித்த பத்திரிகை,
வீரர்களுக்கு ஏராளமான ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டமைக்கான
ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
வீரர்களை சூதாட்டத்தின் பக்கம் இழுப்பதற்கு பொலிவூட் நடிகையொருவரைப்
பயன்படுத்தி இந்த நடவடிக்கைகளில் இந்தியச் சூதாட்டக்காரர்கள் முயன்று
வருவதாக அப்பத்திரிகை தனது இன்றைய செய்தியில் தெரிவித்துள்ளது.
சண்டே டைம்ஸின் செய்திகளின்படி தங்கள் விசாரணைகளில் துடுப்பாட்ட
வீரரொருவர் மெதுவாகத் துடுப்பெடுத்தாட 44,000 ஸ்ரேர்லிங் பவுண்ட்ஸ்களும்,
அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுக்க பந்துவீச்சாளர்களுக்கு 50,000 ஸ்ரேர்லிங்
பவுண்ட்ஸ்களையும், போட்டிகளின் முடிவுகளை மாற்றுவதாக உறுதிப்படுத்தும்
வீரருக்கு 750,00 ஸ்ரேர்லிங் பவுண்ட்ஸ்களும் வழங்கப்படுவதாக
கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த விக்ரம் செத் என்ற சூதாட்டக்காரர் ஒருவரே குறித்த
பத்திரிகையிடம் சிக்கியுள்ளதாகவும், அவர் மூலமே இத்தகவல்கள்
வெளியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றிலங்காநவ்..
Saturday, March 10, 2012
1GB நினைவகத்தை 2GB நினைவகமாக மாற்ற முடியும்.
இன்னும்
சிலர் தங்கள் மொபைல் போனில் 1gb கொள்ளளவு உடைய நினைவகத்தை
பயன்படுத்துகிறார்கள். அந்த நினைவகத்தை எப்படி 2gb நினைவகமாக மாற்றலாம் என்பதை கிழே
கொடுக்கப் பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி சுலபமாக மாற்றலாம்.
1.இந்த வழிமுறையானது 1GB நினைவகத்தில் மட்டுமே வேலை செய்யும். முடிந்தவரை 1GB நினைவகத்தை மட்டுமே பயன்படுத்துங்கள்.
2. இந்த வழிமுறையை பயன்படுத்தும் முன்பு உங்கள் நினைவகத்திலுள்ள தரவுகளை எல்லாம் நீங்கள் ஒரு பதிவு எடுத்துவைத்து கொள்வது நல்லது. 1.இந்த வழிமுறையானது 1GB நினைவகத்தில் மட்டுமே வேலை செய்யும். முடிந்தவரை 1GB நினைவகத்தை மட்டுமே பயன்படுத்துங்கள்.
3.இப்போது இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்
4. தரவிறக்கம் செய்த மென் பொருளை திறக்கும் போது இது போன்ற வடிவில் காட் டும்.
5.
மென்பொருள் திறந்தவுடன், அதில் 955MB DEFAULT-க காட்டப்படும் .ஆதலால், மேலே கூறியது போல் 1GB நினைவகத்தை மட்டும் பயன் படுத்தவும் .
6. இப்போது உங்கள் நினைவகத்தை கணினியில் சொருகவும். படத்தி ல் தோன்றுவது போல 955MB காட்டப்படும்.
7. (FIX) பிக்ஸ் என்ற option தேர்வு செய்து Yes பட்டனை கிளிக் செய்யவும்.
8. இப்பொது உங்களது நினைவகத்திலுள்ள தரவுகள் எல்லாம் அழிந்து 2GB நினைவகமாக மாறிவிடும்.
9. நினைவகத்தை கணினியிலிருந்து அகற்றிவிட்டு , மீண்டும் கணினியில் சொருகவும். நினைவகத்தின் அளவு 1912MB என்று காட்டப்படும்.
Friday, March 9, 2012
உலக மக்களால் கொண்டாடப்படும் அதி முக்கிய தினங்கள்
ஜனவரி
26 – உலக சுங்க தினம்
30 – உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
30 – உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
பிப்ரவரி
14 – உலக காதலர் தினம்
மார்ச்
08 – உலக பெண்கள் தினம்
15 – உலக நுகர்வோர் தினம்
20 – உலக ஊனமுற்றோர் தினம்
21 – உலக வன தினம்
22 – உலக நீர் தினம்
23 – உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
24 – உலக காசநோய் தினம்
28 – உலக கால்நடை மருத்துவ தினம்

ஏப்ரல்
05 – உலக கடல் தினம்
07 – உலக சுகாதார தினம்
12 – உலக வான் பயண தினம்
18 – உலக பரம்பரை தினம்
22 – உலக பூமி தினம்
30 – உலக குழந்தைத் தொழிலாளர் தினம்
07 – உலக சுகாதார தினம்
12 – உலக வான் பயண தினம்
18 – உலக பரம்பரை தினம்
22 – உலக பூமி தினம்
30 – உலக குழந்தைத் தொழிலாளர் தினம்
மே
01 – உலக தொழிலாளர் தினம்
03 – உலக சக்தி தினம்
08 – உலக செஞ்சிலுவை தினம்
12 – உலக செவிலியர் தினம்
14 – உலக அன்னையர் தினம்
15 – உலக குடும்ப தினம்
16 – உலக தொலைக்காட்சி தினம்
24 – உலக காமன்வெல்த் தினம்
29 – உலக தம்பதியர் தினம்
31 – உலக புகையிலை மறுப்பு தினம்
03 – உலக சக்தி தினம்
08 – உலக செஞ்சிலுவை தினம்
12 – உலக செவிலியர் தினம்
14 – உலக அன்னையர் தினம்
15 – உலக குடும்ப தினம்
16 – உலக தொலைக்காட்சி தினம்
24 – உலக காமன்வெல்த் தினம்
29 – உலக தம்பதியர் தினம்
31 – உலக புகையிலை மறுப்பு தினம்
ஜூன்
04 – உலக இளம் குழந்தைகள் தினம்
05 – உலக சுற்றுப்புற தினம்
18 – உலக தந்தையர் தினம்
23 – உலக இறை வணக்க தினம்
26 – உலக போதை ஒழிப்பு தினம்
27 – உலக நீரழிவாளர் தினம்
28 – உலக ஏழைகள் தினம்
05 – உலக சுற்றுப்புற தினம்
18 – உலக தந்தையர் தினம்
23 – உலக இறை வணக்க தினம்
26 – உலக போதை ஒழிப்பு தினம்
27 – உலக நீரழிவாளர் தினம்
28 – உலக ஏழைகள் தினம்
ஜூலை
01 – உலக மருத்துவர்கள் தினம்
11 – உலக மக்கள் தொகை தினம்
11 – உலக மக்கள் தொகை தினம்
ஆகஸ்ட்
01 – உலக தாய்ப்பால் தினம்
03 – உலக நண்பர்கள் தினம்
06 – உலக ஹிரோஷிமா தினம்
09 – உலக நாகசாகி தினம்
18 – உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம்
03 – உலக நண்பர்கள் தினம்
06 – உலக ஹிரோஷிமா தினம்
09 – உலக நாகசாகி தினம்
18 – உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம்
செப்டம்பர்
08 – உலக எழுத்தறிவு தினம்
16 – உலக ஓசோன் தினம்
18 – உலக அறிவாளர் தினம்
21 – உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்
26 – உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்
27 – உலக சுற்றுலா தினம்
அக்டோபர்
01 – உலக மூத்தோர் தினம்
02 – உலக சைவ உணவாளர் தினம்
04 – உலக விலங்குகள் தினம்
05 – உலக இயற்கைச் சூழல் தினம்
08 – உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்
09 – உலக தபால் தினம்
16 – உலக உணவு தினம்
17 – உலக வறுமை ஒழிப்பு தினம்
24 – உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்
30 – உலக சிந்தனை தினம்
02 – உலக சைவ உணவாளர் தினம்
04 – உலக விலங்குகள் தினம்
05 – உலக இயற்கைச் சூழல் தினம்
08 – உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்
09 – உலக தபால் தினம்
16 – உலக உணவு தினம்
17 – உலக வறுமை ஒழிப்பு தினம்
24 – உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்
30 – உலக சிந்தனை தினம்
நவம்பர்
18 – உலக மனநோயாளிகள் தினம்
19 – உலக குடியுரிமையாளர்கள் தினம்
26 – உலக சட்ட தினம்
19 – உலக குடியுரிமையாளர்கள் தினம்
26 – உலக சட்ட தினம்
டிசம்பர்
01 – உலக எய்ட்ஸ் தினம்
02 – உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்
10 – உலக மனித உரிமைகள் தினம்
14 – உலக ஆற்றல் தினம்
02 – உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்
10 – உலக மனித உரிமைகள் தினம்
14 – உலக ஆற்றல் தினம்
Wednesday, March 7, 2012
அறியாத சில விடயங்கள் - 5
அறியாத சில விடயங்கள் - 5
ரத்தக் கொதிப்பு நோயாளிகள் உருளைக்
கிழங்கை அவித்து தோலுடன் சாப்பிட்டு வரவும். தினமும் ஒருவேளை மட்டும்
சாப்பிடலாம்.
சர்க்கரை நோயாளிகள் பாகற்காய்
துண்டுகளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்த வேண்டும். காலையில் வெறும்
வயிற்றில் பாகற்காய் சாறாகச் சாப்பிடுவதைவிட இது எளிதாக இருக்கும்.
பீட்ரூட் சூப்பை இரவு படுக்கைக்குச்
செல்லும்போது அருந்திவிட்டுப்படுத்தால் நாள்பட்ட மலச்சிக்கலும் அகலும். தலைவலி,
பல்வலி
என்றாலும் பீட்ரூட் சூப்பை பீட்ரூட்டுடன் சேர்த்தே அருந்தலாம்.
தொண்டைப்புண் ஏற்பட்டிருந்தால் மஞ்சள்
பொடியை போட்டுக் கொதிக்க வைத்த நீரை வாயில் ஊற்றிக்கொண்டு,
தொண்டையில்
படும்படி சற்று நேரம் வைத்திருந்த பிறகு கொப்பளித்துவிடவும். சில வேளைகள்
செய்தால் போதும். தொண்டைப்புண் பறந்தோடும்.
Monday, March 5, 2012
உலகின் பணக்கார நாடு
உலகின் பணக்கார நாடு
உலகின் பணக்கார நாடுகளின் வரிசையில் கத்தார் முதலிடத்தை பிடித்துள்ளது.இது குறித்து சர்வே ஒன்றை அமெரிக்காவின் போர்பஸ் பத்திரிகை கருத்து கணிப்பு நடத்தியது.
இதில் கத்தார்,துபாய், குவைத் உட்பட 15 நாடுகள் கணக்கில் கொள்ளப்பட்டன. இதில் 1.7 மில்லியன் மக்கள் தொகை கொண்ட கத்தார் நாடு தனி நபரின் ஆண்டு வருமானம் சுமார் 88 ஆயிரம் அமெரிக்கக டாலராக உள்ளது என தெரிவித்துள்ளது. அதற்குஅடுத்த படியாக ஐக்கிய அரபு குடியரசு 47 ஆயிரத்து 500 அமெரிக்க டாலர்ஆகவும் உள்ளது. இந்த நாடுகளின் வரிசையி்ல குவைத் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. மேலும் வரும் 2022-ம் ஆண்டில் கால்பந்திற்கான உலககோப்பை போட்டியை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இடத்தில் உள்ள லக்சம்பர்க்கின் ஆண்டு வருமானம் சுமார் 81 ஆயிரம் டாலராகும். மூன்றாம் இடத்தில் உள்ள சிங்கப்பூர் வருமானம் 56 ஆயிரத்து 700 டாலராகும். நார்வே, புருனேயை தொடர்ந்து, ஐக்கிய அரபு குடியரசு, அமெரிக்கா, ஹாங்காங், சுவிட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகள் முதல் ஐந்து இடங்களுக்குள் மாறி மாறி வந்து கொண்டுள்ளது. அதேசமயம்புருண்டி, லிபேரியா, ரீபப்ளி்க் ஆப் காங்கோ போன்ற நாடுகளின் தனிநபர் வருமானம் சுமார் 300 முதல் 400 அமெரிக்க டாலர் என்ற அளவில் மட்டுமே உள்ளது.

Monday, March 05, 2012
Labels:
Amazing,
உங்களுக்கு தெரியுமா?,
உலக பணக்காரர்
No comments:
Sunday, March 4, 2012
அறியாத சில விடயங்கள் - 4
அறியாத சில விடயங்கள் - 4
*முதன் முதலில் நீர்மூழ்கி கப்பலுக்கான வரைபடத்தை
உருவாக்கியவர் வில்லியம் போர்னே என்னும் இங்கிலாந்துக்காரர். இவர், 1578-ம் ஆண்டு
நீர்மூழ்கி கப்பலுக்கான வரைபடத்தை வரைந்தார். எனினும் கார்னிலியூஸ் வான் டிரெப்பல்
என்னும் நெதர்லாந்து நாட்டுக் காரர் 1620-ம் ஆண்டு முறையான நீர்மூழ்கிக் கப்பலை
வடிவமைத்தவர். நீரில் மூழ்கக் கூடிய ஒரு படகைத் தயாரித்த அவர் அதில் பிராண வாயு
கிடைப்பதற்காக நீண்ட குழாயை இணைத்திருந்தார். நீருக்குள் மூழ்கியிருப்பவர் துடுப்பு
மூலம் படகை இயக்கவேண்டும். 12 படகோட்டிகளுடன் தான் வடிவமைத்த நீர்மூழ்கிக் கப்பலை
அவர் லண்டன் தேம்ஸ் நதியில் இயக்கிக் காட்டினார். 3 மணி நேரம் இந்தக் கப்பல்
நீருக்கடியில் இருந்தது.
*ராணுவத்திற்கான நீர்மூழ்கிக் கப்பலை 1776-ம் ஆண்டு டேவிட் புஷ்னல் என்னும் அமெரிக்கர் வடிவமைத்தார். எனினும் சகல வசதிகளுடனும் கூடிய முதல் நீர்மூழ்கிக் கப்பல் ஜான் பி.ஹாலண்ட் மற்றும் சைமன் லேக் என்னும் இருவர் 1890-ம் ஆண்டு ஒரே நேரத்தில் தயாரித்தனர். ஜானின் நீர்மூழ்கிக் கப்பலின் டிசைனை அமெரிக்காவும் சைமன் லேக்கின் வடிவமைத்ததை ரஷியா-ஜப்பான் நாடுகளும் ஏற்றுக்கொண்டு தயாரிக்க ஆரம்பித்தன.
*ஒரு மனிதன் தினமும் சராசரியாக ஒரு மணி நேரம் 6 நிமிடங்களை பயணத்தில் கழிக்கிறான். வருடத்திற்கு ஒவ்வொருவரும் சராசரியாக 12 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணம் செய்கிறார்கள்.உலக அளவில் 53 சதவீதம் பேர் கார்களிலும், 26 சதவீதம் பேர் பஸ்சிலும், 9 சதவீதம் பேர் ரெயிலிலும் இன்னொரு 9 சதவீதம் பேர் விமானங்களிலும் பயணிக்கிறார்கள். சைக்கிள் பயணம் வெறும் 3 சதவீதம்தான். 2050-ம் ஆண்டு அதிகவேக வாகனங்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகி விடும் என்பதால், அப்போது ஒரு நாளில் ஒருவர் பயணம் செய்யும் நேரம் 12 நிமிடங்களாகக் குறைந்து விடுமாம். அப்போது கார்களில் பயணம் செய்வோர் 35 சதவீதம் பேரும், பஸ்சில் 20 சதவீதம் பேரும் அதிகவேக வாகனங்களில் 41 சதவீதம் பேரும் ரெயிலில் 4 சதவீதம் பேரும் பயணம் செய்வார்கள் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள?.
*உலகின் முதல் போக்குவரத்து சிக்னல் 1890-ம் ஆண்டு லண்டன் நகரில் பயன் படுத்தப் பட்டது. இதில் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அப்போது பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் லண்டனில் எதுவும் கிடையாது. குதிரைகள் இழுத்துச் செல்லும் பஸ்கள் மட்டுமே இயங்கின. அமெரிக்காவில் 1890ம் ஆண்டு இறுதி வாக்கில் தான் கார்கள் அறிமுகமாயின. முதல் தானியங்கி போக்குவரத்து சிக்னல் ஓகியோ மாகாணத்தில் உள்ள கிளீவ்லாண்ட் நகரில் 1920-ம் ஆண்டு பொருத்தப்பட்டது.
*வங்கி முறையிலான கடன் கொடுக்கும் பழக்கம் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டு விட்டது. பணக் கடன் வழங்கியது, கடனை அடைத்தது போன்றதற்கான ஆதார ரசீதுகள் 14-ம் நூற்றாண்டில் ஏற்பட்டதாகும். காகிதப் பணம் கடன் தருவது 17-ம் நூற்றாண்டில் வேகமாக பரவியது. தானியங்கி பணம் பட்டுவாடா செய்யும் எந்திரங்களில் பணம் எடுப்பதற்கு அட்டை வழங்குவது நமது நாட்டில் 2000-ம் ஆண்டுக்குப் பின்னர்தான் வேகமாக வளர்ச்சி கண்டது. எனினும் அமெரிக்காவில் 1951-ம் ஆண்டிலேயே பணம் எடுக்கும் அட்டைகள் புழக்கத்திற்கு வந்து விட்டன. டைனர்ஸ் கிளப் தனது உணவக வாடிக்கையாளர்கள் 200 பேருக்கு நிïயார்க் நகரில் உள்ள தங்களின் 27 உணவகங்களில் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளும் கிரடிட் கார்டுகளை வழங்கியது. காந்த பட்டைகளுடன் கூடிய கிரடிட் கார்டு 1970-ம் ஆண்டு புழக்கத்திற்கு வந்தது.
*வாலாட்டிக் குருவி எப்போதும் ஏன் வாலை ஆட்டிக் கொண்டே இருக்கிறது தெரியுமா?...அது சுவாச உறுப்பாக பெற்றிருப்பது வாலைத்தான். எனவேதான் சுவாசிப்பதற்காக தனது வாலை இடைவிடாது ஆட்டிக் கொண்டே இருக்கிறது

Subscribe to:
Posts (Atom)

.jpg)