Showing posts with label உயிரினங்கள். Show all posts
Showing posts with label உயிரினங்கள். Show all posts

Thursday, April 19, 2012

குஞ்சை ஈன்ற கோழி

முட்டையிடுவதற்குப் பதிலாக நேரடியாக குஞ்சை ஈன்ற கோழி
 
கோழியொன்று முட்டையிடுவதற்குப் பதிலாக தனது உடலுக்குள் பொரிக்கப்பட்ட குஞ்சை ஈன்ற சம்பவம் இலங்கை- வெலிமடையில் இடம்பெற்றுள்ளது.

வெளிமடை, கெந்திரிமுல்ல, நெடுன்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஈ.எம்.ரஞ்சித் என்பவரின் வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவரின் வீட்டிலுள்ள ஆறு கோழிகளில் ஒரு கோழி மாத்திரம் முட்டையிடாமல் இருந்தது. ஆனால் அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கும் வகையில் கோழிக்குஞ்சொன்றை அது ஈன்றது.


குஞ்சை ஈன்றபின் அக்கோழி இறந்துவிட்டது. எனினும் அக்கோழிக்குஞ்சு நலமாக உள்ளது.


இவ்வாறான ஒரு சம்பவத்தை தான் கேள்விப்படுவது இதுவே முதல் தடவை என வெலிமடை பிரதேச தலைமை மிருக வைத்திய அதிகாரி பி.ஆர்.யாப்பா கூறினார்.


"அந்த கோழியின் உடலை பிரித்துப் பார்த்தேன். அந்த முட்டை கோழியின் உடலிலிருந்து வழக்கமான வழியில் வெளிவரவில்லை. அது கோழியின் உடலுக்குள் அடை காக்கப்பட்டுள்ளது. இறுதியில் கோழியின் உடலிலிருந்து நேரடியாக கோழிக்குஞ்சு வெளிவந்துள்ளது. அம்முட்டை கோழியின் உடலுக்குள் 21 நாட்களுக்கு மேலாக இருந்துள்ளது" என அவர் கூறினார்.
 

Tuesday, February 22, 2011

பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசய உயிரினம்.

நான்கு அங்குல நீளமான மனித உருவத்தை ஒத்த அதிய உயிரினமொன்று பாகிஸ்தானின் லாஹூர் நகரில் பழைய வீடொன்றை தோன்றுகிற போது   கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிருடனும், அசைவுகளுடனும் காணப்பட்ட இந்த அதிய உயிரினத்தை சிறுவர்கள் கல்லால் அடித்து இறக்க செய்துள்ளனர்.

Tuesday, February 15, 2011

உயிரினங்கள் பற்றிய சுவாரசியத் தகவல்கள் - 1


  1. உலகில் 10 தொடக்கம் 30 மில்லியன் வரையான உயிரினங்கள் காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் நம்பி வருகிறார்கள்.
  2. உலகின் பாலூட்டிகளில் மிகப்பெரிய உயிரினம் நீலத்திமிங்கிலமாகும். பிறக்கும் போது 5 தொன் நிறையுடன் காணப்படும் இவை, பூரண வளர்ச்சியடைந்த பின்னர் 150 தொன் வரை இதன் நிறை காணப்படும்.
  3. நியூசிலாந்தின் தேசிய பறைவையான கிவி. வருடத்திற்கு ஒரு  முட்டையினையே  இடுகின்றது.
  4. நவரத்தினங்களில் ஒன்றான முத்தை உண்ணும் ஒரேயொரு உயிரினம் அன்னமாகும்.
  5. உயிரினங்களிலேயே மிகப்பெரிய முட்டை இடுவது சுறா மீனாகும்.
  6. குதிரையின் காதினை விடவும், கழுதையின் காது நீளமானதாகும்.
  7. வீட்டு இலையான்களின் சராசரி ஆயுட்காலம் 14 நாட்களாகும்.
  8. பாம்பினது விஷத்தில் 90% புரதம் உள்ளடங்கியுள்ளது.
  9. சுறா மீன்கள் 100 வருடங்களுக்கும் அதிகமாக வாழக்கூடியதாகும்.
  10. நத்தைகள் தனது வாயில் 135 பல்வரிசைகளில் மொத்தமாக 14175 பற்களைக் கொண்டுள்ளன.