Showing posts with label உடல் நலம். Show all posts
Showing posts with label உடல் நலம். Show all posts

Saturday, April 14, 2012

காய்கறியிலுள்ள மருத்துவக்குணம்

வெங்காயம் 
வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க, புகழ்மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு வருகிறது. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது. நோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.

காரட் 
நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் பொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட் தான்.
ஆரஞ்சு 
வைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.

Sunday, April 8, 2012

மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’

 பாகற்காய் கசப்பானது என்றாலும், பலருக்குப் பிடித்தமான காய்கறி. தற்போது பாகற்காய் தரும் மற்றொரு இனிப்பான செய்தி, இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிர்ப்பு அரணாக அமையும் என்பது. இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் விஞ்ஞானி என்பது கூடுதல் மகிழ்ச்சியளிக்கும் விஷயம்.
மார்பகப் புற்று செல் வளர்ச்சியை பாகற்காய் குறிப்பிட்ட அளவு கட்டுப்படுத்துகிறது, எனவே இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிராக ஒரு தடுப்பு அமைப்பாகச் செயல்படும் என்பதுதான் புதிய கண்டுபிடிப்பின் சாரம்.
இந்தக் கண்டுபிடிப்புக்குச் சொந்தக்காரர், அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழக நோயியல் துறை பேராசிரியை ரத்னா ரே.
“மார்பகப் புற்றுநோயைத் தடுப்பதற்கு பாகற்காய் சாறை மருந்தாகப் பயன்படுத்த முடியும்” என்கிறார் இவர்.
 ரத்னா ரேயின் இந்தக் கண்டுபிடிப்பு, அமெரிக்க புற்றுநோய்க் கழகத்தின் இதழான `கேன்சர் ரிசர்ச்’-ல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு செய்யப்பட்ட ஆய்வுகளிலேயே பாகற்காயானது, `ஹைப்போகிளைசீமிக்’ (ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைப்பது) மற்றும் `ஹைப்போலிபிடெமிக்’ தாக்கங்களை ஏற்படுத்துவது தெரியவந்திருக்கிறது என்கிறார் ரத்னா. இந் தத் தாக்கங்களின் காரணமாக, இந்திய நாட்டுப்புற மருந்துகளில் சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்துவதற்குப் பாகற்காய் சாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா தவிர, சீனா, மத்திய அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் பாரம்பரிய மருந்துகளில் பாகற்காய் பயன்படுத்தப்படுகிறது.
ரத்னா ரேயும் அவரது சக ஆராய்ச்சியாளர்களும் மனித மார்பகப் புற்றுநோய் செல்களையும், மனித பாலூட்டிச் சுரப்பி `எபிதீலியல்’ செல்களையும் ஆய்வகத்தில் வைத்து ஆராய்ந்தனர். அப்போது, பாகற்காயில் இருந்து வடித்து எடுக்கப்பட்ட பொருள், மார்பகப் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி மற்றும் பிரிவை குறிப்பிடத்தக்க அளவு குறைத்ததோடு, அவற்றை அழிக்கவும் செய்தது. இந்த ஆரம்பகட்ட முடிவுகள், மார்பகப் புற்றுநோய் ஆய்வில் ஊக்கம் அளிப்பவையாக அமைந்துள்ளன.
“பெண்களின் முக்கியமான உயிர்க்கொல்லியாக மார்பகப் புற்றுநோய் உள்ளது. அதற்குத் தடை போட முடியுமா என்று பல்வேறு ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தற்போதைய ஆய்வில் கிடைத்திருக்கும் முடிவுகள் முக்கியமானவை” என்று கொலோராடோ பல்கலைக்கழக மருந்து அறிவியல் துறைப் பேராசிரியர் ராஜேஷ் அகர்வால் தெரிவிக்கிறார்.
“தொடர்ந்து நடத்தும் ஆய்வுகளில், பாகற்காயைப் பற்றிய இந்த உண்மை உறுதியானால், மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான விஷயங்களில் இதுவும் ஒன்று என்பது உறுதிப்படும்” என்கிறார் அகர்வால்.
`கேன்சர் ரிசர்ச்’ பத்திரிகையின் இணை ஆசிரியராகவும் உள்ள அகர்வால் மேலும் கூறுகையில், பாகற்காயைப் பற்றிய ஆய்வின் எளிமையான தன்மை, தெளிவான முடிவுகள், இந்தக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் ஆகியவற்றின் காரணமாக, முந்தைய ஆய்வுகளில் இருந்து இது பெரிதும் வேறுபடுகிறது என்கிறார்.
அதேநேரத்தில், புற்றுநோய்க்கு எதிராக பாகற்காயின் தடுப்புத் திறனை வெளிப்படுத்துவதில் தற்போது ஓரடிதான் முன்னே வைக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறுகிறார் இவர்.
“மார்பகப் புற்றுநோய் செல்களின் மூலக்கூறுகளை பாகற்காய் சாறு எவ்வாறு குறி வைக்கிறது என்று நன்றாகப் புரிந்துகொள்வதற்கும், அதில் இதன் திறனை வெளிப்படுத்துவதற்கும் தொடர்ந்து மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்கிறார் அகர்வால்.
அதேநேரம் இவர் ஓர் எச்சரிக்கையையும் விடுக்கிறார்.
அதாவது, தற்போது கிடைத்திருக்கும் முடிவுகள், பாகற்காயை ஒரு புற்றுநோய் எதிர்ப்பு மூலமாக நம்பிக்கை அளித்தாலும், இந்த முடிவுகளின் மதிப்புகளை நிறுவுவதும், மனிதர்களுக்கு மருந்தாகக் கொடுப்பதற்கு முன் விலங்குகளில் இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதும் முக்கியமானது என்கிறார்.
ரத்னா ரேயும், அவரது சக ஆராய்ச்சியாளர்களும், புற்றுநோய் செல்களின் வளர்ச்சி, பிரிவைத் தடுக்கும் பாகற்காய் சாறின் தன்மையை உறுதிப்படுத்துவதற்கு மேலும் பலவித புற்றுநோய் செல்களில் அவற்றைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இதை மருந்தாகக் கொடுத்து ஆய்வு செய்யவும் முடிவு செய்திருக்கின்றனர்.
பாகற்காய் வடிபொருள், ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. மேற்கத்திய நாடுகளிலும் இது மருத்துவத் தன்மை வாய்ந்த உணவுப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. காரணம் இது, `மார்மோர்டின்’, `வைட்டமின் சி’, `கரோட்டினாய்டுகள்’, `பிளேவனாய்டுகள்’, `பாலிபினால்கள்’ போன்றவற்றைக் கொண்டுள்ளது.      
 நன்றி: உங்களுக்காக

Thursday, April 5, 2012

இரவில் நிம்மதியாய் தூங்க........

சில நாட்களில் நாம் இரவில் சரியாக தூக்கம் இல்லாமல் பல நினைவுகளுடன் அவஸ்தைப்பட்டு இருப்போம். இது போன்று இரவில் தூக்கம் வராததற்கு நாம் உட்கொள்ளும் உணவு காரணமாக அமைகிறது. கீழ்க்காணும் 5 வகையான உணவுகள் உங்களின் இரவு உறக்கத்திற்கு பெரிதும் உதவுகின்றது .
1.பால் உணவுகள் (Dairy foods):
உணவு பொருட்களில் இருக்கும் tryptophan என்ற பொருள் நிம்மதியான உறக்கத்திற்கு உதவுகிறது. பால் உணவுகளில் இருக்கும் கால்சியம் இந்த tryptophan பொருளை பயன்படுத்தி melatonin என்ற பொருளை உற்பத்தி செய்கிறது. இது மூளைக்கு அமைதியை ஏற்படுத்தி நிம்மதியான உறக்கத்தை அளிப்பதாக ஆராய்ச்சி தகவல்கள் கூறுகின்றன. 
2. ஓட்ஸ் உணவுகள் (Oats)
ஓட்ஸ் உணவுகளில் மேலே சொல்லப்பட்ட melatonin என்ற பொருள் அதிக அளவில் உள்ளது. மேலும் இது உடலின் சீரான  இயக்கத்திற்கு பெரிதும் உதவுகிறது. ஓட்ஸ் இல் கால்சியம் மற்றும் மெக்னீசியம் பொருட்களும் அதிக அளவில் உள்ளன. ஓட்ஸ் ஐ பாலுடன் சேர்த்து சாப்பிடுவது மிகவும் சிறந்தது.  

3. வாழைப்பழம் (Bananas):
உடலில் ஏற்படும் தசை பிடுப்புகள் தூக்கம் வராததற்கு காரணமாக அமைகின்றன. வாழைப்பழங்களில் உள்ள  மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உங்களில் உடலின் தசைகளை சீராக இயக்க உதவுகின்றது. இரவு சாப்பாட்டிற்கு வாழைப்பழம் சிறந்த உணவு. (www.kalvikalanjiam.com)
நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) இல் உள்ள University of New England ஆராய்ச்சி கூடத்தின் விஞ்ஞானிகள் இரவில் வாழைப்பழம் சாபிடுவது சிறந்த உறக்கத்திற்கு உதவுவதாக நிரூபித்துள்ளனர்.
4. செர்ரி உணவுகள் (Cherries)
செர்ரிகளில் உள்ள melatonin பொருள் சிறந்த உறக்கத்தை அளிப்பதோடு செர்ரி உணவில் உள்ள மற்ற பொருட்கள் நல்ல உடல் ஆரோக்கியதிகும் உதவுகின்றன.
The Journal of Sleep and Sleep Disorders Research என்ற ஆராய்ச்சி பத்திரிகையில் செர்ரி உணவுகளில் உள்ள பொருட்கள் சிறந்த மற்றும் வேகமான உறக்கத்திற்கு உதவுவதாக கூறுகின்றனர்.
5. ஆளி விதைகள் (Flax seeds)

ஆளி விதைகளில் உள்ள பொருட்கள் நம்முடைய தசைகள் மற்றும் நரம்பு மண்டலங்களின் சீரான இயக்கத்திற்கு உதவுகின்றன.
என்ன நிம்மதியான உறக்கத்திற்கு தயார்தானே?  


Wednesday, April 4, 2012

பேரீச்சம் பழம்

 பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு எளிதில் கிடைக்கும் பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.
இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது. சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம். இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.
கண்பார்வை தெளிவடைய:
வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து  சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
பெண்களுக்கு:
பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது. மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.
ஆண்களுக்கு:
ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிக்க தேனுடன் பேரீச்சம்பழம் பெரிதும் உதவுகிறது.
சளி இருமலுக்கு:
பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
நரம்பு தளர்ச்சி நீங்க:
அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் படுவார்கள். இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.
பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.
பேரீச்சைப் பழத்தின் இன்னும் சில நன்மைகள்:
* இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்.
* எலும்புகளை பலப்படுத்தும்.
* இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.
*முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும்.
* புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும்.
*பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் அண்டாது.

Sunday, April 1, 2012

அறியாத சில விடயங்கள் - 7



  • நமது ரத்தம் சுமார் 30 கோடி கி.மீ.பயணிக்கிறது.
  •  நுரையீரல்கள் 23,040 முறை சுவாசிக்கின்றன.
  •  13,670 லிட்டர் காற்று சுவாசிக்கப்படுகிறது.
  •  இதயம் 1,03,689 முறை துடிக்கிறது.
  •  7 லட்சம் மூளை அணுக்கள் இயங்குகின்றன.
  •  முடி 0.425256 செ.மீ. நீளம் வளரும்.
  •  வாய் 4,800 வார்த்தைகள் பேசும்.
  •  தோல் 3/4 லிட்டர் வியர்வையை வெளியேற்றும்

Monday, March 12, 2012

அறியாத சில விடயங்கள் - 6

ஒவ்வொரு கண்ணும் கண் விழிகளைச் சுழற்ற ஆறு தசைகளைப் பெற்றுள்ளன. அதன் இயக்கங்கள் சமமாக உள்ளதால் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறான திசைகளில் பார்ப்பது நமக்கு முடியாததாக இருக்கிறது. பார்வையற்றவர்கள் பார்வை உள்ளவர்களைவிட பேசும் வார்த்தைகளை மிக விரைவாகப் புரிந்துகொள்கிறார்கள்.
நமது கைகளில் உள்ள கட்டை விரல்கள் தான் மூளையால் அதிகம் வேலை வாங்கப்படும் உடல் உறுப்பாகும்.
விமான நிலையங்களின் அருகே வசிப்பவர்களுக்கு மனத்தளர்ச்சி, செவி மற்றும் நரம்புக்கோளாறுகள், வயிற்றுப்புண் ஆகிய நோய்களால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் எனப் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்

Thursday, March 8, 2012

குழந்தைகளுக்கு உதடு பிளவா - இலவச சிகிச்சை



பிறக்கும் குழந்தைகளிடம் உதடும் மூக்கும் சேர்ந்து இருப்பதை பார்த்திருப்பீர்கள். இதனை cleft lip and cleft palate problem என்பார்கள். 
உதட்டில் இப்படியான பிளவுடன் ஆண்டுதோறும், இந்தியாவில், சுமார் 35,000 குழந்தைகள் வரை பிறப்பதாக சமீபத்திய டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் செய்தியறிக்கை தெரிவிக்கின்றது. 

குழந்தைகள் வளர வளர உடல்ரீதியாகவும், உளவியல்ரீதியாகவும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்த பிரச்சனையை முற்றிலுமாக குணப்படுத்த முடியும்.

தற்போது இதற்கான சிகிச்சையை இலவசமாக வழங்குகின்றது மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை. SMILE TRAIN என்ற அமைப்புடன் இணைந்து இதனை மேற்கொள்கின்றது. குழந்தையுடன் ஓரிரு ஆட்கள் தங்கலாம். மருத்துவ செலவுகள் மற்றும் மறைமுக செலவுகள் எதுவும் கிடையாது.

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தன் தந்தைக்கு சிகிச்சை பார்த்து வரும் சகோதரர் சுல்தான் மைதீன் அவர்கள் இதனை கூறி மற்றவர்களுக்கு தெரிவிக்க சொன்னார். நாங்களும் இதுக்குறித்து மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் சம்பந்தப்பட்ட துறையை தொடர்புக்கொண்டு மேலே கூறியவற்றை விசாரித்து உறுதிபடுத்திக்கொண்டோம்.

நீங்கள் அறிந்தவர்களின் குழந்தைகள் இப்படியான பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையை தொடர்புக்கொள்ளுங்கள். நீங்களும் ஒருமுறை நன்றாக விசாரித்து கொள்ளுங்கள். நீங்கள் அறிந்தவர்களுக்கு இதுக்குறித்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். குழந்தைகளின் உளவியல்ரீதியான பாதிப்புகளை களைந்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம்.

இது குறித்து மேலும் விபரங்கள் அறிய:

Meenakshi Mission Hospital & Research Centre
Lake Area, melur Road,
Madurai, Tamil Nadu,
India - 625 107.
Phone: 0452-4263000

மற்றும் SMILE TRAIN அமைப்பு குறித்து பார்க்க: http://www.smiletrain.org

நன்றி: சகோதரர் ஆஷிக் அஹ்மத். (எதிர்க்குரல்).....

Wednesday, March 7, 2012

அறியாத சில விடயங்கள் - 5

ரத்தக் கொதிப்பு நோயாளிகள் உருளைக் கிழங்கை அவித்து தோலுடன் சாப்பிட்டு வரவும். தினமும் ஒருவேளை மட்டும் சாப்பிடலாம்.
 சர்க்கரை நோயாளிகள் பாகற்காய் துண்டுகளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்த வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாறாகச் சாப்பிடுவதைவிட இது எளிதாக இருக்கும்.
பீட்ரூட் சூப்பை இரவு படுக்கைக்குச் செல்லும்போது அருந்திவிட்டுப்படுத்தால் நாள்பட்ட மலச்சிக்கலும் அகலும். தலைவலி, பல்வலி என்றாலும் பீட்ரூட் சூப்பை பீட்ரூட்டுடன் சேர்த்தே அருந்தலாம்.
 தொண்டைப்புண் ஏற்பட்டிருந்தால் மஞ்சள் பொடியை போட்டுக் கொதிக்க வைத்த நீரை வாயில் ஊற்றிக்கொண்டு, தொண்டையில் படும்படி சற்று நேரம் வைத்திருந்த பிறகு கொப்பளித்துவிடவும். சில வேளைகள் செய்தால் போதும். தொண்டைப்புண் பறந்தோடும்.

Friday, March 2, 2012

சர்க்கரை நோயும் -நபிவழி மருத்துவமும்

"நான் நோயுறும்போது அவனே (அல்லாஹ்வே) எனக்கு நிவாரணம் தருகின்றான்'' (அல்குர்ஆன் 26:80)
மேற்கண்டபடி நோய்க்கான நிவாரணத்தை தானே தருவதாக அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் சொல்லிக் காட்டுகிறான்.  இதேபோல நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், எல்லா நோய் களுக்கும் இப்பூமியில் நிவாரணம் உண்டு என்கிறார்கள்.
கடந்த 14 நூற்றாண்டுகளாக முஸ்லிம்களால் வளர்ச்சி கண்டு வரும் யுனானி மருத்துவம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமு றையை அடிப்ப டையாகக் கொண் டுள்ளது.  எவருடைய வாழ்க்கை முறை சுன்னத்தான (நபி வழி) அடிப்படையில் அமைந்திருக்கிறதோ அவர்களுக்கு யுனானி மருத்துவம் அற்புதமான முறையில் பலனளிக் கும் என்பது திண்ணம்.
முஸ்லிம்கள் கட்டுப்பாடற்ற உணவுப் பழக்கத்திலிருந்தும், நேரம் தவறி உண்ணும் பழக்கத்திலிருந்தும் தவிர்த்துக் கொள்ள அறிவுறுத்துகிறது இஸ்லாம்.
ஒரு முஸ்லிம் அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காலி என்ற நிலை யில் உணவுப் பழக்கத்தை கடை பிடிக்க வேண்டும். நீங்கள் உண்ணும்போது மூன்றில் ஒரு பகுதி உணவும், மூன்றில் ஒரு பகுதி தண்ணீரும், மீதமுள்ள பகுதியை (மூச்சு விடுவதற்காக) காலியாகவும் விட்டு வையுங்கள் என்று நபி (ஸல்) கூறியுள்ளது குறிப்பிடத்தக் கது.

நன்றாகப் பசித்த பின்னர்தான் உணவு உட்கொள்ள வேண்டும் என்றும் இஸ்லாம் போதிக்கிறது. ஒருவருக்கு விருப்பமான உண வாக இருந்தாலும் அதை மூச்சு முட்ட உண்பதை தவிர்க்கச் சொல்கி றது இஸ்லாம்.
ஒரு முஸ்லிமின் சுன் னத்தான உணவுப் பழக்கம் என்பது, சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் அருந்த வேண்டும். சாப்பிட்ட பின்னர் சுமார் அரை மணி நேரம்வரை நீர ருந்தக் கூடாது.
உணவின் சுவைக்காக மசாலாப் பொருட்கள் உணவில் சேர்க்கப்படுகின் றன. ஆனால் தக்காளி, புளி, தேங்காய், மஞ்சள் மற்றும் மிளகாய் ஆகியவற்றை உணவுப் பொருட்களில் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
உணவை நன்றாக மென்று அரைத்து அதன்பின் உட் கொள்ள வேண்டும். இது உணவை விரைந்து செரி மாணமாக்கும். தரையில் அமர்ந்து உண்பது சிறப் பானதாகும்.
ஒரு நீரிழிவு நோயாளி ஒரு நாளை க்கு 6 முதல் 8 மணி நேரங்கள் வரை கண்டிப்பாக தூங்க வேண்டியது அவசியம். நீரிழிவு நோயாளி மதிய உணவுக்குப் பின் உடனடி யாக ஒரு மணி நேரமா வது தூங்குவது அவசியமாகும்.
ஆலிவ் (ஒலிவம்) எண் ணெய்யை சமையலுக்கு பயன்படுத்தினால் லட்சக்கணக்கான நீரிழிவு நோயாளிகளின் வாழ்வை பாதுகாக்க முடியும். ஆலிவ் எண்ணெயை தலையில் தேய்ப்பதும், பாதாம் எண்ணெயின் சில துளிகளை பாலில் கலந்து இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன் உட்கொள்வதும் நீரிழிவு நோயாளிக ளுக்கு நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும்.
நீரிழிவு நோயாளி உணவில் வினிகரை (காடி) சேர்த்துக் கொள்வது நல்லது. ஒன்று அல்லது இரண்டு கரண்டி அளவுக்கு வினிகரை வழக்கமான சமையல் மற்றும் மசாலா பொருட்களோடு சேர்த்துக் கொண்டால் அற்புதமான முறையில் ஜீரணக் குறைபாடுகள் நீங்கும். ஒரு நீரிழிவு நோயாளி தேவையற்ற வகையில் உடலை வருத் திக் கொள்வதையோ மனஉளைச்சல் அடை வதையோ தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இருப்பதைக் கொண்டு திருப்தி கொள்ளும் வகை யில் ஒரு முஸ்லிம் இருக்க வேண்டும். நமக்கு ஏற்படும் (நன்மை தீமைகள்) அனைத்தும் அல்லாஹ் விதித்தபடியே நடக்கி றது என்பதை முஸ்லிம்கள் மன தார ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நீரிழிவு நோயா ளிகள் சுத்தமான தேன், மாதுளை, கருப்பு திரா ட்சை, பேரீ ட்சை, அத்திக் காய், ஆலிவ் காய் ஆகியவற்றை பயன்படுத்துவது சிறந்த பலனைத் தரும்.

நீரிழிவு நோயாளி ஒருவர் மேற்கண்டபடி நபிவழியி லான இயற்கை உணவுகளுடன் கூடிய உணவுக் கட்டுப்பாட்டை கடை பிடித்தால் நிச்சயமாக நீரிழிவு நோயின் காரணமாக உண்டாகும் கிட்னி, இருதயம், நுரையீரல், மூளை, கண்கள் போன்ற முக்கிய உறுப்புகள் பாதிப்பிலிருந்து விடுபடலாம்.
நீரிழிவு நோய் என்பதை மருத்துவத்துறை மெட்டா போலிக் டிஸ்ஆர்டர் என்று அழைக்கிறது. அதாவது உடலுக்கு தேவையான இன்சூலின் சுரக்காமல் போவது அல்லது இன்சூலினை சுரக்கச் செய்யும் செல்கள் செயல்படாமல் போவதாகும். இதன் விளைவால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடி விடும்.
அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிகளவு தாகம், உடல் சோர்வு, உடல் வலி போன்றவை நீரிழிவு நோயின் அறிகுறிகளாகும். நீரிழிவு நோய் என்பது இன்றைய நிலையில் மனிதர் களை மெல்ல மெல்லக் கொல்லும் மிகப்பெரும் ஆபத்து களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. மருத்துவ உலகம் இது குறித்து எச்சரிக்கை செய்கின்றது.
எனவே நீரிழிவு நோய் தாக்காமல் தற்காத்துக் கொள்ள மேற்சொன்ன நபிவழியில் அமைந்த உணவு முறையை கட்டுப்பாட்டோடு கடைபிடித்தால் சந்தோ ஷமாக, ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழலாம். 
- டாக்டர் ஹக்கீம் சையத் ஷா. ஷோய்புதீன், 
ஷிஃபா யுனானி ஹர்பல் கிளினிக்

Wednesday, February 29, 2012

குங்குமப்பூ

கல்லீரல் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் குங்குமப்பூ


கல்லீரல் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கு குங்குமப்பூ உதவும் என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. ஐக்கிய அரபு குடியரசு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அமீன் தலைமையிலான குழுவினர் கல்லீரல் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
இவர்கள் எலியைக் கொண்டு சோதனை மேற்கொண்டனர். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட எலிகளுக்கு 2 வாரங்களுக்கு தினமும் குங்குமப் பூவை வெவ்வேறு அளவுகளில் கொடுத்து வந்தனர்.

பின்னர் செயற்கையாக கல்லீரல் புற்றுநோயை உருவாக்குவதற்கான டை எத்தில் நைட்ரோசமைன்(டென்) என்ற மருந்தை செலுத்தினர். 22 வாரங்கள் கழித்து பரிசோதனை செய்ததில், அதிக அளவில் குங்குமப்பூ கொடுக்கப்பட்ட எலிகளுக்கு குறைவாக கொடுக்கப்பட்ட எலிகளைவிட புற்றுநோய் செல்களின் வளர்ச்சி குறைவாக காணப்பட்டது.
இதன் மூலம் குங்குமப்பூ கல்லீரல் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் என உறுதி செய்தனர். உணவுப் பொருட்களுக்கு ஆரஞ்ச் வண்ணம் கொடுப்பதற்காக குங்குமப் பூ பயன்படுத்தப்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட இது கல்லீரல் புற்றுநோய்க்குக் காரணமான செல்களை அழிக்கிறது அல்லது வளர்வதைக் கட்டுப்படுத்துகிறது என அமீன் தெரிவித்தார்.
ஒரு பெண் கருவுற்றிருக்கும்போது, தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை சிவப்பாகவும், கொழுகொழுவென்றும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பே.
இதற்காக குங்குமப் பூவை பசும்பாலில் கலந்து அருந்துவார்கள். இது ஒரு சம்பிரதாயம் போல் அனைத்து இடங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.
இருப்பினும், இந்த குங்குமப்பூ உண்மையிலேயே குழந்தைக்கு நல்ல நிறத்தையும், போஷாக்கையும் தருகிறதா? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுவதுண்டு.
குங்குமப்பூவானது குழந்தைக்கு நிறத்தைக் கொடுக்கும் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை. ஆனால், கருவுற்ற 5 மாதத்திலிருந்து 9வது மாதம் வரை குங்குமப் பூவை பாலில் கலந்து குடித்து வந்தால் தாயின் இரத்தம் சுத்தப்படுவதுடன், குழந்தைக்கு தேவையான சத்துக்களும் எளிதில் கிடைக்கும். இதனால் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது. ஆரோக்கிய குழந்தை தான் அழகான குழந்தை என்பதை அறிந்த நம் முன்னோர்கள் குங்குமப்பூவை கருவுற்ற பெண்களுக்கு கொடுத்தார்கள்.

நலமான குழந்தையை பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது. குங்குமப்பூவை ஞாழல்பூ, காஷ்மீரம் என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.

Tamil - Kungumapoo

English - Saffron
Malayalam - Kunguma Poo
Telugu - Kumkuma poova
Sanskrit - kumkuma
Botanical Name - Crocus sativus


இது குமராஸ் இனத்தைச் சேர்ந்த பூண்டின் பூக்களிலுள்ள மகரந்த தாள்களே ஆகும். செம் மஞ்சள் நிறத்துடன் காணப்படும். இதை நீரிலிட்டால் சிறிது நேரத்தில் நீர் முழுவதும் நிறம் மாறும். இந்த குங்குமப் பூவானது வடமேற்கு நாடுகளிலும் இந்தியாவில் காஷ்மீரத்திலும் பயிராகிறது. ஒருவித வாசனையோடு சிறிது மினுமினுப்பாய் தோன்றும்.

இரத்தம் சுத்தமடைய 

குங்குமப் பூ இரத்தத்தை சுத்தமாக்கும் தன்மை கொண்டது. இதனால் கருவுற்ற பெண்களுக்கு 5 மாதம் முதல் 9 மாதம் வரை கொடுப்பார்கள். இரத்தச் சோகையைப் போக்கி குழந்தையும் தாயும் ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்யும். பிறக்கும் குழந்தை நல்ல நிறப்பொலிவுடன் பிறக்கும் என்பது சித்தர் கருத்து.
குங்குமப் பூவை வெற்றிலையோடு சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் அல்லது பாலிலிட்டுக் காய்ச்சி அருந்தினாலும் பிறக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கும். பிரசவத்தின்போது உண்டாகும் வலியைக் குறைத்து குழந்தையை சுகப்பிரசவமாக பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது.

பிரசவித்த தாய்மார்களுக்கு
பிரசவித்த தாய்மார்களுக்கு உண்டாகும் குருதியிழப்பை சரிகட்டவும், மயக்கத்தைப் போக்கி புத்துணர்வு கொடுக்கவும், இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கவும் தினமும் 1/2 கிராம் அளவு 1 டம்ளர் பாலில் கலந்து அருந்துதல் நல்லது.

நன்கு பசியைத் தூண்ட
குங்குமப் பூவை பாலில் இட்டு காய்ச்சி இரவு படுக்கைக்கு செல்லும் முன் அருந்தி வந்தால் ஜீரண சக்தி அதிகரித்து நன்கு பசியைக் கொடுக்கும்.
குங்குமப்பூவை பாலில் கலந்து அருந்தி வந்தால் தாது விருத்தியாகும், வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும், இரத்தம் சுத்தமாகும், இரத்தச்சோகை நீங்கும்.
கருவுற்ற பெண்களுக்கு சளி, இருமல் இருந்தால் அது குழந்தையின் நலத்திற்கு கேடு விளைவிக்கும். சளி இருமல் தாக்காமல் இருக்க குங்குமப்பூ சிறந்த மருந்தாகும்.
தரமான குங்குமப்பூ 1 கிராம் சுமார் ரூ.500/- க்கு விற்பனையாகிறது.
ஆரோக்கியமான குழந்தை பிறக்க குங்குமப்பூ உதவும் என்பது அழுத்தமான உண்மை .



குங்குமப்பூ மகத்துவம்
சிகப்பழகைப் பெறத் துடிக்கும் பெண்மணிகள் முக அழகு கிரீம்களை தேட வேண்டியதில்லை. குங்குமப்பூ ஒன்றே போதும்.


குங்குமப்பூவை பயன்படுத்தும் முறைகள்:-

1. குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும்.
2. குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும்.
3. இந்த கலவையை தினமும் பூசிவர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.

4. இந்த கலவையை நகங்கள் மீது பூசி வர நகங்களும் இயல்பான நிறம் பெறும். நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும்.
5. முகத்திற்கு வசீகரத்தை தருவது கவர்ச்சி மிகு கண்கள்தான் அந்த கண்களுக்கு பளிச் அழகைத் தருவது அடர்த்தியான இமைகள் பட்டாம்பூச்சி போல படபடக்கும் இமைகள் அமைய குங்குமப்பூ உதவுகிறது.
6. எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில் உண்டு. உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது.
7. குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளவும. அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாகக் காணலாம்.

சில பெண்கள் நல்ல நிறமாக இருப்பார்கள். ஆனால் உதடுகள் மட்டும் கருமை படர்ந்து அசிங்கமாக இருக்கும். இப்படிப்பட்ட பெண்கள் குங்குமப்பூவை பயன்படுத்தினால் அழகு சிலையாக மாறி அசத்தலாம்.மேலும் கர்ப்பிணிகள் பாலில் குங்குமப்பூவை கலந்து சாப்பிட்டால் குழந்தை மிகவும் சிவப்பாக இருக்கும்.
 நன்றி,சகோதரர் அன்சார் .

Thursday, February 23, 2012

வலிகளும், நிவாரணங்களும்

1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.

2.
எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்... கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது. 

3.
பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.

4.
எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ்தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.
5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியைப் பாதிக்கும்.

6.
எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள்தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.

 7.
வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

8.
கால் தடுமாறி பிசகிவிட்டால்... உடனே 'கையால் நீவிவிடு' என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவிவிடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.

9.
குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்... நாற்காலியும் செருப்பும்கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா... நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா... என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து 'ரிலாக்ஸ்' செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.  
தகவல் - மனசாலி
நன்றி,பயனுள்ள தகவல்கள்.

Friday, February 17, 2012

என்றும் இளமையுடன் இருக்க மாதுளம்பழம்


உண்மையான வயதை சொல்வதற்கு சிலர் தயங்குவர். என்னதான் வயதை குறைத்து சொன்னாலும் அவர்களின் உடல் தோற்றம் காட்டிக் கொடுத்து விடும். இதிலிருந்து தப்பித்துக் கொள்ள மாதுளம்பழம் சாப்பிடுவது  நல்லது.
மாதுளம் பழத்தின் பயன்கள் பற்றி ஸ்பெயின் நாட்டின் முர்சியாவில் உள்ள புரோபெல்ட் பயோ லெபாரட்டரியைச் சேர்ந்த டாக்டர் செர்கியோ ஸ்ட்ரீட்டென்பெர்கர் தலைமையிலான குழுவினர் ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.
மாதுளம்பழ தோல், அதனுள் இருக்கும் முத்து, விதை ஆகியவற்றை உள்ளடக்கிய பதப்படுத்தப்பட்ட பொருள் 60 பேருக்கு ஒரு மாத காலத்துக்கு வழங்கப்பட்டது. அவர்களுடைய உடலில் நடைபெறும் ரசாயன மாற்றங்களை, இத்தகைய  பொருள் சாப்பிடாதவர்களுடன் ஒப்பிடப்பட் டது.
மாதுளம் பழத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளை சாப்பிட்டர்களின் உடல் செல்கள் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது தேய்வடைவது குறைவாக இருந்தது. அதாவது மூளை, தசை, கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்  பலவீனமாவதை குறைக்கிறது.
மேலும் முதுமைக்கு முக்கியமான அறிகுறியாக விளங்கும் தோல் சுருக்கத்துக்கு காரணமாக உள்ள செல்களின் டிஎன்ஏவை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால், வயது அதிகமானாலும், தோலில் சுருக்கம் ஏற்படாது. இதனால்,  இளமையுடன் இருக்கலாம்.
இதய நோய் வராமல் தடுக்கவும், மன அழுத்தத்திலிருந்து விடுபடவும், செக்ஸ் உணர்வுக்கு ஊக்கமளிக்கவும் மாதுளம்   பழம் உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக வெறும் முத்துக்களை சாப்பிடுவதைவிட, அதன் தோல்  மற்றும் விதை ஆகிய அனைத்தையும் பதப்படுத்தி சாப்பிடுவது கூடுதல் பலனளிக்கும்.
நன்றி,

Tuesday, February 14, 2012

ஒரே இடத்தில் இருந்தபடி வேலை பார்க்கிறீர்களா? : உயிருக்கே ஆபத்து

 அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது உடல் நலனிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஒரு நாளில் பெரும்பாலான நேரம் உட்கார்ந்தே இருப்பவர்களில் 54 சதவீதம் பேருக்கு மாரடைப்பு தாக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாக எச்சரிக்கின்றது அந்த ஆய்வு முடிவு.

ஒரே இடத்தில் உட்கார்ந்தே இருப்பவர்களுக்கு உடல் பருமன், டைப் 2 நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் புதிதாக நடைபெற்ற ஆய்வில் அதிக நேரம் அமர்ந்த நிலையில் வேலை பார்ப்பது உயிருக்கே ஆபத்தாகும் என்று தெரியவந்துள்ளது. லூசியானாவிலுள்ள பென்னிங்டன் பயோ மெடிக்கல் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக 13 ஆண்டுகள் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பவர்களைப் பற்றி மருத்துவர் டேவிட் கேவன் தலைமையிலான குழு ஆய்வு நடத்தியது. ஆண், பெண் என மொத்தம் 17 ஆயிரம் பேரிடம் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாரடைப்பு ஏற்படும்
ஒரு நாளில் பெரும்பாலான நேரம் உட்கார்ந்தே இருப்பவர்களில் 54 சதவீதம் பேருக்கு மாரடைப்பு தாக்க ஏராளமான வாய்ப்புகளுண்டு என்கிறது ஆய்வு. இது சிகரெட் புகைப்பதைப் போல உயிருக்கு மிகவும் அபாயகரமானது.

சிகரெட் புகைப்பதால் இருதயத்திலும்இ மூச்சுக் குழாயிலும் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தும். இது உயிருக்கு மிக ஆபத்தானது. அதேபோல உட்கார்ந்தே இருப்பதாலும், அதே அளவுக்கு உடலில் ஆபத்து ஏற்படுமாம்.

உயிருக்கு ஆபத்து
ஒரு நாளைக்கு ஆறு மணி நேரத்திற்கும் மேல் ஒரே இடத்தில் உட்கார்ந்தே இருப்பவர்களில் 54 சதவீதம் பேரின் உயிருக்கு ஆபத்து மிக அதிகம். அவ்வாறு உட்கார்ந்தே இருக்கும் போது உடலின் செயல்பாடுகள் ஸ்தம்பித்து ஸ்டோரேஜ் தன்மையை அடைந்து விடுகிறதாம். புளி மூட்டையை தூக்கி வைத்தது போல உடல் செயலிழந்து தேக்க நிலையில் இருக்குமாம். அது செயல்படும் திறனை இழந்துவிடுகிறது. இதனால் உடலின் முக்கியமான உறுப்புகள் பாதிக்கப்பட்டுவிடும். மொத்தத்தில் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையை ஏற்படுத்திவிடும் என்கிறது ஆய்வு.

அடிக்கடி நடங்க
நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை பார்க்க வேண்டாம். அதையும் மீறி உட்கார வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் இடையிடையே சில நிமிடங்கள் எழுந்து நின்று கொள்ளுங்கள். சிறிது தூரம் நடக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் உடலில் ரத்த ஓட்டம் சீரடையும். உடலில் ரத்த ஓட்டம் ஸ்டோரேஜ் நிலையை அடையாது, உயிருக்கும் ஆபத்தில்லை என்று டிப்ஸ் தருகிறார் டாக்டர் டேவிட் கேவன்.



பணக்கார நோய்கள் என்று இதைத்தான் சொல்வார்கள் போலும்..
நன்றி,
சகோதரர் அன்சார் (மின்னஞ்சலூடாக....)

Monday, February 6, 2012

மாணவர்கள் நினைவாற்றல் அதிகரிக்க நெல்லிக்கனி!!

 அன்றாடம் உட்கொள்ளும் நெல்லிக்காயனது அருமருந்தாகும். இது வாதம்,பித்தம், கபம், என்னும் திரிகரண தோஷங்களையும் போக்கவல்லது. இதனாலேயே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதன் பெருமை பற்றி ஆயுர்வேத சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது. நமது முன்னோர்கள் இதனை ரசாயனம் என்றே அழைத்துள்ளனர்.
தினசரி உணவில் நெல்லிக்காயை சேர்த்துக்கொண்டால் நூறு ஆண்டுகள் வரை இளமையுடன் வாழலாம் என்று சித்தர்கள் தங்களின் குறிப்பிகளில் எழுதி வைத்துள்ளனர். உடல் நலத்திற்கு ஏற்ற நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது. பெண்களோ நெல்லிக்காயினை சௌபாக்கியம் என்று கருதி கார்த்திகை மாதத்தில் உத்தரண துவாதசி அன்று துளசிச் செடியுடன் இணைந்து பூஜிக்கின்றனர். இதிலும் கடுக்காயைப்போலவே இதில் பல வகையுண்டு பெருநெல்லி, கருநெல்லி, அருநெல்லி, என்பது. இதில் கருநெல்லி கிடைக்காதது. மற்றவை கடைகளில் கிடைக்கும்.

ஐந்து சுவை கொண்டது
ஆறு சுவைகளில் இனிப்பு, புளிப்பு, கைப்பு, துவர்ப்பு, உவர்ப்பு என்னும் ஐந்தும் நெல்லிக்காயில் உள்ளன. இதில் உள்ள இனிப்பும் உவர்ப்பும் பித்தத்தையும், புளிப்பு, கைப்பு, கபம் ஆகியவற்றையும் போக்க வல்லது.

உயிர்சத்துக்கள்
உயிர்ச்சத்துக்களான ஏ,பி,சி என்ற மூன்றும் அடங்கியுள்ளன. சாத்துக்குடிச் சாற்றில் உள்ள வைட்டமின் சத்து 20 மடங்கு இதில் உள்ளது. நெல்லிக்காய் வாடிய போதிலும் சிறிதளவும் குறைவதில்லை. நோயற்றவராக மனிதர் வாழ தினசரி 50 மில்லிகிராம் வைட்டமின் சி சத்து தேவை. இதற்கு 4 சாத்துக்குடி சாறோ, 8 அவுன்ஸ் தக்காளிச்சாறோ சாப்பிடவேண்டும். ஆனால் இந்த 50 மில்லிகிராம் வைட்டமின் சி அரை அவுன்ஸ் நெல்லிக்காயில் கிடைக்கிறது.

பித்தம் தணிக்கும்
ஜீரணக்கோளாறு, பித்த மயக்கம், ஆரோடசிகம், காமாலை, கண்நோய், இரத்தசோகை போன்றவைகளுக்கு நெல்லிக்காய் மருந்தாகும் இதனை ஊறுகாயாக செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும் இதனால் பித்தம் தணியும் உணவு எளிதில் ஜீரணமாகும்.

நீண்ட நாட்களாகியும் ஆறாமல் இருக்கும் புண்கள் ஆறிவிடும். கட்டிகள் பழுக்கும். அப்போது அதனை அரைத்து விழுதாக்கி உருட்டி உலரவைத்து அதனை சாப்பிட்டு வந்தால் குணம் தெரியும். புழுபூச்சிகளை அகற்றிவிடும் சக்தி உள்ளது நெல்லிக்கனி.

கர்ப்பிணிகளுக்கு ஏற்றது
நெல்லிக்காய் இரும்புச்சத்து உள்ளது இரத்தத்தைச் சுத்தஞ்செய்து இருதயத்தை வலுப்படுத்தும். எனவே கர்ப்பிணிகள் முதல் மாதம் தொட்டு 9 மாதங்கள் வரை காலை, மாலை, ஒரு நெல்லிக்காய் அல்லது நெல்லி முள்ளி உட்கொண்டால் அடிக்கடி வரும் வாந்தி நிற்கும். நல்ல பசியும் எடுக்கும். நெல்லிக்காயில் உள்ள இரும்பு சத்தும், சுண்ணாம்பு சத்தும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும், ரத்த விருத்தியையும், கர்ப்பிணிகளிடையே ஏற்படுத்துகிறது. மேலும் கர்ப்பத்தில் உள்ள சிசுவுக்கும் புஷ்டிகரமான ஆகாரம் கிடைக்கிறது.

நினைவாற்றல் கூடும்
பிறந்த குழந்தைகளின் உணவில் நெல்லிக்காய் சாற்றினைக் கொடுத்து வந்தால் வளரும் குழந்தைகள் தேக ஆரோக்கியத்துடன் திகழ்வார்கள். மாணவர்கள் இதனை தவறாது உட்கொண்டால் நினைவாற்றல் அதிகரிக்கும் கண்பார்வை தெளிவாகும். புத்திக்கூர்மையை ஏற்படுத்தும். குழந்தைகளுக்குக் கோணலாக முளைத்த பற்களுக்கும், காலத்தில் முளைக்காத பற்களுக்கும் கூட நெல்லிக்காய் ஏற்றது.

பல்லில் ஏற்படும் பயோரியா என்னும் வியாதிக்கு இது அருமருந்து. நெல்லியிலைச் சாற்றை கொப்பளித்து காயை உட்கொண்டால் உடன் வியாதி நீங்கும்.

நன்றி

Wednesday, February 1, 2012

இரட்டை குழந்தைகள் வீணா- வாணி

உடல் ஆரோக்கியத்தில் இல்லை, வாழ்வாதாரம் தான் பிரச்னை. ஏழ்மை காரணமாக கவனிக்க முடியாது என்று ஒதுங்கி நிற்கும் பெற்றோர்களால் இவர்களை யார் பராமரிப்பது என மருத்துவமனை வட்டாரமும், அரசும் குழம்பிபோய் இருக்கின்றனர். இந்த குழப்பம் ஒரு புறம் இருந்தாலும் இருவரும் நான் டாக்டராக வேண்டும் என்றும், நான் இன்ஞ்சினியர் ஆக வேண்டும் என்றும் தங்கள் விருப்பத்தை கூறி நம்பிக்கையுடன் வாழ்ந்து வரும் இந்த இரட்டை குழந்தைக்கு இந்த சமூகம் என்ன செய்ய போகிறது ? ஆந்திர மாநிலத்தில் வாரங்கல் மாவட்டத்தில் பீருசெட்டிங்டம் என்ற கிராமத்தில் வசித்து வரும் முரளி - நாகலட்சுமி தம்பதியினருக்கு பிறந்த குழந்தைகள் வீணா- வாணி. பிறவியில் இரண்டு தலைகளும் ஒன்றி பிறந்ததால் இவர்களை பிரிக்கும் முயற்சி விபரீதமானது என டாக்டர்கள் இதில் இறங்கவில்லை. இருப்பினும் இருவரையும்   ஐதராபாத்தில் உள்ள குழந்தைகள் சிறப்பு அரசு நிலோபர் மருத்துவமனை பராமரித்து வருகிறது. தற்போது 8 ஆண்டு வயதை தொட்டுள்ள இந்த பெண்மணிகள் அரசு ஆஸ்பத்திரியில் ஒரு மூலையில் முடங்கி கிடக்கின்றனர். ஆனால் நாங்களும் சமுதாயத்தில் ஒரு ஆளாக வாழ வேண்டும் என்று நம்பிக்கையுடன் வாழும் இவர்கள் எண்ண ஓட்டத்தில் எந்தவொரு குறைபாடும் இல்லை. ஆனால் இவர்களை இன்னும் ஆஸ்பத்திரியில் பராமரிப்பது சாத்தியமில்லை என்ற காரணத்தினால் பெற்றோர்களைவரவழைத்து என்ன செய்யலாம் என யோசனை கேட்டனர். 
நாங்களே கஷ்டப்படுகிறோம்: இருவரையும் ஆபரேஷன் மூலம் பிரித்து கொடுங்கள் என்னவானாலும் பரவாயில்லை என கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டோம் . ஆனால் இதில் மருத்துவமனை ஏன் அக்கறை காட்டவில்லை ? நாங்கேள இன்னும் வீட்டில் 2 குழந்தைகளை வளர்க்க முடியாமல் சிரமப்படுகிறோம். இந்த 
குழந்தைகளை பராமரிக்கவும், செலவு செய்யவும் எங்களிடம் எந்தவொரு வழியும் இல்லை. அரசு தரப்பில் ஏதாவது ஒரு வேலையாவது கொடுத்தால் நாங்கள் அதனை வைத்து சமாளித்து விடுவோம் . நாங்கள் குழந்தைகளை வீட்டிற்கு கொண்டு செல்ல முடியாது என்று பெற்றோர்கள் கைவிரித்து விட்டனர். இந்த பெற்றொர்கள் கடந்த ஒன்றரை வருடமாக வீணாவையும், வாணியையும் வந்து பார்க்கவில்லை என்பது ஒரு விஷயம். 
இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ரமேஷ் கூறுகையில்: தற்போது வளர்ந்து இருக்கும்இந்த குழந்தைகளை இன்னும் அரசு ஆஸ்பத்திரியில் பராமரிக்க முடியாது. இவர்கள் தொடர்ந்து இங்கு இருந்தால் உடல் வளர்ச்சியும் மன வளர்ச்சியும் பாதிக்கும். எந்த நேரமும், டாக்டர்கள், நர்சுகள், நோயாளிகள் என பார்த்து அவர்களது மனம் சிரமப்பட்டிருக்கும். தற்போது மாற்று இடம் தேவை. குழந்தைகள் மையத்தில் சேர்த்து இவர்களுக்கு தேவையான வழிகளை செய்ய வேண்டும் என்றார்.
 
 

Saturday, January 28, 2012

உடல் எடையைக் குறைக்க வழி.

“பால் கலக்காத “டீ” சாப்பிட்டால் உடல் எடை குறையும்” என ஆய்வில் தெரியவந்துள்ளது. உடல் பருமன் மற்றும் எடையை குறைக்க படாத பாடுபடுகின்றனர். மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவது மற்றும் உடற் பயிற்சி போன்றவற்றை மேற்கொள்கின்றனர். அத்துடன் பால் கலக்காத வெறும் டீயை மட்டும் குடித்தால் போதும்.
உடல் எடை அதிகரிக்காமல் கணிசமாக குறையும் என ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஏனெனில், தேயிலையில் உடல் எடையை குறைக்கக்கூடிய பல மூலப்பொருட்கள் உள்ளன. ஆனால், அதில் கலக்கப் படும் பசும் பாலில் கொழுப்பு சத்து அதிகம் உள்ளது. அது உடல் எடையை குறைப்பதற்கு பதிலாக அதிகரிக்க செய்து விடுகிறது.எனவே தான் பால் கலக்காத கடும் டீயை குடிக்க வேண்டும் என விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதே நேரத்தில் பால் கலக்காமல் குடிக்கும் வெறும் டீ ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. தினமும் 3 கப் வெறும் டீயை குடித்தாலே போதும். ரத்த அழுத்தம் குறையும் என ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

Friday, January 27, 2012

அதிசயம் ! கருவுற்ற மூன்று வயதுக்குழந்தை

 சமீபகாலமாக உலகில் நடக்கும் பல்வேறு விசித்திரமான நிகழ்வுகளின் தகவல்கள் அதிகமாக வெளிவருகின்றன. பெரு நாட்டில் 3 வயது சிறுவனின் வயிற்றுக்குள் குழந்தையின் கரு இருப்பதாக தகவல் வந்துள்ளதை அந்நாட்டில் உள்ள சிலாவோ நகரை சேர்ந்த மருத்துவர் கார்லோஸ் தெரிவித்தார்.
இதுகுறித்து கார்லோஸ் கருத்து தெரிவிக்கையில், இந்த அசாதாரண விளைவு 5 லட்சம் பேரில் ஒருவருக்கு ஏற்படலாம் எனறும், சிறுவனின் வயிற்றில் இருக்கும் கருவில் மூளை, இருதயம், நுரையீரல், குடல் போன்ற உறுப்புகள் எதுவும் உருவாகவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
 மேலும் இதன் அடிப்படையில் ஆய்வுசெய்தால், இரட்டை குழந்தை கருக்குள் தாயின் வயிற்றில் உருவாகி அதில் ஒன்று சரியாக வளர்ச்சி பெற்று குழந்தையாக மாறியதும், மற்றொரு கரு அதனுள் ஊடுருவி வளர்ச்சி பெறாமல் போனதால் இவ்வாறு நிகழ்ந்து இருக்கலாம் என்றும் விரைவில் சிறுவனின் வயிற்றில் இருக்கும் கருவை அகற்ற இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
 
 நன்றி, மனிதன்

Thursday, January 26, 2012

மூன்று கைகளுடன் பிறந்த குழந்தை

இந்தியாவில் திருப்பூர் மாவட்டத்தில் காணப்படும் அரசு மருத்துவமனையில் மூன்று கைகளுடன் பிறந்த அதிசய குழந்தையை 24 மணி நேரமும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை சேர்ந்த சுப்ரமணி மனைவி தெய்வாள். திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டு பெண் குழந்தை பிறந்தது.
பிறந்த பெண் குழந்தையின் பின்புறம் முதுகு பகுதியில் சதைப்பற்றுடன் மூன்றாவது கை போல் வளர்த்திருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவக் குழுவினர் குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கேசவன் கருத்து தெரிவிக்கையில், மூன்று கிலோ எடையுடன் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது. குழந்தையின் உடல்நிலை படிப்படியாக முன்னேறி வருகிறது.
மேலும் நல்ல உடல் ஆரோக்கியம் வந்ததும் பெற்றோர் அனுமதியுடன் பின்பகுதியில் வளர்ந்துள்ள கை போன்ற சதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு தண்டுவடம் சரிசெய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 நன்றி, மனிதன் 

Tuesday, January 24, 2012

கறிவேப்பிலையின் முத்தான பயன்கள்

முத்தான கீரை வகைகளில் முக்கியமான கீரையாக கருதப்படுவது கறிவேப்பிலை. கீரைகளின் தாய் என கறிவேப்பிலையை கருதலாம். இக்கீரை நறுமணமும் மருத்துவ குணங்களும் நிறைந்தது. இக்கீரை எல்லாக் காலங்களிலும் எளிதில் கிடைக்கக்கூடியது. சமையலில் சேர்த்து சாப்பிடும்போது நாம் மிகவும் உதாசீனமாக தூக்கி எறிந்துவிடுகிறோம். கறிவேப்பிலையை சமையலில் சிதைக்காமல் அப்படியே சாப்பிட பித்தக் கோளாறு, வயிற்றுவலி, ஜீரணசக்தி கொடுத்து, ரத்தம் சுத்தமாக உதவுகிறது. கறிவேப்பிலையில் புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களைக் கொண்டது.
சிறு வயதில் ஏற்படும் இளநரையை மாற்ற கறிவேப்பிலையை சமைக்காமல் சாப்பிடலாம். பார்வைக் கோளாறுகள் நீக்கி கண்கள் பிரகாசமாகும். முக வசீகரம் தரக்கூடிய தலைமுடியை கருமையாகவும், அடர்த்தியாகவும் வைக்கக்கூடியது. முடி உதிர்வை தடுக்கும் தன்மை கொண்டது. தொடர்ந்து 21 நாட்கள் காலை மாலை இருவேளை சாப்பிட நீரிழிவு குறையும். மூல நோய், வெண்குஷ்டம், தோல் வியாதிகள் நீங்க கறிவேப்பிலை ஒரு முத்தான சஞ்சீவிக் கீரையாகும். உயர் ரத்த அழுத்தம் மற்றும் மூட்டு வலியைப் போக்கும் உன்னதமான 
கீரையாகும்.
தயாரிக்கும் முறை: ஒரு கைப்பிடியளவு கறிவேப்பிலையை எடுத்து சுத்தமாக கழுவி, மிக்சி அல்லது அம்மியில் அரைத்து ஒரு டம்ளர் நீர் சேர்த்து வடிகட்டி, தேன், பனங்கற்கண்டு அல்லது பேரீட்சை ஏதேனும் ஒன்றுடன் சேர்த்து கலந்து சாப்பிடலாம். தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். காபி, டீக்கு பதிலாக அருந்த மிகவும் ஏற்ற பானம்.
சர்க்கரையை நாம் சேர்த்துக் கொள்வதால் நமது உடலிலுள்ள வைட்டமின் சத்துக்களை அது உறிஞ்சிவிடுகிறது. அதனை ஈடுசெய்ய மேற்கூறிய கறிவேப்பிலை நீர் சாப்பிடலாம். நமது அழகான முடியையும் கண்களையும் பேணிக்காக்கும் அற்புதமான கீரை கறிவேப்பிலையே.
Thanks to Payanulla Thakavalkal