Thursday, April 22, 2010
Tuesday, April 20, 2010
Sunday, April 18, 2010
வாழைப்பழம்
அல்லாஹ்வின் அற்புதப் படைப்புகள் யாவுமே மனிதர்களுக்கு மிகப் பயனுள்ளது. அதில் நாவிற்கு இனிமையும், உடலுக்கு வலிமையும், முகத்திற்கு அழகையும் தரக்கூடிய புரதச் சத்துக்கள் நிறைந்த கனிவர்க்கங்கள் மனித இனத்திற்கு இறைவனால் அருளப்பட்ட வரப்பிரசாதமே.
நம்மில் பலர் விலையுயர்ந்த கனிவர்க்கங்களைப் பார்க்கும் விதத்தில், விலைகுறைந்த கனிவர்க்கங்களைப் பார்ப்பதில்லை. ஆனால் விலை குறைந்த பழவகைகளிலும் எல்லா சத்துக்களும் நிறைந்து கிடைக்கின்றன. அவ்வகையில் இந்த உலகத்தில் எல்லா பாகங்களிலும், எல்லா நேரங்களிலும் கிடைக்கும் ஒரே கனிவகை வாழைப்பழம் மட்டும்தான். வாழைப்பழம் தானே! என்று எண்ணிவிடாதீர்கள். அவற்றை சற்று அன்போடு, ஆர்வத்தோடு பாருங்கள். அதன் வடிவமைப்பு எவ்வளவு அழகாக இருக்கிறது. வாழைப்பழங்கள் பல நூறு வகைகள் இருந்தாலும் சாதாரணமாக கிடைக்கும் வாழைப்பழத்தின் நன்மையைப் பற்றி சற்று தெரிந்துக் கொள்வோம். இந்த கட்டுரையை படித்த பின்பு வாழைப்பழத்தை நீங்கள் பார்க்கும் விதம் முழுவதுமாக மாறியிருக்கும். இதற்கு பின்பு வாழைப்பழத்தை வாங்கி அதை நாளைக்குச் சாப்பிடலாம் என்று உங்கள் வீட்டு குளிர்சாதனப் பெட்டியில் சிறை வைக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். வாழைப்பழம் மனிதனின் மூளைக்கு தேவையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது.
வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் (Natural Sugar) கொண்டுள்ளது. அதாவது சக்ரோஸ் (Sucrose), பிரக்டோஸ் (Fructose) மற்றும் குளுகோஸ் (Glucose) உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும் (Fiber) கொண்டுள்ளது. இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 11/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை கொடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு நாசினியும் கூட. இதை நாம் உடலில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மூளை வலிமை (Brain Power):
மிடில் செக்ஸ் (Middle Sex)ல் உள்ள டிவிக்கென்ஹாம் (Twickenham) கல்வி நிலையத்தில் இவ்வருடம் 200 மாணவர்களுக்கு காலை, இடைவெளி மற்றும் மதிய உணவில் வாழைப்பழத்தை உணவுடன் சேர்த்து கொடுத்து சோதனை செய்து பார்த்தபோது அவர்களது மூளைத்திறன் அதிகரித்ததோடு, பொட்டாசியம் நிறைந்த இந்த உணவு அதிகமான கல்வித்திறனை அளிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
மலச்சிக்கல் (Constipation):
ஒரு மனிதனுக்கு மலச்சிக்கல் வந்துவிட்டால் அவனது மனித குணமே மாறிவிடும். அதற்கு ஒரே வழி உங்கள் உணவில் தினமும் வாழைப்பழத்தைச் சேர்த்து சாப்பிடுங்கள். வாழைப்பழத்தில் அதிகமான பைபர் (Fiber) இருப்பதால் உங்கள் குடலை சுத்தமாக்கி மலம் இலகுவாக வெளியாவதற்கு வழிசெய்வதோடு மனத்தளர்ச்சியை சுத்தமாக போக்கிவிடுகிறது.
மந்தம் (Hangovers):
நம்மில் சிலர் சிறிது தூங்கிவிட்டு எழும்பிவிட்டால் கூட மந்தமாக இருப்பதாக அலுத்துக் கொள்வார்கள். உங்களுக்கு இதோ வாழைப்பழ மருந்து தயாராகவுள்ளது. வாழைப்பழத்துடன் தேனையும், பாலையும் சேர்த்து ஒரு குவளை மில்க் ஷேக் (Milk Shake) தயார் செய்து குடிக்கவும். வாழைப்பழம் தேனுடன் சேர்த்து வயிற்றை அமைதிப்படுத்தி இரத்தத்திலுள்ள இனிப்புச் சத்தை அதிகமாக்குகிறது. அத்துடன் இதில் பாலும் சேர்ப்பதால் பால், நீர் சத்தை சரியாக வைத்துக்கொள்கிறது. இந்த மூன்றும் சேர்ந்து மந்த நிலைக்கு டாட்டா காட்டிவிடுகிறது.
நெஞ்செரிப்பு (Heart Burn):
உங்களுக்கு நெஞ்செரிகிறதா? வாழைப்பழத்திற்கு இயற்கையாக அமில எதிர்ப்பு சக்தி இருப்பதால் வாழைப்பழத்தை தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வர நெஞ்செரிப்பு நோய் இன்ஷா அல்லாஹ் உங்களை விட்டு பறந்துவிடும்.
உடற்பருமன் (Over Weight):
ஆஸ்திரியா (Austria)வில் உள்ள மனோதத்துவ நிறுவனத்திலுள்ள (Institute of Psychology) ஆராய்ச்சியாளர்கள் 5000 நோயாளிகளை சோதனை செய்து பார்த்ததில் அதிகமான உயர்ந்த மனஅழுத்த வேலைகளில் உள்ளவர்கள் தான் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள். இந்த அழுத்தத்தின் காரணத்தால் அவர்களது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவு சீராக இல்லாத காரணத்தால் உடற்பருமன் ஏற்படுகிறது. அவர்களுக்கும் வாழைப்பழத்தை தினமும் உணவில் சேர்த்து அவர்களது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை ஒரு ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வந்து உடற்பருமன் குறைவதாக அந்த ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
குடற்புண் (Ulcers):
வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டால் குடலின் உட்பகுதி மென்மையாகி அதிகமான அமிலத்தன்மை ஏற்படுத்தாததினால் குடற்புண்ணை அழிப்பதுடன் குடற்புண் வராமல் காக்கிறது.
சீரான வெப்பநிலை (Temperature Control):
வாழைப்பழத்திற்கு குளிர்ந்த பழம் (Cooling Fruit) என்ற பெயரும் உண்டு. தாய்லாந்து நாட்டு மக்கள் அதிகமாக வாழைப்பழத்தை சாப்பிடுவதால் அவர்களது உடலின் தட்பவெப்ப நிலை சீராக உள்ளது.
காலநிலை மாற்றம் (Seasonal Affective Disorder):
வாழைப்பழம் சாப்பிடுவதால் காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய ஒரு வித மந்த நிலையை இல்லாமல் ஆக்குகிறது.
புகைப்பிடிப்பது (Smoking):
புகைப்பிடிப்பவர்கள் அந்த கொடுமையிலிருந்து விடிவு பெற வாழைப்பழத்தை சாப்பிடலாம். வாழைப்பழத்தில் B6. B12 அதிகமாக இருப்பதால் புகைப்பிடிப்பதால் ஏற்படும் Nicotine ஐ கொஞ்சம் கொஞ்சமாக குறைப்பதால் புகைப்பிடிப்பதிலிருந்து விடுபடலாம்.
மன அழுத்தம் (Stress):
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் அவை இதயத்துடிப்பை கட்டுக் கோப்புக்குள் வைத்துக் கொள்வதுடன் ஆக்ஸிஜைனை மூளைக்குச் செலுத்தி உடலின் தண்ணீரின் அளவை சமப்படுத்துகிறது. இதனால் மன அழுத்த நோய் நீங்கும்.
காலைத் தூக்கம் (Morning Sickness):
மூன்று நேர உணவு இடைவேளைக்குள்ளும் வாழைப்பழத்தை சாப்பிட்டால் உடம்பிலுள்ள இரத்தத்தில் உள்ள குளுகோஸ் (Blood Sugar) அளவு அதிகமாக்கப்பட்டு காலைத் தூக்க நோயிலிருந்து விடுபடலாம்.
நரம்பு நாளங்கள் (Nerve System):
இதில் B விட்டமீன்கள் அதிகமாக இருப்பதால் நரம்பு நாளங்கள் நன்றாக செயல்பட்டு நரம்புத் தளர்வை போக்குகிறது.
அழுத்தக் குறைவு (Depression):
‘Mind’ என்ற நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியின் முடிவாக ஒவ்வொரு உணவிற்குப் பின்பும் வாழைப்பழம் சாப்பிட்டால் அழுத்தக் குறைவு நோயை விரட்டலாம் என்று கூறுகிறது. ஏனெனில் மூளையிலிருந்து கசியக் கூடிய நீரை திட்டப்படி வெளியேற்றி மனிதனை மகிழ்ச்சியாக்குகிறது.
இரத்த சோகை (Anemia):
வாழைப்பழத்தில் அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் அதிக அளவு சிவப்பணுக்களை உண்டு பண்ணி இரத்தச் சோகை வராமல் தடுக்கிறது.
இரத்த அழுத்தம் (Blood Pressure):
குறைந்த அளவு உப்பும் அதிக அளவு பொட்டாசியமும் இருப்பதால் அதிக இரத்த அழுத்தத்தையும், வாதநோயையும் குறைக்க முடிமென்று அமெரிக்க அரசு உணவு நிறுவனம் கூறுவதோடு அதிக வாழை மரங்களை சாகுபடி செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
The new England Journal of Medicines ஆராய்ச்சிப்படி நமது தினசரி உணவில் வாழைப்பழத்தையும் சேர்த்துக் கொண்டால் Stroke கினால் ஏற்படக்கூடிய மரணத்தின் விகிதத்தை 40% குறைக்கலாம் என்கிறது. இவ்வளவு நன்மைகளை சுமந்து நிற்கும் வாழைப்பழத்தை பாதுகாக்கும். அந்த மஞ்சள் நிறத்தைக் கொண்டதால் தன்னால் இயன்ற உதவியை மனிதனுக்கு செய்ய மறக்கவில்லை. ”மறு” என்று சொல்லக்கூடிய கருப்பு வடு உடம்பில் ஏற்பட்டால் வாழைப்பழத் தோலை சிறு துண்டாக வெட்டி உள் தோல் அந்த வடுவின் மேலும் மஞ்சள் தோல் வெளியில் தெரியும் படி வைத்து அதன் மீது சிறிது மருத்துவ டேப் ஒட்டி வைத்தால் நாள்பட அந்த மறு மறைந்துவிடும்.
கொசுக்கடிக்கு மருந்து தேவையா?
வாழைப்பழத்தோலின் உட்பகுதியை கொசுக் கடித்த இடத்தில் வைத்து அழுத்தி தேய்த்தால் கொசுக் கடியால் ஏற்பட்ட வேதனையும் தீரும். வீக்கமும் வற்றிவிடும்.
வாழைப்பழத்தைச் சாப்பிட்டு விட்டு அதன் தோலை குப்பைத் தொட்டியில் எறிவதற்கு முன் அதன் உள்தோலைக் கொண்டு உங்கள் காலணி (Shoe) யை பாலிஷ் செய்து வெள்ளைத் துணியால் துடைத்துப் பாருங்கள். உங்கள் Shoe மினு மினுக்கும்.
எல்லா விட்டமின்களையும் ஒரு பழத்தின் மூலம் தந்து நமது உடல் நலம் பேண வழி வகுத்த வல்லமை படைத்த நம் இறைவனுக்கே எல்லாப் புகழும்.
வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் தோலை தெருவிலே எறிந்து விடுவதால் அத்தோலின் மெல் கால் வைத்து வழுக்கி மரணம் வரை சென்றவர்கள் உண்டு. அவ்வாறு தூக்கி எறிவதை நாமும் தவிர்த்து மற்றவர்களையும் தடுக்க வேண்டும். வாழைப் பழத் தோலை மனிதர்கள் நடக்குமிடத்தில் கண்டால் அதை எடுத்து குப்பை தொட்டியில் போட்டு அதன் மூலம் நன்மையை தேடிக் கொள்ள முன் வரவேண்டும்.
தமிழாக்கம்: அபுல் அமான்
Thanks To Islamkalvi.com

Saturday, April 17, 2010
செல்போனின் தரத்தை அறிவது எப்படி? -அபூ ரம்லா
காலையில் தூக்கத்திலிருந்து விழித்து எழுந்தது முதல் இரவு தூங்கப்போகும் வரை உபயோகப் படுத்தக்கூடிய பொருட்கள் எல்லாமே தரமானதாக இருக்க வேண்டும் என்று நாம் ஒவ்வொருவரும் விரும்புவோம். அப்படி அன்றாடம் உபயோகிக்கக்கூடிய பொருள்களில் செல்போன் அதிமுக்கியமான பொருளாக மாறியுள்ள கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குடும்பத்திற்கு ஒன்று என்றிருந்த நிலை மாறிப்போய் தனி நபரொருவர், ஒன்றிற்கு மேல் செல்போன்களை பயன்படுத்துகின்ற சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கிறோம். செல்போன்களை அதிகமான நேரம் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அதிகளவில் இருக்கிறது என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது, இன்ஷா அல்லாஹ் பாதிப்புகள் குறித்து பிறகு வரக்கூடிய பதிப்புகள் மூலம் தெரிந்து கொள்வோம்.
இந்த செய்தியின் மூலம் நாம் வாங்கியிருக்கின்ற அல்லது வாங்கப்போகின்ற செல்போன்களின் தரம் என்ன என்பதை தெரிந்துக் கொள்வோம். அதாவது நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருள்களின் தரம் உயர்ந்த அல்லது குறைவான அல்லது போலியான பொருட்கள் மார்க்கெட்டில் வலம் வந்து கொண்டிருக்கின்ற சூழலில் செல்போனின் தரத்தை எதனை அடிப்படையாக கொண்டு நிர்ணயிப்பது பற்றி அறிவோம்.
உங்களுடைய செல்போனில் *#06# என்று அழுத்திய உடன் நீங்கள் பயன்படுத்தக் கூடிய செல்போனில் அடையாள நம்பர் 15 இலக்கங்களில் தெரியவரும். அப்படி கிடைக்ககூடிய எண்களில் 7 மற்றும் 8வதாக வரக்கூடிய எண்களை கீழ்கண்ட பட்டியலோடு ஒப்பிட்டு பார்த்து உங்களின் செல்போனின் தரத்தை அறிந்து கொள்ளுங்கள்.
7 மற்றும் 8வது எண் 00 என்றிருந்தால் தரமான தொழிற்சாலையில் தயாரித்தது என்பது மட்டுமல்ல உங்களின் செல்போனும் மிக மிக தரம் உயர்ந்தது என்பதை குறிக்கும். (மிக மிக நன்று)
7 மற்றும் 8வது எண் 01 அல்லது 10 என்றிருந்தால் தயாரித்த நாட்டின் பெயர் பின்லாந்து மற்றும் தரமான பொருள் என்பதை குறிக்கும். (மிக நன்று)
7 மற்றும் 8வது எண் 08 அல்லது 80 என்றிருந்தால் தயாரித்த நாட்டின் பெயர் ஜெர்மனி மற்றும் தரம் தாழ்ந்தது அல்ல என்பதை குறிக்கும். (நன்று)
7 மற்றும் 8வது எண் 02 அல்லது 20 என்றிருந்தால் ஒருங்கிணைப்பு செய்தது துபாயில். தரமான பொருள் அல்ல என்பதை குறிக்கும். (சுமார்)
7 மற்றும் 8வது எண் 13 என்றிருந்தால் ஒருங்கிணைப்பு செய்தது அஜேர்பயிஜான்;. தரம் குறைந்த பொருள் மற்றும் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்ககூடியதுமாகும். (மோசம்)
மேற்சொன்ன செய்திகள் அனைத்தும் எதிர்வரும் காலங்களில் தரமான பொருள்களை தேர்ந்தெடுக்க உதவியாக இருக்கும் என்பதற்காகவே இந்த தகவல்களை இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

Friday, April 16, 2010
புற்றுநோய்க்கு நவீன மருத்துவம்
'வரும் முன் காப்போம்' என்றாலே அது எந்தவகை இடரும் வரும் முன் காப்போம் என்பதைத் தான் குறிக்கும். பொதுவாக இந்த வாக்கியத்தைக் கேட்டால் நோய் வரும்முன் காப்போம் என்பது பற்றித்தான் என்று அனைவரும் சொல்வார்கள். ஏனென்றால் நோய் வரும்முன் சில அறிகுறிகள் தென்படும். அதாவது 'யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே' என்பதைப் போல. நோய்க்கான அறிகுறி தென்பட்டவுடன் அப்போதே தேவையான வைத்தியம் செய்து களை எடுத்துவிட்டால் நோயிலிருந்து தப்பிப்பது மட்டுமல்ல, இறப்பையும் தள்ளிப்போடலாம்.
எந்த நோயை எடுத்துக்கொண்டாலும் சில அறிகுறிகள் தென்படும். அல்லது மருத்துவர்கள் சோதனையின் மூலம் கண்டறிந்து விடுவார்கள். உதாரணமாக மாரடைப்பு, சர்க்கரை வியாதி, சிறுநீரகக் கோளாறு இவை ஒவ்வொன்றிற்கும் சில ஆரம்ப அறிகுறிகள் தென்படும். இதை வைத்தே நமக்கு வந்துள்ள நோய் என்னது என்று அறிந்து கொள்ள முடியும். உடனே உரிய மருத்துவ சிசிச்சைகள் மூலம் தற்காத்து கொள்ளலாம். ஆனால் இதில் புற்று நோய் மட்டும் சற்று வித்தியாசமானது. இதனால்தான் புற்றுநோய் புதிர்நோய் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நோய் எப்படி தாக்கியது அல்லது நோய் தொற்றிக் கொள்ள காரணங்கள் சில சமயம் ஒரு புரியாத புதிர்தான்.
இன்றைய மருத்துவ உலகில் புதுப்புது ரகங்களில் புற்று நோயின் தாக்கம் உள்ளது. உதாரணமாக மார்பகப் புற்று நோய், மூளைக் கட்டிகள் என்று பலவகைகளில் மனிதனை ஒரு கை பார்த்துவிடுகிறது. சில சமயம் உயிரை பறித்துக் கொள்ளும் அளவுக்கு இதன் தாக்கம் அதிகம் இருக்கும். இது மாதிரியான நோய்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கு கடும் சவாலாக உள்ளது. இதனால் புற்று நோய் பற்றிய பயம் மக்கள் மனதில் இருந்து கொண்டுதான் உள்ளது. பெரும்பாலும் புற்றுநோய் அதன் அறிகுறியே தென்படாமல் கொரில்லா தாக்குதல் போல் முற்றிய நிலையில் தாக்கிவிடும். இதன்பிறகு அதற்கு சிகிச்சை அளிப்பது பயனற்று போய் மருத்துவர்கள் கை விரித்துவிடுவார்கள்.
புற்றுநோய் எப்படி? ஏன்? யாருக்கு வரும்? என்ற ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. உலகில் ஏராளமானோருக்கு எளிதில் தென்படாத நிலையில் புற்றுநோய் தாக்கியிருக்கின்றது. இதில் வசதிபடைத்தவர், ஏழை என்ற வித்தியாசம் இல்லை. இப்படி தாக்கிய புற்றுநோய்கள் திடீரென்று முற்றிய நிலையில் மாறி உயிரை காவு வாங்கியிருக்கின்றன. எவ்வளவு காசு இருந்து என்ன பயன்? புற்றுநோய் இருந்ததை கண்டுபிடிக்க முடியவில்லையே! என்று சொல்வோர்களும் உள்ளனர். ஆனால் அதற்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து இடைவிடாது ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர். அதற்கு கைமேல் பலனும் கிடைத்துள்ளது.
அமெரிக்காவிலுள்ள Massachusset Institute of Technology-யில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஒரு நூதன முறையின் மூலம் புற்று நோயை அறியும் முறையை கண்டறிந்துள்ளனர். இப் பல்கலைகழகத்தின் பேராசிரியர் சங்கீதா பாட்டியா என்பவர். இவர் தனது மாணவர்களுடன் புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அதாவது வேதிப்பொருட்கள் கலந்த நுண்துகள்களை உடலில் செலுத்துவதன் மூலம் புற்றுநோயை அறிய முடியும் என்பதை கண்டறிந்தார். மேலும் அதே முறையில் சிகிச்சையும் அளிக்க முடியும் என்றும் நிரூபித்தார்.
இதற்காக விலங்குகளுக்கு ஊசி மூலம் நுண்துகள்களை செலுத்தப்படும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நானோ என்றால் ஒரு மீட்டரில் பலகோடி மடங்கு சிறியது என்பது பற்றி முந்தையக் கட்டுரைகளில் விவரித்திருக்கின்றோம். நொதிப்பொருட்களுடன் கூடிய இந்த நுண்துகள்கள் ரத்த நாளங்களில் சென்று ஆரம்ப கட்டத்தில் இருக்கும் புற்றுநோய் கட்டிகளின் நுண் இடுக்குகளில் சென்று ஆராய ஆரம்பிக்கும். இவ்வாறு புற்றுநோய் கட்டிகளின் இடுக்குகளில் சென்ற வேதி நுண்துகள்கள் ஒன்று சேர்ந்து காந்த சக்திகளின் மூலம் Magnetic Resonance Imagine Machine (MRI) எனப்படும் இயந்திரத்திற்கு புற்றுநோயை பற்றிய துல்லியமான படத்தை அனுப்பும். இதன் மூலம் புற்றுநோயின் தன்மை, எப்பொழுது உருவானது என்பதையெல்லாம் அறிய முடியும்.
நுண்துகள்களாக சென்ற நொதிப்பொருட்கள் (வேதிப்பொருட்கள்) ஒன்று சேர்வதால் அதிகமான காந்த சக்தியை பெறுகிறது. இதனால் புற்றுநோயை ஆராய்வது சுலபமாவதுடன் துல்லியமான விவரமும் கிடைக்கிறது. இதுபற்றி ஆராய்ச்சியாளர் சங்கீதா பாட்டியா கூறுகையில், 'ஊசி மூலம் நாங்கள் இந்த நுண்துகள்களை உடலில் செலுத்துகிறோம். இவ்வாறு உடலில் சென்ற நுண்துகள்கள் ஒன்றுசேர்ந்து புற்றுநோய் கட்டிகளில் உள் நுழைந்து அல்லது இடுக்குகளில் ஊடுருவி ஆராய்கிறது. இவ்வாறு ஒன்று திரண்ட நுண்துகள்கள் கட்டியிள் உள்ளே ஊடுருவுவதால் திரையில் துல்லியமான படங்களுடன் விவரங்கள் தெரிகிறது'', என்கிறார். சங்கீதா பாட்டியா Health Science & Technology யில் மின்னியல் மற்றும் கணிப்பொறித் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் MIT&Harward Center of Cancer Nanotechnology Excellence இவர் முக்கிய பங்கு வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதன்முறையாக இந்த நுண்துகள் சோதனை மார்பக புற்றுநோயை கண்டறிவதற்கு பயன்படுத்தப்படுகிறது. இப்பொழுது ஏராளமான பெண்களுக்கு மார்பக புற்றுநோய் தாக்கி இருக்கிறது. இதுபற்றி ஆராய்ச்சியாளர் பாட்டியா கூறுகையில், 'முதலில் மார்பக புற்று நோய் பாதித்த பெண்களுக்கு பயன்படுத்தப்படும். அதில் கிடைக்கும் முடிவுகள் நன்றாக ஆய்வு செய்யப்படும். இந்த ஆய்வின் முடிவுகள் திருப்திகரமாக இருந்தால் படிப்படியாக இச்சோதனை எல்லா வகை புற்றுநோய்களையும் கண்டறிய பயன்படுத்தப்படும். மேலும் இந்த நானோ நுண்துகள்களின் மூலமே வேதியியல் சிகிச்சை (Chemotherapy treatments) மற்றும் கதிர்(Radiation) சிசிச்சையை மேற்கொண்டு புற்றுநோயை குணப்படுத்த முடியும்'' என்றார்.
இந்த ஆராய்ச்சியில் பேராசிரியர் சங்கீத பாட்டியாவுடன் அமெரிக்காவின் பல்வேறு பல்கலைக் கழக மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்த அதிநவீன ஆராய்ச்சிக்கு அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் கழகத்தின் (National Cancer Institute) முழு ஆதரவும் இருக்கிறது. மேலும், இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் இந்த புதுமையான மருத்துவ முறைக்கு அதிகாரப் பூர்வ உரிமமும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி, சகோதரர்-எம்ஜேஎம் இக்பால்
எந்த நோயை எடுத்துக்கொண்டாலும் சில அறிகுறிகள் தென்படும். அல்லது மருத்துவர்கள் சோதனையின் மூலம் கண்டறிந்து விடுவார்கள். உதாரணமாக மாரடைப்பு, சர்க்கரை வியாதி, சிறுநீரகக் கோளாறு இவை ஒவ்வொன்றிற்கும் சில ஆரம்ப அறிகுறிகள் தென்படும். இதை வைத்தே நமக்கு வந்துள்ள நோய் என்னது என்று அறிந்து கொள்ள முடியும். உடனே உரிய மருத்துவ சிசிச்சைகள் மூலம் தற்காத்து கொள்ளலாம். ஆனால் இதில் புற்று நோய் மட்டும் சற்று வித்தியாசமானது. இதனால்தான் புற்றுநோய் புதிர்நோய் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நோய் எப்படி தாக்கியது அல்லது நோய் தொற்றிக் கொள்ள காரணங்கள் சில சமயம் ஒரு புரியாத புதிர்தான்.இன்றைய மருத்துவ உலகில் புதுப்புது ரகங்களில் புற்று நோயின் தாக்கம் உள்ளது. உதாரணமாக மார்பகப் புற்று நோய், மூளைக் கட்டிகள் என்று பலவகைகளில் மனிதனை ஒரு கை பார்த்துவிடுகிறது. சில சமயம் உயிரை பறித்துக் கொள்ளும் அளவுக்கு இதன் தாக்கம் அதிகம் இருக்கும். இது மாதிரியான நோய்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கு கடும் சவாலாக உள்ளது. இதனால் புற்று நோய் பற்றிய பயம் மக்கள் மனதில் இருந்து கொண்டுதான் உள்ளது. பெரும்பாலும் புற்றுநோய் அதன் அறிகுறியே தென்படாமல் கொரில்லா தாக்குதல் போல் முற்றிய நிலையில் தாக்கிவிடும். இதன்பிறகு அதற்கு சிகிச்சை அளிப்பது பயனற்று போய் மருத்துவர்கள் கை விரித்துவிடுவார்கள்.
புற்றுநோய் எப்படி? ஏன்? யாருக்கு வரும்? என்ற ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. உலகில் ஏராளமானோருக்கு எளிதில் தென்படாத நிலையில் புற்றுநோய் தாக்கியிருக்கின்றது. இதில் வசதிபடைத்தவர், ஏழை என்ற வித்தியாசம் இல்லை. இப்படி தாக்கிய புற்றுநோய்கள் திடீரென்று முற்றிய நிலையில் மாறி உயிரை காவு வாங்கியிருக்கின்றன. எவ்வளவு காசு இருந்து என்ன பயன்? புற்றுநோய் இருந்ததை கண்டுபிடிக்க முடியவில்லையே! என்று சொல்வோர்களும் உள்ளனர். ஆனால் அதற்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து இடைவிடாது ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர். அதற்கு கைமேல் பலனும் கிடைத்துள்ளது.அமெரிக்காவிலுள்ள Massachusset Institute of Technology-யில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஒரு நூதன முறையின் மூலம் புற்று நோயை அறியும் முறையை கண்டறிந்துள்ளனர். இப் பல்கலைகழகத்தின் பேராசிரியர் சங்கீதா பாட்டியா என்பவர். இவர் தனது மாணவர்களுடன் புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அதாவது வேதிப்பொருட்கள் கலந்த நுண்துகள்களை உடலில் செலுத்துவதன் மூலம் புற்றுநோயை அறிய முடியும் என்பதை கண்டறிந்தார். மேலும் அதே முறையில் சிகிச்சையும் அளிக்க முடியும் என்றும் நிரூபித்தார்.
இதற்காக விலங்குகளுக்கு ஊசி மூலம் நுண்துகள்களை செலுத்தப்படும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நானோ என்றால் ஒரு மீட்டரில் பலகோடி மடங்கு சிறியது என்பது பற்றி முந்தையக் கட்டுரைகளில் விவரித்திருக்கின்றோம். நொதிப்பொருட்களுடன் கூடிய இந்த நுண்துகள்கள் ரத்த நாளங்களில் சென்று ஆரம்ப கட்டத்தில் இருக்கும் புற்றுநோய் கட்டிகளின் நுண் இடுக்குகளில் சென்று ஆராய ஆரம்பிக்கும். இவ்வாறு புற்றுநோய் கட்டிகளின் இடுக்குகளில் சென்ற வேதி நுண்துகள்கள் ஒன்று சேர்ந்து காந்த சக்திகளின் மூலம் Magnetic Resonance Imagine Machine (MRI) எனப்படும் இயந்திரத்திற்கு புற்றுநோயை பற்றிய துல்லியமான படத்தை அனுப்பும். இதன் மூலம் புற்றுநோயின் தன்மை, எப்பொழுது உருவானது என்பதையெல்லாம் அறிய முடியும்.
நுண்துகள்களாக சென்ற நொதிப்பொருட்கள் (வேதிப்பொருட்கள்) ஒன்று சேர்வதால் அதிகமான காந்த சக்தியை பெறுகிறது. இதனால் புற்றுநோயை ஆராய்வது சுலபமாவதுடன் துல்லியமான விவரமும் கிடைக்கிறது. இதுபற்றி ஆராய்ச்சியாளர் சங்கீதா பாட்டியா கூறுகையில், 'ஊசி மூலம் நாங்கள் இந்த நுண்துகள்களை உடலில் செலுத்துகிறோம். இவ்வாறு உடலில் சென்ற நுண்துகள்கள் ஒன்றுசேர்ந்து புற்றுநோய் கட்டிகளில் உள் நுழைந்து அல்லது இடுக்குகளில் ஊடுருவி ஆராய்கிறது. இவ்வாறு ஒன்று திரண்ட நுண்துகள்கள் கட்டியிள் உள்ளே ஊடுருவுவதால் திரையில் துல்லியமான படங்களுடன் விவரங்கள் தெரிகிறது'', என்கிறார். சங்கீதா பாட்டியா Health Science & Technology யில் மின்னியல் மற்றும் கணிப்பொறித் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் MIT&Harward Center of Cancer Nanotechnology Excellence இவர் முக்கிய பங்கு வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.முதன்முறையாக இந்த நுண்துகள் சோதனை மார்பக புற்றுநோயை கண்டறிவதற்கு பயன்படுத்தப்படுகிறது. இப்பொழுது ஏராளமான பெண்களுக்கு மார்பக புற்றுநோய் தாக்கி இருக்கிறது. இதுபற்றி ஆராய்ச்சியாளர் பாட்டியா கூறுகையில், 'முதலில் மார்பக புற்று நோய் பாதித்த பெண்களுக்கு பயன்படுத்தப்படும். அதில் கிடைக்கும் முடிவுகள் நன்றாக ஆய்வு செய்யப்படும். இந்த ஆய்வின் முடிவுகள் திருப்திகரமாக இருந்தால் படிப்படியாக இச்சோதனை எல்லா வகை புற்றுநோய்களையும் கண்டறிய பயன்படுத்தப்படும். மேலும் இந்த நானோ நுண்துகள்களின் மூலமே வேதியியல் சிகிச்சை (Chemotherapy treatments) மற்றும் கதிர்(Radiation) சிசிச்சையை மேற்கொண்டு புற்றுநோயை குணப்படுத்த முடியும்'' என்றார்.
இந்த ஆராய்ச்சியில் பேராசிரியர் சங்கீத பாட்டியாவுடன் அமெரிக்காவின் பல்வேறு பல்கலைக் கழக மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்த அதிநவீன ஆராய்ச்சிக்கு அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் கழகத்தின் (National Cancer Institute) முழு ஆதரவும் இருக்கிறது. மேலும், இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் இந்த புதுமையான மருத்துவ முறைக்கு அதிகாரப் பூர்வ உரிமமும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி, சகோதரர்-எம்ஜேஎம் இக்பால்
Subscribe to:
Posts (Atom)