ஐபோன்-4 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மொபைல்போன் சகல வசதிகளையும் கொண்டதாகத் திகழ்கிறது. OS 4 எனும் இயங்குதளத்தில் அதிவேகமாக இயங்கும் திறன் கொண்ட இந்த புதிய செல்போனில், Video Calling, Retina high-resolution display, 5 மெகா பிக்ஸல் கேமரா, லெட் ஃப்ளாஷ், உச்ச திறன் கொண்ட வீடியோ பதிவு வசதி, வை-ஃபி என ஏராளமான வசதிகளை உள்ளடக்கியது இந்த புதிய செல்போன். முந்தைய ஐபோனை விட தற்போதைய "ஐபோன்-4" மெலிதாகவும் சிறியதாகவும் உள்ளது. இதில், தொடர்ச்சியாக 7 மணி நேரம் பேசவும், 10 மணி நேரம் இணையதளத்தை பயன்படுத்தவும் முடியும். ஜூன் 24 முதல் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகளில் விற்பனை செய்ய உள்ளது. ஜூன் 15 முதல் இந்த ஐபோன்-4 க்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். ஏற்கெனவே ஐபோன் வைத்திருப்பவர்கள், புதிய சாஃப்ட்வேர்களை ஐ ட்யூன் தளத்தில் வரும் ஜூன் 21 முதல் இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம்.. சிங்கப்பூர், ஹாங்காங், ஆஸ்திரேலியா உள்பட 21 நாடுகளில் ஜூலையில் விற்பனைக்கு வருகிறது ஐபோன். இந்தியா உள்ளிட்ட 88 நாடுகளில் வரும் செப்டம்பரில்தான் இந்த போன் விற்பனைக்கு கிடைக்கும்.. ஸ்ரீரங்கன் அச்சுதன். |
Saturday, June 26, 2010
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் வடிவம் அறிமுகம்
கால்களே கைகளாக.......????
ஜோர்தானின் அம்மான் நகரில் வசிக்கும் இரு கைகளுமற்ற அலி ஸ்ரோர் (Ali Srour) என்ற சிறுவன், தனது கால்களைப் பயன்படுத்தி அன்றாட கடமைகளை நிறைவேற்றி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றான்.
அவன் தனது கால்களைப் பயன்படுத்தி உணவை உண்பதுடன் கணினி விளையாட்டுக்களையும் திறம்பட விளையாடி வருகின்றான்.
அலி ஸ்ரோரை பரிசோதித்த மருத்துவர்கள் அவனது குறைபாட்டுக்கு காரணம் தெரியாது குழப்பமடைந்து உள்ளனர். மரபணு மற்றும் பாரம்பரிய காரணங்களாலேயே அவனுக்கு மேற்படி குறைபாடு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
அவன் தனது கால்களைப் பயன்படுத்தி உணவை உண்பதுடன் கணினி விளையாட்டுக்களையும் திறம்பட விளையாடி வருகின்றான்.
அலி ஸ்ரோரை பரிசோதித்த மருத்துவர்கள் அவனது குறைபாட்டுக்கு காரணம் தெரியாது குழப்பமடைந்து உள்ளனர். மரபணு மற்றும் பாரம்பரிய காரணங்களாலேயே அவனுக்கு மேற்படி குறைபாடு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
Thanks To.....Marikumar
Friday, June 25, 2010
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு `ஐந்து'
`லைப் ஸ்டைல்' மாற்றத்தால் இன்று பலரும் ஒரே இடத்தில் முடங்கிக் கிடக்கிறார்கள். இதனால் பல வியாதிகள் அவர்களிடம் சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டி விடுகின்றன. அதில் ஒன்றுதான் சிறுநீரக சம்பந்தப்பட்ட பிரச்சினை.
சில விதிமுறைகளை தவறாமல் பின்பற்றி வந்தாலே அந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம் என்கிறார்கள் டாக்டர்கள்.
அவர்கள் கூறுவது இதுதான்...
* தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது குடியுங்கள்.
* தினமும் குறைந்தபட்சம் 1/2 மணி நேரமாவது வியர்க்க விறுவிறுக்க நடந்திடுங்கள்.
* உணவில் உப்பு அதிக அளவில் சேர்ப்பதை தவிர்த்திடுங்கள்.
* முதுமையான வயதில் உணவில் கூடுதல் புரதத்தை தவிர்த்திடுங்கள்.
* சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்த பிரச்சினை ஆகியவற்றை முறையான சிகிச்சை மூலம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.
- இவற்றை எல்லாம் நீங்கள் தவறாமல் பின்பற்றி வந்தாலே சிறுநீரகங்கள் பிரச்சினை இல்லாமல் இயங்கும் என்கிறார்கள் டாக்டர்கள்.
நன்றி,பொன்மாலை
சில விதிமுறைகளை தவறாமல் பின்பற்றி வந்தாலே அந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம் என்கிறார்கள் டாக்டர்கள்.
அவர்கள் கூறுவது இதுதான்...
* தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது குடியுங்கள்.
* தினமும் குறைந்தபட்சம் 1/2 மணி நேரமாவது வியர்க்க விறுவிறுக்க நடந்திடுங்கள்.
* உணவில் உப்பு அதிக அளவில் சேர்ப்பதை தவிர்த்திடுங்கள்.
* முதுமையான வயதில் உணவில் கூடுதல் புரதத்தை தவிர்த்திடுங்கள்.
* சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்த பிரச்சினை ஆகியவற்றை முறையான சிகிச்சை மூலம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.
- இவற்றை எல்லாம் நீங்கள் தவறாமல் பின்பற்றி வந்தாலே சிறுநீரகங்கள் பிரச்சினை இல்லாமல் இயங்கும் என்கிறார்கள் டாக்டர்கள்.
நன்றி,பொன்மாலை
உயிரை எடுக்கும் மாத்திரைகள் தடையின்றி உலா
உங்கள் நம்பிக்கைக்கு உரிய குடும்ப டாக்டரின் உத்தரவின் பேரில் அவ்வப்போது ஏற்படும் உடல்நலக் குறைவுகளைத் தீர்க்க நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு மினி மருந்துக்கடையை வைத்திருக்கலாம். அப்படி மாத்திரைகளை வாங்கி வைத்திருப்பது அவசரத்திற்கு உதவும் என்பதில் சந்தேகம் இல்லை. அப்படிப்பட்ட மாத்திரைகளால் சில அல்ல பெரிய தீங்குகள் ஏற்படுகின்றன என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
தலைவலிக்காக டாக்டர்கள் மட்டுமின்றி நம் வீட்டுப் பெரியவர்களான தாத்தா, பாட்டி பரிந்துரை செய்யும் மாத்திரையான ‘அனால்ஜின்’ மாத்திரையால் Bone marrow depression நோய்கள் ஏற்படலாம்.
பயணங்களின் போது உங்களின் வயிறு ஏதாவது ஏடாகூடம் ஆகி நடுவழியில் தொந்தரவு கொடுக்காமல் தடுக்க Quiniodochior என்ற மாத்திரையை உங்கள் டாக்டர் பரிந்துரை செய்யலாம். அந்த மாத்திரையால் உங்கள் கண் பார்வை பறிபோகலாம்.
Nimesulide வயிற்றுப்போக்கை சரி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. இந்த மாத்திரையால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த மாத்திரையில் உள்ள ஆசிட் இருதயத் துடிப்பின் சீர்குலைவுக்கும் காரணமாகலாம்.
பெரும் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த மாத்திரைகளை நீங்கள் வாங்கி வைத்துக் கொள்ளும்படி டாக்டர்களும், மருந்துக் கடைக்காரர்களும் பரிந்துரை செய்தால் அதற்காக யாரும் இந்த மாத்திரைகளை வாங்க முடியாது. ஏனெனில், ஜலதோஷம், இருமலுக்காக கொடுக்கப்படும் இந்த மாத்திரைகளால் பக்கவாதம் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. அதனால் அனைத்து வடஅமெரிக்க நாடுகளிலும், மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் இந்த மாத்திரைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது அல்லது தயாரிப்பது கைவிடப்பட்டுள்ளது.
யேல் பல்கலை., மருத்துவப் பள்ளியைச் சேர்ந்தவர்கள், 702 நோயாளிகளிடம் மேற்கொண்ட ஐந்து ஆண்டு ஆய்வில், ‘பிபிஏ’ வினால் ஏற்றுக்கொள்ளமுடியாத பல பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த மாத்திரைகளை சாப்பிட்டு சிறிய அளவிலான உடல் நலக் குறைவு ஏற்பட்ட பின்னரே, அதற்கான அறிகுறிகள் ஏற்பட்ட பின்னரே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதனால், மாற்று மருந்துகள் கண்டுபிடிக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ‘பிபிஏ’ வினால் ஏற்படுவது மட்டுமின்றி, சர்க்கரை நோய் ஒருவரை விரைவில் பாதிக்கவும், கிளகோமா Prostaste enlargementக்கும் இது காரணமாக அமைகிறது.
இந்த மாத்திரையால் ஏற்படும் தீங்கு காரணமாக, இவற்றை தங்கள் நாட்டில் தடை செய்யத் தவறியதற்காக கொரிய உணவு மற்றும் மாத்திரைகள் நிர்வாக ஆணையர் ஷிம் சாங்-கூ சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
குழந்தைகள் நல நிபுணரும், இந்திய குழந்தைகள் நல அகடமியின் தலைவருமான டாக்டர் டி.எஸ்.ஜெயின் கூறியதாவது:
சில மருந்துகளை, மாத்திரைகளை டாக்டர்கள் மட்டுமே பரிந்துரை செய்யமுடியும். ஆனால், அதே மருந்துகள் மற்றும் மாத்திரைகள் தகவல் தொடர்பு சாதனங்களால் விளம்பரம் செய்யப்படும்போது, அந்த மாத்திரைகளால் பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதை டாக்டர்கள் யாரும் நோயாளிகளுக்கு சொல்வதில்லை. மாத்திரைகள் பற்றி விளம்பரம் செய்யும் நிறுவனங்களும் சொல்வதில்லை. அதுபோன்ற மாத்திரைகளால் நோயாளிகளின் ரத்தஅழுத்தம் அதிகரிப்பதோடு இருதய நோய்களும் உண்டாகின்றன. சாதாரண நபர்களுக்கு இதுபோன்ற மாத்திரைகளால் பெரிய அளவில் கூட பிரச்னைகள் ஏற்படலாம்.
மிகவும் நம்பிக்கையான பிரபலமான ‘அனால்ஜின்’ மாத்திரையை அனைவரும் அறிந்ததே. மிக பிரபலமான வலி நிவாரணியான இந்த மாத்திரை அமெரிக்காவின் சுகாதாரம் மற்றும் மனிதவளத் துறையால் தடை செய்யப்பட்டுள்ளது. 1977ம் ஆண்டே இந்த மாத்திரைக்கு அந்நாட்டில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
நமது அண்டை நாடான நேபாளத்தில் கூட இந்த மாத்திரை விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. விலங்குகளுக்கு கூட இந்த மாத்திரை மற்றும் மருந்தைப் பயன்படுத்தக் கூடாது என அமெரிக்கா 1995ம் ஆண்டில் தடை விதித்துள்ளது. ஆனால், இந்தியாவில் ஆயிரக்கணக்கானவர்கள் Bone marrow depression உருவாக்கும் இந்த மாத்திரையை இன்னும் வலி நிவாரணியாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
இதுமட்டுமின்றி, அமெரிக்கா மற்றும் பிரிட்டனால் தடை செய்யப்பட்டு இன்னும் இந்தியாவில் புழக்கத்தில் உள்ள மற்றொரு மாத்திரை cisapirde. இந்த மாத்திரையை சாப்பிடு வதால் முறையற்ற, ஒழுங்கற்ற இதயத்துடிப்பு ஏற்பட்டு பலர் மரணம் அடைய நேரிடும். 1998ம் ஆண்டிலேயே இந்த மாத்திரைக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு தடைவிதித்துள்ளது.
இதயத் துடிப்பு சீராக இல்லாத 341 பேரிடம் விசாரித்ததில் அவர்கள் சிசாபிரைடு மாத்திரை யை பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. இவர்களில் 80 பேர் 1999ம் ஆண்டு டிசம்பர் 31ல் மரணம் அடைந்தனர். இதனால், இந்த மாத்திரையை ஸ்பெசலிஸ்ட்கள் மட்டுமே பரிந்துரைக்க வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த மாத்திரை 28 இதர மாத்திரை மற்றும் மருந்து களுடன் இணைந்து ஆக்கப்பூர்வமாக செயல்படக் கூடியது. அதனால், இதயத்துடிப்பு சீராக இல்லாத நோயாளிகள் இருதய நோய் உள்ளவர்கள், இ.ஜி.ஜி., சரியாக இல்லாதவர்கள், சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள், நுரையீரல் நோய் உள்ள வர்கள், ரத்தத்தில் குறைந்த அளவு கால்சியம், பொட்டாசியம் அல்லது மெக்னீசியம் கொண்டிருப்பவர்கள் இந்த மாத்திரை வாங்கி சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மருந்து தயாரிப்பாளர்கள் இந்த மாத்திரை உற்பத்தியை 2000ம் ஆண்டு ஜீலை 14ம் தேதி முதல் நிறுத்தியுள்ளனர்.
ஏற்றுக்கொள்ள முடியாத பல பக்க விளைவுகள் ஏற்படுவதால் சிசாபிரைடு உற்பத்தியை பிரிட்டிஷ் மருத்துவக் கவுன்சில் நிறுவனம் 2000ம் ஆண்டு ஆகஸ்டில் தடை செய்தது. இந்த மாத்திரை சாப்பிட்டவர்களால் 60 சதவீதம் பேருக்கு இருதய சம்பந்தமான நோய்கள் உருவாகியதே இதற்கு காரணம். ஆனால் இந்தியாவில் உள்ள டாக்டர்கள் இந்த மாத்திரையை பெரும்பாலான நேரங்களில் நோயாளிகளுக்கு எழுதிக் கொடுக்கின்றனர். இ.ஜி.ஜி., ரத்தப் பரிசோதனை எதுவும் மேற்கொள்ளாமல் பரிந்துரை செய்கின்றனர். தகுதி வாய்ந்த கேஸ்ட்ரோ என்டரோலா ஜிஸ்ட்கள் மட்டுமே இந்த மாத்திரையை பரிந் துரை செய்யவேண்டும் என இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
எந்த வகையிலும் இந்த மாத்திரை விற்பனையை அதிகரிப்பதில் உற்பத்தியாளர்கள் ஈடுபடக்கூடாது என்றும் கூறியுள்ளது. அதை பெரும்பாலான டாக்டர்கள் பின்பற்றுவதாகத் தெரியவில்லை. சிசாபிரைடு எந்தவிதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடியது என்பதையும் பெரும்பாலான நோயாளிகள் மற்றும் டாக்டர்கள் நம்ப மறுக்கின்றனர்.
நன்றி,தமிழ் CNN
நவீன செல்போன்-மௌன மொழியில் பேசலாம்.
முகத்தில் உதடு மற்றும் தாடைப்பகுதியில் பொருத்தப் படும் சென்சார் கருவிகள் உதடு மற்றும் முக அசைவை வார்த்தையாக மொழிமாற்றம் செய்கிறது. இந்தப்பணியை செய்ய சிறப்பு மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்த வார்த்தைகள் தொலைபேசி இணைப்பு வழியாக எதிர் முனையில் உள்ளவர்களுக்கு அனுப்பப்படுகிறது. இது தவிர ஸ்பீக்கர் மூலமும் இந்த பேச்சை கேட்கலாம். இந்த நவீன கண்டுபிடிப்பின் மூலம் வாய்பேச இயலாதவர்கள் மற்றும் பக்கவாத நோய் தாக்குதலால் பேச முடியாதவர்கள் பலன் பெறலாம். இவர்களின் உதட்டு அசைவின் மூலம் இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை மற்றவர்கள் புரிந்துகொள்ளமுடியும். நன்றி,பதுர்தீன் தஸ்லீம்.இப்படியும் ஒன்று. | |||
Subscribe to:
Posts (Atom)