Monday, July 19, 2010

ஆசியாவின் மிகப் பிரபலமான இடம் தாஜ்மஹால்.

உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் தாஜ்மஹால், தற்போது ஆசியாவின் மிகப் பிரபலமான இடமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நகரில் 2010 ஆம் ஆண்டுக்கான ஆசிய கண்கவர் கண்காட்சி (Asian Attractions Expo - AAE) நடந்து வருகிறது.
இந்த கண்காட்சியில் சர்வதேச பொழுதுபோக்கு பூங்கா சங்கம் ( Amusement Parks and Attractions - IAAPA) சார்பில், ஆசியாவின் கண்கவர் விருது வழங்கும் விழா நடந்தது.
இதில் 6 விதமான பிரிவுகளில் ஆசியாவின் பிரபலமான இடங்களை தேர்வு செய்ய போட்டி நடத்தப்பட்டது.
இதற்காக மொத்தம் 94,099 பேர் வாக்களித்தனர்.அவர்களில் அதிமானோர் தாஜ்மஹாலை தேர்வு செய்தனர்.
இதன் மூலம் ஆசியாவின் மிகப் பிரபலமான இடமாக தாஜ்மஹால் தேர்வு செய்யப்பட்டது.
Thanks To...www.z9world.com

Sunday, July 18, 2010

பேஸ்புக்கிற்கு போட்டியாக வருகிறது 'கூகுள் மீ'

சோசியல் நெட்வொர்க் இணையதளங்களில், ஆரம்பித்த சில நாட்களிலேயே அசுர வளர்ச்சி பெற்றுள்ள பேஸ்புக்கிற்கு போட்டியாக, கூகுள் நிறுவனம் 'கூகுள் மீ' என்ற பெயரில் புதி‌ய இணையதளத்தை துவக்க உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தி்த்த டிக் நிறுவனர் கெவின் ரோஸ், இந்த செய்தியை நம்ப முடியவில்லை எனினும், நம்பத்தகுந்த இடத்திலிருந்து இந்த தகவல் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
தொழில்நுட்ப இணையதளங்களான மாஷபிள் மற்றும் டெக்கிரஞ்ச் உள்ளிட்ட தளங்களும் இந்த தகவலை உறுதி செய்துள்ளன.
கூகுள் நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாகவே, விரைவில் 'கூகுள் மீ' இணையதளத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதுகுறித்த ஆய்வுகள், தென் ஆப்ரிக்காவின் டப்ளின் நகரில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்று வருவதாக டெக்கிரஞ்ச் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Saturday, July 17, 2010

48 ஆண்டுகளுக்குப்பின் உடல் மீட்பு.

இந்திய சீனப்போரில் உயிரிழந்தவரின் உடல் 48 ஆண்டுகளுக்குப்பின்னர் மீட்பு.

1962-ம் ஆண்டு இந்தியா- சீனா இடையே போர் நடந்தது. இந்த போரின் போது அருணாசல பிரதேசத்தில் டோக்ரா ரெஜிமெண்ட் என்ற படைப் பிரிவில் சேர்ந்து போரிட்ட வீரர்கரம் சந்த் கடோச். இவர் இந்த போரில் வீரமரணம் அடைந்தார்.அவரது உடல் அப்போது கிடைக்க வில்லை. இந்த நிலையில் சமீபத்தில் அருணாசலபிரதேசத்தில் பனி மூடிய சிகரத்தில் ஒரு ராணுவ வீரர் உடல் கெட்டுப் போகாமல் கிடந்தது.
சீருடை அணிந்த நிலையில் இருந்தார். உடனே உடலை மீட்டு கொண்டு வந்தனர். சீருடையில் இருந்த அடையாள பேட்ஜை வைத்து அவர்யார் என்று அடையாளம் காணப்பட்டது.
இவரது சொந்த ஊர் இமாசலபிரதேச மாநிலம் பாலம் பூர் ஆகும். கடோச் 1959-ல் ராணுவத்தில் பணியில் சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 19. அவர் பணியில் சேர்ந்த 3 வருடத்தில் இந்தியா- சீனா இடையே போர் ஏற்பட்டது. அருணாசலபிரதேசத்தில் 4-வது டோக்ரா, ரெஜி மண்ட்டில் சேர்ந்து சீனாவை எதிர்த்து போரிட்டார்.இதில் அவர் 22 வயதில் வீரமரணம் அடைந்தார்.
48 ஆண்டுகள் கழித்து அவரது உடல் மீட்கப்பட்டு உள்ளது. சொந்த ஊரான பாலம்பூருக்கு எடுத்துச் செல்லப்பட்டு முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடந்தன.
பனி மூடிய சிகரத்தில் பனிக்கட்டிகளுக்கு இடையே உடல் கிடந்ததால் கெட்டுப் போகாமல் இருந்திருக்கிறது. உலக வரலாற்றில் ஒரு ராணுவ வீரர் போரில் இறந்து 48 ஆண்டுகளுக்கு பிறகு அவருடைய உடல் கிடைப்பது இதுவே முதல் முறையாகும்.
இது பற்றி கடோச்சின் உறவினர்கள் கூறும் போது, எங்கள் குடும்பத்தில் ஒருவராக கடோச் இருந்ததை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். அவருக்கு நாங்கள் மரியாதை செலுத்துகிறோம் என்றனர்.

"மோனாலிசா"

புன்னகை சிந்தும் மோனாலிசா ஓவிய ரகசியத்தை கண்டுபிடித்த பிரான்ஸ் விஞ்ஞானிகள். 
எப்போதும் மாறாத புன்னகை சிந்தும் உலகப்புகழ் மிக்க மோனாலிசா ஓவியத்தை பிரான்ஸ் ஓவியர் லியோனார் டோ டா வின்சி என்பவர் வரைந்தார். புன்னகை பூக்கும் எழில்மிகு ஓவியத்தின் ரகசியம் குறித்து பலர் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஓவியர் லியோனார்டோ டா வின்சியின் ஓவியங்கள் பாரிஸ் நகரின் லூவர்அருங்காட்சியகத்தில் உள்ளது. அங்குள்ள மோனாலிசா உள்ளிட்ட 7 ஓவியங்களை விஞ்ஞானிகள் பிலிப்வால்டர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்தனர்.
மோனாலிசா உள்ளிட்ட ஓவியங்கள் மீது எக்ஸ்ரே கதிர்களை பாய்ச்சி பரிசோதனை செய்தனர். அதில் மோனாலிசா ஓவியத்தை லியோனார்டோ டாவின்சி 30 அடுக்கு பெயிண்டிங் (வண்ணம்) செய்து இருப்பது தெரிய வந்தது.
மேலும் ஒவ்வொரு வண்ண கலவை அடுக்கு களும் 40 மைக்ரோ மீட்டர் அதாவது மனிதனின் மயிர் தடிமன் அளவுக்கு நுண்ணியமாக வரையப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.
மேலும், மோனாலிசா ஓவியத்தில் மேங்கனிஷ் ஆக்சைடு என்ற ரசாயண கலவையின் மூலம் ஓவியர் டா வின்சி வரைந்துள்ளார். ஓவியம் பளபளப்பாக இருப்பதற்கு அதன் மீது அவர் காப்பர் உலோகத்தை பயன் படுத்தியுள்ளார்.
இந்த தகவலை விஞ்ஞானி பிலிப்வால்டர் தெரிவித்துள்ளார். ஓவியர் டாவின்சி பயன் படுத்திய தொழில் நுட்பத்துக்கு ”ஸ்பு மோடோ” என்று பெயர் என அவர் கூறினார்.
மோனாலிசா ஓவியத்தை டாவின்சி கடந்த 1503 -ம் ஆண்டு வரைய தொடங்கினார். புளோ ரென்டைனை சேர்ந்த வியாபாரி பிரான்சிஸ்கோ டெல்ஜியோகாண்டோ வின் மனைவி லிசா கெராந்தினி இந்த ஓவியத்துக்கு மாடலாக இருந்தார்.
Thanks To.....www.z9world.com

உலகின் மிக உயர்ந்த பாலம்.