Tuesday, July 20, 2010

உங்களால் முடியுமா? முயற்சி செய்து பாருங்கள்.

எண்களை வைத்து கதை 12 வயது சிறுவன் அசத்தல்.



500 இலக்க எண்களை கூட ஒரு முறை பார்த்த மாத்திரத்தில் அப்படியே திருப்பிச் சொல்கிறான் 12 வயது சிறுவன். பல ஆண்டுகளுக்கு முன்போ, அல்லது பின்போ வரும் ஒரு தேதியைக் குறிப்பிட்டு அதன் கிழமையைக் கேட்டால் உடனடியாக சொல்லி விடுகிறான் அந்த சிறுவன். 30 முதல் 35 ஆங்கில வார்த்தைகளை ஒரு முறை பார்த்து விட்டு அப்படியே சிறிதும் பிசகாமல் கடகடவென ஒப்பிக்கிறான்.
பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த தேபசிஸ் சதாபதி மற்றும் சுஜாதா மிஷ்ரா தம்பதியின் ஒரே ஒரு மகன் சாஸ்வத். பாட்னாவில் உள்ள லயோலா உயர்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறான். இவன், உலக நினைவாற்றல் சாம்பியன் பட்டத்தை பெறுவதே தனது லட்சியம் என்று கூறுகிறான். வேர்ல்டுமெமரி சாம்பியன்ஷிப் டாட் காம் சார்பில் ஆன்லைனில் நடத்தப்படும் இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கு முதலில் தகுதித் தேர்வு மற்றும் தேசிய அளவிலான தேர்வுகளில் முதலில் வெற்றி பெற வேண்டும். சாஸ்வத் அதற்கான பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறான்.
இதுகுறித்து சாஸ்வத் கூறியதாவது: ‘‘இரண்டாம் வகுப்பு படிக்கும் போது, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் நினைவாற்றல் பயிற்சி வழங்கி வரும் வெங்கட் கசிபட்லா ஆப் மெமரி விஷன் நிறுவனம் டெல்லியில் பயிற்சி வழங்குவதாக அறிந்தேன். அதில் நான் பங்கேற்றபோது, நினைவாற்றலை வளர்த்துக் கொள்வது குறித்து சிறப்பான பயிற்சி வழங்கப்பட்டது. நான் நினைவாற்றலுக்கு அடித்தளமாக ரிஜிஸ்ட்ரேஷன், ரிடென்ஷன் மற்றும் ரீகால் ஆகிய 3 ஆர்களை நம்புகிறேன். எண்களை சுலபமாக நினைவில் வைத்துக் கொள்ள சிஒஎம்பிஎஸ் என்ற பார்முலாவை வைத்துள்ளேன்.
இதன்படி இரட்டை இலக்க எண்களை கலர்புல், மூவிங், பிக் மற்றும் ஸ்ட்ரேஜ் (சிஓஎம்பிஎஸ்) ஆக மாற்றி அதை கதையாக்கி கொள்வேன். இதன்மூலம் நினைவில் வைத்துக் கொள்வது எளிது.152634577 8909876543226753917 என்ற நம்பரைக் கூட ஒரு கதையாக மாற்றிக் கொள்ளலாம். ஒரு நாற்காலியும் சிபியுவும் கடலில் குதித்த மவுசை கண்டுபிடிப்பதில் ஈடுபடுகின்றன. பின்னர் யானையாக வெளிவரும் அது சாலைகளில் செல்லும் கார்களை சாப்பிட்டு விடுகிறது. இதுதான் கதை. இவ்வாறு சாஸ்வத் கூறினான்.
Thanks to.Alaikal

Monday, July 19, 2010

நீரின் மேல் வரையலாம் வாங்க?

ஆசியாவின் மிகப் பிரபலமான இடம் தாஜ்மஹால்.

உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் தாஜ்மஹால், தற்போது ஆசியாவின் மிகப் பிரபலமான இடமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நகரில் 2010 ஆம் ஆண்டுக்கான ஆசிய கண்கவர் கண்காட்சி (Asian Attractions Expo - AAE) நடந்து வருகிறது.
இந்த கண்காட்சியில் சர்வதேச பொழுதுபோக்கு பூங்கா சங்கம் ( Amusement Parks and Attractions - IAAPA) சார்பில், ஆசியாவின் கண்கவர் விருது வழங்கும் விழா நடந்தது.
இதில் 6 விதமான பிரிவுகளில் ஆசியாவின் பிரபலமான இடங்களை தேர்வு செய்ய போட்டி நடத்தப்பட்டது.
இதற்காக மொத்தம் 94,099 பேர் வாக்களித்தனர்.அவர்களில் அதிமானோர் தாஜ்மஹாலை தேர்வு செய்தனர்.
இதன் மூலம் ஆசியாவின் மிகப் பிரபலமான இடமாக தாஜ்மஹால் தேர்வு செய்யப்பட்டது.
Thanks To...www.z9world.com

Sunday, July 18, 2010

பேஸ்புக்கிற்கு போட்டியாக வருகிறது 'கூகுள் மீ'

சோசியல் நெட்வொர்க் இணையதளங்களில், ஆரம்பித்த சில நாட்களிலேயே அசுர வளர்ச்சி பெற்றுள்ள பேஸ்புக்கிற்கு போட்டியாக, கூகுள் நிறுவனம் 'கூகுள் மீ' என்ற பெயரில் புதி‌ய இணையதளத்தை துவக்க உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தி்த்த டிக் நிறுவனர் கெவின் ரோஸ், இந்த செய்தியை நம்ப முடியவில்லை எனினும், நம்பத்தகுந்த இடத்திலிருந்து இந்த தகவல் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
தொழில்நுட்ப இணையதளங்களான மாஷபிள் மற்றும் டெக்கிரஞ்ச் உள்ளிட்ட தளங்களும் இந்த தகவலை உறுதி செய்துள்ளன.
கூகுள் நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாகவே, விரைவில் 'கூகுள் மீ' இணையதளத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதுகுறித்த ஆய்வுகள், தென் ஆப்ரிக்காவின் டப்ளின் நகரில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்று வருவதாக டெக்கிரஞ்ச் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.