Sunday, August 22, 2010

மனித உடம்பு எனும் அதிசயம் ...

                                
நாம் எதை எதையோ அதிசயம் என்று சொல்லுகிறோம். ஆனால், நமது உடம்பே ஓர் அதிசயம் தான் .                  
உங்களின் பொது அறிவு கூடக்கூட ,நீங்கள் கனவு காணும் திறன் அதிகரிக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள் .                 
 மனிதர்களுக்கு சராசரியாக கனவு 2  முதல் 3  நொடிகளுக்கே நீடிக்கிறது .             
 மனித உடம்பில் பெரிய செல் ,பெண்ணின் அண்டம் ,சிறிய செல் ஆணின் உயிரணு .                 
 நாம் ஒரு அடி எடுத்து வைப்பதற்கு 200  தசைகளைப் பயன் படுத்துகிறோம் .        
 சராசரியாக பெண்கள் ஆண்களை விட 5 அங்குலம் உயரம் குறைவாக இருக்கிறார்கள்...                 
 உங்களின் கால் கட்டை விரலில் 2 எலும்புகள் இருக்கின்றன .மற்ற விரல்களில் 3  எலும்புகள் இருக்கின்றன.                 
 நமது மூளைச் செல்லால் 'என்சைக்லோபீடியா" போல 5 மடங்கு தகவல்களை சேமிக்க முடியும் .                 
 இரண்டு பாதங்களிலும் 2,50,000 வியர்வை சுரப்பிகள் உள்ளன .                 
 உங்கள் வயிற்றில் சுரக்கும் அமிலத்தினால் ஒரு "பிளேடை " கரைத்து விட முடியும் .                 
 வாயில் இருந்து உணவு வயிற்றுக்குச் செல்ல 7 நொடிகள் ஆகும் .                
 நமது உடம்பு வெளியிடும் வெப்பத்தைக் கொண்டு 2 லிட்டர் தண்ணிரை அரை மணி நேரத்தில் கொதிக்க வைக்க முடியும்.                 
 உங்கள் பல்லின் 'எனாமல்' தான் உடம்பிலே கடினமான பொருளாகும் .                 
 உங்களின் கட்டைவிரலும் மூக்கும் ஒரே நீளமாக இருக்கும் .
Thanks  To.........MM.Mubarack - Doha 

Wednesday, August 18, 2010

எச்சரிக்கை - செல்பேசி வெடித்து ஒருவர் மரணம்.


ராஜஸ்தான் மாநிலம், கோட்டா மாவட்டத்தில், செல்பேசி வெடித்துச் சிதறியதில் மனோஜ் குமார் (24) என்பவர் உயிரிழந்தார்.
பாந்தா கிராமத்தைச் சேர்ந்த அவர், தனது மாடுகளைத் தேடி வனப் பகுதிக்கு திங்கள்கிழமை சென்றார்.

செல்போனில் பேசியவாறு அவர் நடந்துச் சென்றபோது, திடீரென செல்போன் வெடித்துச் சிதறியுள்ளது. நிலைகுலைந்து கீழே விழுந்த அவர் அதே இடத்தில் உயிரிழந்தார்.

இரவில் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், கிராம மக்கள் வனப் பகுதிக்கு தேடிச் சென்றனர். நீண்டநேர தேடுதலுக்குப் பின்னர் அடர்ந்த வனப் பகுதியில் அவரது சடலத்தை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து அப் பகுதி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போன் வெடித்துச் சிதறியதாலேயே மனோஜ் குமார் உயிரிழந்துள்ளார் என்பதை போலீஸôரும் உறுதி செய்துள்ளனர்.

அவரது இடது காது, கழுத்து, தோள் பகுதியில் தீக் காயம் காணப்படுகிறது. சம்பவ இடத்தில் வெடித்துச் சிதறிய நோக்கியா 1209 மாடல் செல்போன் பாகங்களையும் சேகரித்துள்ளோம் என்று போலீஸார் தெரிவித்தனர்.          Thanks To.....NewIndiaNews
 

7000 ஆண்டுகள் பழமையான துடுப்பு தென்கொரியாவில் கண்டுபிடிப்பு.

தென் கொரியாவின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 7000 வருடங்கள் தொன்மையான தேவதாரு மரத்தினாலான  படகோட்டும் துடுப்பொன்றை  கண்டு பிடித்துள்ளனர். சிதைவடையாமல் நல்ல நிலையிலிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக, கிமே தேசிய அரும்பொருள்காட்சியகம் (Gimhae National Museum ) விடுத்துள்ள செய்தியில், சியோலுக்கு (Seoul ) தென் கிழக்கு பக்கமாக 240Km (140Miles )  தொலைவில் சாங்யாங்(Changnyeong ) பிரதேசத்திலுள்ள சேற்று நிலப்பகுதியில் இந்த அரிய துடுப்பு கண்டெடுக்கப்பட்டதாக  தெரிவித்துள்ளது.
அரும்பொருள்காட்சியகத்தின் ஆராச்சியாளர் யூன் ஒன்-ஷிக்(Yoon On-Shik )  AFP செய்திச்சேவைக்கு கருத்து தெரிவிக்கையில், "இது தென் கொரியாவில் மட்டுமல்ல உலகிலேயே அரிய கண்டு பிடிப்பாகும்" என்றார்.
2005 ல் சீனாவின் Zhejiang  மாகாணத்தில் சீனாவின் கலையம்சங்களுடன் கண்டு பிடிக்கப்பட்ட சுமார் 8000 வருடங்கள் பழமையானதென கருதப்படும் உலகின் மிகவும் தொன்மையான படகுடன் இது சம்பந்தப்படுகிறதா என ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும், சேற்றில் புதைந்து காணப்பட்டமையினால், புறத்தாக்கங்களிளிலிருந்து அதன் முழுமைத்தன்மை  கெடாமல் பாதுகா க்கப்படுள்ளதுடன், அதன் முழு நீளம் 1.81M (அண்ணளவாக 6 அடி)ஆகும். என்றும்  தெரிவித்தார்.
இதனுடன் ஒத்ததான 6000 வருடங்கள் தொன்மையான தென நம்பப்படும் துடுப்பொன்றை ஜப்பானிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 1999 ல்  ஜப்பானின் கிழக்கு கடற்கரைப்பகுதியில் கண்டெடுத்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இதனூடாக கொரிய குடாவிற்க்கும் ஜப்பானுக்குமிடையிலான பண்டைய கால வர்த்தக தொடர்புகள் நன்கு புலப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Thanks To Yahoo News
More Details Click Here.....

Amazing Indian Gymnasts

Tuesday, August 17, 2010

வசதியில்லாதவர், ஆனால் இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்த பெண்

ஜெர்மனியில் நடந்த உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வினி சாவந்த், தங்கப் பதக்கம் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். இதன்மூலம், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் தங்கப் பதக்கம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த தேஜஸ்வினி, இந்த உயரிய சாதனையை பெறுவதற்காக பட்ட கஷ்டம் கொஞ்சமல்ல. தேஜஸ்வினியை விட அவரது தந்தை ரவீந்திர சாவந்த் பட்ட கஷ்டம் தான் அதிகம். ரவீந்திர சாவந்த் கடற்படையில் இன்ஜினியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தேஜஸ்வினிக்கு இளம் வயதிலேயே துப்பாக்கி சுடும் போட்டியில் ஆர்வம் அதிகம் இருந்ததை அவர், அடையாளம் கண்டு கொண்டார். இதற்கான பயிற்சியில் தேஜஸ்வினியை அவர் சேர்த்து விட்டார். துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கேற்பதற்கும், அதற்கு தேவையான துப்பாக்கிகளை வாங்குவதற்கும், நவீன பயிற்சிகளை பெறுவதற்கும் அதிகமான பணம் தேவைப்பட்டது. ரவீந்திர சாவந்தால் அந்த அளவுக்கு பணம் புரட்ட முடியவில்லை இருந்தாலும், பணம் இல்லை என்ற காரணத்தால், தன் மகளின் சாதனை தடைபட்டுவிடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அதற்காக, தனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் கடன் வாங்கினார்.  இறுதியில் தேஜஸ்வினியின் கனவு நனவானது. 2001ல் போட்டியில் பங்கேற்பதற்கான துப்பாக்கி அவருக்கு கிடைத்தது.
இதுகுறித்து ரவீந்திர சாவந்த் கூறுகையில்,"தேஜஸ்வினி மிகவும் திறமையானவள். எப்படியும் உலக சாம்பியன் ஆகி விடுவாள். ஆனால், அதற்கு பணம் தடையாக இருக்கக் கூடாது'என்றார். ஆரம்ப காலத்தில் பங்கேற்ற போட்டிகளில் தேஜஸ்வினிக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. தற்போது அவரது தந்தை கனவு பலித்து விட்டது. ஜெர்மனியின் முனீச் நகரில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில், 50 மீட்டர் "ரைபிள் புரோன்' பிரிவில் தேஜஸ்வினி தங்கப் பதக்கம் பெற்று விட்டார். இது மட்டுமல்லாமல், இந்த பிரிவில் ஏற்கனவே செய்யப்பட்ட உலக சாதனைøயும் அவர் சமன் செய்தார். ஆனால், இதைப் பார்ப்பதற்கு ரவீந்திர சாவந்த் தற்போது உயிருடன் இல்லை. கடந்த பிப்ரவரியில் அவர் இறந்து விட்டார். போட்டியில் வெற்றி பெற்றவுடன்,"இந்த வெற்றியை என் தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்'என, உணர்ச்சிப் பெருக்குடன் தேஜஸ்வினி கண்ணீர் வடித்தார்.
வெற்றியின் ரகசியம் குறித்து தேஜஸ்வினி கூறுகையில்,"போட்டியைப் பற்றியே எந்த நேரமும் சிந்திக்க வேண்டும். போட்டியில் பங்கேற்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னரே, அதற்கு தயாராகி விட வேண்டும். சீனாவில் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்பவர்கள், இளம் வயதிலேயே அதற்கு தயார் செய்யப்படுகின்றனர். அவர்களுடன் நெருங்கிப் பழகியதன் மூலம், சில முக்கியமான விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது'என்றார். இவர் பணக்கார குடும்பத்தில் பிறந்து எளிதாக வாழ்க்கைப் பாதையில் முன்னுக்கு வரவில்லை. மாறாக உழைப்பு அவருக்கு வெற்றியைத் தந்தது. டில்லியில் நடைபெறும் காமன் வெல்த் போட்டிகளில் தேஜஸ்வினி பங்கேற்றால், நமது நாட்டிற்கு நிச்சயம் விருது உண்டு என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார்.
நன்றி,தினமலர்.