Tuesday, September 7, 2010

உலக சாதனை - உருளைக்கிழங்கு.

பிரிட்டனில், 8 இறாத்தல் 5 அவுன்ஸ் (3.75Kg) நிறையுடைய கிழங்கொன்று  உலகிலேயே மிகப்பெரிய உருளைக்கிழங்காக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பீற்றர்  கிளாஸ் புரூக் என்பவருடைய தோட்டத்தில் வளர்ந்த இந்த கிழங்கு முந்தைய உலக சாதனைக்குரிய உருளைக்கிழங்கை 9 அவுன்ஸ்களால் தோற்கடித்துள்ளது.
இந்த கிழங்கை உற்பத்தி செய்த பீற்றர்  கிளாஸ் புரூக், இந்த சாதனைகளால் மகிழ்ச்சியின் உச்சியில் மிதக்கிறார். இந்த கிழங்கினை  அண்மையில் பிரித்தானிய தேசிய பூங்காவில் காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

நோர்த்தம்ப்டன் பிராந்தியத்தைச் சேர்ந்த 66 வயதான  பீற்றர் இதற்கு முன்பு தனது தோட்டத்தில் பல மரக்கறிகளை வித்தியாசமான முறையில் வளர்த்து சாதனைகள் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அவற்றில் 17 அடி நீளமான கரட், 21 அடி உயரமான பீட்ரூட், மற்றும், 13 இறாத்தல் நிறையுடைய முள்ளங்கி போன்றவையும் அடங்குகின்றன.
 இத்தகைய மரக்கறிகளை வளர்ப்பத்தின் இரகசியம் சரியான விதைகளை தெரிவு செய்வதில் ஆரம்பிக்கின்றது.அவற்றினை எவ்வாறு வளர்ப்பதென்பதை கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு அதிக பிரயத்தனங்கள் தேவைப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Monday, September 6, 2010

'ரிமோட் லொக் அவுட்' முறையை அறிமுகம் செய்கிறது பேஸ்புக்

சோஷியல் நெட்வொர்க் இணையதளங்களில் ஆரம்பித்த சில காலங்களிலேயே புகழின் உச்சியை அடைந்த பேஸ்புக் 'ரிமோட் லொக் அவுட்' முறையை அறிமுகப்பபடுத்துகிறது.
கூகுள் நிறுவனம் பேஸ்புக்கிற்கு போட்டியாக 'கூகுள் மீ ' எனும் இணையதளத்தை துவங்க இருப்பதாக வந்த தகவல் போதாதென்று டயாஸ்போரா எனற் பெயரில் புதிதாக ஒரு சோசியல் நெட்வொர்க் இணையதளமும் உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனது முதலிடத்தை ‌தக்க வைக்கும் முயற்சியாக  பேஸ்புக் இணையதளமும் பல புதிய அதிரடி மாற்றங்களை அறிமுகப்படு்த்த திட்டமிட்டுள்ளது.
அதன்படி 'ரிமோட் லொக் அவுட்' என்ற புதிய பாதுகாப்பு முறையை அறிமுகப்படுத்த இருப்பதாக அது தெரிவித்துள்ளது. இதன்படி நமது பேஸ்புக் கணக்கு லொக் இன் ஆக இருக்கும் பட்சத்தில் நாம் எந்தவொரு கணினியில் இருந்து லொக் அவுட் செய்ய முடியும்.
இதற்கென தனியாக கணக்கு செட்டிங்கில் சில மாற்றங்கள் ‌மேற்கொண்டுள்ளதாக பேஸ்புக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கூகிளின் புதிய இணையதளம் "கூகிள் பைஃபர்"

இணையதள உலகில் அனைத்து பாகங்களிலும் தனது ஆக்கிரமிப்பை செலுத்தி வரும் கூகிள் நிறுவனம் சமீபத்தில் கூகிள் பைபர் எனும் அதிவேக இணைய இணைப்புக்களை வழங்கவுள்ளதாக அறிவித்திருந்தது. 
இந்த திட்டத்திற்கு கூகிள் பைஃபர் எனும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அனைத்து வேலைகளிலும் மும்மூரமாக ஈடுபட்டுவரும் கூகிளுக்கு அதிகப்படியான ஆதரவு அனைத்துத் தரப்பிலும் கிடைத்துக்கொண்டே இருக்கிறது.
இந்த அதிவேக இணைய இணைப்பை பெற்றுக்கொள்ள முற்பதிவுகளும் மிக வேகமாக இடம்பெற்று வருகிறது. இதுவரை 1100 க்கும் மேற்பட்டோர் தங்களது பதிவுகளை மேற்கொண்டுள்ளார்கள் என கூகிள் தெரிவித்துள்ளது.
எனவேதான் கூகிள் பைஃபர் தொடர்பான செய்திகளை தனது பாவனையாளர்களிடம் பகிர்ந்து கொள்ள கூகிள் புதிய இணைய தளத்தை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
அங்கு கூகிள் பைஃபர் தொடர்பான செய்திகளையும் அதன் வளர்ச்சிக்கட்டத்தினையும் கூகிள் எங்களோடு பகிர்வதோடு எமது கருத்துக்களை வழங்கவும் வழியமைத்துள்ளது. கூகிள் பைஃபர் தொடர்பான விடயங்களை நீங்களும் அறிந்து கொள்ள ஆர்வமாக இருந்தால் இந்த புதிய தளத்துக்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள்

Sunday, September 5, 2010

உலக சாதனை - உல்லாச ஊர்தி

30.5 மீற்றரும் 26  சக்கரங்களையும் கொண்ட உலகிலேயே மிக நீண்ட உல்லாச ஊர்தியினை அமெரிக்காவின் கலிபோனியாவிலுள்ள Jay Ohrberg of Burbank  நிறுவனத்தினர் வடிவமைத்துள்ளனர். இவ்வூர்தியானது உலக சாதனைப்புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இது  பிரதானமாக சினிமா படப்பிடிப்புக்களுக்கும், கண்காட்சிகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றது.
இவ்வூர்தியில், பெரிய அளவிலான குளியல் தொட்டி,ஹெலிகொப்டர் இறங்குவதற்கான தளம், படுக்கையறை,செய்மதி என் பல்வேறு வசதிகள் உள்ளக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


Saturday, September 4, 2010

பார்வையிழந்தோருக்கு புது நம்பிக்கை-செயற்கை கார்னியா கண்டுபிடிப்பு

பார்வையற்றோருக்கு புது நம்பிக்கையூட்டும் வகையில், புதிய செயற்கை கார்னியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைப் பொருத்துவதன் மூலம் இழந்த பார்வையைத் திரும்பப் பெற முடியும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஸ்வீடன், கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு இந்த புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. கண் பார்வைக்கு மிக முக்கியமானது கார்னியா எனப்படும் கருவிழி. அது பாதிக்கப்பட்டால் பார்வை பறிபோகும்.
இந்த நிலையில் இந்த கார்னியாவை செயற்கையாக உருவாக்கி மூன்று நாட்டு விஞ்ஞானிகள் குழு சாதனை படைத்து, பார்வையற்றோருக்கு புதிய வெளிச்சத்தைக் கொடுத்துள்ளது.
இதுகுறித்து ஆய்வுக் குழுவில் இடம் பெற்றவர்களில் ஒருவரான ஒட்டாவா மருத்துவமனை ஆய்வுக் கழக டாக்டர் கிரிபித் கூறுகையில், செயற்கை கல்லோஜனை பயன்படுத்தி இந்த செயற்கை கார்னியாவை உருவாக்கியுள்ளோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த செயற்கை கார்னியாவை பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குப் பொருத்து ஆய்வு செய்தோம். அதில் ஆய்வுக்குட்பட்டோருக்கு நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது.
இந்த செயற்கை கார்னியாவை கண்ணில் பொருத்துவதன் மூலம் பாதிப்புக்குள்ளான பகுதியில் செல்களின் வளர்ச்சி தூண்டப்பட்டு பார்வை திரும்ப வாய்ப்பு ஏற்படுகிறது. கிட்டத்தட்ட கான்டாக்ட் லென்ஸ் போல இந்த செயற்கை கார்னியா பொருத்தப்படுகிறது என்றார்.