Friday, September 17, 2010

World's Fastest Fit Crew

“பேஸ்புக்" கிற்கு எதிராக அதிகளவு முறைப்பாடுகள்..!

சமூகக் கட்டமைப்புத் தளமான “பேஸ்புக் கிற்கு எதிராக அதிகளவு முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதேசமயம் கடந்த வாரம் பேஸ்புக்கை பயன்படுத்துபவர் ஒருவரின் பதிவை அதிகாரிகள் கண்டுபிடித்து தடை செய்திருப்பதாக பெண்கள், சிறுவர்கள் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். “பேஸ்புக் தளங்கள் சிலரால் துஷ்பிரயோகப்படுத்தப்படுவதாக கடந்த வாரம் பெண்கள், சிறுவர் பிரிவுக்கு நான்கு முறைப்பாடுகள் கிடைத்திருந்தது.
இலங்கையைச் சேர்ந்த சிறுமிகள்பெண்களின் படங்களை அவர்களின் சம்மதமின்றி சிலர் மாற்றியுள்ளதாக முறையிடப்பட்டிருந்தது. ஏனைய இணையத்தளங்கள் மற்றும் பேஸ்புக் பதிவுகளிலிருந்து படங்கள் அவ்வப்போது எடுக்கப்பட்டுள்ளன. அகௌரவமான முறையில் அவை மாற்றம் செய்யப்பட்டுள்ள பின்னர் பேஸ்புக்கின் வேறு பதிவுகளில் பிரசுரிக்கப்படுகின்றன.
இந்த வருட நடுப்பகுதிவரை சுமார் 50 முறைப்பாடுகள் இது தொடர்பாக பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் துஷ்பிரயோக நடவடிக்கையிலீடுபடும் சக்திகளை கண்டுபிடிப்பது கடினமான விடயமாக இருப்பதாக பெண்கள், சிறுவர்கள் பிரிவு கூறியுள்ளது. கணினி இணைய பாதுகாப்பு முகவரியைக் கண்டுபிடிக்க முடியாதுள்ளதாகவும் சர்வதேச இணையத்தளத்திற்கு பிரதிமைகளை மாற்றும் போது முகவரியைக் கண்டுபிடிக்க முடியாமலிருப்பதாகவும் பெண்கள், சிறுவர் பிரிவு தெரிவித்துள்ளது.
ஆயினும் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் உதவியுடன் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க மாற்றுத் தொழில்நுட்பத்தை கண்டறிவதற்கான பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக பெண்கள், சிறுவர் பிரிவின் அதிகாரி ஒருவர் டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு கூறியுள்ளார்.
நன்றி,அதிரடி.

Thursday, September 16, 2010

ஏழு அவயங்களுடன் அதிசயச் சிறுவன்.

 8 வயது நிரம்பிய 4 கால்கள் 3 கைகள் என 7 அவயங்களுடன் இந்தியாவின் ஒரு குக்கிராமத்தில் பிறந்த சிறுவன் குமார் பஸ்வான். பிறக்கு பொது இரட்டைக் குழந்தைகளாக பிறந்த பஸ்வான், காலப்போக்கில் இரட்டைக்குழந்தைகளில் ஒன்றின் வளர்ச்சி குன்றின்றிய நிலையில் அவயங்கள் மட்டும் வளர்ச்சியடைந்தன. இது மருத்துவ உலகத்தையே ஆச்சரியாத்தில் ஆழ்த்தியுள்ளது.




உலக மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்ற முதலாவது இந்தியர்-சுசில் குமார்.

கடந்த செப்டம்பர் 12 ம் திகதி மொஸ்கோவில் நடைபெற்ற உலக சம்பியன் மல்யுத்த இறுதிப்போட்டியில் ரஷ்யாவின் கோகவ் அலனை வீழ்த்தி ஹரியானாவை சேர்ந்த 27 வயதான சுசில் குமார் தங்கப்பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார்.
சுசில் குமார் ஏற்கனவே அரை இறுதிவரை சென்று வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
வெற்றிக்கு பின்பு இவர் நிருபர்களிடம் கூறுகையில் இந்த வெற்றி கடந்த பெய்ஜிங் ஒலிம்பிக்ஸில் கிடைத்த வெற்றியை விட சிறந்தது என்று கூறினார்.
இவர்  கடந்த பெய்ஜிங் ஒலிம்பிக்ஸில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



இறுதிப்போட்டி  வீடியோ.
 மேலதிக விபரங்களுக்கு........
http://www.latestsportsbuzz.com/?p=7071

Samsung OLED Laptop 14'' Transparent Preview.