Sunday, September 26, 2010

பிரமாதமான செயற்கைத்தீவுகள்.

பேர்ள் தீவு (Pearl Island)
இது "வளைகுடாவின் முத்து" என வர்ணிக்கப்படுகிறது.சுமார் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் (QR 9.1 Billion) செலவில் கத்தார்,தோஹாவின் மேற்கு வளைகுடா கடற்கரையில்  செயற்கையாக இது அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 988 ஏக்கர்(4 மில்லியன் சதுரப்பரப்பு) பரப்புக்கொண்ட இந்நிலப்பகுதியை இரு மருங்கிலும் ஈச்சை மாரங்களாலான 4 பெரும் வீதிகள்  நிலப்பரப்புடன் தொடர்புபடுத்துகிறது.
எதிர்வரும் காலங்களில் கத்தாரின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 20Km (12.4 Miles) தொலைவில் 40Km (24.9Miles) அளவில் இத்தீவுகளானது விஷ்தரிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
ஈச்சை  மரத்தீவுகள் 
ஈச்சை மர வடிவிலான 3 தீவுகள் இதில் உள்ளடங்குகின்றன.
இத்தீவில் 500 தொடர் மாடி வீடுகள்,2000 குடியிருப்பு  மனைகள்,25 உணவகங்கள், 200 ஆடம்பர கடைகள் அமைகின்றன.
மேலும், மேலதிகமாக 125Km இதனுடன் இணைத்து இத்தீவுகள் விஷ்தரிக்கப்படவுள்ளது.

 உலகப்படத்தீவுகள்.
ஐக்கிய  அரபு இராஜ்ஜியத்தின் துபாய் கடற்கரையில் உலகப்பட வடிவில் சுமார் 300  தீவுக்கூட்டங்களை உள்ளடக்கி இந்த செயற்கை தீவுகள் அமையவிருக்கின்றது.
இத்தீவுக் கூட்டங்கள்  3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தனியார் குடியிருப்பு மனைகள்,பங்களா வீடுகள்,பொழுது போக்கு இடங்கள் போன்றன அமையவிருக்கின்றன.
ஒவ்வொரு தீவுகளும் 250-900 ஆயிரம் சதுர அடி அளவுகளைக் கொண்டுள்ளதுடன் 50 தொடக்கம் 100 மீற்றர் தூர நீர் இடைவெளியில் அமைந்துள்ளது சிறப்பம்சமாகும்.
வட கடல் துலிப் தீவுகள்.
 கலைஞனின் எண்ணங்களைப் பிரதிபலிப்பனவையாக நெதர்லாந்தின் துலிப் தீவுகள் அமைந்துள்ளன.இன்று பெருகி வரும் உலக சனத்தொகை பரம்பலின் போது ஏற்படும் இடப்பற்றாக்குறையை  நிவர்த்தி செய்ய உலகத்தலைவர்கள் மேற்கொண்டு வரும் ஒரு திட்டமாக இதனைக் கொள்ளலாம்.
 ரஷ்யக் குடியரசுத் தீவுகள்.
 ரஷ்யாவின் சோச்சி (Sochi) கடற்கரையில் சுமார் 350 ஹெக்டர் நிலப்பரப்பில் இந்த செயற்கைத்தீவு அமைக்கப்படவுள்ளது.
சுமார் 6.2 பில்லியன் டொலர்(4.4 Billion Euros ) செலவில் 25,000 மக்கள் வசிக்ககூடியதாக தொடர்மாடிகளும்,குடியிருப்புக்களும் அமைக்கப்பட்டு எதிர்வரும் 2014ம் ஆண்டு நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னர் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Friday, September 24, 2010

உலகிலேயே மிகப்பெரிய மூக்கு.

 உலகிலேயே மிகப்பெரிய மூக்குக்கு சொந்தக்காரராக பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் வசிக்கும் Faizan Agha அவர்கள் உலக சாதனைப்புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.இவரின் மூக்கின் அளவு 12.19 Cm(4.8 அங்குலங்கள்) ஆகும்.
இதற்கு முன்பு  ஜூலை 6,2007 அன்று உலகிலேயே மிகப்பெரிய மூக்காக சாதனப்புத்தகத்தில் இடம்பிடித்த துருக்கியின் Artvin நகரில் வசிக்கும் Mehmet Ozyurek என்பவரின் 8.8Cm(3.5 அங்குலங்கள்) நீளமான மூக்கின் சாதனையை முறியடித்து இச்சாதனையைப் புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.




புத்திசாலிக்குழந்தை.

அதிக விலைக்கு சுங்கான் பெட்டி விற்பனை.

பதினேழாம் நூற்றாண்டில் இலங்கையில் யானைதந்தத்தில் தயாரிக்கப்பட்ட மிகுந்த சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய புகைபிடிப்பதற்கான சுங்கான் பெட்டி ஒன்று பிரிட்டனில் பெரும் விலைக்கு ஏலம் போயுள்ளது.
தந்தத்திலான இந்த சிங்கள, இரு குழல் சுங்கான் பெட்டி 80,300 அமெரிக்க டாலர்களுக்கு விலைபோயுள்ளது. இது எதிர்பார்க்கப்பட்டதை விட பல மடங்கு அதிகமான விலையாகும். 
கிறிஸ்டி என்னும் ஏல நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்ட இந்த சுங்கான் பெட்டியை வாங்கியவரின் பெயர் ரகசியமாக பேணப்படுகிறது.
50 ஆண்டுகளாக பல்வேறு வகையான சுங்கான்களை சேகரித்து வந்த Trevor Barton என்பவரது பொக்கிஷங்களில் இருந்தே இந்த சுங்கான் பெட்டி கிடைந்திருந்தது.
வித்தியாசமான புகைபிடிப்பு கருவிகள் என்கிற பட்டியலின் கீழ் இந்த சுங்கான் பெட்டி விற்பனைக்கு வந்தது.
இதுபோன்ற சுங்கான் பெட்டிகள் நான்கு மட்டுமே உலகில் இருப்பதாக கருதப்படுகிறது. அவற்றில் ஒன்று லண்டனில் இருக்கும் விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகத்திலும், மற்ற இரண்டு நெதர்லாந்தில் இருக்கும் டி மொரியான் அருங்காட்சியகத்திலும் இருக்கின்றன. 
நன்றி.BBC

மண் ஓவியங்கள்.

25 வயதான உக்ரைன்  நாட்டைச்சேர்ந்த Kseniya Simonova (April 22,1985) என்பவர் தனது கற்பனைகளை மண்ணைக் கொண்டு  ஓவியங்களாக வரைந்து, பார்ப்போரை அசத்தி வருகிறார்.இவரது மண் ஓவியங்கள் பிரசித்தி பெற்றவை.
 இவர் “2009 Ukraine’s Got Talent.” எனும் விருதினை தான் வரைந்த மண் ஓவியங்களுக்கு பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அவரது மண் ஓவியங்கள் வீடியோ கீழே.

 அவரது மண் ஓவியங்கள் படங்கள்.