Thursday, October 7, 2010

' பேஸ்புக்' வழங்கும் புதிய 'குரூப்ஸ்'

பேஸ்புக் பாவனையாளர்கள் அனைவரும் அதிக அக்கறை கொள்ளும் விடயம் ' ப்ரைவசி' ஆகும். நாம் பொதுவாக விடயங்களை, தகவல்களை அல்லது புகைப்படத்தினை நமது பேஸ்புக் நண்பர்களிடையே பகிர்கின்றோம்.
எனினும் குறிப்பிட்ட சில செயற்பாடுகளைக் குறித்த சிலரிடையே மட்டும் பகிர விரும்புவதுண்டு. இவ் விடயத்தினை கருத்திற் கொண்டு புதிய ' குரூப்ஸ் ' வசதியினை பேஸ்புக் வழங்கியுள்ளது.
ஏற்கனவே பேஸ்புக்கில் இது போன்றதொரு வசதி உள்ள போதிலும் 5 % குறைவான பாவனையாளர்களே இதனை உபயோகிப்பதாகவும் ஆனால் இவ்வசதியானது பல பாவனையாளர்களால் உபயோகிக்கப்படுமெனவும் அதன் நிறுவுனர் ஸுக்கர் பேர்க் தெரிவிக்கின்றார்.
தற்போது இவ்வசதியின் மூலம் நீங்கள் விரும்பிய சிலரிடையே மட்டும், அதாவது விருப்பமான குழுவினரிடையே மட்டும் தகவல்களைப் பகிரலாம்.
இதன் மூலம் நண்பர் வட்டத்தினிடையே, குடும்ப உறுப்பினர்களிடையே தகவல் பரிமாற்றத்தினை மேற்கொள்ளமுடியும்.
மேலும் அக் குழுவினரிடையே 'சாட்டிங்' , குரூப் 'மெசேஜிங்' மற்றும் குரூப் 'மெயிலிங்' வசதிகளும் இதில் உள்ளன.
இதன் மூலம் பாதுகாப்பாக விடயங்கள் பகிரப்படுவதோடு நமது ' ப்ரைவசி' மேலும் பாதுகாக்கப்படுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி.வீரகேசரி.

Wednesday, October 6, 2010

உலகின் உயர்ந்த கட்டடத்திலிருந்து உலக சாதனைப்பாய்ச்சல்.

இந்த ஆண்டு (2010) துபாயில்  மிகக்கோலாகலமாக திறந்து வைக்கப்பட்ட  உலகின் முழுக்கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துக் கொண்ட, உலக சாதனைக்  கட்டடமான Burj Khalifa விலிருந்து உலக சாதனைப்பாய்ச்சலினை ஆகாயத்திலிருந்து பாய்வதில் தேர்ச்சி பெற்ற, பல்வேறு சாதனைகள் புரிந்த  Omar Al Hegelan and Nasser Al Neyadi  ஆகிய இருவரும் பாய்ந்து புதிய உலக சாதனை நிலை நாட்டியுள்ளனர்.
இவர்களில் Al Hegelan என்பவர், 1997 ம் ஆண்டு வரை 15000 தடவைகள் ஆகாயத்திலிருந்து பாய்ந்துள்ளதாக Sky News க்கு தெரிவித்துள்ளார்.
இவர்கள் இருவரும் 828m (2,717ft) உயரமான உலகின் உயர்ந்த கட்டடத்தின்
2,205 (feet) அடி உயரத்திலிருந்து பாய்ந்து இந்த சாதனையைப்புரிந்துள்ளனர்.
இவர்களின் பாதுகாப்பு மற்றும் ஆயத்தங்களை நிரூபித்து இதிலிருந்து பாய்வதற்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் அனுமதி சுமார் ஒரு மாத கால முயற்சியின்  பின்னர் கிடைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Tuesday, October 5, 2010

உலகின் பருமனான குழந்தை.

ரஷ்யாவின் ALEISK நகரில் செப்டம்பர் 17,2007 அன்று Nadia Khalina என்பவருக்கு பிறந்த 7.75 kg 9 (17.1 lb) நிறையுடைய பெண்  குழந்தையே உலகின் பருமனான குழந்தையாக சாதனை படைத்துள்ளது.
இதற்கு  முன்னர் 1879ம்  ஆண்டு அமெரிக்காவில் 23 lbs, 12 oz (10.7 kg) நிறையுடன் பிறந்த குழந்தை தான் இச்சாதனையை முதன் முதலில் படைத்திருந்தது. துரதிஷ்டவசமாக 11 நாட்களில் இறந்து விட்டது.
அதன்பின்னர், இத்தாலியில் 22 lbs 8 oz (10.15 kg) நிறையுடன் பிறந்த குழந்தையும்  மற்றுமொரு தகவலின்படி ரஷ்யாவின்  Irkutsk நகரில் 28 lbs  4 oz  நிறையுடன் பிறந்த குழந்தையும், சீனாவைச் சேர்ந்த பெண்ணுக்கு (நிறை சம்பந்தமான பதிவு கிடைக்கப்பெறவில்லை) பிறந்த குழந்தையும் இச்சாதனைத் தொடரில் இடம்பிடித்திருந்தன.
இறுதியாக, 7.75 kg 9 (17.1 lb) நிறையுடன் பிறந்த இக்குழந்தையே உலக சாதனைப்புத்தகத்தில் இன்றுவரை இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Rumaisa Rahman என அக்குழந்தைக்கு பெயரரிட்டுள்ளனர்.









Aqua Tower.

அமெரிக்காவின் சிக்காகோ நகரில் அமைந்துள்ள இக்கட்டடமானது,உலகிலேயே  ஒரு பெண் (Jeanne Gang) கட்டட கலைஞரால் உருவாக்கப்பட்ட உயர்ந்த கட்டடமாக சாதனை படைத்துள்ளது.
261.74M (858.73 ft) உயரமான நீரலை வடிவில் அமையப்பெற்றுள்ள இக்கட்டடத்தின் பரப்பு 1,990,635 (sq ft) (184,936.0 m2) ஆகும்.கட்டடத்தின் அடி மட்டம் 140,000 sq ft (13,000 m2)சதுர அடிகளும்.மேல்மட்டம் 82,550 sq ft (7,669 m2)சதுர அடிகளையும் கொண்டுள்ளது.
 16,000 sq ft (1,500 m2) சதுரப்பரப்புடைய 86 அடுக்குகளை கொண்டமைந்துள்ள இக்கட்டடத்தில் குடியிருப்புக்களும், உணவு விடுதிகளுடனும்,தோட்டம் போன்றனவும் அமைந்துள்ளன.
அதன் படங்கள்:





Monday, October 4, 2010

உலகிலேயே மிகச் சிறிய கார்.

PEC-(The Peel Engineering Company)கம்பனி 1962 மற்றும் 1965 காலப்பகுதிகளில் தயாரித்த Peel P50 எனும் கார் தான்  உலகிலேயே மிகச் சிறிய காராகும்.
 4 அடி 5 அங்குலம் நீளமும்,3 அடி 3 அங்குலம் அகலமும், 3 அடி 5 அங்குலம் உயரமும் கொண்ட இதன் நிறை 131 இராத்தல்களாகும். இதனது வேகம் மணிக்கு 30 தொடக்கம் 40 கிலோ மீற்றர்களாகும்.
படங்கள்.





வீடியோ