Wednesday, December 15, 2010

உலகின் மிக நீளமான வாவில் பாலம் - கொரியா.

தென் கொரியாவின் ஹன் (Han River ) ஆற்றுக்கு மேலாக இடப்பட்டுள்ள பன்போ (Banpo Moonlight Rainbow Fountain) பாலமானது உலகின் மிக நீளமான வானவில் பாலமாக  கின்னஸ் உலக சாதனைபுத்தகத்தில் பதியப்பட்டுள்ளது.
 கடந்த 2009 ல் 1,140m நீள பாலத்தின் இரு பக்கத்திலும் சுமார் 10,000 LED நீர் பாய்ச்சும் குழாய்கள் பொருத்தப்பட்டு பாலம் அழகு படுத்தப்பட்டது. பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள இக்குழாயிகளினூடாக நிமிடத்திற்கு 190 தொன் ஆற்று நீர் தொடர்ச்சியாக பாய்ச்சப்படுகிறது. 
43 மீற்றர் தூரத்திற்கு கிடையாக வானவில் நிறத்தில் நீர் பீச்சப்படும் காட்சி கண் கொள்ளா காட்சியாகும்.இது  வார நாட்களில் தினமும் பி.ப 12:30 , பி.ப 3.00, பி.ப 8.00, பி.ப 8:40 , மற்றும் பி.ப  9:20 க்கும், வார இறுதி நாட்களில்  பி.ப 5.00, பி.ப 10.00 க்கும் இயக்கப்படுகின்றது.
 கொரிய தலை நகர மேயர் Oh Se-hoon, இது  குறித்து கருத்து தெரிவிக்கையில், இந்த வானவில் பாலத்தினால் நகரே அழகு பெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.
(Location: Express Bus Terminal Subway Station and getting out of exit number 8-1, the exit for Banpo Bridge)









பென்சில் தயாரிக்கப்படும்  முறை

பனிப்பொழிவினால் மைதானம் சேதமாகும்  காட்சி.

20 அங்குலத்துக்கும் அதிகமான கணத்தில்  பெய்த உறை பனியின் காரணமாக அமெரிக்காவின் விளையாட்டு (Minnesota Viking stadium, Hubert H. Humphrey Metrodome,Mall of America Stadium ) மைதானத்தின் கூரை  கடந்த டிசம்பர் 12, 2010 ல் சேதமடைந்துள்ளது.
இதில் நடைபெறவிருந்த போட்டிகள் யாவும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் புனரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன.

Monday, December 13, 2010

உலகின் மிக நீண்ட புத்தகம்

மிங் (Ming) அரச பரம்பரை காலத்தில் சுமார் 1403ம் ஆண்டு காலப்பகுதியில் 3000 கல்விமான்கள் ஒன்றிணைந்து  4 ஆண்டுகள் செலவு செய்து சீன மொழியில் எழுதி முடிக்கப்பட்ட Yongle Dadian அல்லது  Yung-lo ta-tien என்ற கலைக்களஞ்சியம் தான் உலகிலேயே மிக நீண்ட புத்தகமாகும்.
இப்புத்தகம்  சுமார் 11,095 பகுதிகளையும், 22,877 அத்தியாயங்களையும் கொண்டுள்ள இக்கலைகளஞ்சியம் 370 மில்லியன் சீன எழுத்துக்களையும் கொண்டுள்ளது.