புளோரிடாவின் தம்பா (Tamba) கடற்கரையில் இந்த அதிசய படைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இக்கடல் அரக்கன் நீண்ட பற்கள், தாடை, மண்டையோடு ஆகியவைகளைக் கொண்டமைந்திருக்கின்றது.
Tuesday, January 4, 2011
Monday, January 3, 2011
மனித உடம்பு எனும் அதிசயம்
நாம் எதையெதையோ அதிசயம் என்று சொல்கிறோம். ஆனால் நமது உடம்பே ஓர் அதிசயம்தான்.
கீழ்க்கண்ட உண்மைகளைப் படித்தால் நீங்களும் அதை ஒப்புக் கொள்வீர்கள்.
மனிதர்களுக்குச் சராசரியாக கனவு 2 முதல் 3 நொடிகளுக்கே நீடிக்கிறது.
மனித உடம்பில் பெரிய செல், பெண்ணின் அண்டம். சிறிய செல், ஆணின் உயிரணு.
நாம் ஒரு அடி எடுத்து வைப்பதற்கு 200 தசைகளைப் பயன்படுத்துகிறோம்.
சராசரியாக பெண்கள் ஆண்களை விட 5 அங்குலம் உயரம் குறைவாக இருக்கிறார்கள்.
நமது கால் கட்டை விரலில் 2 எலும்புகள் இருக்கின்றன. மற்ற விரல்களில் 3 எலும்புகள் இருக்கின்றன.
நமது மூளை செல்லால் `என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா' கலைக் களஞ்சியம் போல 5 மடங்கு தகவல்களை வைத்திருக்க முடியும்.
இரண்டு பாதங்களிலும் 2 லட்சத்து 50 ஆயிரம் வியர்வைச் சுரப்பிகள் இருக்கின்றன.
நமது வயிற்றில் சுரக்கும் அமிலத்தால் ஒரு `பிளேடை' கரைத்துவிட முடியும்.
வாயில் இருந்து உணவு வயிற்றுக்குச் செல்வதற்கு 7 நொடிகள் ஆகின்றன.
நமது உடம்பு வெளியிடும் வெப்பத்தைக் கொண்டு 2 லிட்டர் தண்ணீரை அரை மணி நேரத்தில் கொதிக்க வைக்க முடியும்.
நமது பல்லின் `எனாமல்' தான் உடம்பிலேயே கடினமான பொருளாகும்.
நமது கட்டை விரலும், மூக்கும் ஒரே நீளமாக இருக்கும்.

நன்றி: தகவல் சகோதரர் அன்சார் (மின்னஞ்சல் ஊடாக...)
Friday, December 31, 2010
Thursday, December 30, 2010
சிறுநீரகத்தில் இருந்த 1,72,155 கற்களை அகற்றி சாதனை
வைத்திய உலகில் ஆச்சரியம்.
நோயாளி ஒருவரின் சிறுநீரகத்தில் இருந்த 1,72,155 கற்களை அகற்றி முன்னர் வைத்திய நிபுணர் Nashik என்பவரால், 14,098 சிறு நீரக கற்களை அகற்றி நிகழ்த்தப்பட்ட பழைய சாதனையை முறியடித்து, மகாராஷ்டிர டாக்டர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், துலே மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் ஆஷிஷ் ராவன்டாலே பாட்டீல். சிறுநீரக நோய் சிகிச்சை நிபுணரான இவர் இன்ஸ்டிடியூட் ஆப் யூராலஜி என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வருகிறார்.
இவரிடம் 45 வயதுடைய தன்ராஜ் வாடிலே என்பவர் அடிவயிறு வலிப்பதாக கூறி, சிகிச்சைக்கு வந்தார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு சிறுநீரகத்தில் ஏராளமான சிறு கற்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை செய்து கற்களை அகற்ற டாக்டர் பாட்டீல் முடிவு செய்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் தேதி, தன்ராஜுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது, சிறுநீரகத்தில் இருந்து மொத்தம் 1,72,155 சிறிய கற்கள் நான்கு மணி நேர சத்திர சிகிச்சையின் பின் அகற்றப்பட்டன. இந்த கற்கள் அனைத்தும் நோயாளியின் ஒரு சிறுநீரகத்தில் இருந்து அகற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை சாதனையாக கருதி, கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்ய அனுப்பி வைத்தார் டாக்டர் பாட்டீல். அவரது சாதனையை அங்கீகரித்து, கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்துள்ளனர். பாட்டீல் கூறுகையில், ‘கின்னஸ் சாதனை பதிவு அதிகாரிகளிடம் இருந்து கடிதம் கிடைக்கப்பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளித்தது.’ என்றார்.
மேலதிக தகவலுக்கு.....
http://www.themedguru.com/20101116/newsfeature/indian-doctor-removes-172-155-kidney-stones-single-patient-86141890.html

Subscribe to:
Posts (Atom)