Wednesday, April 14, 2010

காதுகேளாதவர்களுக்கு நவீன சிகிச்சை 
மருத்துவத்துறை ஐம்புலன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இனி ஊனம் என்ற சொல்லையே மறந்துவிடும் அளவிற்கு அரிய சாதனைகளை படைத்து வருகின்றது. இதய மாற்று அறுவை சிகிச்சை, கிட்னி மாற்று அறுவை சிகிச்சை, செயற்கை சுவாசப்பை, செயற்கை கண் இவ்வாறு மனித உடலில் இன்றியமையாத பாகங்கள் செயல்படாத நிலையில் இருந்தால் சிகிச்சையின் மூலம் வெற்றிகரமாக மாற்றி செயல்பட வைத்து வருகின்றனர். கண் பார்வைக்கு மூக்குக் கண்ணாடி அணிந்த காலம் போய் காண்டக்ட் லென்ஸ் பொருத்தும் நிலை வந்துள்ளது. இதை பொருத்திக் கொள்வதன் மூலம் ஹகண்பார்வை கோளாறு உள்ளவர்' என்பதை மறைத்துவிடுகிறது. இதே போல் செயற்கை மூட்டு, செயற்கை கால், கை என்று ஊனமுற்றவர்களையும் நடந்தோடச் செய்யும் நவீன செயற்கை உறுப்புகளும் கண்டறியப்பட்டுள்ளன.

காதுகேளாதவர்கள் வாக்மேன் கேட்பது போல காதில் இயர்போன் போன்ற கருவியை செருகிக் கொண்டு சட்டையில் சிறிய ட்ரான்சிஸ்டர் போல் உள்ளக் கருவியை மாட்டிக்கொண்டு செல்வார்கள். இப்படி காதில் மாட்டிக் கொண்டு வெளியில் சென்றால் கேட்கும் திறனில் பாதிப்பு உள்ளது என்று மற்றவர்கள் அறிந்து கொள்ளும் நிலை இருந்தது. அறிவியல் முன்னேற்றம் ஏற்பட ஏற்பட இதெல்லாம் சுருங்கி காதின் பின்புறம் சிறிய கருவி செருகியிருப்பார்கள். இது ஓரளவு அவர்கள் ஊனத்தை மறைத்ததோடு கேட்கும் திறனையும் பெற முடிந்தது. இருந்தாலும் எத்தனையோ பேர் இதற்காக வெட்கப்பட்டவர்களும் உண்டு. காது மெஷின் மாட்டியிருப்பதால் நம்மை செவிடர் என்று மற்றவர்கள் அறியக்கூடும் என்ற ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்தது அவர்களிடம். ஆனால் அவர்கள் காதில் தேன் வந்து பாய்வது போல ஒரு விஞ்ஞானப் புரட்சி நடந்திருக்கின்றது. ஆம்! அறிவியலின் அபார வளர்ச்சியில் பயோனிக் காது எனப்படும் செயற்கை காது இப்பொழுது பொருத்தப்படுகிறது. இதைப் பற்றி விரிவாக காணலாம்.

மைக்ரோபோன் மூலம் பெறப்படும் ஒலி மின் சிக்னல் மூலம் நரம்பு தூண்டப்பட்டு செய்தியை அனுப்புகின்றது. காது கேளாதவர் இதற்கான கருவியை எப்பொழுதும் அணிந்து கொள்ளவேண்டும். இது பழைய முறை. ஆனால் பயோனிக் இயர் என்ப்படும் புதிய முறையில் காதின் பின்புறம் தோலுக்கடியில் நிரந்தரமாக பொருத்தப்படுகிறது ஒரு கருவி. இதன்மூலம் காதுகேளாதவர் மற்றவர்களைப் போல சாதாரணமாக கேட்கலாம்.

பயோனிக் இயர் எனப்படும் இதை காக்ளியர் மாற்று அறுவை சிகிச்சை என்று அழைக்கிறார்கள். காக்ளியர் எனப்படும் காதில் உள்ள இந்த உறுப்பின் வேலை, செவியால் பெறப்படும் ஒலியை இந்த சவ்வு பெற்று நரம்புகள் மூலம் தூண்டப்பட்டு கேட்கும் திறனை அறியச் செய்கின்றது. இம்முறையில் பயோனிக் இயர் எனப்படும் இந்த செயற்கை கருவியை காதின் பின்பகுதியின் தோலுக்கடியில் பொருத்தி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதன் மூலம் செவிடான ஒருவர் நன்றாக கேட்கும் ஆற்றலை பெறமுடிகிறது. இதனால் பெறப்படும் ஒலி மின் சிக்னல்களாகப் பெறப்பட்டு செவி நரம்புகளுக்கு செய்தியாக அனுப்பப்படுகிறது.

சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் முதன்முறையாக 35 வயதுள்ள ஒரு பெண்ணுக்கு வெற்றிகரமாக இந்த பயோனிக் இயர் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இம்மருத்துவ மனையில் தொண்டை,மூக்கு, காது பிரிவின் தலைவர் டாக்டர் ஹுசைன் அப்துல் ரகுமான் கூறுகையில், "காது கருவி வைத்தும், கேட்கும் திறனை இழந்த இப்பெண்ணுக்கு இந்த பயோனிக் இயர் மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டோம். வெற்றிகரமாகவும் முடிந்தது. இதன்மூலம் அந்தப் பெண் மற்றவர்களைப் போலவே காது கருவி இல்லாமலேயே கேட்கும் திறனைப் பெற்றார். இனி நாங்கள் சிறிய வயதினருக்கும் மற்றும் 6 மாதக் குழந்தைகளுக்கும் கூட இந்த சிகிச்சையை மேற்கொள்ள இருக்கின்றோம". என்றார்.

இதற்கு ஆகும் செலவு கிட்டத்தட்ட 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய். தற்போது இந்த நவீன சிகிச்சைக்கு அதிக செலவு ஆகிறது என்றாலும் வருங்காலத்தில் வெகுவாக குறையவும் வாய்ப்பு உள்ளது.

நன்றி, சகோதரர் -எம்.ஜே.எம்.இக்பால் 

Tuesday, April 13, 2010

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்.

1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது.
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
2.மிக அதிகமாகச் சாப்பிடுவது
இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
3. புகை பிடித்தல்
மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.
4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்
நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
5. மாசு நிறைந்த காற்று
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.
6.தூக்கமின்மை
நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது
தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.
8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது
மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.
10. பேசாமல் இருப்பது.
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

Thanks to...Dr.M.Sathick from Darulsafa

சிரிங்க....

Monday, April 12, 2010

சர்க்கரையை (நீரிழிவு) கட்டுப்படுத்த......
மருத்துவர். சாதிக்  RNMP., RHP., ND., FRIM., DAT(Acu), MD(Acu)


சர்க்கரை நோய் வரக் காரணங்கள்:
  1. பரம்பரை ஒரு காரணமாகலாம்
  2. உடலுழைப்பு, வியர்வை வெளிவராத வாழ்க்கைநிலை
  3. நகர்புற வாழ்வியல் சூழல்
  4. முறையற்ற உணவு பழக்கம்
  5. மது, புகை, போதை பொருட்களால்
  6. உணவில் அதிக காரப்பொருட்கள், மாவுப் பொருட்கள், கொழுப்பு உணவுகள் தேவைக்கு மேல் எடுப்பதால்
  7. இன்னும் பிற
சர்க்கரை நோயின் அறிகுறிகள்:
  1. அடிக்கடி சிறுநீர் கழித்தல்
  2. சிறுநீர் கழித்ததும் கை, கால், மூட்டுவலி
  3. அதிக வியர்வை (துர்நாற்றாத்துடன்)
  4. சிறுநீரில் ஈ,எறும்பு மொய்த்தல்
  5. அடிக்கடி தாகம், அதிக பசி
  6. உடலுறவில் அதிக நாட்டம், இந்திரியம் நீர்த்துபோதல் - அதனால் ஆண்மைக்குறைவு
  7. தூக்கமின்மை
  8. காயம்பட்டால் ஆறாதிருத்தல்
சர்க்கரை அதிகரிக்க காரணங்கள்:
  1. அதிக அளவில் இனிப்பு பொருட்களை உண்பது
  2. நெய், பால், மீன், கருவாடு, கோழி, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி அதிகளவில் உண்பது
  3. வேகாத உணவுகள் மற்றும் வடை, போண்டா, பஜ்ஜீ, பூரி போன்ற மந்த பொருட்கள் உண்பதால்
  4. அடிக்கடி உடலுறவு கொள்வது அல்லது சாப்பிட்டவுடன் உடலுறவு கொள்வதாலும்.
சர்க்கரையை கட்டுபடுத்தும் காய்கறிகள்:
  1. வாழைப்பூ
  2. வாழைப்பிஞ்சு
  3. வாழைத்தண்டு
  4. சாம்பல் பூசணி
  5. முட்டைக்கோஸ்
  6. காலிஃபிளவர்
  7. கத்தரிப்பிஞ்சு
  8. வெண்டைக்காய்
  9. முருங்கைக்காய்
  10. புடலங்காய்
  11. பாகற்காய்
  12. சுண்டைக்காய்
  13. கோவைக்காய்
  14. பீர்க்கம்பிஞ்சு
  15. அவரைப்பஞ்சு
சர்க்கரையை கட்டுபடுத்தும் கீரைகள்:
  1. முருங்கை கீரை
  2. அகத்திக் கீரை
  3. பொன்னாங்கண்ணிக் கீரை
  4. சிறுகீரை
  5. அரைக்கீரை
  6. வல்லாரை கீரை
  7. தூதுவளை கீரை
  8. முசுமுசுக்கைகீரை
  9. துத்தி கீரை
  10. மணத்தக்காளி கீரை
  11. வெந்தயக் கீரை
  12. கொத்தமல்லி கீரை
  13. கறிவேப்பிலை
  14. சிறு குறிஞ்சான் கீரை
  15. புதினா கீரை
சர்க்கரையை கட்டுபடுத்தும் பழங்கள்:
  1. விளாம்பழம் -50கிராம்
  2. அத்திப்பழம்
  3. பேரீத்தம்பழம்-3
  4. நெல்லிக்காய்
  5. நாவல்பழம்
  6. மலைவாழை
  7. அன்னாசி-40கிராம்
  8. மாதுளை-90கிராம்
  9. எலுமிச்சை 1/2
  10. ஆப்பிள் 75கிராம்
  11. பப்பாளி-75கிராம்
  12. கொய்யா-75கிராம்
  13. திராட்சை-100கிராம்
  14. இலந்தைபழம்-50கிராம்
  15. சீத்தாப்பழம்-50கிராம்
சர்க்கரையை கட்டுபடுத்தும் சாறுவகைகள்:
  1. எலுமிச்சை சாறு -100மி.லி
  2. இளநீர் -100மி.லி
  3. வாழைத்தண்டு சாறு -200மி.லி
  4. அருகம்புல் சாறு -100மி.லி
  5. நெல்லிக்காய் சாறு -100மி.லி
  6. கொத்தமல்லி சாறு -100மி.லி
  7. கறிவேப்பிலைச் சாறு -100மி.லி
தவிர்க்க வேண்டியவைகள்:
  1. சர்க்கரை (சீனி) இனிப்பு பலகாரங்கள் (கேக், சாக்லேட், ஐஸ்கிரீம்)
  2. உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, வாழைக்காய்
  3. மாம்பழம், பலாப்பழம், சப்போட்டா தவிர்க்கவும்.
  4. அடிக்கடி குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்கவும்.
  5. வேர்க்கடலை, பாதாம், பிஸ்தா தவிர்க்கவும்.