Saturday, April 17, 2010

செல்போனின் தரத்தை அறிவது எப்படி? -அபூ ரம்லா

காலையில் தூக்கத்திலிருந்து விழித்து எழுந்தது முதல் இரவு தூங்கப்போகும் வரை உபயோகப் படுத்தக்கூடிய பொருட்கள் எல்லாமே தரமானதாக இருக்க வேண்டும் என்று நாம் ஒவ்வொருவரும் விரும்புவோம். அப்படி அன்றாடம் உபயோகிக்கக்கூடிய பொருள்களில் செல்போன் அதிமுக்கியமான பொருளாக மாறியுள்ள கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குடும்பத்திற்கு ஒன்று என்றிருந்த நிலை மாறிப்போய் தனி நபரொருவர், ஒன்றிற்கு மேல் செல்போன்களை பயன்படுத்துகின்ற சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கிறோம். செல்போன்களை அதிகமான நேரம் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அதிகளவில் இருக்கிறது என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது, இன்ஷா அல்லாஹ் பாதிப்புகள் குறித்து பிறகு வரக்கூடிய பதிப்புகள் மூலம் தெரிந்து கொள்வோம்.
இந்த செய்தியின் மூலம் நாம் வாங்கியிருக்கின்ற அல்லது வாங்கப்போகின்ற செல்போன்களின் தரம் என்ன என்பதை தெரிந்துக் கொள்வோம். அதாவது நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருள்களின் தரம் உயர்ந்த அல்லது குறைவான அல்லது போலியான பொருட்கள் மார்க்கெட்டில் வலம் வந்து கொண்டிருக்கின்ற சூழலில் செல்போனின் தரத்தை எதனை அடிப்படையாக கொண்டு நிர்ணயிப்பது பற்றி அறிவோம்.
உங்களுடைய செல்போனில் *#06# என்று அழுத்திய உடன் நீங்கள் பயன்படுத்தக் கூடிய செல்போனில் அடையாள நம்பர் 15 இலக்கங்களில் தெரியவரும். அப்படி கிடைக்ககூடிய எண்களில் 7 மற்றும் 8வதாக வரக்கூடிய எண்களை கீழ்கண்ட பட்டியலோடு ஒப்பிட்டு பார்த்து உங்களின் செல்போனின் தரத்தை அறிந்து கொள்ளுங்கள்.
7 மற்றும் 8வது எண் 00 என்றிருந்தால் தரமான தொழிற்சாலையில் தயாரித்தது என்பது மட்டுமல்ல உங்களின் செல்போனும் மிக மிக தரம் உயர்ந்தது என்பதை குறிக்கும். (மிக மிக நன்று)
7 மற்றும் 8வது எண் 01 அல்லது 10 என்றிருந்தால் தயாரித்த நாட்டின் பெயர் பின்லாந்து மற்றும் தரமான பொருள் என்பதை குறிக்கும். (மிக நன்று)
7 மற்றும் 8வது எண் 08 அல்லது 80 என்றிருந்தால் தயாரித்த நாட்டின் பெயர் ஜெர்மனி மற்றும் தரம் தாழ்ந்தது அல்ல என்பதை குறிக்கும். (நன்று)
7 மற்றும் 8வது எண் 02 அல்லது 20 என்றிருந்தால் ஒருங்கிணைப்பு செய்தது துபாயில். தரமான பொருள் அல்ல என்பதை குறிக்கும். (சுமார்)
7 மற்றும் 8வது எண் 13 என்றிருந்தால் ஒருங்கிணைப்பு செய்தது அஜேர்பயிஜான்;. தரம் குறைந்த பொருள் மற்றும் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்ககூடியதுமாகும். (மோசம்)
மேற்சொன்ன செய்திகள் அனைத்தும் எதிர்வரும் காலங்களில் தரமான பொருள்களை தேர்ந்தெடுக்க உதவியாக இருக்கும் என்பதற்காகவே இந்த தகவல்களை இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
Thanks To Islamkalvi.com

Friday, April 16, 2010

புற்றுநோய்க்கு நவீன மருத்துவம்

'வரும் முன் காப்போம்' என்றாலே அது எந்தவகை இடரும் வரும் முன் காப்போம் என்பதைத் தான் குறிக்கும். பொதுவாக இந்த வாக்கியத்தைக் கேட்டால் நோய் வரும்முன் காப்போம் என்பது பற்றித்தான் என்று அனைவரும் சொல்வார்கள். ஏனென்றால் நோய் வரும்முன் சில அறிகுறிகள் தென்படும். அதாவது 'யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே' என்பதைப் போல. நோய்க்கான அறிகுறி தென்பட்டவுடன் அப்போதே தேவையான வைத்தியம் செய்து களை எடுத்துவிட்டால் நோயிலிருந்து தப்பிப்பது மட்டுமல்ல, இறப்பையும் தள்ளிப்போடலாம்.

எந்த நோயை எடுத்துக்கொண்டாலும் சில அறிகுறிகள் தென்படும். அல்லது மருத்துவர்கள் சோதனையின் மூலம் கண்டறிந்து விடுவார்கள். உதாரணமாக மாரடைப்பு, சர்க்கரை வியாதி, சிறுநீரகக் கோளாறு இவை ஒவ்வொன்றிற்கும் சில ஆரம்ப அறிகுறிகள் தென்படும். இதை வைத்தே நமக்கு வந்துள்ள நோய் என்னது என்று அறிந்து கொள்ள முடியும். உடனே உரிய மருத்துவ சிசிச்சைகள் மூலம் தற்காத்து கொள்ளலாம். ஆனால் இதில் புற்று நோய் மட்டும் சற்று வித்தியாசமானது. இதனால்தான் புற்றுநோய் புதிர்நோய் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நோய் எப்படி தாக்கியது அல்லது நோய் தொற்றிக் கொள்ள காரணங்கள் சில சமயம் ஒரு புரியாத புதிர்தான்.

இன்றைய மருத்துவ உலகில் புதுப்புது ரகங்களில் புற்று நோயின் தாக்கம் உள்ளது. உதாரணமாக மார்பகப் புற்று நோய், மூளைக் கட்டிகள் என்று பலவகைகளில் மனிதனை ஒரு கை பார்த்துவிடுகிறது. சில சமயம் உயிரை பறித்துக் கொள்ளும் அளவுக்கு இதன் தாக்கம் அதிகம் இருக்கும். இது மாதிரியான நோய்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கு கடும் சவாலாக உள்ளது. இதனால் புற்று நோய் பற்றிய பயம் மக்கள் மனதில் இருந்து கொண்டுதான் உள்ளது. பெரும்பாலும் புற்றுநோய் அதன் அறிகுறியே தென்படாமல் கொரில்லா தாக்குதல் போல் முற்றிய நிலையில் தாக்கிவிடும். இதன்பிறகு அதற்கு சிகிச்சை அளிப்பது பயனற்று போய் மருத்துவர்கள் கை விரித்துவிடுவார்கள்.


புற்றுநோய் எப்படி? ஏன்? யாருக்கு வரும்? என்ற ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. உலகில் ஏராளமானோருக்கு எளிதில் தென்படாத நிலையில் புற்றுநோய் தாக்கியிருக்கின்றது. இதில் வசதிபடைத்தவர், ஏழை என்ற வித்தியாசம் இல்லை. இப்படி தாக்கிய புற்றுநோய்கள் திடீரென்று முற்றிய நிலையில் மாறி உயிரை காவு வாங்கியிருக்கின்றன. எவ்வளவு காசு இருந்து என்ன பயன்? புற்றுநோய் இருந்ததை கண்டுபிடிக்க முடியவில்லையே! என்று சொல்வோர்களும் உள்ளனர். ஆனால் அதற்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து இடைவிடாது ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர். அதற்கு கைமேல் பலனும் கிடைத்துள்ளது.

அமெரிக்காவிலுள்ள Massachusset Institute of Technology-யில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஒரு நூதன முறையின் மூலம் புற்று நோயை அறியும் முறையை கண்டறிந்துள்ளனர். இப் பல்கலைகழகத்தின் பேராசிரியர் சங்கீதா பாட்டியா என்பவர். இவர் தனது மாணவர்களுடன் புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அதாவது வேதிப்பொருட்கள் கலந்த நுண்துகள்களை உடலில் செலுத்துவதன் மூலம் புற்றுநோயை அறிய முடியும் என்பதை கண்டறிந்தார். மேலும் அதே முறையில் சிகிச்சையும் அளிக்க முடியும் என்றும் நிரூபித்தார்.


இதற்காக விலங்குகளுக்கு ஊசி மூலம் நுண்துகள்களை செலுத்தப்படும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நானோ என்றால் ஒரு மீட்டரில் பலகோடி மடங்கு சிறியது என்பது பற்றி முந்தையக் கட்டுரைகளில் விவரித்திருக்கின்றோம். நொதிப்பொருட்களுடன் கூடிய இந்த நுண்துகள்கள் ரத்த நாளங்களில் சென்று ஆரம்ப கட்டத்தில் இருக்கும் புற்றுநோய் கட்டிகளின் நுண் இடுக்குகளில் சென்று ஆராய ஆரம்பிக்கும். இவ்வாறு புற்றுநோய் கட்டிகளின் இடுக்குகளில் சென்ற வேதி நுண்துகள்கள் ஒன்று சேர்ந்து காந்த சக்திகளின் மூலம் Magnetic Resonance Imagine Machine (MRI) எனப்படும் இயந்திரத்திற்கு புற்றுநோயை பற்றிய துல்லியமான படத்தை அனுப்பும். இதன் மூலம் புற்றுநோயின் தன்மை, எப்பொழுது உருவானது என்பதையெல்லாம் அறிய முடியும்.

நுண்துகள்களாக சென்ற நொதிப்பொருட்கள் (வேதிப்பொருட்கள்) ஒன்று சேர்வதால் அதிகமான காந்த சக்தியை பெறுகிறது. இதனால் புற்றுநோயை ஆராய்வது சுலபமாவதுடன் துல்லியமான விவரமும் கிடைக்கிறது. இதுபற்றி ஆராய்ச்சியாளர் சங்கீதா பாட்டியா கூறுகையில், 'ஊசி மூலம் நாங்கள் இந்த நுண்துகள்களை உடலில் செலுத்துகிறோம். இவ்வாறு உடலில் சென்ற நுண்துகள்கள் ஒன்றுசேர்ந்து புற்றுநோய் கட்டிகளில் உள் நுழைந்து அல்லது இடுக்குகளில் ஊடுருவி ஆராய்கிறது. இவ்வாறு ஒன்று திரண்ட நுண்துகள்கள் கட்டியிள் உள்ளே ஊடுருவுவதால் திரையில் துல்லியமான படங்களுடன் விவரங்கள் தெரிகிறது'', என்கிறார். சங்கீதா பாட்டியா Health Science & Technology யில் மின்னியல் மற்றும் கணிப்பொறித் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் MIT&Harward Center of Cancer Nanotechnology Excellence  இவர் முக்கிய பங்கு வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


முதன்முறையாக இந்த நுண்துகள் சோதனை மார்பக புற்றுநோயை கண்டறிவதற்கு பயன்படுத்தப்படுகிறது. இப்பொழுது ஏராளமான பெண்களுக்கு மார்பக புற்றுநோய் தாக்கி இருக்கிறது. இதுபற்றி ஆராய்ச்சியாளர் பாட்டியா கூறுகையில், 'முதலில் மார்பக புற்று நோய் பாதித்த பெண்களுக்கு பயன்படுத்தப்படும். அதில் கிடைக்கும் முடிவுகள் நன்றாக ஆய்வு செய்யப்படும். இந்த ஆய்வின் முடிவுகள் திருப்திகரமாக இருந்தால் படிப்படியாக இச்சோதனை எல்லா வகை புற்றுநோய்களையும் கண்டறிய பயன்படுத்தப்படும். மேலும் இந்த நானோ நுண்துகள்களின் மூலமே வேதியியல் சிகிச்சை (Chemotherapy treatments)  மற்றும் கதிர்(Radiation) சிசிச்சையை மேற்கொண்டு புற்றுநோயை குணப்படுத்த முடியும்'' என்றார்.

இந்த ஆராய்ச்சியில் பேராசிரியர் சங்கீத பாட்டியாவுடன் அமெரிக்காவின் பல்வேறு பல்கலைக் கழக மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்த அதிநவீன ஆராய்ச்சிக்கு அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் கழகத்தின் (National Cancer Institute) முழு ஆதரவும் இருக்கிறது. மேலும், இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் இந்த புதுமையான மருத்துவ முறைக்கு அதிகாரப் பூர்வ உரிமமும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி, சகோதரர்-எம்ஜேஎம் இக்பால்

Wednesday, April 14, 2010

காதுகேளாதவர்களுக்கு நவீன சிகிச்சை 
மருத்துவத்துறை ஐம்புலன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இனி ஊனம் என்ற சொல்லையே மறந்துவிடும் அளவிற்கு அரிய சாதனைகளை படைத்து வருகின்றது. இதய மாற்று அறுவை சிகிச்சை, கிட்னி மாற்று அறுவை சிகிச்சை, செயற்கை சுவாசப்பை, செயற்கை கண் இவ்வாறு மனித உடலில் இன்றியமையாத பாகங்கள் செயல்படாத நிலையில் இருந்தால் சிகிச்சையின் மூலம் வெற்றிகரமாக மாற்றி செயல்பட வைத்து வருகின்றனர். கண் பார்வைக்கு மூக்குக் கண்ணாடி அணிந்த காலம் போய் காண்டக்ட் லென்ஸ் பொருத்தும் நிலை வந்துள்ளது. இதை பொருத்திக் கொள்வதன் மூலம் ஹகண்பார்வை கோளாறு உள்ளவர்' என்பதை மறைத்துவிடுகிறது. இதே போல் செயற்கை மூட்டு, செயற்கை கால், கை என்று ஊனமுற்றவர்களையும் நடந்தோடச் செய்யும் நவீன செயற்கை உறுப்புகளும் கண்டறியப்பட்டுள்ளன.

காதுகேளாதவர்கள் வாக்மேன் கேட்பது போல காதில் இயர்போன் போன்ற கருவியை செருகிக் கொண்டு சட்டையில் சிறிய ட்ரான்சிஸ்டர் போல் உள்ளக் கருவியை மாட்டிக்கொண்டு செல்வார்கள். இப்படி காதில் மாட்டிக் கொண்டு வெளியில் சென்றால் கேட்கும் திறனில் பாதிப்பு உள்ளது என்று மற்றவர்கள் அறிந்து கொள்ளும் நிலை இருந்தது. அறிவியல் முன்னேற்றம் ஏற்பட ஏற்பட இதெல்லாம் சுருங்கி காதின் பின்புறம் சிறிய கருவி செருகியிருப்பார்கள். இது ஓரளவு அவர்கள் ஊனத்தை மறைத்ததோடு கேட்கும் திறனையும் பெற முடிந்தது. இருந்தாலும் எத்தனையோ பேர் இதற்காக வெட்கப்பட்டவர்களும் உண்டு. காது மெஷின் மாட்டியிருப்பதால் நம்மை செவிடர் என்று மற்றவர்கள் அறியக்கூடும் என்ற ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்தது அவர்களிடம். ஆனால் அவர்கள் காதில் தேன் வந்து பாய்வது போல ஒரு விஞ்ஞானப் புரட்சி நடந்திருக்கின்றது. ஆம்! அறிவியலின் அபார வளர்ச்சியில் பயோனிக் காது எனப்படும் செயற்கை காது இப்பொழுது பொருத்தப்படுகிறது. இதைப் பற்றி விரிவாக காணலாம்.

மைக்ரோபோன் மூலம் பெறப்படும் ஒலி மின் சிக்னல் மூலம் நரம்பு தூண்டப்பட்டு செய்தியை அனுப்புகின்றது. காது கேளாதவர் இதற்கான கருவியை எப்பொழுதும் அணிந்து கொள்ளவேண்டும். இது பழைய முறை. ஆனால் பயோனிக் இயர் என்ப்படும் புதிய முறையில் காதின் பின்புறம் தோலுக்கடியில் நிரந்தரமாக பொருத்தப்படுகிறது ஒரு கருவி. இதன்மூலம் காதுகேளாதவர் மற்றவர்களைப் போல சாதாரணமாக கேட்கலாம்.

பயோனிக் இயர் எனப்படும் இதை காக்ளியர் மாற்று அறுவை சிகிச்சை என்று அழைக்கிறார்கள். காக்ளியர் எனப்படும் காதில் உள்ள இந்த உறுப்பின் வேலை, செவியால் பெறப்படும் ஒலியை இந்த சவ்வு பெற்று நரம்புகள் மூலம் தூண்டப்பட்டு கேட்கும் திறனை அறியச் செய்கின்றது. இம்முறையில் பயோனிக் இயர் எனப்படும் இந்த செயற்கை கருவியை காதின் பின்பகுதியின் தோலுக்கடியில் பொருத்தி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதன் மூலம் செவிடான ஒருவர் நன்றாக கேட்கும் ஆற்றலை பெறமுடிகிறது. இதனால் பெறப்படும் ஒலி மின் சிக்னல்களாகப் பெறப்பட்டு செவி நரம்புகளுக்கு செய்தியாக அனுப்பப்படுகிறது.

சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் முதன்முறையாக 35 வயதுள்ள ஒரு பெண்ணுக்கு வெற்றிகரமாக இந்த பயோனிக் இயர் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இம்மருத்துவ மனையில் தொண்டை,மூக்கு, காது பிரிவின் தலைவர் டாக்டர் ஹுசைன் அப்துல் ரகுமான் கூறுகையில், "காது கருவி வைத்தும், கேட்கும் திறனை இழந்த இப்பெண்ணுக்கு இந்த பயோனிக் இயர் மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டோம். வெற்றிகரமாகவும் முடிந்தது. இதன்மூலம் அந்தப் பெண் மற்றவர்களைப் போலவே காது கருவி இல்லாமலேயே கேட்கும் திறனைப் பெற்றார். இனி நாங்கள் சிறிய வயதினருக்கும் மற்றும் 6 மாதக் குழந்தைகளுக்கும் கூட இந்த சிகிச்சையை மேற்கொள்ள இருக்கின்றோம". என்றார்.

இதற்கு ஆகும் செலவு கிட்டத்தட்ட 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய். தற்போது இந்த நவீன சிகிச்சைக்கு அதிக செலவு ஆகிறது என்றாலும் வருங்காலத்தில் வெகுவாக குறையவும் வாய்ப்பு உள்ளது.

நன்றி, சகோதரர் -எம்.ஜே.எம்.இக்பால் 

Tuesday, April 13, 2010

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்.

1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது.
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
2.மிக அதிகமாகச் சாப்பிடுவது
இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
3. புகை பிடித்தல்
மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.
4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்
நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
5. மாசு நிறைந்த காற்று
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.
6.தூக்கமின்மை
நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது
தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.
8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது
மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.
10. பேசாமல் இருப்பது.
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

Thanks to...Dr.M.Sathick from Darulsafa