Wednesday, May 5, 2010

உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன்!

முயற்சி பண்ணினா முடியாதது ஒண்ணுமில்லன்னு சொல்வாங்க இது எல்லாத்துக்கும் பொருந்துதோ இல்லையோ தொழில்நுட்பத்துக்கு கண்டிப்பா பொருந்தும்.
வளர்ந்து வர்ற தொழில்நுட்ப வளர்ச்சியில புதுசு புதுசா கண்டுபிடிப்புகளை தர்றது அறிவியலோட அதிசயமா இருக்கு.
அந்த வகையில முதல் முறையா மொபைல்ல "விண்டோஸ் எக்ஸ்பி" மென்பொருளை பயன்படுத்தி கிட்டதட்ட ஒரு லேப் டாப் மாதிரியே வர்ற மொபைல் தான் xp phone.
மொபைல்,லேப் டாப்,ஜி.பி.எஸ் இப்படி மூனையும் ஒரே சாதனத்துல அடக்கியிருக்காங்க...
                                  
     இதோட சிறப்பம்சங்கள்னு பாத்தீங்கன்னா...

* 4.8' touch screen
* VGA output to 1920 * 1200 resolution
* Operating System: Microsoft Windows XP
* Support MSN/Skype/QQ free video calls
* Support more than 500 kinds of video/audio formats
* Ports:1 x earphone jack,1 x microphone jack,Docking Connector
(include VGA output signal ),1 x USB 2.0, SIM Slot
* Wireless:WiFi 802.11b/g,WiMax(optional),Buletooth,Stand-alone GPS

இது மட்டுமில்லாம இந்த போனுக்குன்னே அப்ளிகேஷேன்கள் தரவிறக்கம் செய்யிறதுக்கு xpmall இருக்கு அதிலேர்ந்து ஒரு கோடிக்கும் மேல அப்ளிகேஷேன்கள் நாம தரவிறக்கம் செய்யலாம்.
இப்படி இந்த போன் வசதிகளை பத்தி சொல்லிக்கிட்டே போகலாம். சரி இத எந்த நாட்டு நிறுவனம் தரப்போகுதுன்னு நான் கேட்டால் உடனே நீங்க அமேரிக்கா, ஜப்பான்,கொரியான்னு போயிடாதீங்க, சீனாவை சேர்ந்த In Technology Group Limited (ITG அப்படிங்கிற நிறுவனம் தான் தரப்போகுது.
இன்னும் மார்கெட்டுக்கு இந்த போன் வரல ஆனா இப்பவே "ஆன்லைன்"ல ஆர்டர் பண்ணலாம்.அநேகமா இந்த போன் ஆப்பிள் போனுக்கு பலத்த போட்டியா வரும்போல.

Tuesday, May 4, 2010

உலகின் மிக சிறிய மொபைல் போன்

உலகின் மிக சிறிய மொபைல் போன் இந்தியாவில் உலகின் மிகச் சிறிய மொபைல் ரூ.9,000 விலையிடப்பட்டுக் கிடைக்கிறது. நம்ப முடியவில்லையா? தொடர்ந்து படியுங்கள். இந்த போனின் பெயர் நியோ 808 ஐ. இதில் அதிகமான எண்ணிக்கையில் வசதிகள் உள்ளது இன்னொரு கூடுதலான சிறப்பாகும். இதன் நீளம் 72மிமீ, அகலம் 41மிமீ. மிக அழகாக அடக்கமாக சிறிய எம்பி3 பிளேயர் போல இருக்கிறது. மற்ற போன்களில் திரையும் கீகளும் நெட்டு வாக்கில் இருக்கும். ஆனால் இதில் படுக்கை வாக்கில் இருக்கிறது. வால்யூம் கீகளுடன் கேமராவிற்கான ஒரு கீயும் அருகே தரப்படுகிறது. எனவே இந்த வகை கீ பேடிற்கு நம்மை பழக்கப்படுத்திக் கொள்ள ஓரிரு நாட்களாவது ஆகும். கடுகு சிறுத்தாலும் காரம் போகாதுஎன்பது போல இதில் எந்த வசதியும் விட்டுவைக்கப்படவில்லை.
மியூசிக் பிளேயர், எப்.எம். ரேடியோ, 1.3 மெகா பிக்ஸெல் கேமரா, ஜி.பி.ஆர்.எஸ். வசதி, இ–புக் ரீடர் ஆகியன உள்ளன. இதன் ஒலியின் தன்மை தனியே கேட்கும்போதும் ஹெட்செட் மூலம் கேட்கும்போதும் சிறப் பாகவே உள்ளது. எப்.எம்.ரேடியோவில் 30 சேனல்களை மெமரியில் வைக்கலாம். நம்முடைய பேவரைட் புரோகிராம்களை ரெகார்ட் செய்திடலாம். கேமராவுடன் போட்டோ எடிட்டர் வசதியும் தரப்பட்டுள்ளது. போனுடன் ஒரு யு.எஸ்.பி. சார்ஜரும் தரப்பட்டுள்ளது. 128 எம்பி மெமரி இருந்தாலும் 4 ஜிபி வரை மெமரி கார்டுகளை இந்த போன் ஏற்றுக் கொள்கிறது. ஒரு சிறிய போன் இந்த அளவில் மெமரியை ஏற்றுக் கொள்வது ஆச்சரியமே. போனுடன் 128 எம்பி மெமரி கார்ட் தரப்படுகிறது. ஜி.பி.ஆர்.எஸ். வசதி நன்றாகக் கிடைக்கிறது. இதில் உள்ள இ–புக் ரீடர் மூலம் ஆன் லைன் புத்தகங்களை வாசிக்க முடிந்தது. இவை அனைத் திற்கும் ஈடு கொடுக்கும் வகையில் பேட்டரி திறன் கொண்டதாக உள்ளது. கூடுதல் பேட்டரி ஒன்று இதன் சர்வீஸ் பேக்குடன் தரப்படுகிறது. இதனோடு ஒப்பிட வேண்டும் என்றால் சோனி டபிள்யூ 610 ஐ மற்றும் நோக்கியா 5310 ஐக் கூறலாம். இவற்றில் கேமரா 2 மெகா பிக்ஸெல் ஆகும். இருந்தாலும் உலக அளவில் சிறிய மொபைல் என கைக்குள் எடுத்துச் செல்லலாம்.
Thanks To....Senthilvayal.

உலகின் மிகச் சிறிய குதிரை.



உலகின் மிகச் சிறிய உருவம் கொண்ட குதிரைக்குட்டி அமெரிக்காவில் பிறந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள பார்ன்ஸ்டெட் என்ற இடத்தில் உள்ள குதிரைப் பண்ணையில் இந்த குதிரைக்குட்டி பிறந்துள்ளது. இதன் தற்போதைய உயரம் 35 சென்டி மீட்டர் மட்டுமே. உலகின் மிக குள்ளமான குதிரை என்ற பெயர் இதற்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Thanks To.....Nitharsanam