Saturday, June 26, 2010

கிவி பழம் சாப்பிட்டால் உடல்நலம் உறுதி

பழத்தின் சுவை புளிப்போ, துவர்ப்போ… உங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ… அதில்லை சங்கதி. ‘கிவி  ப்ரூட்’ தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஒட்டுமொத்த உடல்நலனுக்கு நல்லது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
தோல் பச்சையாகவும், உள்ளே சிறிய கருப்பு விதைகளுடன் பச்சை, மஞ்சள் கலந்த சதையுடனும் இருக்கும் பழம் கிவி. இதை நம்மூரில் கேக், பாஸ்ட்ரி ஆகியவற்றின் மீது அழகுக்காக வைத்திருப்பதைப் பார்த்திருக்கலாம். தமிழில் அதன் பெயர் பசலிப்பழம்.
அதில் உடல் நலனுக்குத் தேவையான சத்துக்கள் கொட்டிக் கிடப்பதாக லேட்டஸ்ட் ஆய்வு தெரிவிக்கிறது. ட்ரிவோலி கிராண்ட் ஓட்டல் நிபுணர் பாட் கூறியதாவது:
கிவி ப்ரூட்டில் ஏராளமான மினரல்கள், விட்டமின்கள் உள்ளன. சிட்ரஸ் ரக பழமான அதில் விட்டமின் ஏ, சி, இ அதிகம். தோல், இதய நோய்கள், புற்றுநோய், உடல் பருமன் உட்பட பலவற்றில் இருந்து விட்டமின் சி நம்மைக் காக்கிறது.
விட்டமின் சி&யின் பணிகளை விட்டமின் இ அதிகரிக்கும். இந்த இரண்டும் கிவி ப்ரூட்டில் அதிகம். இவை நமது உடலை எல்லா நோய்களில் இருந்தும் காக்கும் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன.
கிவி ப்ரூட்டில் உள்ள நார்ச் சத்துக்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதால் டயபடீஸ் குணமாகும். ரத்த அழுத்தத்துக்கு காரணமான கொலஸ்ட்ராலைக் குறைக்கும். குழந்தைகளுக்கு ஆஸ்துமா, மூச்சிழுப்பு, சளி ஆகியவை இருந்தால் கிவி ப்ரூட் குணப்படுத்தும் என்றார். முக்கிய பழச் சந்தைகள், மார்க்கெட்களில் கிடைக்கும் கிவி ப்ரூட்டை வாங்கி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முழு ஆரோக்கியம் பெறலாம்.
Thanks To........Meenakam

முக பாவங்களைக்காட்டும் மனித இயந்திரம்

மனிதர்களைப் போல எல்லா வேலைகளையும் செய்யும் மனித எந்திரங்களைக்கண்டுபிடிப்பதில் ஜப்பான் விஞ்ஞானிகள் மிகுந்த புத்திசாலிகள்.
அவர்களுக்கு இணையாக இப்போது பிரிட்டிஷ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகளும் ரோபோக்களைத் தயாரிப்தில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
ஏற்கனவே பல்வேறு விதமான ரோபோக்களை(மனித எந்திரங்களை) கண்டுபிடித்துள்ள பிரிட்டிஷ் விஞ்ஞானிகள், தற்போது ,மனிதர்களைப்போல முகபாவங்களைக் காட்டும் புதிய ரோபோ ஒன்றைக் கண்டுபிடித்ருக்கிறார்கள்.
பிரிட்டிஷ் நாட்டில் உள்ள பிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்தான் இந்தப் புதிய ரோபோவைக் கண்டு பிடித்து இருக்கிறார்கள். இந்த ரோபோவுக்கு ஜுலஸ்' என்றும் பெயர் வைத்திருக்கிறார்ள். இந்த ரோபோவின் தலை, மனிதனின் தலையைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ மனிதர்களைப் போலவே முகபாவங்களைக் காட்டும். அதேபோன்று உதடுகளையும் மனிதரைப் போலவே அசைக்கும்.
றப்பர் தோல்களைப் பயன்படுத்தி மனிதத் தலைகளைப் போல தேர்ந்த அமெரிக்க விஞ்ஞானி டேவிட் ஹேன்சன் என்பவரும் இந்த ரோபோ வடிவமைப்புக்காக பிரிட்டிஷ் விஞ்ஞானிகளுக்கு உதவிசெய்திருக்கிறார். இந்த மனித எந்திரத்தின் தலையில் 34 மோட்டார் இயக்கிகள் உள்ளன. இந்த மோட்டார் இயக்கிகளைப் பயன் படுத்தித்தான் இந்த ரோபோ தனது முகத்தில் மனிதர்களைப் போன்ற பாவங்களைக் காட்டுகிறது.
மனிதர்களின் முக அசைவுகளை வீடியோ படமெடுத்து அதை அடிப்படையாக வைத்துத்தான், இந்த ரோபோவின் றப்பர் முகத்தில் எப்படி அசைவுகளை ஏற்படுத்துவது என்பதைக் கண்டுபிடித்து, அதற்கேற்ற மோட்டார்களை ரோபோவின் தலையில் பொருத்தியிருக்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள். இதற்காக இவர்கள் தங்களது சொந்த மென்பொருட்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
இந்த மென்பொருள் வாயிலாகத்தான் இந்த ரோபோ தனது முகபாவங்களைக் காட்டுகிறது. அதாவது வீடியோ கமெராவில் முன்கூட்டியே பதிவுசெய்யப்பட்டுள்ள அசைவுகளை வைத்து இந்த ரோபோ பிரதி பலிக்கிறது. கேலிச்சித்திர வடிவமைப்பாளர் ஒருவரின் உதவியையும் இந்த விஞ்ஞானிகள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
மனித முக பாவங்களுக்கும் இந்த ரோபோ முக பாவங்களுக்கும் எந்த வேறு பாடும் இல்லாத அளவுக்கு இது செயற்படுகிறது.
நெற்றியை உயர்த்தும், புருவங்களை மேலே உயர்த்தும், சிரிப்பு அசைவுகளைக் காட்டும், கோபத்தை வெளிப்படுத்தும். என்றாலும் உண்மையான மனித முகத்தில் உள்ள சதை அசைவுகளை அவ்வளவு துல்லியமாகக் காட்ட முடியாது. அதற்கு இன்னும் கொஞ்சம் கலைநுணுக்கம் இந்த ரோபோவின் முகத்தில் தேவைப்படுகிறது.
ஆனாலும் பரவாயில்லை. மனிதர்களைப் போலவே முகபாவங்களை காட்டுகிறது என்பதில் மட்டும் நாம் திருப்தி அடையலாம்.
மொத்தத்தில், இது கொப்பி அடிக்கப்பட்டு செயற்படும் ரோபோவாகத்தான் இருக்கும். இந்த ரோபோ வினாடிக்கு 25 முகபாவங்களை வேகமாகக் காட்டும்.
மனித முக பாவங்களைக் காட்டும் ரோபோக்கள் வந்துவிட்டதைப்போல, மனிதர்கள் செய்யும் காரியங்கள் அனைத்தையும் செய்யும் ரோபோக்கள் விரைவில் வந்துவிடும் என்பதில் ஐயமில்லை.
Thanks To...........Marikumar

நாய் மாளிகை



கலிபோர்னியாவில் நாய்க்காக மாளிகை கட்டிய எஜமானி

செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்கள் சிலவற்றிற்கு நினைத்துக்கூட பார்க்க முடியாத சொகுசு வாழ்க்கை மற்றும் வசதிகள் அதன் எஜமானர்களால் வழங்கப்படுவதுண்டு. இந்த வகையில் கலிபோர்னியாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் தன்னுடைய நாய்க்காக ஒரு மாட மாளிகையில் ஒரு தோட்டம் போன்றவையும் அமைந்துள்ளது.

டாமி காஸி எனும் அந்த கோடீஸ்வர பெண்மணி தன்னுடைய நாய்கள்தான் தனக்கு உயிர் என்று கூறியிருக்கிறார்.

எனவே அவற்றிற்காக சகல வசதி கொண்ட மாளிகையை உருவாக்கி தந்து இருப்பதாக கூறியுள்ளார்.
Thanks To.......Thamilworld

மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள் தூள்

இயற்கையிலநமமுன்னோரசமையலிலபயன்படுத்திபொருட்களிலமருத்துகுணங்களநிறைந்திருப்பது, பின்னாளிலநடத்தப்பட்ஆய்விலதெரிவந்துள்ளது.
அந்வகையிலசமையலிலஅன்றாடமநாமபயன்படுத்துமமஞ்சளதூளினமருத்துகுணங்களசிலவற்றஇதிலபார்ப்போம். பொதுவாமஞ்சளநிறமஏற்படவும், உணவுபபதார்த்தங்களகலராஇருப்பதற்குமமஞ்சளபயன்படுத்தப்படுவதாபலருமஅறிவோம். ஆனால், அவற்றினசெயல்பாடமிகவுமஆச்சரியப்பவைக்கும்.
மசாலாவில் மஞ்சள் நிறத்தைக் கொண்டுவருவதற்கு மஞ்சள் தூள் பயன்படுத்தப்படுகிறது.
`அல்ஜைமர்' நோய் உடையவர்களுக்கு மூளையில் இருக்கும் அழுக்குகளை நீக்குவதில் மஞ்சள் தூள் பெரும் பங்காற்றுகிறது. மஞ்சள் தூளில் இருக்கும் குர்குமின் (curcumin) என்ற பொருள் இதற்கு உதவுவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்திய மருத்துவத்தில் வெகுகாலமாக பயன்படுத்தப்படும் மஞ்சள்தூளானது புற்றுநோய்க்கும், மல்டிபிள் செலெரோஸிஸ், சிஸ்டிக் பைபரோஸிஸ் போன்ற வியாதிகளுக்கும் அருமருந்தாக செயலாற்றி வருகிறது.
மஞ்சளில் உள்ள குர்குமின், ஒரு ஆன்டி-ஆக்ஸிடெண்டும், ஆன்டி இன்ஃப்ளமேட்டரி எனப்படும் எரிச்சல் குறைக்கும் மருந்தும் ஆகும். இது மூளையில் அமைலோய்ட் சேர்வதினால் உருவாகும் எரிச்சலையும், அதனால் உருவாகும் செல் உடைவுகளை சரிப்படுத்தவும் செய்கிறது.
முடக்குவாதம் (arthritis), இதயத்தில் பாதிப்பு ஏற்படுவதையும் குர்குமின் தடுக்கக்கூடும் என்றும் ஆராய்ச்சி முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
நன்றி,பதிவு

மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி

ஜப்பானில் உள்ள BSI-TOYOTA Collaboration Center (BTCC) அண்மையில் ஒரு சக்கர நாற்காலியை உருவாக்கியுள்ளது. இந்த சக்கர நாற்காலியின் இயக்கத்தை மூளையின் அதிர்வலைகளைக் கொண்டே கட்டுப்படுத்த இயலும். மூளை தன்னுடைய கட்டளைகளை மின் துடிப்புகளாக வெளியிடுகிறது. இந்த மின் துடிப்புகள் வலிமை குறைந்தவை.  மைக்ரோ வோல்ட்டுகளில் இவை அளக்கப்படுகின்றன. சாதாரணமாக நாம் பயன்படுத்தும் டார்ச் செல்லின் மின் அழுத்த வலிமை 1.5 வோல்ட். ஒரு மைக்ரான் என்பது ஆயிரத்தில் ஒரு பங்கு ஆகும். 125 மில்லி செகண்டுகளே நீடிக்கக்கூடிய மூளையின் அதிர்வுகள் கூட இந்த சக்கரநாற்காலியின் இயக்கத்தை கட்டுப்படுத்துமாம்.
மூளை-இயந்திர ஒருங்கிணைப்பு (brain-machine interface) துறையில் அண்மைக்காலமாக விரிவான ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. முதியோர்களும் உடல் ஊனமுற்றோரும் பிறரை உதவிக்கு அழைக்காமலேயே தங்களுடைய சக்கரநாற்காலியை கட்டுப்படுத்தி இந்த உலகத்துடன் உறவாட இந்த ஆய்வுகள் வழிசெய்கின்றன.
தற்போது உபயோகத்தில் இருக்கும் சக்கரநாற்காலிகள் மூளையின் அதிர்வுகளை ஏற்று செயல்பட சில வினாடிகள் எடுத்துக்கொள்ளும். ஆனால் இந்த புதிய சக்கரநாற்காலியில் blind signal separation, space-time-frequency filtering technology ஆகிய இரண்டு தொழில்நுட்பங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. ஒரு கூட்டு அதிர்வு பல்வேறு அதிர்வுக்கூறுகளாக பிரித்தறியப்படுகிறது. இதனால் மூளையின் கட்டளைகள் 125 மில்லிசெகண்டுநேரத்திலேயே உணர்ந்துகொள்ளப்படும். மண்டையின் மேல்தோலில் மின்வாய்களைப் பொருத்தி மூளையின் மின் தூண்டல்கள் ஏற்கப்படுகிறது. சக்கரநாற்காலியில் அமர்ந்திருப்பவர் தன்னுடைய மூளைஅதிர்வுகளை  ஒரு மின்னணுப்பலகையில் அவரே காணமுடியும். காலப்போக்கில் உபயோகிப்பாளரின் பழக்கவழக்கங்களை இந்த கருவி உள்வாங்கிக்கொண்டு அதற்கேற்ப செயல்படுகிறது என்பது வியப்பான செய்தி. 95 சதவீதம் துல்லியமான இந்த சக்கரநாற்காலி முன்னோக்கிச் செல்லுதல், வலதுபுறம் திரும்புதல், இடதுபுறம் திரும்புதல் ஆகிய இயக்கங்களை விரைவாகச் செய்கிறது.
ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட மின் தூண்டல்களின் உதவியால் கை கால் இயக்கங்கள் சார்ந்த கட்டளைகளை நிறைவேற்ற மட்டுமே இந்த சக்கரநாற்காலி தற்போது பயன்பட்டு வருகிறது. காலப்போக்கில் மூளையின் உணர்ச்சிகளையும் அதனால் வெளியிடப்படும் அதிர்வலைகளையும் உணரும் வகையில் இந்த சக்கரநாற்காலியில் வடிவமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும். மருத்துவத்துறையையும் செவிலியர் பணியையும் ஒருங்கிணைத்து இந்த சக்கரநாற்காலி ஏற்கக்கூடிய கட்டளைகளை விரிவுபடுத்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
தூரத்தையும் காலத்தையும் கணிக்கும் மூளையின் திறன் அபாரமானது. எதிரே வரும் வண்டியின் தூரத்தையும் அது நம்மை அடைய  எடுத்துக்கொள்ளக்கூடிய காலத்தையும் நமதுமூளை வெகுவிரைவில் கணக்கீடு செய்து கொள்கிறது. அதற்கேற்ப நாம் வழியில் இருந்து ஒதுங்கிக்கொள்கிறோம். தூரம், காலம் இவையனைத்தும் தகுந்த மின்வாய்கள்மூலம் பிரித்தறியப்படுவதால் இந்த சக்கரநாற்காலியின் செயல்பாடு இதுவரை எந்தக் கருவியாலும் எட்டப்படாத 95 சதவீதம் துல்லியமானது. 
நன்றி,தமிழ் CNN