Bill Gates (53 ), Warren Buffet (78 ) ஆகிய உலகின் பெரும் பணக்காரர்கள் வரிசையில், உலகின் இளவயது பணக்காராக Mark Elliot Zuckerberg ம் இணைந்து கொள்கின்றார்.
இவர் யார்?
New York ல் பிறந்த இவர், பிற பல சமூக வலையமைப்பான பேஸ்புக்கின் நிறுவனர்களில் ஒருவரும், அதன் தலைவரும், நிறைவேற்றுப் பணிப்பாளருமாவார். கடந்த 2010 மே 14 ல் தனது 26 வயதினைப் பூர்த்தி செய்த இவர், 2004 ல் Harvard பல்கலைக் கழகத்தில் படிக்கின்ற காலங்களில் பேஸ்புக் என்ற சமூக வலைத்தளத்தை உருவாக்கினார். ஆரம்ப காலங்களில் தான் படித்த பல்கலைக்கழகத்துடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்த இவ்வலையமைப்பானது, குறுகிய காலப்பகுதியில் விரிவடைந்து, இன்று உலகம் பூராவும் 350 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். நாத்திகரான இவரது சொத்து மதிப்பு 4 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.
Sunday, August 15, 2010
Saturday, August 14, 2010
உலகிலேயே அதி வயது கூடியவர். 130 வயது.
முன்னைய ரஷ்யா குடியரசின் மேற்கு ஜோர்ஜியப் பகுதியில் Mountain Village என்னுமிடத்தில் ஜூலை 8 , 1880 ல் பிறந்த Antisa Khvichava என்பவரே உலகிலேயே அதி வயது கூடியவராவார்.
இவரைப்பற்றி......நீதித்துறை பேச்சாளர் Georgiy Meurnishvili குறிப்பிடுகையில், தற்போது தனது 40 வயது நிரம்பிய மூத்த பேரனுடன் வசித்து வரும் இவர் தேயிலைக் கொழுந்து பறிக்கும் தனது தொழிலிருந்து 1965 ம் ஆண்டு தனது 85 வது வயதில் ஓய்வு பெற்றுள்ளார். இவர் ஜோர்ஜிய மொழிக்கல்வியைப் பெறாமையினால் உள்ளூர் மொழியான Mingrelian இனையே பேசுவதாகவும் குறிப்பிடுகின்றார்.

Posted by
abuanu
at
Saturday, August 14, 2010
Labels:
Image,
அதிசயம்,
உலகிலேயே அதி வயது கூடியவர்
No comments:
Friday, August 13, 2010
'சூப்பர் பக்'
புதிய 'சூப்பர் பக்' பாக்டீரியா கிருமி குறித்து ஆய்வாளர் விளக்கம்
சென்னை பல்கலைக்கழகத்தின் ஏ.எல். முதலியார் அடிப்படை மருத்துவ அறிவியல் ஆய்வு மையம் தரமணியில் இயங்கி வருகிறது. இங்கு நுண்ணுயிரியல் குறித்து ஆய்வு செய்து வருகிறார் கே.கார்த்திகேயன் (வயது 32).
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலைச் சேர்ந்த இவரும் இங்கிலாந்தில் உள்ள கார்டிப் பல்கலைக்கழக ஆய்வு மாணவர் திமோத்தி வால்ஸ் என்பவரும் இணைந்து ஆய்வொன்றை மேற்கொண்டனர்.
கடந்த 11ஆந் திகதி (புதன்கிழமை) கார்டிப் பல்கலைக்கழக மாதாந்த ஆய்வு இதழில் இது தொடர்பான கட்டுரை வெளியானது. இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் இக்கட்டுரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மிகவும் அபாயகரமான 'சூப்பர்பக்' என்ற பாக்டீரியா கிருமி குறித்த தகவல்கள் அந்த கட்டுரையில் வெளியிடப்பட்டுள்ளன.
எந்தவித ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கும் கட்டுப்படாத அந்தக் கிருமி தாக்கினால், நிமோனியா, சிறுநீரக சம்பந்தப்பட்ட நோய்கள் உள்பட பல்வேறு நோய்கள் உண்டாகும் அபாயம் உள்ளது.
இந்த நோய்க்கிருமியானது வெகுவிரைவாக பரவும் தன்மை வாய்ந்தது. அதேபோல், இதர பாக்டீரியாக்களோடும் எளிதில் கலந்துவிடும். மிகவும் வீரியம் வாய்ந்த ஆன்டிபயாடிக் மருந்துகளுக்குகூட கட்டுப்படாதது இந்த கிருமி.
தற்போது இ-காலி, கே-நிமோனியா ஆகிய 2 பாக்டீரியாக்களில் அந்த கிருமி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கிருமி பாதித்தால் பாரியளவில் அறிகுறிகள் ஒன்றும் தெரியாது. பரிசோதனை மூலமே கண்டுபிடிக்க முடியும். பாதிக்கப்பட்ட நோயாளியை தனியாக வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
உலகளவில் பரவல்
இந்த நோய்க்கிருமி இந்தியாவில் இருந்துதான் வெளிநாடுகளுக்கு பரவியதாக மருத்துவ உலக அளவில் தகவல் கிளம்பியது.
இந்தக் கிருமி அபாயத்தால், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்கு யாரும் வரமாட்டார்கள். இதனால், இந்தியாவில் மருத்துவ சுற்றுலா அடியோடு பாதிப்புக்கு உள்ளாகும் என்றும் பரபரப்பு தகவல்கள் உலகம் முழுவதும் பரவின.
இதுகுறித்து 'சூப்பர்பக்' நோய்க்கிருமியை கண்டுபிடித்த தமிழக விஞ்ஞானி கார்த்திகேயனிடம் கேட்டபோது,
" 'சூப்பர்பக்' என்.டி.எம்.-1 என்று அழைக்கப்படும் இந்தக் கிருமி இந்தியாவில் மட்டுமல்ல ஐரோப்பிய, அமெரிக்க, ஆசியா நாடுகள் உட்பட உலகம் முழுவதுமே காணப்படுகிறது.
நான் நடத்திய பரிசோதனை ஆய்வில் சென்னையில் 44 நோயாளிகளிடமும், அரியானாவில் 26 பேரிடமும் இங்கிலாந்தில் 26 பேரிடமும் பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட உலகின் மற்ற நாடுகளில் 73 பேரிடமும் அந்தக் கிருமி இருக்கக் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தியாவில் மட்டும்தான் அந்த நோய்க்கிருமி உள்ளது என்று சொல்லப்படுவது உண்மையல்ல. எனவே, இந்தியாவில் மருத்துவ சுற்றுலா பாதிக்கப்படும் என்று கூறுவது தவறானது. மேலும், அந்த நோய்க்கிருமியை கட்டுப்படுத்த தற்போது 2 ஆண்டிபயாடிக் மருந்துகள் உள்ளன.
ஆனால், அவற்றின் விலை மிகவும் அதிகம். அவை எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. இந்த கிருமி குறித்து இன்னும் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு குறைந்த செலவில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முயற்சி செய்வேன்" என்று கூறினார்.

Thursday, August 12, 2010
காமிக்ஸ் புத்தகம் விலை 19 லட்சம்
இதுவரை ஆன்லைனில் அந்த புத்தகத்தை வாங்க விருப்பம் தெரிவித்து பலர் விண்ணப்பித்துள்ளனர். விலை 16.45 லட்சத்தை தொட்டுள்ளது. எனினும், நேரடி ஏலத்தில் காமிக் புத்தகம் 18.8 லட்சத்துக்கு விற்பனையாகும் என்று மைக் எதிர்பார்க்கிறார்.
Wednesday, August 11, 2010
ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத் தடை!
உயிர்க் கொல்லியான கொடிய புற்று நோயை தோற்றுவிக்கக் கூடிய இரசாயனக் கலவை சேர்க்கப் பட்டிருப்பதை கண்டுபிடித்ததைத் தொடர்ந்து ஹெட் & ஷோல்டர் நிறுவனத்தின் இரண்டு உற்பத்தி பொருட்களுக்கு கத்தார் அரசாங்கம் தடைவிதித் துள்ளது. அத்துடன் இந்த தடை தற்காலிகமானதல்ல, அது நீடிக்கும் என்றும் கத்தார் சுற்றுச் சூழல் அமைச்சக ஆய்வுக் கூட பிரிவின் தலைமை அதிகாரி டாக்டர். ஸைஃப் அல் குவைரி தெளிவுபட கூறியுள்ளார்.
ப்ராக்டர் அண்டு கேம்பிள் நிறுவன தயாரிப்பான இருவகை ஹெட் & ஷோல்டர் ஷாம்பூக்களில் புற்று நோயை உண்டு பண்ணக் கூடிய “டயோக்சைடு” எனும் இரசாயனப் பொருள் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் தான் கத்தார் நாட்டு அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண் டுள்ளது.
அழகு சாதனங்களின் மீதான மக்களின் மோகத்தை மூலதன மாக்கி நுகர்வோரை ஈர்க்கும் நோக்கில், சகல விதமான தார்மீக நெறிமுறைகளையும் மீறி & அபாய கரமான பின்விளைவுகளை பற்றிக் கூட கிஞ்சிற்றும் கவலைப் படாமல்தான் பெரும்பாலான இத்தகைய உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை கவர்ச் சிகரமான விளம்பரங்களுடன் சந்தைப்படுத்தி வருகின்றன.
விளக்கை நோக்கி பாய்ந்து வீழ் ந்து மடியும் விட்டில்களைப் போல, மக்கள் அழகு மோகத்தால் இயற்கை அழகையும் ஆரோக்கியத்தையும் கெடுத்து பாழ்படுத்திக் கொள்வதுடன் கொடிய நோய்களுக்கும் ஆட்பட்டு வருகின்றனர்.
மக்கள் நலனில் அக்கறை காட்டாத அரசாங்கங்களும், அதிகாரிகளும் யார் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்கிற போக்கில் தங்களின் வருவாயில் மட்டுமே குறியாக உள்ளனர்.
எதிர்பாராத வகையில் ஏதேனும் திடீர் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் ஒழிய இத்தகைய மென்விஷப் பொருட்களின் உற்பத்தி & வினியோகம் & பயன்பாடு பற்றியெல்லாம் எவரும் கவலைப்படுவதில்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயமாகும்.
எனவே, சமூக நலனில் அக்கறை உள்ளவர்கள் இதுபோன்ற விஷயங்களிலும் கவனம் செலுத்தி மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்ட வேண்டும், மக்களும் விழிப்படைய வேண்டும்.
Source : tmmk.in
Thanks To.......Anas Mohamed and MM.Mubarack (Both-Doha-Qatar)
Subscribe to:
Posts (Atom)