Thursday, September 30, 2010

உலகிலேயே மிகவும் நீளமான பென்சில்.

 உலகிலேயே மிக நீளமான பென்சிலொன்றினை சர்வதேச தொண்டு நிறுவனமான V Led தயாரித்துள்ளது. 22000 இறாத்தல் நிறையுடைய இந்த பென்சிலின் எழுதப்பயன் படும் பகுதி 10'' கனமும் சுமார் 4500 இறாத்தல் நிறையுமாகும்.
இதன் மொத்த நீளம் 76 அடி என்பதுடன், அழிப்பானின் (eraser) நீளம் 2 1/2 அடி நீளமாகும். இச்சாதனைப் பென்சிலினை நியூயோர்க், குயீன்ஷைச் சேர்ந்த உலக சாதனையாளரான Ashrita Furman வெளியீட்டு வைத்தார்.






பேஸ்புக் - ஸ்கைப் இணையும் புதிய தகவல் சேவை

சமூகவலைப் பின்னல் தளமான பேஸ்புக் மற்றும் இணையத் தொலைபேசிச் சேவையான ஸ்கைப் ஆகியவை இணைந்து செயற்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஒருங்கிணைந்த தகவல் சேவையினை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமென வோல்ஸ்ரீட் சஞ்சிகை தெரிவித்துள்ளது.
இதன் பிரகாரம் பேஸ்புக் கணக்கினூடாக ஸ்கைப் கணக்கிற்குள் பிரவேசிக்கமுடியும்.
மேலும் ஸ்கைபின் மூலமாக தங்களது பேஸ்புக் நண்பர்களுடன் செடிங், வொயிஸ் செடிங், வீடியோ செடிங் போன்றவற்றில் ஈடுபடமுடியும்.
மேற்படி இணைந்த சேவையானது, அடுத்த மாதம் வெளியிடப்படவுள்ள 'ஸ்கைப் 5.0' புதிய தொகுப்பில் உள்ளடக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விரு சேவைகளும் இணைவது பெரும் வரவேற்பைப் பெறுவதாக இருக்குமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி,வீரகேசரி.

Wednesday, September 29, 2010

உலகிலேயே மிகச் சிறிய செய்திப்பத்திரிகை.

இங்கிலாந்தின் Surrey,West Horsley நகரில் கடந்த 2007 ம் ஆண்டு நவம்பர் 8 ம் திகதி பிரசுரிக்கப்பட்ட 32 mm நீளமும் 22 mm அகலமும் (1.25X0.86 Inches) கொண்ட"First News" என்ற செய்திப்பத்திரிகையே உலகிலேயே மிகச்சிறிய செய்திப்பத்திரிகையாக உலக சாதனைப்புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.






Tuesday, September 28, 2010

மிகவும் நீளக்கூடிய அதிசய மனிதத்தோல்

பிரித்தானியாவைச் சேர்ந்த  Harry Turner (Garry Turner) என்பவர் அபூர்வமான தோல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். 
இதன் காரணமாக இவரது உடலிலுள்ள தோலானது கைகளால் பிடித்து இழுக்கின்ற போது குறிப்பிட்ட தூரம் நீளுவதைக் காணலாம்.
இவர்  உலக சாதனைப்புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.




Monday, September 27, 2010

அபூர்வ மனிதர்.

உண்மையான அபூர்வ மனிதர்: மின்சாரம் இவரை தாக்குவது இல்லை! 
அமெரிக்காவில் இருந்து ஒளிபரப்பாகும் ஹிஸ்ரி சனல் தொலைக்காட்சியின், நிருபர் இந்தியா சென்று அங்குள்ள அபூர்வ மனிதர் ஒருவரைச் சந்தித்துள்ளார். எலக்ரிசிட்டி மோகம் எனப்படும் இந்நபர் சுமார் 200 வால்ட் மின்சாரத்தை தனது உடல் மூலம் செலுத்துகிறார், ஆனால் அவர் உடலை மின்சாரம் தாக்கவில்லை. சாதாரண மனிதர்களாயின் சுமார் 2 நிமிடத்தில் மரணத்தை சந்திக்க நேரிடும், ஆனால் இந்த அதிசய மனிதர் சர்வசாதாரணமாக 200 வால்ட் மின்சாரத்தை கைகளால் பிடிக்கிறார்.
இதில் ஏதாவது சுத்துமாத்து இருக்கலாம் என்பதற்காக தொலைக்காட்சியின் நிருபரே நேரடியாகச் சென்று, அதனைப் பார்வையிட்டதோடு அவரை பல்வேறு பரிசோதனைக்கும் உள்ளாக்கியுள்ளார். இந்நிலையில் மோகன் என்பவ்ர் உண்மையிலேயே ஒரு அதிசயமான மனிதர் என நிருபர் பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறார். இது எவ்வாறு சாத்தியப்படும் என்பது யாருக்கும் இதுவரை தெரியவில்லை. 

வீடியோ.

நன்றி,மனிதன்.