Wednesday, December 22, 2010

உலகின்  மிக நீண்ட இரயில்

ஆஸ்திரேலியாவின் BHP இரும்புத்தாது இரயில் தான் உலகின் மிக நீண்ட இரயிலாகும்.
இது கின்னஸ் உலக சாதனைப்புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.
இச்சாதனை ஜூன் 21, 2001ல் மேற்கு ஆஸ்திரேலியாவில் நிகழ்த்தப்பட்டது.
ஆஸ்திரேலியாவின் நியூமன் (Newman) க்கும் போர்ட் ஹெட்லேன்ட்(Port Headland) க்கும் இடையில் 275Km (170 Miles) தூரத்தை, சுமார் 100000 தொன்(Ton) நிறையுடைய  8 GE AC6000 இரயில் என்ஜின் 82,262 தொன் இரும்புத்தாது ஏற்றப்பட்ட 682 பெட்டிகளைக் கொண்ட 7.353 km (4.568 miles) நீளமுடைய இரயிலை இழுத்து சென்றது.
இந்த முழு நீள இரயிலையும் ஒரே ஒரு சாரதியே செலுத்தியதுடன், இது தற்போதும் சேவையில் ஈடுபடுகின்றமை சிறப்பம்சமாகும்.

Tuesday, December 21, 2010

 உலகின் மிக ஆபத்தான பறவை

உலகின் மிக ஆபத்தான பறவையாக நெருப்புக்கோழி கணிக்கப்பட்டுள்ளதுடன், கின்னஸ் உலக சாதனைப்புத்தகத்தின் 2007 ஆண்டுப்பதிப்பிலும் "உலகின் மிக ஆபத்தான பறவை" யாக இடம் பிடித்துள்ளது.
விசேடமாக தான் காயப்பட்டாலோ அல்லது தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலிருந்தாலோ பலமாக எதிரில் உள்ளவர்களை தாக்கும் ஒரு அதிசய படைப்பாகும். இதன் தாக்குதலானது எலும்புகள் முறியுமளவிற்கு பலமானதாகவும் இருக்கும்.
இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் நியூகினியில் முகாமிட்டிருந்த படை வீரர்களுக்கு இந்த பறவை பற்றிய எச்சரிக்கையும் விடப்பட்டிருந்தமையானது இதனது தாக்குதலின் பாரதூரத்தை தெளிவாக்குகிறது.
இந்த நெருப்புக்கோழிகள் ஆஸ்திரேலியா மற்றும் நியூ கினியின் மழைக்காடுகளில் பெரும்பாலும் வாழுகின்றன.
உண்மையில் பார்ப்பதற்கு மிக அழகான இவைகள் பயங்கர ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடியதுமாகும்.மிருகக்காட்சி சாலைகளில் வைத்து பராமரிக்க மிகக் கடினமான ஒரு உயிரினமாக இவை உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.







Monday, December 20, 2010

1200 சோடி செருப்புக்களை திருடிய கொரிய சாதனைத்திருடன்

தென் கொரியாவில் பாவித்த செருப்புக்கடை உரிமையாளர் ஒருவர் 1200 சோடிக்கும் மேற்பட்ட பெறுமதியான, புதிய புதிய வடிவமைப்புடைய செருப்புகளை மரண வீடுகளிலும், வைத்தியசாலைகளிலும் திருடியுள்ளமை அண்மையில் பொலிசாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், திருடனும் திருட்டில் ஈடுபட்டிருக்கும் போது வசமாக மாட்டிக்கொண்டுள்ளார்.
59 வயதுடைய பார்க் (Park) என்பவர் தான் இந்த சாதனைக்கு சொந்தக்காரரராகும். கொரியர்கள் மரண வீடுகளுக்கு சென்றால் தங்கள் செருப்புக்களை கழற்றி விட்டு நுழைவது அவர்களது பரம்பரை வழக்கமாகும். இதனை சாதகமாக பயன்படுத்திகொண்ட பார்க்,  மரண வீடுகளுக்கு செல்வோருடன் தானும் சென்று தான் அணிந்திருக்கும் பழைய செருப்பை கழற்றி விட்டு பெறுமதியான, புதிய வடிவமைப்புடைய செருப்புக்களை அணிந்து கொண்டு வெளியேறுவதை வழக்கமாக கொண்டிருந்தமையும், இவரது தொழில் இரகசியமும்  போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.
இவ்வாறு திருடி வரும் செருப்புக்களில்  சிறு சிறு திருத்தங்களை தனது செருப்புகடையில் செய்து நல்ல விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.
இவரது தொழில் இரகசியத்தை அறிந்து கொண்ட போலீசார் Sueso மாவட்டத்தில் மரண வீடொன்றுக்கு இவர் செல்லும்  இவரை பின் தொடரலானார்கள். வீட்டில் நுழைந்த பார்க், தான் அணிந்திருந்த பெறுமதியற்ற செருப்பை கழற்றி விட்டு அதனருகே கழற்றப்பட்டிருந்த செருப்பினையும் மேலும் இரண்டு சோடி செருப்புக்களையும் திருடிக்கொண்டு வெளியேறும் போது இவரை தொடர்ந்து வந்த போலீசார் கையும் மெய்யுமாக பிடித்து விட்டனர்.

Sunday, December 19, 2010

முதுகில் இரண்டாவது ஆணுறுப்புடன் பிறந்த குழந்தை.

 கடந்த மே மாதம்  27, 2008 ம் திகதி  சீனாவின் Tianjin சிறுவர் வைத்தியசாலையின், Hejian பிரவச நிலையத்தில் 30 வயதுடைய, மத்திய சீனாவின் Henan மாகாணத்தைச்  சேர்ந்த விவசாயி  Li Jun  என்பவரின் மனைவிக்கு பிறந்த ஆண் குழந்தையின் பின் பக்கமாக முதுகில் ஆச்சரியப்படத்தக்க வகையில் இரண்டாவது ஆணுறுப்பு வளர்ந்திருந்தது.
தற்போது, வைத்தியர்கள்  இதனை நான்கு மணித்தியாலய சத்திர சிகிச்சை பின்னர்  பாதுகாப்பாக அகற்றியுள்ளனர்.குழந்தையும் நலமுடன் உள்ளது.

Saturday, December 18, 2010

 அபூர்வ முகமூடிக்குழந்தை

சீனாவின் ஹுனன் (Hunan) மாகாணத்தின் Changsha பிரதேசத்தில் Yi Xilian என்ற  இளந்தாய்க்கு மார்ச் 4,2010 ல் அபூர்வமாக  இரட்டை முக வடிவில் முகமூடி அணிந்த தோற்றத்தில்  குழந்தை("mask face") பிறந்துள்ளது.  Kangkang என்ற பெயருடைய அபூர்வ குழந்தை தொடர்பாக வைத்திய நிபுணர்  Wang Duquan குறிப்பிடுகையில், கரு உருவாகின்ற சந்தர்ப்பத்தில் கருவைக்கலைக்க உட்கொண்ட மருந்துகளின் தாக்கத்தினால் இவ்வாறு நிகழ்ந்திருப்பதாகவும், தனது அனுபவத்தில் இவ்வாறான நிகழ்வொன்றை முதன் முதலில் சந்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இது சதை முகத்தின் வளர்ச்சி மட்டுமல்லாது, உட்பகுதியில் எலும்புகளும் சேர்ந்து வளர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு சத்திர சிகிச்சை மேற்கொள்வதன்  மூலம் இதனை சரி செய்யலாமெனவும்,சுமார் 300,000 தொடக்கம் 400,000 Yuan (அண்ணளவாக 80,000 தொடாக்கம் 100,000 டொலர்கள்) தேவைப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.