Friday, August 5, 2011

மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்க...!

1.தானே பெரியவன் தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.(படைத்தவன் மட்டும் தான் பெரியவன் என்று நினையுங்கள்.)
2.அர்த்தமில்லாமலும் தேவையில்லாமலும் பின் விளைவுகள் அறியாமலும் பேசிக்கொண்டேயிருப்பதை தவிருங்கள்.
3.எந்த விஷயத்தையும் பிரச்சினையயும் நாசுக்காகக் கையாளுங்கள்.
4.சில நேரங்களில் சில சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்று உணருங்கள்.
5.நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று கடைசி வரை வாதாடாதீர்கள்.
6.குறுகிய மனப்பான்மையை விட்டொழிங்கள்.
7.உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் வ்ட்டுவிடுங்கள்.
8.மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள்.
9.அளவுக்கதிமாக தேவைக்கதியமாய் ஆசைப்படாதீர்கள்.
10.எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்.
11.கேள்விப்படுகிற எல்லா விஷ்யங்களையும் நம்பி விடாதீர்கள்.
12.அற்ப விஷயங்களையும் பெரிதுபடுத்தாதீர்கள்.
13.உங்கள் கருத்துக்களில் உலக விஷயத்தில் உடும்புப் பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள். மார்க்க விஷயத்தில் ஒரு போதும் சமரசம் செய்யாதீர்கள்.
14.மற்றவர் கருத்துக்களை செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்.
15.மற்றவர்களுக்கு உரிய மரியதையைக் காட்டவும் இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் தவறாதீர்கள்.
16.புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல நடந்து கொள்ளாதீர்கள்.
17.பேச்சிலும் நடத்தையிலும் திமிர்த்தனத்தையும் தேவையில்லாத மிடுக்கைக் காட்டுவதை தவித்து அடக்கத்தையும் பண்பாட்டையும் காட்டுங்கள்.
18.அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து அளவளாவுங்கள்.
19.பிணக்கு ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன்வாருங்கள்.
20.தேவையான இடங்களில் நன்றியையும்,பாராட்டையும் சொல்ல மறக்காதீர்கள்.பாராட்டுக்கு மயங்காத மனிதனே இல்லை,அதற்காக ஓவர் பில்டப் கொடுத்து பொய்யாக எதையாவது சொல்லி வைக்காதீர்கள். அதுவே உங்களுக்கு தலைவலியாகவும் அல்லது வெற்றியாகவும் அமையலாம்.

Thursday, August 4, 2011


தென் ஆப்ரிக்காவில் உள்ள போர்ட் எலிசபத்த்தில் பிறந்த 22 வயது, தென் ஆப்ரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் பேர்நெல் (Wayne Dillon Parnell) 28.7.2011 வியாழக்கிழமை அன்று இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
இவர் தென் ஆப்ரிக்கா சர்வேதச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்(Left-arm medium-fast) என்பது குறிப்பிடத்தக்கது.
பேர்நெல் கிறிஸ்துவ மார்க்கத்திலிருந்து இஸ்லாத்தை தழுவி இருக்கிறார். இவருடைய பெயரை வலீத் (பொருள்:புதிதாக பிறந்த மகன்) என்று தனது பெயரை மாற்றிக் கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.
“வெய்ன் இரண்டு மாதங்களுக்கு முன்பே இஸ்லாத்தை பின்பற்ற முடிவு செய்துவிட்டார்,” என்று தென் ஆப்ரிக்கா அணி மேலாளர் டாக்டர் முகம்மது மொசாஜி தெரிவித்துள்ளார்.
ஹாஷிம் ஆம்லா , இம்ரான் தாகிர் போன்ற சக வீரர்களின் வற்புறுத்தலினால் தான் பேர்நெல் இஸ்லாத்தை தழுவினார் என்ற வதந்தியை மொசாஜி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.இது அவருடைய சொந்த முடிவு எனவும் மொசாஜி கூறினார்.
மொசாஜியின் மறுப்பை ஆதரிக்கும் வகையில் தென் ஆப்ரிக்காவின் மற்ற அணி வீரர்களும் ஹாஷிம் ஆம்லா , இம்ரான் தாகிர் , பேர்நெலை எந்த விதத்திலும் கட்டாயப்படுத்தவில்லை. ஆம்லாவின் ஒழுக்கம் ,சுற்றுப்பயணத்தின் போதும் தினசரி தொழுகை,மதுபான கொண்டாட்டங்களில் பங்கேற்காதது ,தென் ஆப்பிரிக்க அணியின் விளம்பரதாரரான பீர் கம்பெனியை விளம்பரப்படுத்த மறுத்தது போன்ற இவரின் செயல் அனைவரையும் ஈர்க்கத்தான் செய்தது.
பேர்நெல்லுடைய சக விளையாட்டு வீரர்கள் ,கடந்த IPL (Indian premier League) போட்டியில் “பேர்நெல் மது அருந்தாததை வைத்தே அவர் தன் மதத்தை மாற்றுவதில் எவ்வளவு மும்முரமாக இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டோம்” என்று தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் இருந்து நாம் கற்க வேண்டிய பாடம்.
ஒரு முஸ்லிமின் ஒழுக்கத்தை பார்த்தே மாற்று மதத்தினர் இஸ்லாத்தை நேசிக்க ஆரம்பிக்கின்றனர்.நாமும் இஸ்லாத்தின் ஒழுங்குகளை பேணி நமக்கு நன்மை தேடிக் கொள்வதோடு பல மாற்று மத சகோதரர்கள் நேர்வழி பெற உதவுவோம்.

Wednesday, August 3, 2011

இஸ்லாமியர்களுக்கு 
கூகுள் கொடுத்துள்ள ரமழான் பரிசு

இஸ்லாமியர்களின் புனித தளமான மெக்காவில் உள்ள அல்-மஸ்ஜீத்-அல்-ஹராம் மசூதியில் நடைபெறும் தொழுகைகளை நேரடியாக உலகம் முழுவதும் பார்க்கும் வசதியை யூடியுப் மூலம் கூகுள் வழங்கி உள்ளது. இது இஸ்லாமியர்களுக்கு கூகுள் கொடுத்துள்ள ரமலான் பரிசாகும். உலகிலேயே முதன்மையானதும் , மிகப்பெரிய மசூதியான இந்த இடத்தில் இருந்து
நேரடியாக  பார்ப்பது அனைத்து இஸ்லாமியர்களுக்கும் கிடைத்த வரப்பிரசாதமே.
இந்த இணைப்பிற்கு செல்லவும்.
கூகுளுக்கு நன்றிகள்.

Monday, August 1, 2011

கடலடியில் வாழும் விசித்திர உயிரினங்கள்.

நமது பூமியின் மேற்பரப்பைவிட கடலுக்கு அடியில் பல கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
இவற்றில் பல உயிரினங்கள் நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத வடிவத்தில் உள்ளன.
ரஷ்ய ஆர்க்டிக் கடற் பகுதியில் வாழும் சில விசித்திர உயிரினங்களின் படங்களே இவை:





நன்றி. வீரகேசரி.

Wednesday, July 27, 2011

ஜப்பானின் அற்புதமான தொழில்நுட்பம்.

இதனை நன்று உற்றுப்பாருங்கள். என்னவாக இருக்கக் கூடும்? உங்களால் ஊகிக்க முடிகிறதா?
பேனாக்களா? இல்லை.
இன்றைய நவீன உலகில் கணனியின் தேவை தவிர்க்க முடியாத ஒன்று என்பதுடன், அது பல்வேறு பரிணாமங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இன்று பேனா அமைப்புக்களில் அமைந்த, ஆடைகளில் செருகிக்கொண்டு செல்லும் வகையில் உருவாக்கப்பட்ட புதிய கணணிகளை புதிய  தொழிநுட்பத்தின் முன்னோடிகளான ஜப்பானியர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
கீழ் வரும் படங்களில் காணலாம்.