Monday, March 12, 2012

அறியாத சில விடயங்கள் - 6

ஒவ்வொரு கண்ணும் கண் விழிகளைச் சுழற்ற ஆறு தசைகளைப் பெற்றுள்ளன. அதன் இயக்கங்கள் சமமாக உள்ளதால் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறான திசைகளில் பார்ப்பது நமக்கு முடியாததாக இருக்கிறது. பார்வையற்றவர்கள் பார்வை உள்ளவர்களைவிட பேசும் வார்த்தைகளை மிக விரைவாகப் புரிந்துகொள்கிறார்கள்.
நமது கைகளில் உள்ள கட்டை விரல்கள் தான் மூளையால் அதிகம் வேலை வாங்கப்படும் உடல் உறுப்பாகும்.
விமான நிலையங்களின் அருகே வசிப்பவர்களுக்கு மனத்தளர்ச்சி, செவி மற்றும் நரம்புக்கோளாறுகள், வயிற்றுப்புண் ஆகிய நோய்களால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் எனப் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்

கிரிக்கெட் ரசிகர்களுக்கு.....


இங்கிலாந்து சண்டே டைம்ஸின் அதிரடி செய்தி. 2011 உலக கோப்பை இந்திய, பாகிஸ்தான் அரையிறுதியில் சூதாட்டம் -பொலிவூட் நடிகை

இந்திய, பாகிஸ்தான் அணிகள் பங்குபற்றிய கடந்த ஆண்டின் உலகக்கிண்ண அரையிறுதிப்போட்டியில் சூதாட்டம் இடம்பெற்றுள்ளதாக இங்கிலாந்தின் "சண்டே டைம்ஸ்" பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
சண்டே டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின் படி, இந்தியாவைச் சேர்ந்த சூதாட்டக்காரர்கள் இங்கிலாந்தின் பிராந்தியப் போட்டிகளிலும், சர்வதேசப் போட்டிகளிலும் இலகுவாக சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், சர்வதேச கிரிக்கெட் சபை இதுகுறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
வழங்கப்படும் ஏராளமான பணத்தின் காரணமாக போட்டிகளின் முடிவுகளை முன்னரே தீர்மானிப்பது இலகுவாக உள்ளதாகத் தெரிவித்த குறித்த பத்திரிகை, வீரர்களுக்கு ஏராளமான ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டமைக்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
வீரர்களை சூதாட்டத்தின் பக்கம் இழுப்பதற்கு பொலிவூட் நடிகையொருவரைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கைகளில் இந்தியச் சூதாட்டக்காரர்கள் முயன்று வருவதாக அப்பத்திரிகை தனது இன்றைய செய்தியில் தெரிவித்துள்ளது.
சண்டே டைம்ஸின் செய்திகளின்படி தங்கள் விசாரணைகளில் துடுப்பாட்ட வீரரொருவர் மெதுவாகத் துடுப்பெடுத்தாட 44,000 ஸ்ரேர்லிங் பவுண்ட்ஸ்களும், அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுக்க பந்துவீச்சாளர்களுக்கு 50,000 ஸ்ரேர்லிங் பவுண்ட்ஸ்களையும், போட்டிகளின் முடிவுகளை மாற்றுவதாக உறுதிப்படுத்தும் வீரருக்கு 750,00 ஸ்ரேர்லிங் பவுண்ட்ஸ்களும் வழங்கப்படுவதாக கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த விக்ரம் செத் என்ற சூதாட்டக்காரர் ஒருவரே குறித்த பத்திரிகையிடம் சிக்கியுள்ளதாகவும், அவர் மூலமே இத்தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி
லங்காநவ்..

Sunday, March 11, 2012

நீங்கள் Gmail பயன்படுத்துபவரா? இதனை கண்டிப்பாக படியுங்கள்!

இதனை கண்டிப்பாக படியுங்கள் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் உங்கள் கணக்கு முடக்கப்பட்டாலோ அல்லது உங்களது மெயில்களை நீங்களே தவறுதலாக் அழித்துவிட்டாலோ என்னசெய்வது முக்கியமான மெயில்களை எவ்வாறு மீட்பது.... இனிமேல் அந்தக்கவலை வேண்டாம் இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ள மென்பொருளினை தறவிரக்கி உங்கள் கணனியில் நிறுவிக்கொள்ளுங்கள் அவ்வளவுதான்.
உங்கள் மெயில்கள் எல்லாவற்றையுமாயினும் சரி குறிப்பிட்டவற்றை மட்டுமாயினும் சரி இந்த gmail backup மென்பொருளின் இதவியுடன் backup செய்து உங்களிட்குத் தேவையான் இடத்திலோ அல்லது USB போன்றவற்றிலோ சேமித்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள் இதன் சிறப்பம்சம் என்னவெனில் இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமானது இதனை பதிவிறக்க கீழ் உள்ள லிங்கில் கிளிக் செய்யுங்கள்.http://www.mediafire.com/?ddg69mdcg0pgjay
உங்கள் கணனியில் நிறுவியதும் இங்கு உள்ளபடத்தில் இருப்பதுபோன்று காணப்படும் அதில் உங்கள் மெயில் முகவரி,கடவுச்சொல் அதன்பின் எங்கு சேமிக்க வேண்டும் எனதெரிவுசெய்யுங்கள் அவ்வளவுதான் குறிப்பிட்ட திகதிகளில் வந்த மெயிலினை மட்டும் backup எடுக்க வேண்டுமாயின் அதில் இருக்கும் new set email only l என்பதில் இருக்கும் டிக்கினை எடுத்துவிட்டு உங்களிட்கு தேவையான திகதியினை தெரிவு செய்துகொள்ளுங்கள்.
 

Saturday, March 10, 2012

1GB நினைவகத்தை 2GB நினைவகமாக மாற்ற முடியும்.

இன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1gb கொள்ளளவு  உடைய நினைவகத்தை  பயன்படுத்துகிறார்கள். அந்த நினைவகத்தை எப்படி 2gb நினைவகமாக மாற்றலாம் என்பதை கிழே கொடுக்கப் பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி சுலபமாக  மாற்றலாம்.
1.இந்த வழிமுறையானது 1GB நினைவகத்தில் மட்டுமே வேலை செய்யும். முடிந்தவரை 1GB நினைவகத்தை மட்டுமே பயன்படுத்துங்கள். 
2. இந்த வழிமுறையை பயன்படுத்தும் முன்பு உங்கள் நினைவகத்திலுள்ள தரவுகளை எல்லாம்  நீங்கள் ஒரு பதிவு எடுத்துவைத்து கொள்வது நல்லது.
3.இப்போது இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்
4. தரவிறக்கம்  செய்த மென் பொருளை திறக்கும் போது இது போன்ற வடிவில் காட் டும்.
 
5.  மென்பொருள் திறந்தவுடன், அதில் 955MB DEFAULT-க  காட்டப்படும் .ஆதலால், மேலே கூறியது போல் 1GB நினைவகத்தை  மட்டும் பயன் படுத்தவும் .
6. இப்போது உங்கள் நினைவகத்தை  கணினியில் சொருகவும். படத்தி ல் தோன்றுவது போல 955MB காட்டப்படும்.
7. (FIX) பிக்ஸ் என்ற option தேர்வு செய்து Yes பட்டனை கிளிக் செய்யவும்.
8. இப்பொது உங்களது நினைவகத்திலுள்ள தரவுகள் எல்லாம் அழிந்து  2GB நினைவகமாக  மாறிவிடும்.
 9. நினைவகத்தை  கணினியிலிருந்து அகற்றிவிட்டு , மீண்டும் கணினியில் சொருகவும். நினைவகத்தின்   அளவு  1912MB என்று காட்டப்படும்.
 
 

கூகுளின் மற்றொரு சாதனை - Free SMS

இணைய பயனர்களில் பெரும்பாலானவர்களால் உபயோகப்படுத்தப்படும் கூகுளின் சிறந்த சேவை ஜிமெயில் எனப்படும் இலவச மெயில் சேவையாகும். நாளுக்கு நாள் பல்வேறு புதிய வசதிகளை ஜிமெயிலில் புகுத்து வாசகர்களை கவர்கிறது கூகுள் நிறுவனம். இப்பொழுது மேலும் ஒரு பயனுள்ள வசதியை வாசகர்களுக்கு வழங்கி உள்ளது. ஜிமெயில் மூலம் SMS அனுப்பும் வசதி. இந்த வசதியை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது கூகுள் நிறுவனம் ஆனால் இந்திய மொபைல்கள் மொபைல் நெட்வொர்க் கம்பெனிகள் சப்போர்ட் செய்யாமல் இருந்தது. இப்பொழுது இந்திய மொபைல்களும் SMS வசதிக்கு சப்போர்ட் செய்கிறது.

இலவசமாக SMS அனுப்புவது எப்படி:
முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து Chat பகுதியில் நீங்கள் SMS அனுப்ப விரும்பும் நண்பரின் பெயரை டைப் செய்யவும். உங்களுக்கு ஒரு சிறிய மெனு வரும் அதில் Send SMS என்ற வசதியை தேர்வு செய்யுங்கள்.
அடுத்து இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்கள் நண்பரின் மொபைல் எண்ணை கொடுத்து SAVE பட்டனை அழுத்தவும்.
இப்பொழுது உங்கள் நண்பரின் மொபைல் விவரம் Contact List-ல் சேர்ந்து விடும். அடுத்து அந்த நண்பருக்கு SMS அனுப்ப விரும்பினால் அவரின் பெயரை கிளிக் செய்தால் Chat Window ஓபன் ஆகும். அதில் Send SMS கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு இலவசமாக SMS அனுப்பலாம்.
 
அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 50 SMS அனுப்ப முடியும். இந்தியாவில் தற்பொழுது Aircel, Loop Mobile, Reliance, Tata DoCoMo, Tata indicom ஆகிய நிறுவனங்களின் மொபைல்களுக்கு SMS அனுப்ப முடியும்.

மற்ற நாடுகளில் சப்போர்ட் செய்யும் மொபைல் நிறுவனங்களை அறிய-Support Operators