கூகுள் நிறுவனமும் ஜப்பானிய சொனி நிறுவனமும் இணைந்து கூகுள் சொனி வெப் ரீவி என்ற இணைய தொலைக்காட்சி தேடுதளத்தை வரும் கோடை விடுமுறைக்குப் பின்னர் ஆரம்பிக்கவுள்ளன. யூ ரியூப் இணையத்தளத்தில் காணொளிகளை பார்ப்பதைப் போல இந்தத் தேடுதளத்திலும் உலகத்தில் உள்ள தொலைக்காட்சிகள் யாவும் இணைக்கப்படவுள்ளன. ஒரு தொலைக்காட்சி நிறுவனம் தனது தொலைக்காட்சி சேவையை கூகுள் பொக்சிற்கு வழங்கினால் அங்கிருந்து அது ஒளிபரப்பாகும். எதிர்கால தொலைக்காட்சியின் தாய்வீடு இணையமே என்ற கருத்தில் இது முக்கியமான பாய்ச்சலாக அமையும் என்றும் கருதப்படுகிறது.
Thanks To.....Alaikal
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.