வியட்நாமைச் சேர்ந்த டிரான் வென் ஹேயின் முடியின் நீளம் 6.2 மீட்டர்களாகும். அவரின் முடி குழம்பிக் காணப்படுவதாலே அதன் நீளம் 6.2 மீட்டர் என கணிப்பிடப்பட்டுள்ள போதும், இதன் உண்மையான நீளம் 6.8 என்று கூறப்படுகிறது.
இவரின் பெயர் 2004 ஆம் ஆண்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பதியப்பட்டது. அப்பொழுது இவரின் முடியின் நீளம் 5.6 மீட்டர்களாக இருந்தது.
இவரால் மோட்டார் சைக்கிளிலோ காரிலோ பயணிக்க முடியாது. தலைக்கவசம் அணிய முடியாதிருப்பதே அதற்குக் காரணம். இதனால் சைக்கிளில்தான் பயணம் செய்கிறார் இவர். பயணம் செய்யும் போது டிரான் முடியை கூடை போல சுற்றிக் கட்டிக் கொள்கிறாராம்.
ஆனால், இந்த நீண்ட முடிக்காரர் தனது 79 ஆவது வயதில் அண்மையில் மரணமடைந்தார். அவருடன் அவரின் நீண்ட முடிச் சாதனையும் முடிந்து விட்டது.
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.