Friday, April 30, 2010

மெல்லிய லேப்-டாப்: ஆப்பிள் திட்டம்

சர்வதேச சந்தையில் தற்போதுள்ள லேப்-டாப்களை விட மெல்லிய, எடைகுறைந்த நவீன லேப்-டாப் கணினியை ஆப்பிள் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மடிக்கணினியில் ஹார்ட்-டிஸ்க் பகுதிக்கு பதிலாக, ஆப்பிள் ஐ-போன்களில் பயன்படுத்தப்படும் ஃப்ளாஷ் மெமரி சிப்கள் பயன்படுத்தப்படுவதால், இதன் எடை மற்றும் தடிமன் பாதியாக குறையும் என கணினி தயாரிப்பு வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
மடிக்கணினி விற்பனையில் அதிக ஆர்வமும், தீவிரமும் காட்டி வரும் ஆப்பிள் நிறுவனம், கடந்த செப்டம்பருடன் முடிவடைந்த 4ம் காலாண்டில் 1.34 மில்லியன் மடிக்கணினிகளை விற்பனை செய்துள்ளது.

இது கடந்த ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட மடிக் கணினிகளின் எண்ணிக்கையை விட 37 சதவீதம் அதிகம் என ஆப்பிள் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கைப்பேசிகளின் தொடுகைத்திரையும் தொடரும் வழக்குகளும்


2007ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோனை தொடுகைத் திரை(touchscreen) தொழில் நுட்பத்துடன் அறிமுகம் செய்து அது பெரு வெற்றியைக் கொடுத்ததைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் தொடுகைத் திரை கைப்பேசிகளை அறிமுகம் செய்வதில் ஆர்வம் காட்டின.தொடுகைத் திரை(touchscreen) தொழில் நுட்பம் ஆப்பிள் நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த ஐபாட் (Tablet)கணனியில் உச்சக் கட்டத்தை எட்டியது. இந்தத் தொடுகைத் திரைத் தொழில் நுட்பத்திற்கு உரியகாப்புரிமை தன்னுடையது என்று இப்போது தைவானின் Elan Microelectronics என்னும் நிறுவனம் வாதிடுகிறது. அது அமெரிக்க அரசிடம் இது தொடர்பாக முறையிட்டுள்ளது.
அமெரிக்க பன்னாட்டு வர்த்தக ஆணையகம் (US International Trade Commission) இது தொடர்பாக விசாரணகளையும் ஆரம்பித்துள்ளது. Elan Microelectronics சார்பாக தீர்ப்பை வழங்கினால் ஆப்பிள் தனது ஐ-பாட், ஐ-போன், ஐ-பொட் ரச், ஆகிய கருவிகளின் விற்பனையை நிறுத்த வேண்டி வரலாம் என அஞ்சப்படுகிறது. ஆப்பிள் 2007இல் இருத்து 40 மில்லியன்கள் ஐ-போன்களை விற்பனை செய்துள்ளது.
இது இவ்வாறிருக்க ஆப்பிள் நிறுவனம் தனது கைப்பேசிகளின் தொழில் நுட்பங்களை தைவானைச் சேர்ந்த HTC நிறுவனம் திருடிவிட்டதாக வழக்குத் தொடுத்துள்ளது.
உலகின் மிகப் பெரிய கைப்பேசி விற்பனையாளர்களான நொக்கியா நிறுவனம் தனது தொழில் நுட்பங்களை ஆப்பிள் நிறுவனம் திருடிவிட்டதாக வழக்குத் தொடுத்துள்ளது.
Thanks To.....www.z9tech.com