செல்போன்களில் வசதிக் குறைவாகத் தோன்றுவது பேட்டரியின் சார்ஜ் பிரச்சினைதான். மனம்விரும்பிய வசதிகள் நிறைய இருப்பதால் அதிகமான நேரம் செல்போனில் செலவழிக்கப்படுகின்றன. இதனால் அடிக்கடி சார்ஜ் தீர்ந்து போகும். பிறகு சார்ஜ் போட வேண்டும். சார்ஜ் இல்லாமல் சுவிட்ச்ஆப் ஆகிப்போனால் அந்த நேரத்தில் வரும் முக்கியமான அழைப்புகளையும் ஏற்க முடியாமல் சிரமப்பட நேரிடும்.
இதுமாதிரியான சிக்கலைத் தவிர்க்கவும், எளிமையான முறையில் சார்ஜ் செய்யவும் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த புதுமை மொபைல். இதில் சார்ஜ் தீர்ந்துபோனால் அதில் உள்ள துளையில் விரலை நுழைத்து செல்போனை சில சுற்றுகள் சுற்றினால் போதும் தற்காலிகமாக பேசும் அளவுக்கு சார்ஜ் ஆகும். உங்கள் வேகத்துக்கு ஏற்றபடி கூடுதல் அளவு சார்ஜும் செய்து கொள்ளலாம். பிறகு வழக்கமான முறையிலும் சார்ஜ் செய்ய முடியும். விரலை பயன்படுத்துவதை விரும்பாதவர்களுக்கு அதற்கென தனி குச்சி ஒன்று தரப்படும். அதில்வைத்து செல்போனை சுழற்றினாலும் சார்ஜ் ஆகும்.
வேகமாகப் பரவும் அதிநவீன மொபைல் இது. எண்களை அழுத்தாமலே, தொடுவதை உணர்ந்தே செயல்படுவதால் ஆறாம் அறிவுடைய மொபைல் என்று அழைக்கப்படுகிறது. இந்த சிக்ஸ்த் சென்ஸ் வசதியை நாம் பயன்படுத்த விரும்பினால் நமது உள்ளங்கையில் எண்கள் ஒளிவடிவில் விழும்படி செய்து கொள்ளலாம். பிறகு அந்த எண்களை தொடுவதன் மூலமே செல்போனை இயக்க முடியும். இந்த மாதிரி மொபைல்கள் விற்பனைக்கு வந்துவிட்டன.
நன்றி,தமிழ் நிருபர் .