இரத்தத்தில் சர்க்கரை அளவை எளிதாக கண்டுபிடிப்பது
குறித்து அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகம் மற்றும் மைக்ரோசாப்ட் ஆய்வு
பிரிவு இணைந்து ஆராய்ச்சி மேற்கொண்டது. இதுபற்றி விஞ்ஞானிகள் கூறியதாவது:
கண்ணீரில் உள்ள குளுக்கோஸ் என்சைம்களை அளவிடுவதன் மூலமாகவும் சர்க்கரை அளவை
தெரிந்துகொள்ளலாம். இதற்காக பிரத்யேக எலக்ட்ரோடுகள் பொருத்தி கான்டாக்ட் லென்சை
உருவாக்கும் ஆராய்ச்சிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. இதன் மூலமாகவே சர்க்கரை
அளவை தெரிந்துகொள்ளலாம். இது விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.