Monday, September 27, 2010

அபூர்வ மனிதர்.

உண்மையான அபூர்வ மனிதர்: மின்சாரம் இவரை தாக்குவது இல்லை! 
அமெரிக்காவில் இருந்து ஒளிபரப்பாகும் ஹிஸ்ரி சனல் தொலைக்காட்சியின், நிருபர் இந்தியா சென்று அங்குள்ள அபூர்வ மனிதர் ஒருவரைச் சந்தித்துள்ளார். எலக்ரிசிட்டி மோகம் எனப்படும் இந்நபர் சுமார் 200 வால்ட் மின்சாரத்தை தனது உடல் மூலம் செலுத்துகிறார், ஆனால் அவர் உடலை மின்சாரம் தாக்கவில்லை. சாதாரண மனிதர்களாயின் சுமார் 2 நிமிடத்தில் மரணத்தை சந்திக்க நேரிடும், ஆனால் இந்த அதிசய மனிதர் சர்வசாதாரணமாக 200 வால்ட் மின்சாரத்தை கைகளால் பிடிக்கிறார்.
இதில் ஏதாவது சுத்துமாத்து இருக்கலாம் என்பதற்காக தொலைக்காட்சியின் நிருபரே நேரடியாகச் சென்று, அதனைப் பார்வையிட்டதோடு அவரை பல்வேறு பரிசோதனைக்கும் உள்ளாக்கியுள்ளார். இந்நிலையில் மோகன் என்பவ்ர் உண்மையிலேயே ஒரு அதிசயமான மனிதர் என நிருபர் பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறார். இது எவ்வாறு சாத்தியப்படும் என்பது யாருக்கும் இதுவரை தெரியவில்லை. 

வீடியோ.

நன்றி,மனிதன்.

ஆகாயத்தில் மிதக்கும் ஹோட்டல்

பெல்ஜியத்தின் புரூசெல்ஸ் நகரில் தரை மட்டத்திலிருந்து சுமார் 150 உயரத்தில் இந்த மிதக்கும் ஹோட்டல் அமைந்துள்ளது.
6.6 தொன் நிறையுடைய இந்த மிதக்கும் ஹோட்டலானது உணவுகள்,குளிர்,குடி பானங்கள் நிரப்பபட்டு 22 இருக்கைகளை உள்ளடக்கியதாக  கதவுகளோ, ஜன்னல்களோ அற்ற திறந்த வெளி மேசையாக  அமைந்துள்ளது.
இம்மேசையானது, பாரம் தூக்கியின் துணையுடன் சுமார் 150 அடி உயரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது. 
இதன்  எதிர்ப்புறத்தில்,இதே அமைப்பில் சிறிதாக அமைக்கப்பட்டுள்ள மேடையில், இந்த மிதக்கும் ஹோட்டலிலுள்ளவர்களை மகிழ்விப்பதற்காக வயலின்,பியானோ இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
Forbes சஞ்சிகை அண்மையில் வெளியிட்ட உலகிலேயே மிகவும் அபூர்வமான 10 ஹோட்டல்களில் இந்த மிதக்கும் ஹோட்டலும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதனால், இதன் உரிமையாளர் சந்தோச மிகுதியில் உள்ளதுடன்,நகரின் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறான மிதக்கும் ஹோட்டல்களை நிர்மானிக்கத் திட்டமிட்டுள்ளார்.
மிதக்கும் ஹோட்டலின் படங்கள்.