Saturday, March 19, 2011

ஒட்டிப்பிறந்த சகோதரிகள்.

 செப்டம்பர் 18, 1961ல் பென்சில்வேனியாவில் பிறந்த லோரி சப்பெல், ரேபா சப்பெல் (Lori, Reba Schappell) சகோதரிகள் தான் இந்த ஒட்டிப்பிறந்த அதிசய பிறவிகள்.
இவர்களுக்கு  சாதாரண வாழ்வில் சிக்கல்கள் இருப்பினும், ஒருத்தர் மற்றொருவருக்கு உதவியாயிருக்கின்றனர்.
ரேபா பாடகராக அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் அசத்தி வரும்  அதே வேளை,  மற்றவர் டிசைனராக அசத்துகின்றனர்.







110 ஆண்டுகளாக எரியும் அதிசய மின் விளக்கு.

நமது வீடுகளிலும், அலுவலகங்களிலும் மற்றும் இன்ன பிற இடங்களிலும் நாம் பயன்படுத்தும் மின் விளக்குகளின் ஆயுட்காலம் மிகவும் குறுகியது. ஆனால் ஒரு மின்விளக்கு நூறு ஆண்டுகளையும் கடந்து இன்னும் அணையாமல் எரிந்துகொண்டிருக்கிறது என்பது அதிசயமே.
அடோல்ப் சைலெட் என்ற கண்டுபிடிப்பாளரால்  உருவாக்கப்பட்ட இந்த பழமை வாய்ந்த அதிசய மின் விளக்கு அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவிலுள்ள லிவர்மோர் (Livermore) தீயணைப்பு நிலைய வண்டியில் பொருத்தப்பட்டுள்ளதுடன், இந்த மின் விளக்கினை உருவாக்க  சுமார் 28 மாதங்கள் (2.4வருடங்கள்) ஆகியதுடன், இந்த விளக்கைப் போன்று இன்னுமொரு விளக்கை எப்பொழுதும் எவராலும் உருவாக்க இயலாத வகையில் இந்த விளக்கைத் தயாரிக்க உதவும் குறிப்புகளை இந்த அடோல்ப் சைலெட் எரித்துவிட்டாராம்.
அத்துடன், இதே போன்ற விளக்கை இனி வரப்போகும் எந்த மனிதராலும் உருவாக்க இயலாது என்றும் அவரின் குறிப்பில் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதனை  ஒரு மிகப்பெரிய சவாலாக எண்ணி அமெரிக்காவில் ஒரு குழு பல வருடங்களாக இம்முயற்சியில் ஈடுபட்டு இதுவரை வெற்றிபெற இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக அக்குழு  கொடுத்த அறிக்கையில்,  இப்பொழுதைய நிலையில் இந்த விளக்கை உருவாக்குவது என்பது சாத்தியமற்றது என்று கூறியுள்ளனர். இதிலிருந்து, இந்த விளக்கில் எவ்வளவு மர்மங்கள் மறைந்திருக்கும் என்பது தெளிவாகின்றது.
அடோல்ப் சைலெட் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த மின் விளக்கு முதன் முதலில் 1901ம் ஆண்டு எரியத் தொடங்கி, இவ்வாண்டுடன் 110 வருடங்கள் நிறைவடையும் இத்தருணத்திலும், எவ்வித தடங்களுமின்றி எரிந்துகொண்டிருப்பது சிறப்பம்சமாகும்.
இந்த அதிசயத்தை பார்க்க நாளாந்தம் பல்லாயிரக்கணக்கான  மக்கள் வருகை தருகின்றனர்.
 





அமெரிக்காவின் புதிய அதிசயம்.

அமெரிக்காவின் நெவாடா, அரிசோனா (Nevada and Arizona) ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும்,கட்டட கலைஞர்களின் அதிசயமான  890 அடி உயரத்தில் 1900 அடி நீளத்தில் ஹூவர் ஆணைக்கு அருகாமையில், கொலராடோ ஆற்றின் மேல் அமைந்திருக்கும் Mike O'Callaghan and Pat Tillman  ஞாபகார்த்த பாலம் தான் அமெரிக்காவின் புதிய அதிசயமாக கணிக்கப்பட்டுள்ளது.
இதனை  கட்டி முடிக்க,  21,000 பணியாளர்களின் உதவியுடன் சுமார் 5 ஆண்டுகள் சென்றதுடன், 240 மில்லியன் அமெரிக்க டொலர் செலவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இச்சாதனை பாலம் மேற்கு Hemisphere எனுமிடத்தில் அமைக்கபட்ட 1060 அடி வளைந்த காங்கிரீட் அமைப்பில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.