Sunday, October 10, 2010

அதிசய வால் மனிதன்.

மேற்கு  வங்கத்தின் Jalpaiguri  மாவட்டத்தின் Alipurduar பிரதேசத்தில் தேயிலைத் தோட்டத்தில் தொழில் புரியும் Chandre Oram என்ற நபருக்குத் தான் இந்த அதிசய வால் முளைத்துள்ளது. 5.6 அடி(1.68M) உயரமுடைய இவருக்கு 13 அங்குல(32.5Cm)நீளமும்,1 அங்குல(2.5Cm) தடிப்பமுடையதாக இந்த வால் காணப்படுகிறது.


உலகின் மிக உயர்ந்த தம்பதியினர்.

மின்சார மனிதன்.

சீனாவின் வடமேற்குப்பகுதியின் ஆட்சிக்குட்பட்ட Xinjiang Uygur பிரதேசத்திலுள்ள Altas நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற 71 வயதான Zhang Deke என்பவர் தான் இந்த அற்புத மின்சார மனிதராவார்.
இவரது  உடலில் 220V மின்சாரம் பாய்வது எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவரது  உடலினூடாகப்பாயும் மின்சார சக்தியைப் பயன்படுத்தி மீன் சமைத்தது மாத்திரமல்லாமல்,வாதம்,மூட்டுவலி,சிறுநீர்ப்பை சம்பத்தப்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு மின் அதிர்ச்சி வைத்தியமும் செய்கிறார்.
1994 ல் இவரை பரிசோதித்த XBOCAOS (Xinjiang Branch of the Chinese Academy of Sciences) வல்லுனர்கள் இது ஒரு உடலியல் கோளாறாக இருக்கலாம்.இது பற்றி முழுமையாக அறிவதற்கு இந்த அற்புத மின்சார மனிதனிடமிருந்து மேலதிக தகவல்கள் எதனையும் பெற முடியாமலிருப்பதாக இவர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலே செல்லச் செல்ல........

கீழிருந்து மேலே செல்லச் செல்ல அல்லது மேலிருந்து கீழே செல்லச் செல்ல நாம் என்ன வெல்லாம் சந்திக்க நேரிடும் என்பதை அழகாக எடுத்துக்காட்டும் விளக்கப்படம் இது. படத்தை சொடுக்கி மீப்பெரிதாக்கி மேலும் விவரங்கள் அறியலாம். உலகின் மிக உயரமான கட்டடமான பர்ஜ் கலீபா 2,717 அடி என்றால் அதை விட உயரமான இடத்தில் இருக்கின்றதாம் டென்வர் நகரம். கடல் மட்டத்திலிருந்து 5,000 அடி உயரத்திலிருக்கின்றது அது. நம் தலைக்கு மேலே மிதந்து செல்லும் மேகங்கள் 7,000 அடி உயரத்திலிருக்கின்றதாம். இன்னும் மேலேச் செல்லச் செல்ல 10,000 அடியையும் தாண்டி 11,450 அடி உயரத்தில் இருக்கின்றது திபெத்திய தலைநகரம் லாசா. இன்னும் மேலே நாம் மூச்சு வாங்கச் சென்றால் 19,334 அடி உயரத்தில் இருக்கின்றது ஆப்ரிக்க கிளிமஞ்சாரோ சிகரமும், 20,320 அடி உயரத்தில் இருக்கின்றது வட அமெரிக்க மவுண்ட் மெக்கின்லே சிகரமும். 23,000 அடி உயரத்தில் தான் நாம் தூரத்தில் கண்டு வியக்கும் உயர் மேகங்கள் நம்மை மூடிக்கொண்டிருக்கின்றன. தப்பித்தவறி 26,000 அடியையும் எட்டி விட்டால் அங்கே வாயு மண்டலத்தின் எல்லை போல “மரண மண்டலம்” தொடங்குகின்றது. இங்கே நாம் உயிர்வாழ தேவையான பிராணவாயு கிடைப்பது குறையத்தொடங்குவதால், மலை ஏறுபவர்கள் சிலிண்டர்கள் தூக்கத் தொடங்க வேண்டும். 29,029 அடியில் எவரெஸ்ட் வந்துவிடும். அதற்கு மேலே நாம் நடக்க முடியாது. பறக்கத்தான் வேண்டும். 32,000 அடி உயரங்களில் விமானங்கள் பறக்கின்றன. சில வல்லூறுகளும் பறக்கின்றன. அதற்கு மேலே என்னவென இன்னும் மேலே அறிய ஆசை. என்ன அழகான பூமி இது.
Go green எனச் சொல்லி பிளாஸ்டிக்கை குறை, காகிதத்தை தவிர் என ஜனங்களை உளுக்கெடுத்துவிட்டு அங்கே கடலில் எண்ணெயை கசிய விட்டு பூண்டோடு சுற்றுச் சூழலை அழித்துக் கொண்டிருக்கின்றார்கள். சாண் ஏற முழம் சறுக்கின கதையாய் இயற்கையை மனிதன் காப்பாற்ற விழைய, அது கேலிக் கூத்தாகி, கடைசியில் இயற்கையை இயற்கைதான் காப்பாற்ற வேண்டுமோ?

உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிக்கப்படும் முறை.

கட்டட கலைஞனின் கை வண்ணங்கள் - 2


















உலகின் மிகப்பெரிய கடிகாரம்

உலகின் மிகப்பெரிய கடிகாரம் சவூதி அரேபியாவிலுள்ள புனித மக்கா நகரில் நிர்மாணிக்கப்படுகிறது.1970 அடி (600M) உயரமான வானுயர்ந்த  கட்டடத்தின் உச்சியில் நான்கு பக்கங்களும் மிகப்பெரிய கடிகாரம் பொருத்தப்பட்டுள்ளது.
உலகின் மிகவும் உயரமான துபாயினுடைய  Burj Khalifa கட்டடத்துக்கு அடுத்ததாக உலகின் இரண்டாவது உயரம் கொண்டதாகவும், லண்டனிலுள்ள  Big Ben கடிகாரத்தை விட பெரியதாகவும் அமைந்துள்ளது.
உலகின் நான்கு முகங்கொண்ட மிகப்பெரிய கடிகாரமாகவும் சாதனை படைக்கிறது. ஒரு நாளைக்கு 5 தடவை ஒலிக்கும் கடிகாரத்தின் ஒலியினை சுமார் 130 அடி (40M) சுற்று வட்டத்துக்கு தெளிவாகக் கேட்க கூடியதாகவுள்ளதுடன்,இது வரை சாதனையாகவுள்ள 36M சுற்றுவட்டத்துக்கு ஒலி எழுப்பக்கூடிய இஸ்தான்புல் Cevahir Mall கடிகாரத்தையும் விஞ்சி நிற்பதும் சாதனையாகும்.
 புகழ் பெற்ற புனித மக்கா பள்ளிவாயலில் நடை பெரும் ஐவேளைத் தொழுகைகளையும், வருடா வருடம் புனித ஹஜ்ஜை நிறைவேற்ற வந்து ஒன்று கூடும்  பல இலட்ச யாத்திரிகர்களை இதன் உச்சியிலிருந்து முழுவதுமாக பார்க்க முடியும்.
இந்த கடிகாரத்தின் மூன்று மாத கால பரிசோதனைப்பணிகள் கடந்த ரமழான் நோன்பு காலத்தில்  ஆரம்பமாயின.
குறிப்பிட்ட  மூன்று மாத காலத்துக்குரிய ஐந்து நேர தொழுகை நேரம்,ரமழான் கால சூரிய உதயம்,சூரிய மறைவு நேரங்கள் போன்றன நிரல் படுத்தப்பட்டுள்ளன.
நான்கு பக்க கடிகார முகப்புக்களும் 98 மில்லியன் மொசைக் கண்ணாடிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு பக்க முகப்பிலும் "அல்லாஹு அக்பர்" ("God is greatest") என அரபியில் ஆயிரக்கணக்கான வர்ண லைட்டுக்களைக் கொண்டு பொருத்தப்பட்டுள்ளன.
கடிகாரமானது 16 மைல் (25Km) தூரத்துக்கு தெரியும் வகையில் உள்ளதால்,கடிகாரத்தில் அடியில் கண்காணிப்பு தளமும் நிறுவப்பட்டுள்ளது.
தங்கத்திலான 73 அடி (23M) விட்டமுடைய பிறை வடிவமானது கடிகாரத்திலிருந்து 200 அடி (61M) உயரமான தூண் ஒன்றில் கட்டடத்தின் அடித்தளத்திலிருந்து 820 அடி (251M) அமைக்கப்பட்டுள்ளது.இந்த பிறை வடிவத்திலிருந்து விண்ணை நோக்கி 15 ஒளிக்கீற்றுகள் வீசுகின்றன.
இந்த உலக சாதனைக் கடிகாரத்தை ஜேர்மன்,சுவிஸ் வல்லுனர்கள் 800 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் வடிவமைத்துள்ளனர். 
இக்கட்டடத்தின் நிர்மானப்பணிகளை சவூதி அரேபியாவின் "Saudi Binladen Group"
 நிறுவனத்தினர் மேற்கொண்டுள்ளனர்.