Saturday, October 30, 2010
உலகிலேயே மிகச்சிறிய மீன்
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் சதுப்பு நிலப்பகுதிலுள்ள உவர் நீரில் உலகின் மிகச்சிறிய Paedocypris progenetica மீனினை விலங்கியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். முதிர்ச்சியடைந்த மீனின் நீளம் 7.9 மில்லிமீற்றர்களாகும்.
"பேஸ்புக்" கொலை
பேஸ்புக் பாவிக்க இடையூறு விளைவித்த குழந்தையைக் கொன்ற தாய்!
"பேஸ்புக்' கில் இணைந்திருந்த போது இடையூறு விளைவித்த குழந்தையை கொன்ற தாய், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அமெரிக்க வட புளோரிடாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தான் ' பேஸ்புக் ' இணையத்தளத்தினை உபயோகிக்கும் போது இடைஞ்சலாக இருந்த தனது குழந்தையைக் கொல்ல நேரிட்டதாக, தனது குற்றத்தைத் தானே நேற்று ஒப்புக் கொண்டார்.
அலெக்ஸேண்ரா டொபியஸ் எனும் இப்பெண் 'பேஸ்புக்'கில் உள்ள ' பார்ம்வெளி ' எனும் பிரபல கணினி விளையாட்டில் ஈடுபட்டிருந்துள்ளார். அந்நேரத்தில் இவரது 3 மாதங்களேயான குழந்தை அழுதுள்ளது. இதன்போது கோபமடைந்த இவர் ஆத்திரத்தில் குழந்தையைத் தூக்கி வேகமாக குலுக்கவே, அதன் தலை கணினியில் மோதி குழந்தை உயிரிழந்ததாக அலெக்ஸேண்ரா தெரிவித்துள்ளார்.
இவருக்கான தீர்ப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் வழங்கப்படவுள்ளது.இவருக்கு சுமார் 25 முதல் 50 வருடங்கள் வரையிலான சிறைத்தண்டனை வழங்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி. www.z9world.com

Subscribe to:
Posts (Atom)