Monday, May 17, 2010

அட்டகாசமான HONDA விளம்பரம்

மனிதனை மிஞ்சும் அதிநவீன ரோபோட்


காலத்தின் வேகமான வளர்ச்சி இயந்திரமனிதன் பூமியில் கால்வைத்து விட்டான் மனிதனைப் போலவே அனைத்து செயல்களும் எந்த குழப்பமும் இல்லாமல் சொன்னதை அப்படியே செய்கிறான். நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இந்த ரோபோட் வளர்ச்சியில் தற்போது ஜப்பானில்
சிறப்பு ரோபோட் ஒன்றை வடிவமைத்துள்ளனர்.

இதன் பெயர் நேஒ மற்ற ரோபோட்டில் இல்லாத சிறப்பு இதில் என்ன இருக்கிறது என்றால் எந்த பக்கமும் சாய்வாக அதேசமயம் நுட்பமாக தன் உடலை எல்லா பக்கமும் எல்லா கோணத்திலும் இயக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த பிரச்சினை தான் பெரிதாக இருந்தது.

அது மட்டுமல்ல தரையில் இருக்கும் பொருட்களை அழகாக குனிந்து எடுத்து அதை குப்பைக்கூடையில் போடும் அரிய சோதனை காட்சியையும் தத்ருபமாக காட்டியுள்ளனர். கீழே விழுந்தால் எளிதாக எழுந்து விட முடியாது என்ற நிலையையும் மாற்றி உடனடியாக தன் கைகளை தரையில் வைத்து அழகாக எழுகிறது.

53 செ.மீ உயரமுள்ள இந்த ரோபோட் செய்யும் செயல்கள் அனைத்தும் பிரமிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. 2011 ம் ஆண்டு இது விற்பனைக்கு
வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீடியோ



Thanks To......www.z9tech.com