Wednesday, August 10, 2011

ஓட்டமாவடியில் மர்ம மனிதன் ?

இலங்கை பூராகவும் பரவி அச்சத்தில் ஆழ்த்தி வரும் மர்ம மனிதன் பற்றிய செய்தியினால் மக்கள் நிம்மதி இழந்து, நோன்பு காலத்தில்  தங்களது கடமைகளை  சரி  வர செய்து கொள்ள முடியாமலும், இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்கு வெளியில் செல்ல முடியாத  அச்ச நிலையும் நீடித்துக்கொண்டிருக்கும் நிலையில்,
இன்று ஓட்டமாவடி, நாவலடி-கேணி நகர்ப்பிரதேசத்தில் வீட்டில் இருந்த பெண்ணொருவர்,  அங்கு சென்ற ஒரு வலிபனால் கீறிக்காயப்படுத்தப்பட்ட  நிலை வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் பேரில் கிராமவாசிகளால் துரத்திப் பிடிக்கப்பட்ட குறித்த வாலிபரை மக்கள் தாக்கி காயப்படுத்தி பின்னர் பொலிசாரிடம் ஒப்படைத்த  நிலையில், அந்நபரை மீள ஒப்படைக்கும் படி பொலிசாரிடம் பொது மக்களில் ஒரு சாரார் கேட்டுக்கொண்ட போது பொலிசாருக்கும், பொது மக்களுக்குமிடையே கை கலப்பு நிகழ்ந்துள்ளது.
அதனைத்தொடர்ந்து, கை கலப்பை கட்டுப்படுத்தத் வந்த பொலிசாரினால் கண்மூடித்தனமாக  மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிபிரயோகத்தில் இறைச்சிக்கடை காலிதீன் என்பவர் காலில் காயப்பட்ட நிலையில் மீராவோடை ஆதார வைத்தியசாலையிலும், மீராவோடையைச்சேர்ந்த பாறூக் ஹாஜியார்( பலகைக்கடை) தலையில் குண்டடி பட்ட நிலையில் மட்டக்களப்பு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு எடுத்துச் செல்லப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தை தொடர்ந்து, மட்டக்களப்பு- கொழும்பு வீதியில் வாகனப்போக்குவரத்து தடைப்பட்டிருந்ததுடன், அடிக்கடி பொலிசாரின் துப்பாக்கி வெடி சத்தங்களும் கேட்ட வண்ணமிருந்தது.
கடைகள் மூடப்படு வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுவதுடன், மக்கள் அச்சம் கலந்த மன நிலையில் தங்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடைப்பதை உணரக்கூடியதாகவுள்ளது.