Wednesday, August 24, 2011

உலகிலேயே மிக உயர்ந்த கட்டிடம்

உலகிலேயே  மிக உயர்ந்த கட்டிடம்  சவுதி அரேபியாவின்  ஜித்தாவில், ரெட் சீ சிட்டியில் இக்கட்டிடம் கட்டப்படவிருக்கிறது.2008 இல் இதற்கான திட்டப்பணிகள்  தொடங்கப்பட்ட போதும், தற்போது இக்கட்டிடத்துக்கான முழு வடிவமைப்பும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் (852 மைல்) உயரத்தில் இந்த  ஹோட்டல் உருவாக்கப்படவுள்ளது. சேவை நிறுவனங்கள், ஆடம்பர பங்களாக்கள், தொழில் நிறுவனங்கள் என அனைத்து வசதிகளுடனும் அமைக்கப்படவுள்ள இக்கட்டிடத்தின் அடியிலிருந்து மேல் உச்சிக்கு லிப்ஃட்டில் செல்லவே 12 நிமிடம் வேண்டுமாம்.

உலகிலேயே மிக உயர்ந்த கட்டிடமாகத் தற்போது துபாய் நகரின் பூர்ஜ் கலிஃபா கட்டிடம்.திகழ்ந்து வருகிறது.




Wednesday, August 10, 2011

ஓட்டமாவடியில் மர்ம மனிதன் ?

இலங்கை பூராகவும் பரவி அச்சத்தில் ஆழ்த்தி வரும் மர்ம மனிதன் பற்றிய செய்தியினால் மக்கள் நிம்மதி இழந்து, நோன்பு காலத்தில்  தங்களது கடமைகளை  சரி  வர செய்து கொள்ள முடியாமலும், இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்கு வெளியில் செல்ல முடியாத  அச்ச நிலையும் நீடித்துக்கொண்டிருக்கும் நிலையில்,
இன்று ஓட்டமாவடி, நாவலடி-கேணி நகர்ப்பிரதேசத்தில் வீட்டில் இருந்த பெண்ணொருவர்,  அங்கு சென்ற ஒரு வலிபனால் கீறிக்காயப்படுத்தப்பட்ட  நிலை வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் பேரில் கிராமவாசிகளால் துரத்திப் பிடிக்கப்பட்ட குறித்த வாலிபரை மக்கள் தாக்கி காயப்படுத்தி பின்னர் பொலிசாரிடம் ஒப்படைத்த  நிலையில், அந்நபரை மீள ஒப்படைக்கும் படி பொலிசாரிடம் பொது மக்களில் ஒரு சாரார் கேட்டுக்கொண்ட போது பொலிசாருக்கும், பொது மக்களுக்குமிடையே கை கலப்பு நிகழ்ந்துள்ளது.
அதனைத்தொடர்ந்து, கை கலப்பை கட்டுப்படுத்தத் வந்த பொலிசாரினால் கண்மூடித்தனமாக  மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிபிரயோகத்தில் இறைச்சிக்கடை காலிதீன் என்பவர் காலில் காயப்பட்ட நிலையில் மீராவோடை ஆதார வைத்தியசாலையிலும், மீராவோடையைச்சேர்ந்த பாறூக் ஹாஜியார்( பலகைக்கடை) தலையில் குண்டடி பட்ட நிலையில் மட்டக்களப்பு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு எடுத்துச் செல்லப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தை தொடர்ந்து, மட்டக்களப்பு- கொழும்பு வீதியில் வாகனப்போக்குவரத்து தடைப்பட்டிருந்ததுடன், அடிக்கடி பொலிசாரின் துப்பாக்கி வெடி சத்தங்களும் கேட்ட வண்ணமிருந்தது.
கடைகள் மூடப்படு வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுவதுடன், மக்கள் அச்சம் கலந்த மன நிலையில் தங்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடைப்பதை உணரக்கூடியதாகவுள்ளது.

Friday, August 5, 2011

மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்க...!

1.தானே பெரியவன் தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.(படைத்தவன் மட்டும் தான் பெரியவன் என்று நினையுங்கள்.)
2.அர்த்தமில்லாமலும் தேவையில்லாமலும் பின் விளைவுகள் அறியாமலும் பேசிக்கொண்டேயிருப்பதை தவிருங்கள்.
3.எந்த விஷயத்தையும் பிரச்சினையயும் நாசுக்காகக் கையாளுங்கள்.
4.சில நேரங்களில் சில சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்று உணருங்கள்.
5.நீங்கள் சொன்னதே சரிசெய்ததே சரி என்று கடைசி வரை வாதாடாதீர்கள்.
6.குறுகிய மனப்பான்மையை விட்டொழிங்கள்.
7.உண்மை எதுபொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் வ்ட்டுவிடுங்கள்.
8.மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள்.
9.அளவுக்கதிமாக தேவைக்கதியமாய் ஆசைப்படாதீர்கள்.
10.எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்.
11.கேள்விப்படுகிற எல்லா விஷ்யங்களையும் நம்பி விடாதீர்கள்.
12.அற்ப விஷயங்களையும் பெரிதுபடுத்தாதீர்கள்.
13.உங்கள் கருத்துக்களில் உலக விஷயத்தில் உடும்புப் பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள். மார்க்க விஷயத்தில் ஒரு போதும் சமரசம் செய்யாதீர்கள்.
14.மற்றவர் கருத்துக்களை செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்.
15.மற்றவர்களுக்கு உரிய மரியதையைக் காட்டவும் இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் தவறாதீர்கள்.
16.புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல நடந்து கொள்ளாதீர்கள்.
17.பேச்சிலும் நடத்தையிலும் திமிர்த்தனத்தையும் தேவையில்லாத மிடுக்கைக் காட்டுவதை தவித்து அடக்கத்தையும் பண்பாட்டையும் காட்டுங்கள்.
18.அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து அளவளாவுங்கள்.
19.பிணக்கு ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன்வாருங்கள்.
20.தேவையான இடங்களில் நன்றியையும்,பாராட்டையும் சொல்ல மறக்காதீர்கள்.பாராட்டுக்கு மயங்காத மனிதனே இல்லை,அதற்காக ஓவர் பில்டப் கொடுத்து பொய்யாக எதையாவது சொல்லி வைக்காதீர்கள். அதுவே உங்களுக்கு தலைவலியாகவும் அல்லது வெற்றியாகவும் அமையலாம்.

Thursday, August 4, 2011


தென் ஆப்ரிக்காவில் உள்ள போர்ட் எலிசபத்த்தில் பிறந்த 22 வயது, தென் ஆப்ரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் பேர்நெல் (Wayne Dillon Parnell) 28.7.2011 வியாழக்கிழமை அன்று இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
இவர் தென் ஆப்ரிக்கா சர்வேதச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்(Left-arm medium-fast) என்பது குறிப்பிடத்தக்கது.
பேர்நெல் கிறிஸ்துவ மார்க்கத்திலிருந்து இஸ்லாத்தை தழுவி இருக்கிறார். இவருடைய பெயரை வலீத் (பொருள்:புதிதாக பிறந்த மகன்) என்று தனது பெயரை மாற்றிக் கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.
வெய்ன் இரண்டு மாதங்களுக்கு முன்பே இஸ்லாத்தை பின்பற்ற முடிவு செய்துவிட்டார்,” என்று தென் ஆப்ரிக்கா அணி மேலாளர் டாக்டர் முகம்மது மொசாஜி தெரிவித்துள்ளார்.
ஹாஷிம் ஆம்லா , இம்ரான் தாகிர் போன்ற சக வீரர்களின் வற்புறுத்தலினால் தான் பேர்நெல் இஸ்லாத்தை தழுவினார் என்ற வதந்தியை மொசாஜி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.இது அவருடைய சொந்த முடிவு எனவும் மொசாஜி கூறினார்.
மொசாஜியின் மறுப்பை ஆதரிக்கும் வகையில் தென் ஆப்ரிக்காவின் மற்ற அணி வீரர்களும் ஹாஷிம் ஆம்லா , இம்ரான் தாகிர் , பேர்நெலை எந்த விதத்திலும் கட்டாயப்படுத்தவில்லை. ஆம்லாவின் ஒழுக்கம் ,சுற்றுப்பயணத்தின் போதும் தினசரி தொழுகை,மதுபான கொண்டாட்டங்களில் பங்கேற்காதது ,தென் ஆப்பிரிக்க அணியின் விளம்பரதாரரான பீர் கம்பெனியை விளம்பரப்படுத்த மறுத்தது போன்ற இவரின் செயல் அனைவரையும் ஈர்க்கத்தான் செய்தது.
பேர்நெல்லுடைய சக விளையாட்டு வீரர்கள் ,கடந்த IPL (Indian premier League) போட்டியில் பேர்நெல் மது அருந்தாததை வைத்தே அவர் தன் மதத்தை மாற்றுவதில் எவ்வளவு மும்முரமாக இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டோம் என்று தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் இருந்து நாம் கற்க வேண்டிய பாடம்.
ஒரு முஸ்லிமின் ஒழுக்கத்தை பார்த்தே மாற்று மதத்தினர் இஸ்லாத்தை நேசிக்க ஆரம்பிக்கின்றனர்.நாமும் இஸ்லாத்தின் ஒழுங்குகளை பேணி நமக்கு நன்மை தேடிக் கொள்வதோடு பல மாற்று மத சகோதரர்கள் நேர்வழி பெற உதவுவோம்.

Wednesday, August 3, 2011

இஸ்லாமியர்களுக்கு 
கூகுள் கொடுத்துள்ள ரமழான் பரிசு

இஸ்லாமியர்களின் புனித தளமான மெக்காவில் உள்ள அல்-மஸ்ஜீத்-அல்-ஹராம் மசூதியில் நடைபெறும் தொழுகைகளை நேரடியாக உலகம் முழுவதும் பார்க்கும் வசதியை யூடியுப் மூலம் கூகுள் வழங்கி உள்ளது. இது இஸ்லாமியர்களுக்கு கூகுள் கொடுத்துள்ள ரமலான் பரிசாகும். உலகிலேயே முதன்மையானதும் , மிகப்பெரிய மசூதியான இந்த இடத்தில் இருந்து
நேரடியாக  பார்ப்பது அனைத்து இஸ்லாமியர்களுக்கும் கிடைத்த வரப்பிரசாதமே.
இந்த இணைப்பிற்கு செல்லவும்.
கூகுளுக்கு நன்றிகள்.

Monday, August 1, 2011

கடலடியில் வாழும் விசித்திர உயிரினங்கள்.

நமது பூமியின் மேற்பரப்பைவிட கடலுக்கு அடியில் பல கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
இவற்றில் பல உயிரினங்கள் நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத வடிவத்தில் உள்ளன.
ரஷ்ய ஆர்க்டிக் கடற் பகுதியில் வாழும் சில விசித்திர உயிரினங்களின் படங்களே இவை:





நன்றி. வீரகேசரி.