Friday, July 2, 2010

“டைட்டானிக் 2′




டைட்டானிக் பயணத்தை முழுமையாக்கும் “டைட்டானிக் 2′

டைட்டானிக் கப்பல் மூழ்கி, நூறு ஆண்டுகள், நிறைவு பெறுவதை குறிக்கும் வகையில், டைட்டானிக் நினைவு சுற்றுலா கப்பலை இயக்க, பிரிட்டன் சுற்றுலா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இங்கிலாந்திலிருந்து, 1912ம் ஆண்டு, ஏப்ரல் 8ம் தேதி, பயணத்தை துவங்கிய, டைட்டானிக் சுற்றுலா கப்பல், ஏப்ரல் 15ம் தேதி, அட்லாண்டிக் சமுத்திரத்தில், பயணித்தபோது, பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கியது. இந்த பயங்கர விபத்தில், சுற்றுலா பயணிகள், ஊழியர்கள் என, மொத்தம் 2,223 பேரில், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 1,578 பேர், கடலில் மூழ்கி பலியாகினர். நடுக்கடலில் தத்தளித்த மீதமிருந்தோர், கடும் முயற்சிக்கு பின் மீட்கப்பட்டனர்.
டைட்டானிக் சுற்றுலா கப்பல் கடலில் மூழ்கிய சம்பவம், உலக வரலாற்றில், கருப்பு தினமாக கருதப்படுகிறது. டைட்டானிக் கப்பல் மூழ்கி, 2012ம் ஆண்டுடன், நூறு ஆண்டுகள் ஆகின்றன. இந்நினைவு தினத்தையொட்டி, டைட்டானிக் பயணம் செய்த, அதே பாதையில், டைட்டானிக் நினைவு சுற்றுலா கப்பலை, (டைட்டானிக் 2) இயக்க, பிரிட்டனை சேர்ந்த, பிரபல மைல்மார்கன் சுற்றுலா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இக்கப்பல், 2012ம் ஆண்டு, ஏப்ரல் 8ம் தேதி, சவுத்ஆம்டன் நகரில், தனது பயணத்தை துவக்கவுள்ளது.
டைட்டானிக் கப்பல் மூழ்கிய தினமான, ஏப்ரல் 15ம் தேதி அன்று, அதே இடத்தில், நினைவு சுற்றுலா கப்பல் நிலை நிறுத்தப் படுகிறது. இரவு 2.20 மணிக்கு, நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பின், பயணத்தை தொடரும் கப்பல், ஏப்ரல் 20ம் தேதி, நியூயார்க் நகரை சென்றடையும். டைட்டானிக் கப்பலில், பயணம் செய்த போது, உயிரிழந்தவர்களின், குடும்ப உறுப்பினர்கள் பலர், விபத்து குறித்தும், இறந்தவர்களின் அனுபவங்கள் குறித்தும், விளக்குவர். கப்பலில் பயணம் செய்வதற்கான, முன்பதிவு துவங்கியுள்ளது.
Thanks To........Alaikal.

இரண்டாம் உலக யுத்த விமானப் பீரங்கி கிடைத்தது



டென்மார்க் 01.07.2010 வியாழன் மதியம்
டென்மார்க் தெற்கு புய்ன் பகுதியில் விமானத்தில் இருந்து இயக்கப்படும் விமானப் பீரங்கி ஒன்றும் அத்தோடு சில குண்டுகள், வெடி மருந்துகள் என்பன கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. கட்டிடத்திற்கு அத்திவாரம் போட நிலத்தைத் அகழ்ந்தபோது இவை வெளி வந்துள்ளன. உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த போலீசார் அதை மீட்டெடுத்துள்ளனர். கடந்த 1944 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ம் திகதி இதே பகுதியில் பறந்தபோது ஜேர்மன் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட பிரிட்டன் விமானத்தில் பொருத்தப்பட்டிருந்த பீரங்கியே இதுவென்று தெரிவிக்கப்படுகிறது. இதை சுத்தம் செய்து நூதனசாலையில் வைக்க இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.
Thanks To........Alaikal.

கின்னஸ் சாதனை முயற்சி

  கின்னஸ் சாதனைக்காக 330 வார்த்தைகளில் தலைப்பு : விருதுநகரில் முயற்சி 
 கின்னஸ் சாதனைக்காக, 330 வார்த்தைகளில் புத்தக தலைப்பு ஒன்றை அமைத்துள்ளார் நகை தொழிலாளி ஒருவர்.
தமிழ்நாடு விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் செட்டியக்குடி நகை தொழிலாளியான மணிகண்டன் என்பவரே இந்த முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
கின்னஸ் சாதனைக்காக, புத்தகத் தலைப்பு ஒன்றை 330 வார்த்தைகளில் அமைத்துள்ளார் இவர். நகை தொழிலாளியான இவர், தனது தொழிலோடு கின்னஸ் சாதனையிலும், தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
2007ஆம் ஆண்டு, 24 மி.மீ. அகல, நீளத்தில் செஸ் போர்ட் ஒன்றை வடிவமைத்து இவர் கின்னஸ் சாதனை படைத்தார்.
மேலும், 163 கிராம் வெள்ளியில் மின் விசிறி, 110 கிராம் வெள்ளியில் மோட்டார் பைக், நான்கு கிராம் தங்கத்தில் மோதிர வாட்ச், 8 மி.மீ., நீள, அகலத்தில் திருக்குறள் புத்தகம் போன்றவற்றை வடிவமைத்து, லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார்.
கடந்த 2007இல் இத்தாலியைச் சேர்ந்த ஒருவர் 1,433 எழுத்துக்களில், 290 வார்த்தைகளில் புத்தகத் தலைப்பை அமைத்தது கின்னஸ் சாதனையாக உள்ளது.
மணிகண்டன் தற்போது நடிகர் கமலஹாசனின் வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகத்திற்கு, 1,458 எழுத்துக்களில் 330 வார்த்தைகளில் தலைப்பு அமைத்துள்ளார்.
இது குறித்து மணிகண்டன் கூறுகையில்,
"ஒரு கின்னஸ் சாதனையும், நான்கு லிம்கா சாதனையையும் படைத்துள்ளேன். தற்போது, இந்த நீளமான புத்தக தலைப்பை, கடந்த ஆறு மாதமாக முயற்சி செய்து முடித்துள்ளேன். இதை, கின்னஸ் சாதனைக்கு அனுப்பி வைக்க உள்ளேன்" என்றார்.
Thanks To....Virakesari