இதற்கமைவாக, 2004 ஆம் ஆண்டில், குறைந்த செலவில் விண்வெளிப் பயணங்களை மேற்கொள்ளவல்ல விண்விமானம் ஒன்று SpaceShipOne என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது. விமானம் போன்று தரையிலிருந்து மேலெழவல்ல இந்த விண்விமானம், விண்வெளியில் பயணிக்கவல்ல உந்துகணை (rocket) ஒன்றை புவியிலிருந்து 46000 தொடக்கம் 48000 அடிகள் உயரம் வரை காவிச்சென்று பின் உந்துகளை விண்விமானத்திலிருந்து விடுவிக்கப்பட்டு விண்வெளிவினுர்டான மீதிப் பயணத்தைத் தொடரும். தொடர்ந்து அந்த உந்துகணை பயணித்து, மீண்டும் பூமிக்குத் திரும்பும்போது பூமியின் வளிமண்டலத்தினுட் பிரவேசித்து ஒரு மிதவைவானூர்தி (glider) போன்று பயணித்து புவியை அடையும்.
இவ்வாறில்லாது, உந்துகணை ஒன்று விமானம்போன்று தரையிலிருந்து மேலெழுந்து விண்வெளிக்குச் சென்று பின் திரும்பவும் விமானம் ஒன்றைப்போன்று தரையிறங்கவல்லதாக இருக்கவேண்டும் என்ற இலக்கை நோக்காகக் கொண்டு XCOR Aerospace என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதே இந்த EZ உந்துகணை (EZ Rocket) ஆகும். இந்த EZ உந்துகணையானது இன்னமும் பரிசேதனை நிலையிலேயே காணப்படுகின்றது.
2001 இல் முதலாவது பறப்பை மேற்கொண்ட இந்த EZ உந்துகணையானது. Rutan's Aircraft Factory இனாலல தயாரிக்கப்பட்ட canard aircraft என்றழைக்கப்படும் விமானத்தை மீள்வடிவமைப்புச்செய்யப்பட்டே உருவாக்கப்பட்டது. இந்த மீள்வடிவமைப்புச் செய்யப்பட்ட விமானத்தில் உந்துகணை ஒன்றின் செயற்பாட்டுக்குரிய பின்வரும் அமைப்புக்கள் காணப்படுகின்றன.
- விமானத்தின் பின்பகுதியில், சுழலி இயந்திரத்திற்கு மாற்றீடாக திரவ எரிபொருளில் இயங்கும் இரண்டு உந்துகணை இயந்திரங்கள் (ocket engines)
- அழுத்தப்பட்ட திரவ எரிபொருளை (isopropyl alcohol) நிரப்பவல்ல எரிபொருட் தாங்கி.
- திரவ ஒட்சிசனுடன் கூடிய இரண்டு தாங்கிகள்.
தொடர்ந்து இந்த உந்துகணையின் தொழிற்பாடு பற்றிப் பார்ப்போம். விமானி இயந்திர இயக்கத்தை ஆரம்பித்ததும் உயர் அழுத்தத்திலுள்ள மதுசார (alcohol) எரிபொருள் இயந்திரத்தினுட் செலுத்தப்பட, திரவ ஒட்சிசன் ஆனது பம்பி (pump) ஒன்றின்மூலம் இயந்திரத்தினுட் செலுத்தப்படும். தொடர்ந்து மின்எரிபற்றி (electrical igniter) ஒன்றின் மூலமாக எரிபொருள் எரியூட்டப்பட்டு இயந்திரத்தின் செயற்பாடு தொடக்கி வைக்கப்படும். இயந்திரங்கள் இரண்டினூடாகவும் 800 பவுண்ட்ஸ் உந்துவிசை உருவாக்கப்படும். இவ்விசையின் காரணமாக இந்த EZ உந்துகணைகானது 20 செக்கன்களில் 1650 மீற்றர் தூரம் ஓடுபாதையில் ஓடி தரையிலிருந்து மேலெழும். இந்த EZ உந்துகணையானது சாதாரண விமானங்கள் போன்று மேலெழவோ அல்லது பறக்கவோ வல்லதாகக் காணப்பட்ட போதிலும், பின்வரும் வில விடையங்களில் சாதாரண விமானங்களிலிருந்து மாறுபட்டும் காணப்படுகின்றது.
- இவ்விமானம் 2 நிமிடங்களில் 195 நொட்ஸ் வேகத்தை எட்டவல்லதாகக் காணப்படுகின்றது. (மிகையொலி வேகத்தாரை விமானங்கள் தவிர்ந்த சாதாரண விமானங்களால் இந்த வேகத்தை எட்ட முடியாது).
- ஒரு நிமிடத்தில் 10000 அடி உயரத்தை எட்டவல்லது.
- ஆகக்கூடியது 10000 அடிகள் உயரம்வரை பறக்கவல்லது.
- பறந்துகொண்டிருக்கும் போது விமானி உந்துகணை இயந்திரத்தை நிறுத்தகோ மீண்டும் மறுபடி இயக்கவோ முடியும்.
- எரிபொருள் தீர்ந்தபின்னர் இந்த விமானத்தால் மிதவை வானூர்தி போன்று தரையிறங்க முடியும்.
நன்றி,ஈழநேசன்